• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 38

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 38

அத்தனை எளிமையாய் நடந்தேறி இருந்தது ரகுராம் ஆராத்யா பூச்சூடும் படலம். அதை நிச்சயமாகவே மாற்றி அமைத்துவிட்டான் ஒற்றை செயலில் ரகு.

கேலி, கிண்டல், விளையாட்டு என புன்னகை வாடா முகமாய் இரு குடும்பத்தினர் மட்டும்.

ரகு அருகே ஆராத்யாவை நிற்க சொல்லவும் அவள் தயங்க, எழுந்து வந்து அவனே சென்று அவளருகில் நின்று கொள்ள, தர்ஷினி, கல்பனா, ஸ்ருதியோடு அகிலனும் ஹோ'வெனும் சத்தத்தில் சேர்ந்து கொண்டான்.

"இது எப்ப டா வாங்கின? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல?" தர்ஷினி மின்னும் தங்க மோதிரத்தை ரகு கையில் எடுக்கவும் கேட்க,

"அதானே? நார் இதெல்லாம் ஒவர் தான்.. ஆரா அவ்வளவு ஸ்பெஷலா?" கல்பனாவும் கேட்கவும்,

"இப்ப வாங்கி இருந்தா சொல்லி இருப்பான்.. அதை வாங்கி வருஷம் ரெண்டாச்சு" என்று மகேஸ்வரி சொல்ல, ரகு அன்னையைப் பார்த்து புன்னகைத்தான்.

"மம்மி! உங்களுக்கு எப்படி தெரியும்?" ஆச்சர்யமாய் தர்ஷினி கேட்க,

"எனக்கு நேத்து தான் சொன்னான்.. ஆராக்கு நான் இதை நாளைக்கு போட்டு விடலாமானு.. ஆனாலும் எப்படி இவனை இத்தனை வருஷம் கவனிக்காம விட்டேனு தெரியலயேனு இருக்கு.. எம்புட்டு கவலை தெரியுமா இவனை நினச்சு.. கல்யாணம் எல்லாம் இவன் பண்ணிக்க மாட்டானோன்னு எல்லாம் நினைச்சிருக்கேன்!" என்று ரகு புகழ் பாட,

"ம்மா! போதும்!" என நிறுத்தி இருந்தான் ரகுவே. இவ்வளவும் பேச்சு நடக்க, அந்த மோதிரம் பற்றி அவன் அன்னை கூறியதில் இருந்து ரகுவைப் பார்ப்பதும் திரும்புவதுமாய் இருந்தாள் ஆராத்யா.

"போட்டு விடு டா.. வச்சுட்டே நிக்குற!" குழந்தையை கையில் வைத்திருந்த அகிலன் சொல்ல, கைகளை அவள் புறமாய் நீட்டினான் ரகு.

குடு என்பதை போல அவன் கண்ணசைக்க, கலக்கம், தவிப்பு, ஏன பார்த்தவளுக்கு உடனே நீட்டிட முடியவில்லை.

தான் பதிலுக்கு எதுவும் செய்யாமல் எப்படி அவனிடம் மட்டும் வாங்கிக் கொள்ள முடியும் என ஆரா தயங்கி நிற்க,

"அம்மாடி மருமகளே! என்ன யோசிக்குற? கையை குடு!" என்று எழுந்து வந்து மகேஸ்வரி ஆராத்யா அருகில் நிற்க,

"ஆரா!" என்றவன் கண்களை மூடி திறந்து கையசைத்து மீண்டுமாய் அவள் கைகளை நீட்ட சொல்லி கேட்க, நடுங்கும் கரங்களை மெதுவாய் அவன்புறம் நீட்டியவளுக்கு யாரிடம் கேட்டிட என்று தெரியவில்லை.

'முன்பே சொல்லி இருந்தால் தானும் ஒன்று அவனுக்கென வாங்கி இருக்கலாமே!' என்று மனம் முழுதும் பிசைய, நடுங்கும் விரல்களைப் பற்றியவன்,

"சில் ஆரா!" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படிக்கு சொல்லி ஐவிரல்களைப் பற்றி மெதுவாய் மிக மெதுவாய் மோதிரத்தை அதனிடத்தில் சேர்ப்பிக்க, பார்வை முழுதும் அதன் மீது இருந்தாலும் அதன் அமைப்பு அந்நேரம் கண்களுக்கு தெரியவில்லை அவளுக்கு.

"அதெப்படி டா கரெக்ட்டா இருக்கு? எங்கேயோ மிஸ் ஆகுதே!" அகிலன் கேட்க,

"நீங்க வேற! அவரெல்லாம் ஆரானு வந்துட்டா அம்புட்டு பேருக்கும் அல்வா குடுத்து அவளை தூக்கிட்டு போய்டுவாரு.. நாங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடியே தெரிஞ்சிகிட்டோம்.. நீங்க லேட்டு!" என்றாள் கல்பனா.பக்கத்தில் இருந்து வீடியோ காலில் கணவனுக்கு நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தாள் தர்ஷினி.

"அவன் குடுத்தா மட்டும் போதுமா?" என்ற மகேஸ்வரி வார்த்தைகளில்,

"இதோ கேட்டுவிட்டாரே! தன்னிடம் எதுவும் இல்லையே!" என்று நினைக்கும் முன் கண்ணீர் வரப் பார்க்க,

"இந்தா ஆராம்மா! இதை அவனுக்கு நீ போட்டு விடு!" என அவள் கைகளில் அதே போலோரு மோதிரத்தை அவரே நீட்ட, கண்ணங்களை தொட்டுவிட்டது கண்ணீர்.

"அத்தை!" என்ற சொல்லோடு மகேஸ்வரியை ஆராத்யா கட்டிக் கொள்ள,

"ஆரம்பிச்சுட்டா!" தர்ஷினி சொல்லி,

"அவன் ரொம்ப நாளாவே ஆரா வேற ரகு வேற இல்லனு புலம்பிகிட்டு தான் சுத்துறான்.. இதெல்லாம் அவனுக்கு ரொம்ப சாதாரணம்!" என்றும் கூற,

"ஜஸ்ட்டு மிஸ்ஸு! அந்த மோதிரத்தை நீங்களே ஆராகிட்ட குடுத்துருந்தா உங்க அம்மாக்கு கிடைச்சது உங்களுக்கு கிடைச்சிருக்கும்னு தானே பாக்குறீங்க நார்?" என்றாள் கல்பனா.

"அண்ணி!" என்றவன் நெற்றியை விரல்களால் நீவி, புன்னகைக்க, அவனின் வெட்கத்தில், வடிந்த நீரோடு அவனைப் பார்த்து புன்னகைத்தவளை கண் சிமிட்டிப் பார்த்து தானே அவள்முன் விரல்களை நீட்டிட,

"என்ன ஒரு அவசரம்! போட்டு விட்டுடுமா.. உன் கையை கடிச்சு வச்சுடாம!" என்றான் அகிலன்.

மிக பொறுமையாய் அவன் கைகளைப் பற்றியவள் அழகாய் புன்னகைத்து அவன் முகத்தையும் விரல்களையும் பார்த்தபடி போட்டு முடிக்க,

"நிச்சயம் அப்பவே இதெல்லாம் செஞ்சிருக்கலாம்!" என்றான் அகிலன்.

"இன்னுமா உங்களுக்கு புரியல.. உங்க அம்மாவும் தம்பியும் பிளான் பண்ணி இன்னைக்கே சிம்பிளா நிச்சயத்தை முடிச்சிட்டாங்க.. நெக்ஸ்ட்டு ஸ்ட்ராயிட் மேரேஜ் தான்.. இல்ல த்த?" என்ற கல்பனாவிற்கு,

"கல்யாணத்தை நல்லபடியா கிராண்டா பண்ணிடலாம் அகி.. இப்ப இவங்க சந்தோசம் முக்கியமே! நேத்து என்கிட்ட ரகு பேசும் போது எனக்கும் சரினு தோணுச்சு.. உங்க எல்லாரோட சந்தோசம் தானே எனக்கும் முக்கியம்?" என்று முடித்துக் கொண்டார் மகேஸ்வரி.

"ஆரா!" என்று அருகில் வந்த ஸ்ருதியை அணைத்துக் கொண்டாள் ஆராத்யா.

"இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இரு.. நாங்க நிம்மதியா கிளம்புவோம்.." என்ற ஸ்ருதி,

"ஆராக்கு நீங்க எல்லாம் உறவா கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ஆண்ட்டி! ரெண்டு வருஷத்துக்கும் மேல, அவ அம்மா அப்பா அவளை விட்டு போனதுல இருந்து அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. என்னவோ இப்ப நினச்சா இனி எல்லாம் அவளுக்கு கடவுள் நல்லது தான் பண்ணுவார்னு நம்பிக்கை வருது.. நீங்க தான் பார்த்துக்கணும்!" என மகேஸ்வரியிடம் ரகு அருகில் இருக்கும் பொழுதே கூற, மகேஸ்வரியும் ஸ்ருதிக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

"எதாவது கேட்கணும்னா கேளு.. ஏன் இப்படி பாக்குற.." ரகு அருகில் ஆராத்யா நிற்க, புகைப்படம் எடுப்பதாய் சொல்லி அகிலன் அங்கேயும் இங்கேயும் நிற்க வைக்க, ஆராத்யா அதை எல்லாம் கவனத்தில் இல்லாமல் அடிக்கடி ரகு முகம் பார்ப்பதும் திரும்புவதுமாய் இருக்க, சுற்றி அனைவரும் இருக்கவே அவளுக்கு மட்டும் கேட்கும்படிக்கு மெதுவாய் கேட்டான் ரகு.

"ம்ம் கேட்கணும்.. ஆனா இப்ப கேட்கலாமா தெரிலயே!" என்று அவன் முகம் பார்த்து தலை சாய்த்து அவள் சொல்ல, "உஃப்!" என மூச்சை வெளிவிட்டவனுக்கு மூச்சு முட்டிப் போனது அவளது பாவனைகளில்.

தேன் வண்ண புடவை பாந்தமாய் அவளை தழுவி இருக்க, ஸ்ருதி ஆராத்யாவை அத்தனை பொருத்தமான நகை, சிகை அலங்காரத்தில் செதுக்கி தான் வைத்திருந்தாள்.

இவர்களின் பேச்சு கேட்காது எனினும் கவனித்தும் கவனிக்காததை போல மற்றவர்கள் தங்கள் செயலில் இருக்க,

"ஆரா! பொறுமையை ரொம்பவே சோதிக்குற!" என்றான் அவளைப் பார்த்தும் பாராமலுமாய்.

அத்தனை அவனை அல்லாட வைத்திருந்தாள் அவள். ஏற்கனவே அவள் என்றால் பிடித்தம். அவளாய் சம்மதம் சொல்லியது பிடித்தம் என அவனுள் அவளுக்கான உலகம் மாறிக் கொண்டு இருக்க, இப்படி அருகே புதுப் பெண்ணாய் நின்று கொல்லாமல் கொல்லும் அவள் செயல்கள் யாவும் ஒரு மயக்கத்தை தான் கொடுத்தது.

"கோவமா என்ன?" அவன் பார்வையும் வார்த்தையும் வெவ்வேறாய் இருக்க, அது கூட புரியாமல் கேட்டவள் கேள்வியில்,

"சுத்தம்!" என்றவனுக்கு, அவளுக்கு என்ன சொல்லி விளக்கிட முடியும்?.

"இது கோவப்படுற நேரமா ஆரா?" என்று நேராய் அவள் முகம் பார்த்து கேட்க, அதற்க்கும் அவள் விழிக்க, மனமெல்லாம் பரபரத்தது அவளை தனக்குள் சேர்த்திட.

"ஓகே லீவ் இட்! சொல்லு என்ன கேட்கணும்!" என்றான் அவனே பொறுமையை இழுத்து பிடித்து.

"நிறைய! முதல்ல ஏன் எப்ப என்னை பிடிக்கும்?" ஆராத்யா கேட்க,

"குட் டவுட்! அண்ட் குட் டைமிங்!" என்றவனின் மிதமான முறைப்பில் அவள் அவனையே பார்க்க,

"என்னவாம்?" என்றான் புன்னகைத்து.

அந்த புன்னகை மட்டும் அவளுள் என்னவோ செய்தது. இப்போது என்று இல்லாமல் அவன் புன்னகைக்கும் பொழுதுகள் எல்லாம் அவளுக்கும் ஒரு புன்னகை எழ, இப்பொழுதுமே அவள் இதழ்கள் அதனை வெளிப்படுத்தியது.

"நிக்கட்டுமா... போகட்டுமா?.." என்று கேட்ட பாடலில் திரும்பாமலே யார் என்று கண்டு கொண்டான் ரகு.

"தர்ஷ்! வாங்க நாம போட்டோ எடுத்துக்கலாம்.. அக்கா நீங்களும் வாங்க!" ரகுவிடம் கேட்டது எல்லாம் தர்ஷினி அருகில் வரவும் மற்றவர்களைப் பார்த்ததும் பின்னுக்கு போக, ஆராத்யா அவர்களுடன் சகஜமாக,

"கஷ்டம் தான் டா உன் பாடு!" என்று தர்ஷினியே சொல்லும்படி ஆனது ரகு நிலைமை.

பன்னிரண்டு மணி வரையுமே அவர்களுடன் நேரம் கழிய, திருமண நாளை குறிக்க மாலை அகிலன், மகேஸ்வரி, அம்பிகா செல்வதாக முடிவு செய்து, மதிய விருந்தும் அப்பொழுதே முடித்துக் கொண்டு ரகுவும் அவன் குடும்பத்தினரும் விடைபெற்றனர்.

"நான் ஆபீஸ் போறேன்!" என்று ரகுவிற்கு செய்தி அனுப்பி வைத்துவிட்டே கிளம்பினாள் மதியம் ஆராத்யா.

எட்டு மணிக்கு ஸ்ருதி குடும்பத்தினருக்கு விமானம். அவர்களுமே வெளியே செல்ல இருக்க, தனியாய் அதுவும் இவ்வளவு நேரம் இருந்த மனநிலைக்கு தன்னால் தனியாய் இருக்க முடியாது என்று தோன்ற ரகுவிடம் கூறியது போலவே அலுவலகம் கிளம்பிவிட்டாள்.

'போகாதன்னு சொன்னாலும் கேட்க மாட்ட! போய் நீயே ஷாக் ஆகிக்கோ' நினைத்துக் கொண்டு ரகு கள்ளப் புன்னகையோடு அவளுக்கு பதில் அனுப்பவில்லை.

ஆராத்யா அலுவலகம் வந்து சேரும் பொழுது மணி ஒன்று முப்பது. இரண்டு மணி வரை சாப்பிடும் நேரம் என்பதால் தன் இடத்தில் சென்று அமர்ந்தவள் கார்த்திகா மற்றும் நண்பர்கள் வரவுக்காக காத்திருந்தாள்.

எப்படி பேச என்ற படபடப்பு ஒரு புறம் இன்று நிச்சயம் இவர்களிடம் கூறிவிட வேண்டும் எனும் சிந்தனை ஒரு புறம் என அமர்ந்திருந்தாலும் திருமண சந்தோஷம் அகத்தோடு முகத்தினையும் முழுதாய் நிறைத்திருந்தது.

"ஆரா வந்துட்டியா?" என்று ஓடி வந்த கார்த்திகா ஆராத்யாவை சரியாய் கவனிக்கவில்லை. அவள் கேள்விபட்ட செய்தி அப்படி இருக்க, காலையே ஆராத்யாவும் மதியம் வந்துவிடுவதாய் கூறி இருந்ததால் ஆராவிடம் கூறும் அவசரத்தில் இருந்தாள் கார்த்திகா.

"ஹாய் ஆரா!" என்று வந்த நண்பர்களும் கூட, தனது எம்டியுடைய ஹாட் நியூஸ் என்கின்ற புது செய்தியை அவளிடம் பகிர காத்திருக்க, யாருக்குமே ஆரா என்ற பெண்ணை அந்த நேரம் உற்று நோக்க நேரமில்லை.

"ஹே நான் தான் சொல்லுவேன்.. இல்ல இல்ல.. நான் தான் முதல்ல சொல்லுவேன்.." என ஆளாளுக்கு அடித்துக் கொள்ள, ஒன்றும் புரியாமல் விழித்தாள் ஆராத்யா.

"ச்சீ சொல்லி தொலை!" என ஆண்கள் கார்த்திகாவிற்கு விட்டுக் கொடுக்க,

"ஆரா! நான் சார் அப்படி இப்படினு சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காத.. நான் தான் தப்பா நினச்சுட்டேன் போல.." என்ற கார்த்திகாவைப் பார்த்து ஆரா சிறு புன்னகை கொடுக்க,

"உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு நம்ம ராம் சார்க்கு எங்கேஜ்மென்ட்டாம்.." என்றதும் ஆராத்யா விழி விரிய பார்க்க,

"ஷாக் ஆகிட்டியா? எங்களுக்கும் ஷாக் தான்.. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் டிஎல்கிட்ட ராம் சாரே சொல்லி இருக்காங்க.. இன்னொன்னு தெரியுமா? இன்னும் ரெண்டு மாசத்துல மேரேஜாம்.. நமக்கெல்லாம் அடுத்த மாசம் போனஸ் கூட இருக்காம்!" என்றவள்,

"ரொம்ப சீக்ரெட்டா சிம்பிளா நடந்திருக்கு!" அக்கம் பக்கம் பார்த்து கண்களை உருட்டி ரகசியம் போல
கார்த்திகா கூறியதில், இத்தனை நாட்கள் கண்டிராத மனம் நிறைந்த புன்னகை ஆராத்யாவிடம்.

கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு வாய்விட்டு சிரித்திருந்தாள் ஆராத்யா.
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
ராம் தவிப்பு
ரசனையோ ரசனை....
ஆணின் உணர்வுகளை
ஆரா புரிந்து கொள்ளும்மா???
அற்புதம்....
அம்மா கூட கூட்டணி அமைத்து நிச்சயம் முடிந்து விட்டது 😂😂😂😂😂....
மாம்ஸ்ஸ மிஸ் பண்ணலையா ராம் 🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
ராம் தவிப்பு
ரசனையோ ரசனை....
ஆணின் உணர்வுகளை
ஆரா புரிந்து கொள்ளும்மா???
அற்புதம்....
அம்மா கூட கூட்டணி அமைத்து நிச்சயம் முடிந்து விட்டது 😂😂😂😂😂....
மாம்ஸ்ஸ மிஸ் பண்ணலையா ராம் 🤩🤩🤩
Avan aalai parthathum mams kannuku therila pa😜🤣🤣