• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 37

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
663
அத்தியாயம் 37

இரவு பத்தரை மணிக்கு அழைப்பு வரவும், "ஹெலோ சொல்லுங்க சார்! உங்ககிட்ட என் நம்பர் எல்லாம் இருக்குதா சார்?" என்று அலுவலக வேலையில் இருந்து கொண்டே நந்தா கிண்டலாய் கேட்க,

"மாமா! ரொம்ப பண்றீங்க!" என்றான் ரகு.

"யாரு நானா டா? ஒரு அப்பாவிக்கு அப்பப்ப போன் பண்ணி, மாமா ஆராகிட்ட சொல்லவா? மாமா ஆராகிட்ட பேசவா? மாமா ஆரா இப்படி சொல்லிட்டா.. மாமா ஆராவை திட்டிட்டேன்.. மாமா மாமா மாமானு நைட் ஷிப்ட்ல இருக்கும் போது வேலையை பார்க்க விடாம, டே டைம்ல தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு அது எப்படி டா ஓகே ஆனதும் மட்டும் நாங்க எல்லாம் மறந்து போயிடுறோம்.. என்னவோ போ டா மாதவா.. நல்லா இருந்தா சரி தான்!" என்று கிண்டலாய் மட்டும் நந்தா தொடர்ந்தான்.

"நிஜமா சாரி மாமா.. ஸ்ருதி பேமிலியோட பேசிட்டு போகவும் அண்ணி மயங்கி, ஹாஸ்பிடல் போய், அங்க அவங்க ஒரு குட் நியூஸ் சொல்லினு இன்னைக்கெல்லாம் நேரம் போதவே இல்லை மாமா.."

"பார்றா! இப்ப கூட ஆளோட தனியா பேட்ச் அப் ஆனதை சொல்லாம கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுற.. அகி கூட உடனே எனக்கு கால் பண்ணி சொன்னாங்க.. நீ இருக்கியே!"

"மாமா! போதும் மாமா.. நீங்க இல்லைனா இன்னைக்கு மாதிரி ஒரு நாள் எனக்கு கிடைச்சிருக்குமா? உங்க பிளான் தான் லாஸ்ட் ஆராவை சம்மதம் சொல்ல வச்சிருக்கு.. அதான் உங்க மனைவி நிமிஷத்துக்கு நிமிஷம் அப்டேட் பண்ணி இருப்பாங்களே! பாப்பாவை பாத்துக்குறாளோ இல்லையோ மத்த வேலை எல்லாம் நல்லா பாக்குறா அவ!" என்று புன்னகையுடன் ரகு சொல்ல, விரிந்த புன்னகை நந்தாவிடமும்.

"ஜோக்ஸ் அபார்ட்! ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி ஃபார் யூ மேன்! ஆராத்யா உன்னை புரிஞ்சிக்கணும்னு நினச்ச.. இப்ப புரிஞ்சதோட முழு மனசோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கு.. இனி காலத்துக்கும் ஆராத்யா உன் பொறுப்பு.. நிஜமாவே அது ஒரு பெரிய பொறுப்பு தான்!" என்று நந்தா சொல்ல அதை பொறுப்பாய் கேட்டுக் கொண்டான் ரகு.

"இனிமேல் தான் நிறைய நீ கத்துக்க போற! வாழ்க்கை நிறைய கத்து குடுக்கும்.. நல்லது கெட்டது எல்லாமே! எல்லா சிடுவேஷன்லையும் நீ ஆராத்யா கூட அவ நினைக்குறதுக்கு முன்னாடி நிக்கணும்.."

"ஏன் சொல்றேன்னு புரிஞ்சிப்பனு நினைக்குறேன்.. ஒரு சின்ன வருத்தம்னாலும் பொண்ணுங்க ஒன்னு அம்மாவை தேடுவாங்க இல்ல ஹஸ்பண்ட்டை தேடுவாங்க.. ஆரா அவங்க அம்மாவை தேடி ஏங்க நீ காரணமா இருக்க கூடாது.. காட் இட்?"

"ரொம்ப தேங்க்ஸ் மாமா! சில விஷயங்கள் நீங்க சொல்லும் போது தான் என்னால புரிஞ்சிக்க முடியுது.." என்றவர்கள் பேச்சுக்கள் தொடர, கீழே திருமண நாள் பற்றிய விவாதம் தர்ஷினி, கல்பனா, மகேஸ்வரிக்குள்.

"அது சாரி வராது தர்ஷி! உன்னை கூட்டிட்டு போன பின்னாடி தான் கல்யாணம் வைக்கணும்" என்றார் மகேஸ்வரி மகளிடம்.

"ம்மா! ஏன் அப்படி?" தர்ஷினி கேட்க,

"தர்ஷி! முறையா செய்யணுமில்ல உனக்கும்.. ரொம்ப இல்ல உன்னை அழைச்சிட்டு போய் ஒரு ஒரு வாரத்துலன்னு மேரேஜ் வச்சா நந்தா அண்ணா லீவ்க்கும் சரிபடும்.. உனக்கும் சட்டுன்னு கிளம்பி போன பீல் வராது.. ஃபன்க்ஷன் பிஸில உனக்கு பேபியை ஹண்ட்ல் பண்றது கஷ்டமா தெரியாது.." என்றாள் கல்பனா.

"சரியா சொன்ன நீ! ஆனா நீ இனி ரொம்ப வேலை எல்லாம் பார்க்க கூடாது.. இந்த வாயாடுற வேலையோட நிறுத்திக்கோ.. நான் பத்துக்குவேன் எல்லாம்!" என்றவர்,

"அகி தூங்க போய் ஒரு மணி நேரம் ஆச்சு.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க நீ? காலையிலயும் ஆளுக்கு முன்ன எந்திருச்சு வர்றது.. இனி அப்படி எல்லாம் இருக்க கூடாது.." ஏன மருமகளுக்கு வகுப்பெடுக்க,

"குடுத்துவச்சவங்க அண்ணி நீங்க!" என்ற கல்பனாவை,

"உங்க அம்மாவை தான பெருமையா சொல்ற நீ?" என்று தர்ஷினியிடம் கூறிய கல்பனா,

"இதுக்கு மேல நான் இங்க இருந்தா எனக்கு தான் ஆபத்து!" என்று கூறி அறைக்கு சென்றாள்.

அவளுக்காகவே காத்திருந்த அகிலன் கல்பனாவை கைகளில் தூக்கிக் கொண்டவன்,

"எவ்வளவு பெரிய கனம்... அப்படியே இலகுவான மாதிரி இருக்கு.. மனசு அப்பப்ப பாரமா போகும் கல்பனா.. எனக்கே அவ்வளவுனா நீ எவ்வளவு தவிச்சிருப்ப.." என்று அகிலன் கல்பனாவின் நெற்றி முட்ட,

"அதுக்கான வாய்ப்பு எனக்கு இந்த குடும்பத்துல யாரும் குடுக்கலையே! எப்பவாச்சும் யாரையாச்சும் பார்க்கும் போது மனசு கொஞ்சமா ஏங்கும்.. மத்தபடி என்னை யார் தான் பீல் பண்ண விட்டிங்க?" என்று பதிலுக்கு கணவனை கேட்க,

"நமக்கான நாள்.. ரொம்பவே சந்தோசமான நாள்.." என்றவன் மெதுவாய் அவளை இறக்கி விட, கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்.

நந்தாவிடம் பேசி முடிக்கும் பொழுது மணி பதினொன்று ஆகி இருக்க, படுக்கையில் இருந்தவன் எழுந்து பால்கனி புறம் செல்ல, ஊஞ்சலில் அமர்ந்து புத்தகத்தில் கவனமாய் அமர்ந்திருந்தாள் ஆராத்யா.

ரொம்ப முக்கியம்!" என்றவன் ஆராத்யாவிற்கு அழைத்துவிட்டு அவளைப் பார்த்தபடி நிற்க, வெறுமெனே புத்தகத்தை மட்டும் புரட்டிக் கொண்டு வேறு சிந்தனையில் இருந்த ஆராத்யா அலைபேசி சத்தத்தில் கலைந்தாள்.

இதோ அலைபேசியில் தான் சேமித்து வைத்த ராம் என்ற பெயர் ஒளியும் ஒலியும் எழுப்ப, வியந்து பார்த்தவள் பார்வை நேராய் அவன் வீட்டின் பக்கம்.

இன்று தான் அவனை அங்கே காண்கிறாள். பால்கனி கதவை திறந்து வந்து ஓரமாய் சாய்ந்து நின்றிருந்தவன் அவளைப் பார்த்து நின்றிருக்க, பார்த்ததும் கண்களை விரித்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க நீ?" எடுத்ததும் ரகு கேட்க,

"நீங்க என்ன பண்றீங்க இந்நேரம்?" என்றாள் விளக்கொளியில் அவன் உருவம் நன்றாய் பார்த்து.

"பதில் கேள்விலாம் வருதே! நைஸ்!" என்றவன் சிரித்துக் கொள்ள,

"தூங்கலையா?" என்று மற்றொரு கேள்வி அவளிடம்.

"தூங்கணும்.. தூக்கம் வர்ல.." என்றவன்,

"உன்னால தான்.. ஆனா உனக்கு எதுவுமில்ல.. புக் படிச்சுட்டு இருக்க!" என்றவன் மெல்லிய முறைப்பை அவளால் குரலில் உணர முடிய,

"என்ன?" என்றாள் அவன் முதல் பாதியில் வியந்து.

அதில் ஒரு பெருமூச்சைக் கொண்டு வந்தவன்,

"ம்ம்ஹும்! நீ தூங்கலையா?" என்று கேட்க,

"தூங்கணும்.. அஜய் விளையாடிட்டு இருந்தான்.. இப்ப தான் தூங்கினான்.. நாளைக்கு ஊருக்கு போய்டுவாங்களே!" என்று கூற,

"ம்ம்ம்!" என்ற சத்தம் மட்டும் அவனிடம். சில நொடிகள் மௌனம் தொடர, பார்வை இருவருக்கும் இருவருக்குள்ளும்.

"ஆரா!" என்றவன் ஆழ்ந்த குரல் அழைப்பில் இவள் இதயம் தடதடக்க அமைதி காக்க,

"ஓகே! போய் தூங்கு.. டைம் ஆச்சே.." என்றான்.

"நீங்க?" என்றாள் அடுத்த நொடியே.

"நானும் தான் டா.." என்றவனின் கனிந்த அழைப்பில் என்னவோ செய்தது ஆராத்யாவினுள்.

"ஓகே! நாளைக்கும் ஆபீஸ் லீவ்ல நீ?" ரகு தொடர,

"ம்ம்ஹும்! வந்துடுவேன்.." என்றாள் சட்டென்று.

"ஹேய்!"

"நிஜமா தான்.. எனக்கு இப்பவே மூச்சு முட்டுது.. நாளைக்கு நீங்க வந்துட்டு கிளம்பினதும் நான் ஆபீஸ் போய்டுவேன்.. தர்ஷியை நாளைக்கு என்னால சமாளிக்கவே முடியாது!" என்றவள் பயந்த குரலில் ரகு சிரிக்க,

"சும்மாவே பேசுவாங்க.. அய்யயோ! நோ வே!" என்றவள்,

"அஜய் வேற கிளம்புறானே! நாளைக்கு அவங்களும் பர்ச்சேஸ் போறாங்க.. வீட்டுல இருந்தா கஷ்டம்.. அதுவும் தனியா இருந்தா.."

"ஓகே! அப்ப நாம சேர்ந்தே போலாம்!" என்றவன் கள்ளப் புன்னகை தெரியவில்லை என்றாலும் அவன் சொல்லியதிலேயே அதிர்ந்தவள்,

"நோ நோ நோ!" என்று உடனே கூற, பக்கென்று சிரித்துவிட்டான் ரகு.

"சிரிக்காதீங்க! இன்னைக்கு ஆபீஸ்லேர்ந்து நான் சொல்லிக்காம தான் உங்களை தேடி ஹாஸ்பிடல் ஓடி வந்தேன்.. கார்த்திலேர்ந்து பிரண்ட்ஸ் எல்லாரும் அத்தனை போன்.. நாளைக்கு அவங்களை எப்படி சமாளிக்க போறேனோ.. இதுல உங்களோட வந்தேன்..." என்றவள் பேச்சு தர்ஷினியிடம் வருவது போல சாதாரணமாய் வர,

"வந்தா? என்ன பண்ணிடுவாங்களாம்?" என்றான்.

"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்! அதெல்லாம் வேண்டாம்.. நான் நாளைக்கு போய் நானே ஃபர்ஸ்ட் பிரண்ட்ஸ்க்கு சொல்லி புரிய வைக்குறேன்.."

"என்னனு?" என்றான் புன்னகையை அதக்கி.

"அதான்! உங்களுக்கும் எனக்கும்... நாளைக்கு ஃபன்க்ஷன் நடக்குமே.. அதை சொல்லணும் இல்ல?" என்று அவனிடம் கூறவே முகம் சிவக்க, இருவரின் உருவங்கள் மட்டும் கண் அறிந்தாலும் அவரவர் உணர்வுகளையும் அறிந்து கொள்ள முடிந்தது பேச்சினில்.

"அதெல்லாம் அனோன்ஸ் பண்ணிக்கலாம்.." என்று இன்னும் அவளிடம் விளையாட,

"அனோன்ஸ்ஸா?" என்று விழி விரித்தவள்,

"என்ன புது ப்ராஜெக்ட்டா சொல்ல போறீங்க அனோன்ஸ் பண்ண.. அப்படியே தர்ஷி மாதிரி பண்றிங்க.." என்றாள் சிணுங்கலாய். அதில் இவனுக்கு உள்ளம் தாருமாறாய் தடுமாற,

"ஒன்னு பண்ணுங்க.. நாளைக்கு நீங்க லீவ்.. நான் போறேன்.. சரியா.. நீங்க வந்தா என்னால பேச முடியாது!" என அவனுக்கே பேச்சு விளைவில் ஆராத்யா உத்தரவிட, நாளை அவள் அருகில் தானும் ஏன அவள் நண்பர்களின் முன் நின்றால் என்ன என ரகுவின் மனம் நினைக்க,

"புரிஞ்சதா?" என்றாள் சத்தமாய்.

"மிரட்டுறியா ஆரா?" என்றவன் கேலி குரலில் அவளும் தன்னை மீட்டுக் கொண்டு முகத்தை சுருக்கி நெற்றியில் தட்டிக் கொள்ள,

"அழகு போ!" என்றான்.

"என்ன?"

'என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கன்னு சொல்லவா?' என முணுமுணுத்து தன் தலையில் தன்னை நினைத்தே தட்டிக் கொண்டவன்,

"இதே ஃப்ளோ மைண்டைன் பண்ணு.. நாளைக்கு பார்க்கலாம்.." என்றவன்,

"குட் நைட் ஆரா!" என்று சொல்லி தலையாட்ட, அவளிடமும் அதனின் பிரதிபலிப்பு.

அடுத்த நாள் ரகுவின் வீட்டில் பரபரப்பாய் வேலைகள் நடந்தேற, ஆராத்யா வீட்டிலும் ஸ்ருதி கணவன் அனைத்தையும் தயார் செய்திருந்தான் முந்தைய நாளே!.

"பேசி முடிக்கறதுக்கு நீ எதுக்கு? நீ எல்லாம் ஒன்னும் வர வேண்டாம்!" தர்ஷினி ரகுவிடம் விளையாடி கொண்டிருக்க,

"ஆமா ஆமா! என்ன நீங்க பார்க்காத பொண்ணா? இனி நீங்க கல்யாணத்துக்கு பார்த்தா போதும்.. ஆரா இனி ஆபீஸ் கூட வர மாட்டா!" என ஒத்து ஊதினாள் கல்பனா.

"என்ன டா ட்ரெஸ் இது? வேஷ்டி சட்டை மாத்திக்கோயேன்!" என ரகுவைப் பார்த்தபடி வந்த மகேஸ்வரி சொல்ல, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேலியாய் பார்த்தான் ரகு சகோதரியை.

"ம்மா! அவன் எதுக்குன்னு நாங்க கேட்டுட்டு இருக்கோம்.. என்னவோ கல்யாணம்ன்ற மாதிரி நீங்க வேஷ்டி மாத்திக்க சொல்றிங்க!"

"அவனுக்கு பொண்ணு பார்க்க நீ பட்டு புடவை, நகை நட்டுன்னு மாட்டிட்டு கிளம்பலாம்.. அவன் வர கூடாதா? பேசாம கிளம்பு.. இல்ல பாப்பா கூட வீட்டுல இரு!" என்ற மகேஸ்வரியிடம்,

"சரியா சொன்னிங்க த்த.. எப்ப பாரு விளையாட்டு இந்த தர்ஷிக்கு!" என உடனே கட்சி மாறி இருந்தாள் கல்பனா.

"உனக்கு தான் டி ஆஸ்கர் அவார்ட் குடுக்கணும்.. என்னமா நடிக்குற?" என்று அகிலன் கல்பனா பின் வந்து நிற்க,

"இடத்துக்கு தகுந்தாப்புல இருந்துக்கணும்.. இல்லனா அலைச்சல் எதுக்கு உனக்குன்னு அத்தை என்னை வீட்டுல விட்டுட்டு கிளம்பினாலும் கிளம்பிடுவாங்க!" என அப்படியே நல்ல பிள்ளையாய் மாறி இருந்தாள் கல்பனா.

"பொழச்சுப்பிங்க அண்ணி நீங்க!" என்று பேசி சிரித்து என இவர்கள் கிளம்பி எதிர்வீட்டை வந்து சேர,

ஆராத்யா எவ்வளவு தடுத்தும் கேளாமல் ஸ்ருதி ஆராத்யாவிற்கு நகைகளை பரிசாய் கொடுத்து அதை அணிவித்து அலங்கரித்தும் வைத்திருந்தாள்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
454
பக்கம் பக்கமாய்
பேச துடிக்குதடி...
பாவையின் பார்வையில்
பேச்சிழந்து தவிக்கிறேனடி...
பொண்ணு பார்க்க
பக்கத்து வீட்டுக்கு கிளம்பியாச்சு..... 👌👌👌👌❤️❤️❤️🥰😍😍😍
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
454
நந்தா 👌👌👌👌....
கல்பனா அகி புரிதல் சூப்பர்
 
Top