• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 36

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
670
505
93
Chennai
அத்தியாயம் 36

"சொல்லிடு ஆரா! நானே பேசிட்டு இருக்கேன்.. என்ன முடிவெடுக்கணும்? இன்னும் உனக்கு டைம் வேணுமா? எடுத்துக்கோ! ஆனா நீ தெளிவா சொந்த விருப்பதுல தான் என்கிட்ட வரணும்!" ஆராத்யா பேச்சை கேட்டு ரகு சொல்ல,

"சில விஷயங்கள் உங்ககிட்ட சொல்லணும்.. ஆனா அதுல முக்கியமான விஷயம்.. அதை எப்படி நீங்க எடுத்துப்பிங்கனு எனக்கு தெரியல.." என்றவள் சொல்ல தயங்க,

"ரகுவை நம்பினா நீ தாராளமா சொல்லலாம் ஆரா.. இல்ல உனக்கான ஸ்பேஸ் வேணும்னாலும்.. ஓகே.. ஐம் ஆல்வேஸ் வித் யூ!" என்று சொல்ல,

"ஸ்ருதியை எனக்கு ஸ்கூல் டைம்ல இருந்தே தெரியும்.. அவ என்னை இப்ப புரிஞ்சிகிட்டது பெரிய விஷயம் இல்ல.. ஆனா எல்லாரும் அப்படி நினைக்க மாட்டாங்க இல்ல?" என்று ஆராத்யா பேச ஆரம்பிக்க, அவள் சொல்ல வருவதை சொல்லி முடிக்க அமைதியாய் பார்த்திருந்தான் ரகு.

"நான் சொன்னது நிஜம்.. எனக்கு உங்களை உங்க பேமிலியைனு எல்லாரையுமே ரொம்ப பிடிக்கும்.. ஆனா பக்கத்துல வச்சு பார்க்க எனக்கு இப்பவும் பயம் தான்.. நீங்க எவ்வளவு என்னை நம்புறீங்க? அதுக்கு நான் நிஜமா இருக்கணுமே!" ஆராத்யா சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க, இன்னும் கூர்ந்து பார்த்தபடி தான் இருந்தான் அவன்.

"யார் என்ன பேசினா என்னனு ஈசியா சொல்லிட்டு போய்டலாம்.. ஆனா அப்படி வாழறது எப்படி சரியாகும்? கூடவே இருந்த தானே ஏன் என்கிட்ட சொல்லலைனு நாளைக்கு கார்த்திகா என்னை கேட்பா.. அப்புறம் விஷயம் தெரிய வரும் போது ஆபீஸ்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொல்லி அவங்களே ஒரு முடிவுக்கு வந்து நம்ம ஜட்ஜ் பண்ணுவாங்க!"

"என்ன சொல்ல வர ஆரா?"

"உங்களுக்கு புரியலையா ராம்? நான் யாரு உங்களுக்கு? உங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ற ஒரு பொண்ணு.. நான் உங்க மனைவியா வந்தா நீங்க எவ்வளவு பேச்சுக்களை கேட்கணும்.. நானும் அதை ஃபேஸ் பண்ணணுமே!"

"சோ?" என்றவன் அவள் அழைப்பை உள்வாங்கவில்லையோ!

"என்னோட பாக்கியம், சந்தோசம்னு முடிவு பண்ணி தான் ஸ்ருதியை உங்க வீட்ல பேச சொன்னேன்.. இப்பவும் எப்பவும் உங்க குடும்பத்துல ஒருத்தியா நான் எப்பவும் இருப்பேன்.. ஆனா உள்ளுக்குள்ள ஒரு சின்ன கசப்பு.. அதை எப்படி நான் மாத்திக்கனு எனக்கு தெரியல.. நிச்சயம் என்னை பேசுவாங்க தானே? ஒண்ணுமே இல்லாத ஒருத்திக்கு இப்படி ஒரு வாழ்வானு?" என்று முடிக்க, அவள் சொல்ல வந்த அர்த்தமே அப்பொழுது தான் புரிந்தது ரகுவிற்கு.

"ஆனாலும் நான் உங்களை எல்லாம் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். எனக்கு புரியுது.. அந்த சிடுவேஷன்ல என்ன முடிவெடுக்க முடியும்னு எனக்கு தெரியல.. எனக்கும் என் அம்மா இருந்திருந்தா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க இவ்வளவு நாள் ஆகி இருக்காது ராம்!" என்று அவள் முடிக்கும் பொழுது அவள் அழைப்பு அவனில் ஊடுருவ, விழிகள் மின்னியது ரகுவிற்கு.

"சில விஷயங்களை கடந்து தான் ஆகணும்னு எனக்கு புரியுது.. ஆனா சில நேரம் கஷ்டமாகிடுது.." என்று கூறி சோர்வாய் ஒரு புன்னகையை அவள் கொடுக்க, அவள் மடியினில் இருந்த கைகளைப் பற்றிட ரகுவின் மனம் பரபரக்க, கைகளை அழுத்தமாய் கட்டிக் கொண்டான் தன் நெஞ்சோடு.

"ஆராத்யாக்கும் ஆசை விருப்பம்னு இருக்கும்.. அவளுக்கும் மனசு இருக்குன்னு எல்லாரும் நினைக்க மாட்டாங்க தானே?" என்று கேட்டவள் சிறு பிள்ளையாய் அவன் முகம் பார்க்க,

அதற்கு புன்னகையை கொடுத்தவன், "பேசுறவங்க எல்லாம் ரெண்டு நிமிஷம் நின்னு அடுத்தவங்க வாழ்க்கையை கேலி பேசி சிரிச்சுட்டு தன்னோட வாழ்க்கையை பார்க்க போய்டுவாங்க.. நீ அங்கேயே நின்னு அவங்களை மட்டும் பார்த்துட்டு இருந்தா உன் வாழ்க்கையை நீ எப்ப வாழ?" என்ற ரகு,

"அடுத்தவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்குறது சரி தான்.. ஆனா அந்த மதிப்பு அவங்க பேச்சுக்கு தகுதி உள்ளதா இருக்கனும்.. உனக்கு நான் சில விஷயங்களை சொல்லி மட்டும் உன்னோட இந்த வருத்தத்தை விரட்ட முடியாது.. அந்த டைம் நாம ஃபேஸ் பண்ணும் போது உனக்கே புரியும்.." என்று சிறு புன்னகை கொடுத்தவன்,

"என்னால புரிஞ்சிக்க முடியுது ஆரா.. ஒரு அஸ்சுரன்ஸ் மட்டும் உனக்கு நான் தர்றேன்.. ஆரா வேற ரகு வேற இல்லை.. இதை நான் முடிவு பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு.. உனக்கு தெரிய வைக்க தான் லேட் பண்ணிட்டேன்.. அது என்னோட மிஸ்டேக் தான்.. ஆனா நீ ஏன் இந்த வாழ்க்கைகுள்ள வந்தோம்னு நினைக்குற மாதிரி நான் நடந்துகிட்டா அது என் காதலுக்கு நான் பண்ற துரோகமாகிடும்.. இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்ல.. வாழ்ந்து தான் நாம புரிஞ்சிக்கனும்!" என்றவன் பேச்சில் இவள் தன்னை மறந்திருக்க,

"எனக்காக மார்னிங் நீ ரெண்டு சொட்டு கண்ணீர் சிந்தின இல்ல.. அது தான் நிஜம்.. நாம நமக்கு உண்மையா இருந்தா போதும்.. அடுத்தவங்க வாழ்க்கையை கேலி பேசுறவங்க தன் வாழ்க்கைல இருக்குற ஓட்டையை கண்டுக்க மாட்டாங்க.. அவங்களுக்கு என்னைக்கும் நீ இடம் குடுக்க கூடாது.. உன்னோட நான் இருக்கேன் ஆரா.. ரகுக்கு நீ கூட இருந்தா மட்டும் போதுமாம்.. ம்ம்ம்?" என்று கேட்டு புருவம் உயர்த்தி அவன் மெல்லிய புன்னகை கொடுக்க, அவன் காதலில் கட்டுண்டு நின்றிருந்தது ஆராத்யாவின் மனம்.

"இந்த போஸ் எனக்கு எப்பவும் உன்கிட்ட ரொம்ப பிடிக்கும்!" பேசிக் கொண்டிருந்தவன் எப்பொழுது மொபைலை எடுத்தான் என அவள் பார்க்கும் முன் தலை சாய்த்து விழி விரித்து அவனை திணற வைக்கும் புன்சிரிப்புடன் பார்த்தவளை அப்படியே சேமித்துக் கொண்டான் மனதிலும் கைபேசியிலும்.

"நல்லா இருக்கு!" மொபைலைப் பார்த்தபடி அவன் சொல்ல, புகைப்படத்தை சொல்கிறான் என அவள் புன்னகைக்க,

"ராம் சார்னு நிறைய கேட்ருக்கேன்.. ராம்னு யாரும் கூப்பிட்டு கேட்டதில்ல.." என்று சொல்ல, திணறியவள் கூச்சத்தையும் ரசித்தவன்,

"போட்டோவும் நைஸ்!" என்றவன் கைகள் அவள் முகத்தை திரையில் தொட வர, விழி விரித்தவளை ஓரக் கண்ணால் பார்த்து உதடு மடித்து சிரித்தான்.

'உஃப்! என்ன பண்ற டா நீ!' தனக்குள் கேட்டு மொபைலை கீழே வைக்க, சிறு மௌனம் இருவருக்குள்ளும்.

"மேரேஜ் எப்ப வச்சுக்கலாம் ஆரா! உனக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா?" ரகு கேட்க,

"என்ன?" என்று பார்த்தவளுக்கு இதற்கு என்னை பதில் சொல்லிவிட என்று தெரியவில்லை. கூடவே எழுந்த முகத்தின் செம்மையை மறைக்கவும் முடியவில்லை. அதில் சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தது என்னவோ ரகுவே தான்.

"நான் சொல்லவா?" அவன் கேட்க, வெறும் தலையசைப்பு அவளிடம்.

"நாளைக்கு ஃபன்க்ஷன்ல கன்ஃபார்ம் பண்ணிப்பாங்க.. அடுத்த முஹூர்த்தம் கூட எனக்கு ஓகே தான்.. ஆனா தர்ஷ் பேபி இருக்காங்களே! அவங்களையும் பாக்கணும்.. மாமா இப்ப தான் லீவ் முடிஞ்சி ஜோயின் பண்ணிருக்காங்க.. சோ இன்னும் ரெண்டு மாசம் முடிஞ்சுச்சுன்னா மேரேஜ் முடியவும் அக்காவை மாமா அழைச்சுட்டு போற மாதிரி பிளான் பண்ணிக்கலாம்.. நமக்கும் கொஞ்சம் பிரீ டைம் கிடைக்கும்!" என்றதற்கு பதில் சொல்லாமல் அவள் பார்க்க,

"நியூ ப்ராஜெக்ட் முடிஞ்சிடுமே! ரிசல்ட் வந்துச்சுனா இன்னும் பிரீயா நாம...." என்றவன் பேச்சு சாதாரணம் தான் என்றாலும் அவன் புன்னகையும் முக பாவமும் அது அப்படி அல்ல என்று எடுத்து கொடுக்க,

"நான் கிளம்பறேன்.. இதெல்லாம் எல்லாருமா பேசிக்கட்டும்!" என்று ஆராத்யா எழுந்து கொள்ள,

"ஓகே ஓகே ரிலாக்ஸ்!" என்றவன் புன்னகையுடன் தன்னை நிதானித்துக் கொண்டு அவளையும் அமர கூறினான்.

"நான் இவ்வளவு நாளும் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் உங்க எல்லாரையும் இல்ல?" ஆராத்யா அமர்ந்தபடி அவளுக்கு தோன்றியதை கேட்க,

"நீ ஹர்ட் பண்ணி நம்ம பேமிலில ஹர்ட் ஆனாங்கனு நீ நினைக்குறியா? தர்ஷ் உன்னை குழந்தையா தான் பாக்குறா.. அவகிட்ட போய் நீ இதை சொல்லேன்.. அங்குட்டு போய் விளையாடுன்னு சொல்லிடுவா!" என்று சிரித்தான் ரகு.

"நீங்க ஹர்ட் ஆனீங்க தானே? அன்னைக்கு கூட ரொம்ப கோவமாவும் பீல் பண்ணியும் பேசினீங்களே போன்ல?" ஆராத்யா கேட்க, அதை அவன் மறுக்காமல் டேபிளில் இருந்த மொபைலை எடுத்து கையால் சுற்றியதே அவனின் மனதை கூற,

"உங்களை அவாய்ட் பண்ணதே உங்ககிட்ட இருந்து தூரமா போகணும்னு தான்.. ஆனா என்னால முடியலை. நானும் நிம்மதியா இல்லாம உங்களையும் நிம்மதியா இருக்க விடாம பண்ணிட்டேன்ல?" என்றவள்,

"எனக்கு வேணும் தான் ஆனா எப்பவும் வேணும்.. கைக்கு கிடைச்சப்புறம் தொலைச்சிட்டா?" என்றவள் அதற்கேற்ப கைகளையை அசைத்து கண்களில் பயம் தெரிய கேட்க,

"ஏன் ஆரா இப்படி இருக்க?" என்றவனுக்கு அவன் கவலை.

தன்னை தொலைத்து விடுவோமோ என்ற அச்சத்தில் அவளின் விழியில் தெரியும் பயமும் அதை அவள் வெளிப்படுதிய விதமும் என அவளை அணைத்து சமாதானம் கூற தான் மனம் துடித்தது.

இடமும் சூழ்நிலையும் என அவன் அமைதி காக்க, கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"இப்பவும் நீங்க ஹர்ட் ஆகுற மாதிரி தானே பேசுறேன்.. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல.. ஆனா நான் முடிவு பண்ணி கன்ஃபார்ம் பண்ணி தான் ஸ்ருதி உங்க வீட்டுல பேசினது.. அதனால நானா எல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன்.. நீங்களும் பேச்சுக்கு கூட போனு சொல்லிட கூடாது! அன்னைக்கு சொன்னிங்களே போடினு அந்த மாதிரி!" என்றவள் உதடு குவித்து கோபமாய் பார்ப்பதாய் நினைத்து பார்த்து வைக்க,

"நீ என்கிட்ட கோபப்படுறீயா ஆரா?" என உதடு மடித்து சிரிப்பை அடக்கி அவன் கேட்டபின் தான் அவன் பார்வையின் வேறுபாட்டை இவள் கண்டதே!

"பரவால்ல! கிண்டல் பண்ணி சிரிச்சுக்கோங்க.. ஆனா ப்ரோமிஸ் பண்ணுங்க!" என்று சொல்ல,

"ப்ரோமிஸ் தானே பண்ணிட்டா போச்சு.. கை நீட்டு!" என்று கேட்க, அதில் அங்கும் இங்கும் விழித்தவள்,

"பரவால்ல நான் உங்களை நம்புறேன்.. ப்ரோமிஸ்னு மட்டும் சொல்லுங்க போதும்!" என்று கைகளை தனக்குள் இறுக்கிக் கொள்ள, மனம் திறந்து அட்டகாசமாய் ஒரு புன்னகை ரகுவிடம்.

தன்னை மறந்து ரசித்துப் பார்த்த ஆராத்யா முகத்திலும் அந்த புன்னகை விரிய, தலை சாய்த்து இமை விரித்து அவனைப் பார்த்தவளை அவளைப் போலவே பார்த்தவன்,

"போனு சொல்ல மாட்டேன்.. போகவும் விட மாட்டேன்.. போதுமா?" என்றவன்,

"கிளம்பலாம்.. இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னா என்னை நீ நானா இருக்க விட மாட்ட..!" என்று கூறி அவளுடனே எழுந்து கொண்டான்.