அத்தியாயம் 35
திருமணத்திற்கு முந்தைய நாளான வரவேற்பில் தான் எத்தனை சேட்டைகள் செய்துவிட்டான் சிவா.
நிச்சயம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை மகிமா சிவாவின் இந்த ஒரு முகத்தை.
மகிமா என்னென்ன செய்து தன்னை மயங்கி விழ வைக்க போகிறாளோ என மாலாவின் நினைப்பிற்கு மாறாய் மேடையில் சிறு கூச்சம் கொண்டு அமைதியாய் நல்லப்பிள்ளையாய் அவள் இருப்பதென்ன!
மாறாய் பேசவே மாட்டானே என நினைத்தவன் தான் அவளை படுத்தும் பாடென்ன!
அப்பொழுதே வள்ளி இருவருக்கும் திருஷ்டி எடுக்க தேவையானதை எல்லாம் வீட்டில் தயார் செய்ய நினைத்தபடி தான் ஒவ்வொருவரையும் வரவேற்றபடி நின்றார்.
"என்ன அம்மு இப்படி இருக்க?" என்ற சிவா வார்த்தைகள் அவன் அதிர்வுகளோடு புரிந்து மகிமாவின் முகம் செவ்வானமாய் சிவக்க,
"போச்சு! நான் காலி!" என்றான் இன்னும் உறைந்துவிட்ட குரலில் சன்னமாய் புன்னகைத்து.
"மாமா! ப்ளீஸ்!" என்றவள் கெஞ்சல் குரல் கொஞ்சலாய் கேட்க, தடுமாறிப் போனவன்,
"ம்ம்ஹ்ம்ம் இனி உன் பக்கம் திரும்புனேன்னா நான் அவ்ளோ தான்! போ டி!" என்றவன்,
"இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணணுமே!" என்ற அவன் பேச்சுக்கள் எல்லாம் புகைப்படத்தை எடுத்து வாழ்த்துக்கள் கூறி அடுத்தவர் முன்னேறி அடுத்த புகைப்படம் எடுக்கும் சில நொடி இடைவெளிகளில் மட்டும் தான்.
மூன்று மணி நேர முடிவில் "ம்ம்ஹ்ம்ம்! என் கூடவே வந்துடேன் அம்மு!" என்று அவள் கைகளை அவன் பிடித்துக் கொள்ள,
"அச்சோ மாமா! என்ன பண்றீங்க நீங்க!" என்றவளுக்கு பேச்சுக்கள் வரவில்லையே தவிர நெஞ்சம் முட்டி நின்ற அவளது சந்தோசம்.
சிவாவா? அவருக்கெல்லாம் பேசவே வராது! என்பவர்கள் மத்தியில் தன்னிடம் மட்டும் அவன் உரிமை என்ன என்று அவன் மூலமே அறிந்து பூரித்து போனாள்.
அலுவலகத்தில் உள்ள அனைவருமே ரிஷப்ஸனிற்கு வந்துவிட்டனர். கார்த்திக் ஏற்பாடு செய்த கேக் உடன் அலுவலகத்திம் மொத்த பேரும் மேடை ஏற, அவர்களுடன் நின்றிருந்தனர் யாழினி, சுஜாதா.
கேக்கை கட் செய்து இருவரையும் ஊட்டிவிட சொல்லி என கார்த்திக் அவன் பங்கிற்கு சேட்டைகளை தொடர்ந்தான்.
"கங்கிரட்ஸ்!" என்று யாழினி சுஜாதா மகிமாவிற்கு கைகொடுத்து அருகில் புகைப்படம் எடுக்க நிற்க,
"நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் க்கா!" என்றாள் மகிமா புன்னகையோடு.
"உனக்காக தான் வந்தோம்!" என்றவர்கள் மற்றவர்களோடு இருந்துவிட்டு கிளம்பிவிட்டனர்.
அடுத்தநாள் பத்து மணிக்கு தான் முகூர்த்தம். அப்பொழுது அனைவரும் வர முடியாதே என்று கார்த்திக் தான் அனைவரையுமாய் அழைத்து வந்திருந்தான்.
வரவேற்பு முடிந்து கிளம்பும் நேரமெல்லாம் சுத்தமாய் கிளம்ப மனமில்லை சிவாவிற்கு.
'உன்னைய உங்க அம்மா என்னனு வளத்தாங்கனு போற வீட்டுல கேட்க போறாங்க. அன்னிக்கு இருக்கு டி உனக்கு!' என்று மாலா கூறியது நியாபகம் வந்தது மகிமாவிற்கு.
"கிளம்புங்க மாமா! இவ்வளவு இடமெல்லாம் எனக்கு குடுக்காதிங்க!" என மகிமாவே சொல்ல,
"வேற யாருக்கு குடுக்கணும் அம்மு?" என்று கேட்டு சிரித்து, அடுத்தநாள் காலைக்காக இப்பொழுதே காத்திருக்க துவங்கிவிட்டான்.
உறக்கமின்றிய பொழுதுகள் விடிந்து கொடுத்து அவனுக்கான நாளையும் சிறப்பித்துக் கொடுக்க, உற்சாகமாய் அந்த நாளை வரவேற்று தயாராகி நின்றான் சிவா என்கிற சிவபிரகாஷ்.
"ஐம் ரெடி மை கேர்ள்!" என்ற எழுத்துக்களோடு தனது தோற்றத்தை அப்படியே மகிமாவிற்கு சிவா அனுப்பி வைக்க,
"நானும் மாமா!" என்றவள் தானுமாய் அனுப்பி வைத்தாள்.
"மயங்கிட்டேன்!" என்றவன், "வந்துட்டே இருக்கேன்!" என்றும் அனுப்பி வைத்துவிட்டு மண்டபம் கிளம்பும் முன் அன்னை தந்தையிடம் ஆசி வாங்கிக் கொண்டவன், ஈஸ்வரியை தேடி சென்று அவரிடமும் ஆசி வாங்கிக் கொண்டான்.
ஐயர் கூறும் மந்திரங்களை கர்ம சிரத்தையாய் கேட்டுக் கொண்டிருந்தவன் அருகினில் திவாகர் கார்த்திக் நின்றிருந்தனர்.
பாதக் கொலுசுகளின் கொஞ்சும் ஓசை காதை நிறைக்க, வனிதாவோடு மற்ற பெண்கள் கூட்டத்தின் நடுவினில் அவன் தேவதையின் தரிசனம்.
சிவாவின் அருகில் அமரவைக்கப்பட்ட மகிமாவின் காதினில் சிறு பாராட்டான குரல் கேட்க, ம்ம்ஹும்ம் திரும்பிடவில்லையே அவள்.
வனிதா அட்சதையுடன் மாங்கல்யம் வைத்து கொண்டு சென்று தர, அனைவரும் அதை தொட்டு ஆசீர்வதித்து சிவாவின் கைகளுக்கு வந்து சேர்ந்திருந்தது சில நிமிடங்களில்.
ஏனோ அந்த நிமிடம் அத்தனை புதுவித உணர்வு இருவருக்குமே!
மகிமாவின் முகம் பார்த்து அவள் முகம்தனில் தெரிந்த மகிழ்வை வாழ்நாள் முழுதும் தான் காப்பேன் என்ற உறுதிமொழியோடு மாங்கல்யத்தினை அவள் கழுத்தினில் நிறைத்தான்.
அதன்பின் அடுத்தடுத்த சம்பிரதாயங்கள்படி ஒவ்வொரு நிகழ்வும் நடந்தேற, புகைப்படம் எடுக்கும் தருவாயினில் மகிமாவின் கையை தனது கைக்குள் அடக்கமாய் பொருத்திக் கொண்டான் சிவா.
மகிமாவின் வீட்டிற்கு சென்று அங்கே உண்டான சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்து சிவாவின் வீட்டிற்கு மாப்பிள்ளை பெண்ணை அழைத்து வர மாலை ஆறு மணியை கடந்துவிட்டது.
அதன்பின் தான் சிறு இலகுவான நேரமே கிடைத்தது இருவருக்கும்.
"கீழேயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அம்மு!" என வள்ளி வேறொரு அறையில் அவளை ஓய்வுக்காக அழைத்து சென்றார்.
"அப்பா சமையல்காரர்கிட்ட என்னவோ சண்டை போடறார்! போய் பாரேன் சிவா!" என்று சொல்லவும் அவன் அங்கே செல்ல,
"அண்ணி!" என்று அழைத்து வள்ளியை தன் அருகில் கொண்டு வந்தார் மாலா.
"நீ மகிகிட்ட பேசிட்டு இரு மாலா! நான் போய் அவளுக்கு காபி எடுத்துட்டு வர்றேன்!" என்று வள்ளி சொல்ல,
"ஸ்னாக்ஸும் அத்தை! பிஸ்கட் இருந்தா கூட போதும்!" என்றாள் மகிமா.
வள்ளி புன்னகைக்க, "நிஜமா இப்ப தான் பயமா இருக்கு அண்ணி! எங்கேயோ மருமகளா போய் என்னை பேச்சு வாங்க வைக்க போறான்னு நினைச்சேன்! இப்ப உங்ககிட்டயே பேச்சு வாங்க போறேன்!" மாலா நிஜமான கவலை கொண்டு செல்ல,
"ஏன்? அப்படி என்ன பேச்சு வாங்க? இவ்ளோ அழகா ஒரு பொண்ணை என் வீட்டுக்கு குடுத்ததுக்கு உனக்கு நான் எவ்ளோ நன்றி சொன்னாலும் போதாது! வேற என்ன பேச்சு வாங்க நீ?" என்றவர்,
"பேசிட்டு இருங்க! ரெண்டு நிமிஷத்துல காபியோட வர்றேன்!" என்று எழுந்து சென்றார்.
"அம்மு!" என்று மாலா மகள் பக்கம் திரும்ப,
"எதிர்த்து பேச கூடாது. அதிகமா பேச கூடாது. யாரும் பேசாம பேச கூடாது. சத்தமா பேச கூடாது! முடிஞ்சா பேசவே கூடாது! அது தானே ம்மா? காது வலிக்குற அளவுக்கு டெய்லி சொல்லிட்டு இன்னைக்கு ஸ்பெஷலாவா?" என்றாள் மகிமா.
"எனக்கு பக்குபக்குன்னு இருக்கு அம்மு! வேற வீட்டுக்கு மருமகளா போயிருந்தா கூட இவ்வளவு பயந்துருக்க மாட்டேன். வள்ளி அண்ணி என்ன நினைக்க போறாங்களோனு பதறுது!"
"ஏன் ம்மா? எனக்கு தான் எல்லாம் தெரியுமே!"
"என்ன தெரியும்? சாப்பிட தெரியும் சமைக்க தெரியாது. விதவிதமா ட்ரெஸ் மாத்திக்க தெரியும் துவைக்க தெரியாது! நல்லா பேச தெரியும்"
"ம்மா ம்மா! துவைக்க மெஷின்ல போட தெரியும். அது போதும். சமைக்குறது தான்..." என்று இழுத்தவள்,
"அதுவும் அத்தைக்கிட்ட கத்துப்பேன்!" என்றாள்.
"பார்த்து டா! வாழவந்தான் அண்ணே அப்பா எல்லாம் இப்ப தான் கொஞ்சமா பேசி பழக ஆரம்பிச்சு இருக்காங்க. இனி எல்லாம் உன் கையில தான் இருக்கு!" என்றவர்,
"சிவா இருக்கானே! அவன் பார்த்துப்பான்!" என்று சொல்லி புன்னகையோடு மகள் தலைகோத,
"இதெல்லாம் அநியாயம்மா! மாமானா எப்பவுமே உங்களுக்கு ஸ்பெஷல் தான்!" என்று முறைத்தாள் மகிமா.
வள்ளி கொண்டு வந்த காபியை பருகிக் கொண்டு பிஸ்கட்டையும் எடுத்துக் கொண்டாள் மகிமா.
மீண்டுமாய் உறவினர்களை பார்த்து பேசி வழியனுப்பி வைக்க என வள்ளியும் மாலாவும் வெளியே செல்ல, அவர்களிடம் மகியை கேட்டுக் கொண்டு அவளை தேடி வந்தான் சிவா.
"இப்பவும் சாப்பாடா?" என்று சிரித்துக் கொண்டே கூறியவன் சத்தத்தில் தான் அவனையே கண்டாள் மகிமா.
"மாமா! ம்ம் எடுத்துக்கோங்க!" என பிஸ்கட்டை நீட்ட,
"சாப்பிடு!" என்றவன்,
"டல்லாகிட்ட அம்மு!" என்றான் களைத்த தோற்றத்தில் தெரிந்த அவளைக் கண்டு.
இன்னமும் திருமணப் புடவையை மாற்றி இருக்கவில்லை. அதே தோற்றம் காலையில் அலங்கரித்து இருந்த தலைமுடியும் என ஓவியம் தான்.
ஆனாலும் அந்த முகத்தில் களைப்பின் சாயல் தெளிவாய் தெரிந்தது.
"ஆமா மாமா! ரொம்ப டையார்ட்! அதான் எனர்ஜிக்கு காபி வித் பிஸ்கட்!"
"ஆஹான்! கண்டிப்பா தேவை தான்!" என்றவன் சொல் புரியுமா என்ன?.
"காபி வேணுமா மாமா? நான் எடுத்துட்டு வரவா?"
"டீ கேட்டிருக்கேன். அம்மா வருவாங்க!" என்றவன் சொல்லில் தலையசைத்து பிஸ்கட்டை காபியில் தொய்த்து சாப்பிட்டவளைப் பார்த்தவன் முகம் இன்னும் புன்னகையில் மலர, உதடுகளை உள்ளிழுத்து சத்தம் வராமல் புன்னகைத்தான்.
"ஆனாலும் அம்மு!" என்றவன் சொல்லில் அவன்புறம் திரும்ப,
"இன்னைக்கு என்ன நாள்?"
"நம்ம வெட்டிங்!"
"ஹ்ம் வேற!"
"அதைவிட என்ன ஸ்பெஷல்?" என்று கேட்டு யோசித்தவள் அவனையே தெரியவில்லை என பார்க்க, தோள்களை குலுக்கினான்.
கொஞ்சம் புரிந்தாலாவது எதாவது பேசலாம். இவளிடம் என்ன சொல்ல என்றும் தோன்ற கூடவே கொஞ்சமே கொஞ்சமாய் சிறு வெட்கமும் அவனுக்கு தான்.
நாள் முழுதும் அவள் கை கோர்த்து கதை பேசி அவளருகேயே நின்ற போதும் இதோ தானே கேட்ட பொழுதும் இன்னமும் அவளுக்கு புரியவில்லையே! என்று கொஞ்சம் தவிப்பும் கூட தான் செய்தது.
'கஷ்டம் தான் டா!' நினைத்துக் கொண்டவன்,
"அப்படியே இரு!" என்று சொல்லி அவள் அருகே வந்து அமர, என்னவோ என்று தான் பார்த்தாள்.
"சாரீ ரொம்ப நல்லாருக்கு அம்மு!" என்றவன் குரலும் அண்மையும் சட்டென எதையோ பெண்மைக்கு உணர்த்த,
"ஃபர்ஸ்ட் ஒன்!" என்றவன் என்ன சொல்கிறான் என நினைக்கும் நொடி நேரத்திற்குள் கன்னத்தை தீண்டி சென்றிருந்தது அவனது இதழ்கள்.
"இந்த சாரீக்கு!" என்ற சொல் புரியவில்லை என்பதை விட, அவன் செயலில் உறைந்தவளுக்கு அது செவிகளை எட்டியதோ என்னவோ!.
"இதோ வர்றேன் டா!" என்று சொல்லி வெளியே வந்துவிட்டான் சிவா.
கொஞ்சமாய் மீதி இருந்த காபியோடு பிஸ்கட்டும் கதை சொல்ல, மகிமாவிற்கு அதன்பின் தான் சில மாற்றங்கள். அன்றைய இரவின் எண்ணங்கள் என மனம் தள்ளாட துவங்கியது.
நேரம் ஆக ஆக மௌனத்தை அவளே எடுத்துக் கொள்ள, யார் கேள்வி கேட்பது அவளிடம்?
ஒன்பது மணிக்கெல்லாம் வனிதா உள்ளே வந்தவள், "மகி! இந்த கவர்ல சாரீ இருக்காம். இங்கேயே குளிச்சுட்டு ரெடியாகிக்கோ! வள்ளி அத்தைகிட்ட ஆசிர்வாதம் வாங்க மறந்துடாத! அப்பாவும் அவரும் கிளம்பிட்டாங்க. நானும் அம்மாவும் காலையில வர்றோம்!" என்றவள் தங்கையிடம் தேவையானதை மட்டும் சொல்லி சென்றுவிட,
பிறந்த வீட்டினர் கிளம்பும் பிரிவு எல்லாம் பெரிதாய் தெரியவில்லை மகிமாவிடம். அதற்கு முழு முதற் காரணம் வள்ளி. அதன்பின் தான் சிவாவே!
தற்போதைய எண்ணமெல்லாம் வனிதா சொல்லி சென்ற விஷயங்களில் மனம் நின்றுவிட, அந்த கவரைப் பிரித்தவள் கண்கள் விரிய சில நினைவுகளும் விரிந்தது மனதோடு.
"அச்சச்சோ!" என்று அந்த புடவையைக் கொண்டே தன் முகத்தை மறைத்துக் கொண்டாள் வெட்கத்தில்.
தொடரும்..