• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 39

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 39

"என்ன டா இப்படி சிரிக்குறா?" ஆராத்யா புன்னகை அதிகமாகிக் கொண்டே இருக்க, பார்த்த நண்பர்களுக்கு தான் என்னவோ என்பதை போல புரியாமல் விழித்து நின்றனர்.

சிரித்து சிரித்து கண்ணீர் வர, நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு ராமின் வேலை என புரிந்தாலும் அத்தனை ரகசியமாய் கார்த்திகா கூறிய செய்தி இன்னுமே புன்னகைக்க தான் தூண்டியது.

"வாய மூடு டி டிஎல் வர்றாரு!" என்று கார்த்திகா சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுக்குள் கொண்டு வந்து விரிந்த இதழ்களுடன் ஆராத்யா தன் கணினி பக்கமாய் திரும்பிக் கொள்ள, விஷால் விக்ரம், பிரேம் அருகே சென்றான்.

"டேய்!" என்று அழைத்த விஷால் முகம் பேயறைந்தது போல இருக்க, ஏற்கனவே ஆராத்யா சிரித்ததின் அர்த்தம் புரியாமல் இருந்த நண்பர்கள் விஷாலைப் பார்த்துவிட்டு புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்தனர்.

எதுவும் பேசாமல் விஷால் மொபைலை தூக்கிக் காட்ட, விழிகள் தெறித்து வெளியே விழும் அளவுக்கு அந்த புகைப்படத்தை பார்த்தனர் இருவரும்.

"உங்களுக்கு தெரியுமா டா முன்னாடியே!" குரலை தழைத்து விஷால் மெதுவாய் கேட்க, இன்னும் அதிர்ச்சி மீளாமல் இருந்த இருவரும் இல்லை என்பதை போல தலையை மட்டும் ஆட்டினர்.

எதிரெதிராய் நின்று இருவரின் பார்வைகளும் தழுவி இருக்க, மென்னகையோடு நின்ற ரகு விரல்களைப் பற்றி மோதிரமிடும் ஆராத்யா முகத்தில் கீற்றாய் அளவான புன்னகை மனதால்.

புகைப்படத்தை வாட்சப் ஸ்டேட்டஸ் மூலம் கீழே இதயங்கள் இரண்டு மட்டும் ஸ்டிக்கரில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு முன் ரகு தனது அலைபேசியில் பதிவேற்றி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியா ஆச்சர்யமா என தெரியாத வகையில் பார்த்த விஷால் கொண்டு வந்து ஆராத்யா நண்பர்களிடம் காட்டி இதோ அவர்களும் பேய் பிடித்தவர்களைப் போல நிற்க, இன்னும் கார்த்திகாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

"என்ன டா நடக்குது?" என்று சத்தமாய் கேட்டுவிட்டு ஆராத்யாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விஷால் ஆராத்யாவிடம் சென்றவன்,

"வாழ்த்துக்கள் ஆராத்யா!" என்று சொல்ல, படபடவென்று வந்துவிட்டது ஆராத்யாவிற்கு.

சொல்லிய விஷால் சொல்லிய வேகத்தில் அவனிடத்திற்கும் சென்றுவிட, உணர்வுக்கு வரவே சில நேரம் எடுத்த நண்பர்கள் இருவரும்,

"சார் சார்! அந்த போட்டோ.. கொஞ்சம் ஸ்க்ரீன்ஷாட்.. ப்ளீஸ் சார்!" என்று விஷாலிடம் கெஞ்ச,

"எனக்கு பிரச்சனை வர்ற மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க டா!" என்று சொல்லியே இருவரில் ஒருவருக்கு அனுப்பி வைத்தான் விஷால்.

"அவர் ஏன் டி உனக்கு வாழ்த்து சொல்றாரு?" என்று கார்த்திகா கேட்டுக் கொண்டிருக்க,

"கார்த்தி!" என்று வந்து விக்ரம், பிரேம் இருவரும் அவள் முன் நின்றனர்.

"டிஎல் இங்க தான் டா இருக்காரு.. பிரேக்ல பேசலாம் போங்க போங்க!" என விரட்டினாள் விஷயம் தெரியாமல் கார்த்திகா.

"அடியேய்!" என்று விக்ரம் அழைக்க,

"டேய்! கொழுப்பா?" என்று சத்தமாய் கார்த்திகா கேட்க,

ஆராத்யாவை பார்த்துவிட்டு மொபைலைப் பார்ப்பதும் பின் கார்த்திகாவைப் பார்ப்பதும் என இருவரும் பேசாமல் நிற்க,

"என்னாச்சு?" என்றாள் ஆராத்யாவும் எச்சிலை விழுங்கியபடி..

விக்ரம் கையில் இருந்த மொபைலை பிடுங்கி ஸ்க்ரீன்ஷாட் புகைப்படத்தை கார்த்திகாவிடம் பிரேம் காட்டிட, பார்த்தவள் இதயம் ஒரு நொடி நின்றுவிட்டதை போல ஆக, மொபைலை பறித்து கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தவள்,

"ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல கார்த்தி! நீ நல்லா தான் இருக்க.. பதறாத!" என தனக்கு தானே சொல்லிக் கொண்டு நெஞ்சை நீவி விட,

"என்ன டி பண்ற?" என்ற ஆராத்யாவிற்கு குரலே வெளிவராமல் போக,

கார்த்திகா தன் இதயத்தை நீவியபடி எழுந்து நண்பர்களைப் பார்க்க, அவர்களும் தலையாட்ட, எழுந்த ஆராத்யா கார்த்திகாவின் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கி பார்க்க, மூவரின் பார்வையும் இப்பொழுது தெளிவாய் ஆராத்யாவிடம்.

குர்தியில் வந்திருந்தவளின் கண்களில் கொஞ்சம் அதிகமாய் மை, கை நிறைந்த வளையல், முழங்கை வரை ஸ்ருதி இட்ட மருதாணி, வட்டமாய் கருப்பு நிற சிறிய பொட்டு இருக்கும் நெற்றியில் இன்று பெரிய கோபுர வடிவ டிசைனார் பொட்டு.

இவற்றை எல்லாம் விட, ஆராத்யா முகத்தில் தெரிந்த அந்த தேஜஸ்! பொலிவுடன் சிறிது நேரத்திற்கு முன் சிரித்ததினால் சிவந்திருந்த கன்னம் இப்பொழுது அந்த புகைப்படத்தைப் பார்த்து விரிந்த கண்களுடன் ஆராத்யா நண்பர்களை பார்த்த விதம் என, ஆராத்யா வேறாய் தெரிய,

மூவரும் பார்த்தது பார்த்தபடி நிற்க, தயக்கம் ஒருபுறம் இருந்தாலும் நண்பர்கள் மனதில் இப்பொழுது எண்ணம் என்னவாக இருக்கும் என்று தெரியாமல் பயந்து தான் பார்த்தாள் அவள்.

"நான் சொன்னேனே! நம்பினீங்களா டா பாவிங்களா?" கார்த்திகா பிரேம் விக்ரமிடம் கேட்க,

"நீ ஆராத்யா இடிக்குறானு சொல்லையே கார்த்தி!" என பாவம் போல நின்றனர் நண்பர்களும்.

"கார்த்தி!" என்று ஆராத்யா அழைத்து மூவரும் திரும்பவும்,

"நான் சொல்றேன்.. ப்ளீஸ்.. அதை பேச தான் இன்னைக்கு வந்தேனே.. அதுக்குள்ள.." என்றவள் ரகுவை நினைத்து பல்லை கடித்துக் கொள்ள,

"எமகாதகி நீ! கூடவே இருந்தேனே டி.. ஒத்த வார்த்த சொல்லி இருப்பியா.." என்ற கார்த்திகாவிற்கு இன்னும் அதிர்ச்சி ஓயவில்லை.

"ஆரா! ஏன் எங்ககிட்ட சொல்லல.. நாங்க என்ன பண்ண போறோம்?" விக்ரம் கூர்மையாய் பார்த்து, 'மறைக்கும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்.. மறைக்க வேண்டிய அவசியம் என்ன?' என்பதை போல நின்று கேட்க,

"டேய்! இனி நம்ம முதலாளியம்மா டா அவங்க.. இப்படிலாம் பொசுக்குன்னு கோவப்படக் கூடாது!" என்று பிரேம் சொல்ல, கண்கள் கலங்கி விட்டது ஆராத்யாவிற்கு.

"பிரேம்! அப்படிலாம் பேசாத டா.. இது நானே எதிர்பார்க்கல.. நேத்து தான் முடிவானது.. ப்ளீஸ் நான் சொல்றேன் கேளுங்களேன்!" என்றவளுக்கு அழுகை வர,

"முதலாளியம்மான்னாலும் ஆரா முதல்ல நம்ம பிரண்ட்.. அப்புறம் தான் ஓனரெல்லாம்.. அவளை ஏன் டா அழ வைக்குறிங்க?" என்ற கார்த்திகா,

"லூசா டி நீ? ஆமா எனக்கு தான் கல்யாணம்னு கெத்தா சொல்றதை விட்டுட்டு இவனுங்க சொன்னதுக்கெல்லாம் அழுதுட்டு!" என்று ஆராவிடமும் சொல்ல, அது அத்தனை பெரிய ஆறுதல் ஆராத்யாவிற்கு.

"ராம் சார் மேல எனக்கு டவுட்னு அப்பவே சொன்னேன்.. யாராச்சும் கேட்டீங்களா? கடைசில கரெக்ட் பண்ணிட்டார் போல!" என்று கிண்டலாய் சொல்லி ஆராவை உற்றுப் பார்க்க, முகம் சிவந்தாள் அவள்.

"ஓகே ஓகே! விஷால் சார் பாக்குறாங்க.. ஈவ்னிங் ஆரா ட்ரீட்டு.. கூடவே கொஞ்சம் உண்மை கதை.. இப்ப குரூப்பை கலைச்சு ஓடுங்க.." என்று கார்த்திகாவே சொல்லி அவரவர் இடத்திற்கு திரும்ப,

"கார்த்தி! நிஜமா உனக்கு என் மேல கோபம் இல்லையே?" என்றாள் ஆராத்யா.

"கோபம் இல்ல.. ஷாக் இன்னும் குறையல.. ஆனா ரெண்டு வருஷமா உன்னோட இருக்கேன்.. உன்னை தெரியாதா டி.. என்னவோ சிட்டுவேஷன்.. சார் நல்ல கேரக்டர் தான்.. பேமிலி கூட ஜாலியா தான் இருந்தாங்க.. ஆனாலும் சட்டுனு போட்டோ பாத்ததும் எப்புட்றா அப்டினு இருக்கு.. ஆனாலும் நம்ப முடியுது.. அன்னைக்கு நான் தான் பார்த்தேனே தாங்கு தாங்குன்னுல தாங்குனாரு!" என்றவள் பேச்சில் ஆராத்யா குனிந்து கொள்ள,

"இப்டியே எப்பவும் இரு.. ஓகே!" என்று கூறவும் மனதை அழுத்திய பாரம் கொஞ்சம் கலைந்து இலகுவாகி இருந்தது.

அடுத்து நான்கு மணி அளவில் எப்பொழுதும் போல வேக நடையில் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வந்த ரகு கள்ளப் புன்னகையோடு ஒரப் பார்வையுமாய் ஆராத்யாவைப் பார்த்தபடி தன் அறைக்கு செல்ல, சில நொடிகள் தான் என்றாலும் ஆராத்யா நண்பர்களோடு விஷாலின் பார்வையும் ரகுவையும் ஆராவையும் கவனிக்க தவறவில்லை.

உள்ளே சென்றதும் விஷாலை அழைக்க, வாழ்த்துக்கள் சொல்லி தான் பேசவே ஆரம்பித்தான் விஷால். சிறு புன்னகை கொடுத்த ரகு,

ஐந்து மணிக்கு மீட்டிங் என்றும் சொல்லி அவனை அனுப்பிவிட்டு சில வேலைகளை செய்தவன் என்ன பேச வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டான்.

கூறியது போலவே அனைவரும் ஐந்து மணிக்கு கூடிவிட, மிக தாமதமாய் 'நீ இன்னைக்கு வந்திருக்கவே கூடாது ஆரா!' என தன்னையே திட்டிக் கொண்டு எப்படி சொல்வானோ என எதிர்பார்ப்பும் தவிப்புமாய் நின்றிருந்தாள் ஆராத்யா.

"கை ஏன் நடுங்குது?" கேலி செய்து கார்த்திகா கேட்க,

"சும்மா இரு டி!" என்றவளுக்கு நிஜமாய் டென்ஷன் ஏறிக் கொண்டிருக்க அதிகமாய் சீண்டவில்லை தோழி.

"குட் ஈவினிங் கைஸ்!" என்றபடி வந்து தன்னிடத்தில் ரகு அமர,

"எப்ப சார் மேரேஜ்?" என விஷாலே ஆரம்பித்து வைத்தான்.

"பொறு மேன்! நான் தானே சொல்லணும்?" என்ற ரகு முகத்தில் புன்னகை கொட்டிக் கிடக்க, ஆராத்யாவிற்கு அதில் நிலைத்தது கண்கள்.

"சொன்ன மாதிரியே ப்ராஜெக்ட் அனோன்ஸ்மென்ட் தான் இது!" என்று அவள் முணுமுணுக்கவும்,

"சோ.. ப்ளீஸ்!" என்று ஆராத்யாவை பார்த்த ரகு தன்னருகில் அழைக்க,

"மணப்பெண் தோழி நானும் வரவா?" என்று கேட்டு வைத்தாள் அருகில் நின்றவள்.

"மிஸ் ஆராத்யா.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. சோ இன்னும் டூ மந்த்ஸ்ல இவங்க மிஸஸ் ஆராத்யா ரகுராம்.." என்று சொல்லவும் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தாலும் கைத்தட்டி, வாழ்த்துக்கள் தெரிவிக்க,

"மேரேஜ்க்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்.." என்றவன் நிச்சயம் முடிந்ததாய் தெரிவிக்க, சிறு பேச்சு சத்தம் அந்த அறைக்குள்.

புன்னகையை ஒட்ட வைத்திருந்தாலும் ஆராத்யா விழிகளின் கலக்கம் ரகுவையும் அடைய தவறவில்லை.

"இது என்னோட விருப்பத்தை மட்டும் கொண்டு ரெண்டு வீட்டுலையும் பேசி முடிவு பண்ணின மேரேஜ்.. அண்ட் நம்ம ஆபீஸ்ல ஆராத்யாவும் இருகாங்கன்றதால தான் நான் இவ்வளவும் சொல்றது.. ஆராத்யாக்கு கூட எஸ்டேர்டே தான் தெரியும்.. சோ வேற எந்த காசிப்ம் வேண்டாம் ரைட்?" என்று கூறி புன்னகை கொடுத்தவன்,

"டேட் ஃபிக்ஸ் ஆனதும் ஐ இன்வைட் யூ ஆல்.. அண்ட் நீட் யுவர் விஷ் அண்ட் பிளெஸ்ஸிங்ஸ்.." என்று கூறி புன்னகையோடு எழுந்து நிற்க, ஆண்கள் கைகொடுத்து வாழ்த்துக்கள் கூற, பெண்கள் ஆராத்யா புறம் சூழ்ந்தனர்.

அதிகமான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காத வகையில் ரகு அனைவர்க்கும் உண்மையை தெரிவித்திருக்க, ஆராத்யா பெரும் மலையென கனமாய் சுமந்த பாரம் எல்லாம் கரைந்ததை போலிருந்தது அவனின் சொல் செயல் என அனைத்திலுமாய்.

"டெக்ஸ்ட் பண்றேன்!" என்று ஆராத்யாவிடம் மெதுவாய் கூறிவிட்டு அங்கிருந்து ரகு கிளம்பி செல்ல, ஆராத்யாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி அறையை விட்டு வர சில நிமிடங்கள் பிடித்தது.

"சும்மாவே ஆரா வெய்ட் பண்ணுங்கன்னு எம்டி சொல்லிட்டு இருப்பாரு.. இன்னைக்கு மட்டும் சொல்லாமலா இருப்பாரு.. நீ வெயிட் பண்ணு நாங்க கிளம்புறோம்! அந்த ட்ரீட் மட்டும் மறந்துடாத.. நிறைய சொல்ல வேண்டியது இருக்கு நீ!" என்று சொல்லி மற்றவர்கள் கிளம்ப, ரகு அழைக்காமலே அவனுக்காக காத்திருந்தாள் ஆராத்யா.

விஷால் இறுதியாய் கிளம்பவும் ரகு அழைக்காமலே அவன் அறை கதவை இவள் தட்ட,

"உள்ள வா ஆரா!" என்றான் ரகு.

"தேங்க்ஸ்!" என்றபடி முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஆராத்யா வந்து நிற்க,

"தேங்க்ஸ் மட்டும் தானா?" என்றவன் டேபிளில் சாய்ந்து கைகட்டி நின்று கொண்டான்.

"தேங்க்ஸ் மட்டும் தான்!" என்றாள் அழுத்தமாய் கூறி அவன் கேள்வி உணர்ந்து.

"நாட் பேட்!" என்றவன் குரலின் உல்லாசம் அவன் மனதை சொல்ல,

"நான் கிளம்புறேன்னு சொல்ல தான் வெய்ட் பண்ணினேன்.. பை!" என்றவள் அறியும் முன், அவள் விரல்களை பற்றி இருந்தான் ரகு.

மூச்சைடைத்து நின்றவள் அவன் புறம் திரும்பாமலே நிற்க,

"டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு.. உன்கிட்ட தானே முதல்ல சொல்லணும்.. அதனால ட் ஆபீஸ் வந்தேன்.. உன்கிட்ட சொல்லாம எப்படி எல்லாருக்கும் சொல்ல?" என்று பிடித்த விரல்களை விடாமலே அவன் சொல்ல, இவளும் அசைவேனா என நின்றிருந்தாள்.

"எப்பனு கேளு ஆரா!" என்றவன் விரல்களில் அழுத்தம் கொடுக்க,

"எப்ப?" என்றாள் அவன் சொல்லியதையே.

"இன்னும் சரியா சிக்ஸ்ட்டி டேஸ் இருக்கு.." என்றவன் நாளை சொல்ல, அவை எல்லாம் மனதிற்கு சென்றாலும் விரல்களை விட்டால் போதுமே என்று நெளிந்து கொண்டிருந்தாள்.

"ரொம்ப ஸாஃப்ட்!" என்றவன் அவள் விரலோடு உள்ளங்கையைப் பற்ற,

"ராம்! என்ன... பண்றீங்க!" என்றவள் குரல் காற்றிற்கும் கேட்டிருக்குமோ என்னவோ அவனை அடைந்திருந்தது.

"எதுவும் பண்ண மாட்டேன்!" என்றவன் சிரித்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவள் சட்டென கையை உருவிக் கொள்ள,

"ஹேய்!" என அவன் சுதாரிக்கும் முன் கதவை நோக்கி சென்றுவிட்டாள்.

"இனி சிக்ஸ்டி டேஸ்க்கு தனியா சிக்கிடாத!" என்றவன் முக பாவம் அறிந்தவள் போல அவன்பக்கம் திரும்பாமலே,

"நான் ஏர்போர்ட் போறேன்.. பால்கனில காத்து வாங்காம போய் தூங்குங்க.." என்று சொல்லி வெட்கத்தை அவனிடம் மறைத்து ஓடியும் விட்டாள் அவன் புன்னகை துரத்த.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
அழகு 🤩🤩🤩🤩🤩....
ஆரா.....ராம் காதலாய்
அனைத்தும் பார்த்து பார்த்து செய்யும் அன்பு
அழகோ அழகு....