அத்தியாயம் 38
"அப்பா கடை வரை போய்ட்டு வரேன் சொல்லிட்டு போறாங்க ம்மா!" என்று அன்னையிடம் கூறியவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய,
"மகி எங்கே?" என்றான்.
"ரெஸ்ட் எடுக்கட்டும்னு மேல அனுப்பிவிட்டேன். தூங்கிட்டு இருப்பாளா இருக்கும் சிவா!" என்ற அன்னை,
"உன் அப்பா உங்கிட்ட எதுவும் சொன்னாரா டா?" என்று கேட்க,
"இல்லையே ம்மா? என்ன?" என்றான்.
"அண்ணே கூட என்னவோ பேசிட்டு இருந்தார் ரொம்ப நேரமா! கோவமா எல்லாம் பேசல ரெண்டு பேருமே! ஆனாலும் அப்படி என்ன பேசிருப்பாங்கனு இருக்கு" என்றார் கனகவள்ளி யோசனையுடன்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ம்மா. கோவில்ல நானும் பார்த்தேனே! நல்லா தான் பேசிக்குறாங்க. முன்ன மாதிரி இல்ல தான். ஆனா இனியும் ஒதுங்கி போய்ட்டு இருக்க முடியாது இல்ல? அவங்களுக்குள்ள என்னவும் இருக்கட்டும். அதை குடும்பத்துக்குள்ள கொண்டு வராம பார்த்துக்கனும்!" என்றவனைப் பார்த்து அன்னை புன்னகைக்க,
"என்ன? கிண்டலா?" என்றான் சிரித்தபடி.
"ச்சே ச்சே! கல்யாணமானதும் என் புள்ள எவ்வளவு பொறுப்பா பேசுறான்னு பாக்கறேன்!" என்றார் அதே புன்னகையுடன்.
"ம்ம்ம் ஆமாமா! இதுக்கு முன்னாடி அப்ப நான் பொறுப்பா இல்லை அப்படி தானே?" என அன்னையிடம் அவன் முறைக்க,
"அப்படிலாம் இல்ல தான். ஆனா இப்ப குடும்பஸ்தன் பேச்சு வருதே உன்கிட்ட! அம்மாவா பெருமைபட்டு தான ஆகணும்!" என்றவரிடம்,
"அட போங்க ம்மா!" என்றவன் மாடிப்படி ஏற போக,
"ஏன்டா சிவா!" என முன் வந்து நின்றார் ஈஸ்வரி.
அவரைப் பார்த்ததும் தான் அவர் கூறியதே நியாபகம் வந்தது கனகவள்ளிக்கு. மகனை தான் பாவமாய் பார்த்தார். கோவம் கவலை ஆதங்கம் என அவனிடம் எதிர்பார்த்து பாவமாய் கனகவள்ளி விழிக்கும் நேரம் ஈஸ்வரி முழுதாய் கொட்ட, தன் கோபத்தோடு இத்தனை நாள் ஆதங்கம் என வெளிப்படுத்தி உடைந்து போவான் மகன் என நினைக்கவே இல்லை வள்ளி.
பாட்டியின் அழைப்புக்கு படி ஏறாமல் நின்றவன், "சொல்லுங்க பாட்டி!" என்று கேட்க,
"நாளைக்கு பூஜைக்கு வேண்டிய பொருளெல்லாம் மளிகைகடைக்கு லிஸ்ட் போட்டு குடுத்தானே வாங்கிட்டானா உன் அப்பா?" என்றார் ஈஸ்வரி.
"பூஜையா? நாளைக்கு என்ன பூஜை? நாளைக்கு தானே மகி வீட்டுக்கு போகணும் அங்க விருந்துன்னு சொன்னிங்க?" என்றவனுக்கு எதுவும் தெரியாதே!
"அவ வீட்டுக்கு பூஜையை முடிச்சு வச்சுட்டு போனா போதும்!" என்ற ஈஸ்வரி,
"வாய் இருக்குன்னு மகன்கிட்ட எல்லாம் பேச தெரியும்ல? இதை சொல்ல தெரியாதா?" என்றார் ஜாடையாய்.
"ப்ச்! என்னனு சொல்லுங்க பாட்டி. இப்ப என்ன பூஜை?" என்று சிவா கேட்க, இப்பொழுது தான் தயக்கம் ஈஸ்வரிக்கு.
கனகவள்ளி சொல்லி இருப்பார் என்று நம்பி தான் கேட்க வந்தது. இப்பொழுது தான் கூறினால் என்ன சொல்வானோ என தயங்கி வள்ளியைப் பார்க்க, கோபமான கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தார் அத்தையை வள்ளி.
சிவா தெரிந்தால் கோவப்படுவான் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் தான் கேட்கவில்லையே! கணவனுமே 'அம்மா ஆசைக்காக பண்ணிடுவோம்!' என்று சொல்லி முடித்திருக்க, திருமணம் வரை அவனிடம் கூறாமல் இருந்ததே பெரிய விஷயம். இப்பொழுது நல்ல மனநிலையில் இருப்பவனிடம் இதை சொல்லி அவன் என்ன நினைப்பானோ என்ற கவலை கனகவள்ளிக்கு.
"என்ன ரெண்டு பேரும் முழிக்குறீங்க?" என்ற சிவாவுக்கும் அப்படி என்னவாய் இருக்கும் என சந்தேகம் வந்துவிட்டது.
"ம்மா! நீங்க சொல்லுங்க! என்னாச்சு? என்ன பூஜை? எப்ப சொன்னாங்க?" என அன்னை அருகே வந்துவிட்டான்.
"சிவா! ஜாதகம் பார்த்துட்டு வந்து நிச்சயம் வச்சு இப்ப கல்யாணம் வரை எல்லாம் நல்லா தான் முடிஞ்சது.. இருந்தாலும்..." என்று ஈஸ்வரி இழுக்க,
"ம்மா!" என்ற சிவா குரலில் அழுத்தம் உணர்ந்து,
"இல்ல சிவா! நான் வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருக்கேன். உன் பாட்டி பேச்சை கேட்டு உன் அப்பா தான் சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணுனா குடும்பத்துக்கு ஆகாது.. வாரிசு வர்றதுல பிரச்சனை இருக்கும்னு சொல்லி பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க!" என்றதும் புரியாமல் விழித்தவன்,
"யார் சொன்னாங்க?" என்று தான் கேட்டான் முதல் கேள்வியாய். ஒருவேளை ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் இந்த பேச்சு வந்ததோ என்ற குழப்பத்தில்.
"அப்போ வந்திருந்தா உன் அப்பா சும்மா இருந்திருப்பாரா? அப்பவெல்லாம் யாரும் எதுவும் சொல்லல. அப்படினா கல்யாணத்தை நிறுத்தி இருப்பார். அதெல்லாம் ஒண்ணுமில்ல. என்னவோ காரணம் சொல்லணும்னு சொல்லி உன் அப்பா மண்டையில ஏத்திவிட்ருக்காங்க. உன் அப்பாவும் எல்லாம் ஏற்பாடு பண்ணுதாங்க. நான் சொன்னா கேட்க யார் இருக்கா?" என்று ஈஸ்வரியைப் பார்த்து சொல்ல,
"என்னம்மா இது?" என்றான் சிவா அதற்கே அதிர்ந்து.
"நான் சொல்லியும் கேட்கல டா!" என ஆதங்கமாய் அவர் சொல்ல,
"பாட்டி!" என்று அழைக்கும் முன்,
"இங்க பார் சிவா. இதெல்லாம் உனக்கு தெரியாது. இப்படி சொந்தத்துக்குள்ள கல்யாணம்னு வந்தா பொண்ணுக்கு பிரச்சனை இருக்க தான் செய்யும்!" எனும் பொழுதே அவன் இறுகி போயிருக்க,
"பூஜை பண்ணினா எல்லாம் சரி ஆகிரும்னு அந்த காலத்துலயே சொல்லுவாங்க. நாளைக்கு பூஜை முடிஞ்சு ஒரு வாரம் அவளை அவ அம்மா வீட்டுல விட்டுட்டு வா! அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காது!" என்று சொல்லி முடிக்கும் முன்,
"என்ன?" என்றவன் இன்னுமே அதிர்ந்து பார்த்தான் பாட்டியை.
சிவா!" என வள்ளி அழைக்க,
"என்னம்மா இவ்வளவு சாதாரணமா சொல்றாங்க? இதெல்லாம் நார்மலா நடக்குறது தானா?" என்றான் அன்னையிடம் மனம் துடிக்க.
என்றுமே கேள்விப்பட்டதில்லை தானே? அதுவும் பெண்ணிற்கு தான் பிரச்சனை எனும் பொழுதே அவர் சொல்ல வந்தது புரிந்துவிட்டது சிவாவிற்கு. அத்தோடு அவள் வீட்டில் அவளை கொண்டு விட வேண்டுமாம் திருமணம் ஆன மூன்றாம் நாளே! என்ன பைத்தியக்காரத்தனம்?
இதை அவள் அறிந்தால் என நினைக்கும் பொழுதே மனம் பலமாய் அடித்துக் கொண்டது.
"நீங்க என்ன சொன்னாலும் கேட்டேன்றதுக்காக என்ன வேணாலும் சொல்லுவிங்களா?" என்று தான் கேட்டான் முதல் கேள்வியாய்.
"உனக்கென்ன தெரியும்...." என்று ஈஸ்வரி பேசும் முன்,
"பேசாதீங்க பாட்டி...." என்றவன் சத்தத்தில் தான் மகிமா அறையை விட்டு வெளியே வந்தது.
"என்ன நடக்குது இங்க? ஏன் இபடி இருக்கீங்க எல்லாரும்?" என்று சத்தமிட்டவன்,
"ஏன் ம்மா இப்படி? இதுக்கு தான் நான் முதல்லயே வேண்டாம்னு சொன்னேன்! கேட்டீங்களா நீங்க?" என்று கேட்க,
"அப்படிலாம் சொல்லாத சிவா! இதெல்லாம் வேணும்னு பன்றாங்க. நீ கவலைப்படாத. நான் வேண்டாம்னு சொல்லிடுறேன். நீ கலங்காத டா!" என்றார் கனகவள்ளி.
"அவ்வளவு சாதாரண பேச்சா ம்மா இது? பொண்ணுக்கு பிரச்சனை இருக்கும்னு சொல்றாங்க. இப்படி பேசுறது அவளுக்கு தெரிஞ்சா? இதனால எவ்வளவு பிரச்சனை வரும் புரியுதா உங்களுக்கு? மனசாட்சியே இல்லையா பாட்டி? ஒரு பொண்ணை போய்....." என்றவன் இப்படிப்பட்டவர்களா தன்னோடு இருப்பவர்கள் என அதிர்ந்திருக்க,
"கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு என்னை போட்டு பந்தாடுறிங்க!" என்றவன் சொல்லில் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமா முதலில் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்..
"ஏன் டா இப்படி பேசுற?" என்ற வள்ளிக்குமே கண்ணீர்.
ஈஸ்வரி, வள்ளி, சிவா மட்டுமே அங்கே நின்றிருந்தனர்.
"அப்பா பொண்ணு பாக்குறேன்னு சொன்னார். சரினு வந்தேனா இல்லையா? உங்களுக்கும் அத்தைக்கும் எங்களோட கல்யாணம் நடந்தா நல்லாருக்கும் சொன்னிங்க. நானும் சரினு சொன்னேனா இல்லையா? ஏன்? எல்லாத்தையும் விட இப்ப வர அங்க ஒருத்தி உங்களுக்கு நான்னா பிடிக்கும் மாமானு தான் சொல்றாளே தவிர்த்து உங்களுக்கு என்னை பிடிக்குமானு கேட்கவே இல்லை!" என்றவன்,
"உங்க எல்லாருக்காகவும் தான் நான் பார்த்து பார்த்து நடந்துக்குறேன். இப்ப வரை உங்க எல்லாரோட ஆசைக்காக தான் நான் பார்த்திட்டு இருக்கேன். ஆனா என்னை யாருமே யோசிக்க மாட்டிங்களா? நான் பேசுறது புரியுதா உங்களுக்கு?" என்றவன் தொய்ந்து அமர, அவனை ஓடி சென்று அருகில் அமர்ந்து தோள் தாங்கிக் கொண்டார் வள்ளி.
"என்ன டா பேசுற நீ? நான் இருக்கேன் டா. அப்டிலாம் விட மாட்டேன்." என்று சொல்ல,
"ம்மா! மகி என் மனைவி ம்மா இப்ப. கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே அவளை போய் வாரிசு....." என்றவனுக்கு அந்த வார்த்தையை நினைத்தும் பார்க்க முடியவில்லை
"சிவா! என்ன சிவா நீ! அம்மா இருக்கேன். அம்முக்கு நான்...." என்ற வள்ளியின் வார்த்தைகள் நின்றுவிட, அவரைக் கண்டவன் அவர் பார்த்த திசையில் தானுமாய் பார்த்தவனுக்கு திக்கென்றானது.
"அம்மு!" என்றவன் கண்கள் கலங்கிக் கிடக்க, வா என்று தலையசைத்தவன் சொல்லுக்கு எதிராய் பின்னால் நடந்து அறைக்கே சென்றுவிட்டாள்.
இருகைகளையும் கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவன் அன்னையை காண,
"போ டா! போய் அவளை பாரு! இவங்களை எல்லாம் நான் பார்த்துக்குறேன்!" என்று தீர்க்கமாய் சொல்ல, எழுந்தவன் எழுந்த வேகத்தில் அறைக்கு ஓடினான்.
அவன் கோவப்படுவான் பேசி சமாதானம் செய்துவிடலாம் என்றவரை சாதாரணமாய் தான் நினைத்திருந்தார் ஈஸ்வரி. சிவாவின் இத்தனை பேச்சில் தான் அவருக்கு உறுத்தலும் கூடவே உதறலும்.
மேலே வந்தவன் அறைக் கதவை திறந்த போது அமைதியாய் கட்டிலில் அமர்ந்திருந்தாள் மகிமா. அருகே வந்து அமர்ந்தவனும் அமைதியாய் சில நொடிகள் இருக்க, மகிமா எழுந்து கொண்டவளை கைப்பிடித்து நிற்க வைத்திருந்தான்.
"அம்மு!" என்றவன் அழைப்பிற்கு திரும்பாதவள் முகம் கோபமாய் இருக்க, இவள் எப்போதிருந்து என்ன கேட்டு வைத்தாள் என மனம் முழுதும் தவித்தது சிவாவிற்கு.
அவன் பிடியில் இருந்து கைகளை உருவப் பார்க்க,
"ஏய்! நான் என்ன டி பண்ணினேன்? நீயும் சேர்ந்து படுத்துற!" என சிவா அவள் முன் வந்து நிற்க, அவனையும் அவன் கண்களையும் என பார்த்துக் கொண்டிருந்தாள் மாறி மாறி.
"என்னனு சொல்லு அம்மு! பதறுது. இப்படிலாம் நிக்காத!" என்றவனுக்கு ஈஸ்வரியின் ஒற்றை வார்த்தை அவ்வளவு பலமிழக்க வைத்திருந்தது அவனை.
"ஏன் உங்களுக்கு என்னை பிடிக்காதா?" என்றவள் கேள்வியில் அவன் பார்வை அவளிடம் நிலைபெற,
"அப்படி தான் படுத்துவேன். என்ன பண்ணுவீங்க? அப்படி தான் சொல்லுவேன். உங்களுக்கு நான்னா பிடிக்கும். எனக்கு தெரியும். இதை தான் எப்பவும் சொல்லுவேன். எங்க இல்லைனு சொல்லுங்க?" என்றவள் கேள்வியில் சில நொடிகளுக்கு பின் 'உஃப்' என காற்றை ஊதித் தள்ளி இதற்காகவா கோபம் என ஆசுவாசமாய் விழி மூடி திறக்க, கண்ணீர் கண்களை மறைத்து நின்றது மகிமாவிடம்.
அதற்கு மேல் முடியாமல் "அம்மு!" என்றவன் பிடித்திருந்த கைகளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
"விடுங்க! விடுங்க என்னை!" என அவனிடம் போராடியவளுக்கு அவ்வளவு கோபமும் அவன் கூறிய அந்த வார்த்தைகளில் மட்டும் தான்.
ஏன் அவனுக்கு என்னைப் பிடிக்காதா? ஏன் அதை சொல்லிக் காட்டினான் என தான் மனம் வந்து முன் நின்றது. மற்ற எதுவுமே அவள் காதில் சரியாய் விழவில்லை அந்த வார்த்தைக்கு பின்.
என்னவாகவும் இருக்கட்டும். அவர்கள் என்னவும் பேசி இருக்கட்டும். என்னை விட்டுக் கொடுப்பதா? எனக்கு தெரியும் மாமாக்கு என்னை பிடிக்கும்னு. அதை சொன்னது தப்பா? இப்படி தான் நினைப்பு மகிமாவிடம்.
"ஏன் மாமா அப்படி சொன்னிங்க? நீங்க சொல்லிருக்க கூடாது. அத்தையும் அம்மாவும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னது தப்பா? என் மாமாக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்னு சொன்னேன். ஆமா உண்மையை தானே சொன்னேன். அது தப்பா? அவ்வளவு கோவமா அதை அவங்ககிட்ட சொல்றிங்க?" என்றவள் நேசத்தில் அணைப்பை அவன் இறுக்க,
"போங்க! நீங்க என்னை விடுங்க!" என்றவள் அவனை தோள்களில் அத்தனை அடி வைக்க, முந்தய நாளில் அவள் அடித்ததற்கும் இன்றைய இந்த வலிக்கும் படியான அடிகளுக்கும் வித்யாசம் நன்றாய் தெரிந்தது சிவாவிற்கு.
தொடரும்..