• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 40

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 40

ஸ்ருதி கணவனோடு வெளிநாடு சென்று இரு வாரங்கள் கடந்துவிட்டது. நாட்களும் அதி வேகமாய் ஓட, திருமணத்திற்கு என வேலைகளும் அதற்கேற்ப நடந்து கொண்டிருந்தது ஒரு பக்கம்.

அம்பிகாவை திருமணம் வரை இங்கேயே இருக்க சொல்லி இருக்க, அவரும் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு ஆராத்யாவுடன் இருந்தார்.

தினமும் தர்ஷினி கல்பனா என மாறி மாறி ஆராத்யாவை சென்று பார்த்து வர நிச்சயத்திற்கு பின் இன்னும் ஆரா அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை.

வரும் பொழுதுகள் எல்லாம் பேசி பேசியே ஆராவை முகம் சிவக்க வைத்து போதும் போதும் என்று ஆக்கி விடுவாள் தர்ஷினி.

"பாப்பா மட்டும் கொஞ்சம் வளரட்டும்.. அப்ப பாருங்க உங்களை நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பண்றோம்னு.." என்று கூறும் ஆராத்யாவிற்கு எதை சொல்லியும் அடங்கி விடுவதில்லை தர்ஷினி.

நாளாக நாளாக கல்பனாவிற்கு தலை சுற்றல், வாந்தி என குழந்தை தன் வளர்ச்சியை எல்லாம் கல்பனாவிற்கு ஒவ்வொரு அறிகுறியாய் காட்டிட, பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் அவளுக்கென செய்தார் மகேஸ்வரி.

"நான் வேணா லீவ் போட்டு உன்னை பார்த்துக்கவா?" அகிலன் கல்பனாவிடம் கேட்க,

"தலைவலி மட்டும் தான் இல்ல.. நீங்க லீவ் போட்டா அதுவும் வந்துடும் எனக்கு.. தயவு செஞ்சு வெளியே ஜாவ்!" என்று காலை வாருவாள் கணவன் என்றும் பாராமல்.

"தர்ஷி கூட சேராத சொன்னா கேட்குறீயா! அவ ஊருக்கு போய்ட்டா அவ கூட இருக்குற நேரம் கிடைக்காதுன்னு சொல்லி பகல்ல தூங்காம நீயா இழுத்து வைக்குற.. அவளும் குழந்தை பெத்தவ மாதிரி நடந்துக்க மாட்டா.. நீயும் குழந்தை வயித்துல இருக்கேன்னு பாத்து நடக்க மாட்டுற.. கவனமே இல்ல பசங்களா உங்களுக்கு.." என வசை பாடினாலும் இருவரையுமே ஒன்றாய் தான் தாங்கினார் மகேஸ்வரி

"ஏன் த்த இப்பலாம் நீங்க என்னை திட்டுறது அடிக்குறதுலாம் இல்ல?" என்று கல்பனா அப்பொழுதும் மகேஸ்வரியிடம் வாயை கொடுக்க,

"உன் பொண்டாட்டிக்கு கொழுப்பு தான் டா.. என் பேரனோ பேத்தியோ வரட்டும்.. அதுவரை பேசிக்கோ!" என்றுவிடுவார்.

"ம்மா! எங்களையே உங்களால சமாளிக்க முடியல.. உங்க ஆசை மகன் ரகுவுக்கு நீங்க பார்த்து பேசி வச்சிருக்கீங்களே! அதெல்லாம் குழந்தை புள்ள ம்மா!" என்று ஆராத்யாவை தர்ஷினி சொல்ல,

"ஆமா ஆமா! சரியான வெகுளி அவ! உங்க கூட சேர்ந்து கெட்டுப் போகாம பார்த்துக்கணும்!" என மகேஸ்வரி காலை வார, ரகு அப்படி சிரிப்பான்.

"கிரேட் இன்சல்ட் தர்ஷி!" கல்பனா சொல்ல,

"சிரிக்கவா செய்யுற! கல்யாணம் முடியட்டும் டா அப்புறம் இருக்கு உனக்கு!" என்பாள் தர்ஷினி.

"ரகு! ஆராவை இதுங்க கூட மட்டும் சேர விடாத.. அவ இந்த வீட்டுக்கு கடைக்குட்டி செல்லமாவே இருந்துட்டு போகட்டும்.." என்று ஆராத்யா வரும் முன்பே அத்தனை பேச்சுக்கள் ஸ்வாரஸ்யமாய் நடக்கும்.

"பத்திரிக்கை எல்லாம் ரெடியாகிட்டாம்.. நாளைக்கு வந்துடும்.. எல்லாரும் லிஸ்ட் போட்டுடுங்க.. எங்கேயும் விட்டு போய்ட கூடாது!" அகிலன் சொல்ல,

"நாப்பது நாள் இருக்கே.. அதெல்லாம் பார்த்துக்கலாம்.. கூடவே இன்னும் மூணு வாரத்துல தர்ஷினியை அழைக்க வருவாங்க.. குழந்தைக்கு செய்ய வேண்டியது, மாப்பிள்ளை தர்ஷிக்கு செய்ய வேண்டியது எல்லாம் வாங்கணும்.. கல்பனாவை கூட்டிட்டு நான் இப்ப அலைய முடியாது.. நீங்க தான் பார்த்துக்கனும்!" இரு மகன்களுக்கும் பொதுவாய் மகேஸ்வரி கூற, பளிச்சென ஒரு மின்னல் ரகுவிற்கு.

"அப்ப கல்யாணத்துக்கு ட்ரெஸ் பர்ச்சேஸ்?" தர்ஷினி கேட்க,

"அதுக்கு எல்லாருமே போலாம் தர்ஷி.. அப்ப தான் சரியா இருக்கும்!" என்றார் மகேஸ்வரி.

"பாப்பாக்கு என்னென்ன வாங்கணும் ம்மா? எப்ப வாங்கணும்? அதை வேணா நான் பார்த்துக்குறேன்!" ரகு சொல்ல,

"உனக்கு எதுக்கு டா அந்த வேலை எல்லாம்? ப்ராஜெக்ட் வொர்க்ல பிஸினு சொன்னியே.. எப்ப வர்றாங்க அப்ராட்ல இருந்து.. நீ அதை கவனிச்சுக்கோ.. எங்கேயும் மிஸ் ஆகிடாம ஒர்க் எல்லாம்!" என்று நல்ல மூத்த சகோதரனாய் அகிலன் சொல்ல,

"நீ தான இன்விடேஷன்லேர்ந்து கல்யாணத்துக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யுற? விடு இதை நான் பாத்துக்குறேன்.." என்ற ரகு,

"வேணும்னா துணைக்கு ஆராவை நான் கூப்பிட்டுக்குறேன்!" சங்கடமே இல்லாமல் சாதாரம் போல சொல்லிவிட்டதாய் ரகு நினைக்க,

"அதானே பார்த்தேன் புலி ஏன் பீசா கேட்குதுன்னு.." என்று அகிலன் சொல்ல, மற்றவர்களும் கிண்டல் செய்ய, மகேஸ்வரியும் சிரித்தவர் அவன் விருப்பம் போலவே விட்டுவிட்டார்.

இரண்டு வாரங்களாய் அந்த ஆட்டம் காட்டுகிறாள் ரகுவிடம் ஆராத்யா.

அலுவலகம் தினமும் வருகிறாள் தான் ஆனாலும் அவன் முகத்தை பார்த்து பேசுவதே இல்லை. தினமும் காலை கார் பார்க்கிங்கில் காத்திருந்து அவளை பார்ப்பதை அவன் சொல்லி இருக்க, அதற்கென்றே அவனுக்கு முன் சென்று விடுகிறாள் இப்பொழுது எல்லாம் வேண்டுமென்றே.

அலுவலகத்தில் அவன் வரும் பொழுதும் சரி கடந்து போகும் பொழுதும் சரி வேண்டுமென்றே அவன் பார்வையை இவள் தவிர்க்க, அவன் தான் பல்லைக் கண்டிப்பான் இவள் செயல்களில்.

"சேட்டை கூடிப் போச்சு ஆரா உனக்கு!" அலைபேசியில் அவன் சொல்ல,

"உங்ககிட்ட உங்க அக்காகிட்ட கத்துக்கிட்டது தான் எல்லாம்!" என்பாள்.

அவனுக்கும் புரியாமல் இல்லை.. நீண்ட நாட்கள் தவிப்பில் காத்திருப்பில் அவன் அன்று அலுவலகத்தில் அவள் கைப்பற்றி இருக்க, அன்றிலிருந்து சுத்தமாய் அவன் பக்கம் வருவதே இல்லை ஆராத்யா.

சுற்றிலும் இவர்களை கண்காணிக்கும் கூட்டம் வேறு என இருக்க, ரகுவும் அவளை விட்டுப் பிடிக்கத் தான் நினைத்தான்.

"குழந்தைக்கு நகை, ட்ரெஸ், தர்ஷிக்கும் மாமாக்கு ட்ரெஸ், பாப்பாக்கு எதாவது சத்தம் வர்ற மாதிரி விளையாடுற பொருள் எதாவது வாங்கிரு.. வேற எதுவும் வேணுமான்னு தர்ஷிகிட்ட கேட்டுக்கோ ரகு.. வேற பூ, பழம்னு எல்லாம் அன்னைக்கு கூட வாங்கிக்கலாம்.." என்றார் மகேஸ்வரி.

"நீயும் வா க்கா.. எல்லாம் நேர்ல பார்த்து வாங்கிடலாம்!" நல்ல பிள்ளையாய் தங்களோடு தர்ஷினியையும் ரகு அழைக்க,

"அய்யய்ய! நீங்க லவ் பண்ண நான் காவல் காக்கணுமா.. ஓடிரு.." என்று கிண்டல் செய்த தர்ஷினி,

"உனக்கு பிடிச்சதாவே பண்ணு.. மாமாகிட்ட அவருக்கானதை கேட்டுக்கோ.." என்றும் விட்டாள்.

"அதுக்கு நான் எதுக்கு? தர்ஷை கூட்டிட்டு போங்க.. அவங்களுக்கு புடிச்சதா தானே வாங்கணும்?" என்றாள் ரகு ஆராவிடம் அலைபேசியில் கேட்ட பொழுது.

"ம்ம் உன் அத்தை தான் சொன்னாங்க ஆராவை கூட்டிட்டு போய் நீயே எல்லாம் பார்த்துக்கோன்னு.. இரு அம்மாகிட்ட தர்றேன்.. நீயே கேளேன்!" என்று ரகு அவளை அறிந்து சொல்ல,

"அதெல்லாம் வேண்டாம்.. ஆனா தர்ஷ் வந்தா நல்லாருக்குமே!" என அப்போதும் அவள் தயங்க, அது புரிந்து ஒரு குறும்புன்னகை ரகுவிற்கு.

நிச்சயத்திற்கு பின் இன்னும் தனியாய் நேரில் இருவருமாய் பார்த்துக் கொள்ளவில்லை அன்று அலுவலகத்தில் சத்தித்துக் கொண்ட பிறகு.

"நீ என்னை அவாய்ட் பண்ற ஆரா!" அவளுக்கே கேட்கும் படி புன்னகையுடன் அவன் சொல்ல,

இல்லை என்று சொல்ல வந்தவள், "ஆமா பண்றேன்.. பண்ணுவேன்!" என்றாள் அவளும் கண்கள் சிரிக்க.

"என்னவோ மிஸ் ஆகுதே! வெயிட் வீடியோ கால் வர்றேன்!" என்றவன் அவள் மறுக்கும் முன் வீடியோவில் அழைத்தும் விட, ஆராத்யா அதை கட் செய்துவிட்டு ஆடியோ காலில் அழைத்தாள்.

இரண்டு மூன்று என விளையாட்டு தொடர, ரகு தான் விட்டுக் கொடுக்கும் நிலை.

"என்ன பண்ற நீ? வீடியோ கால் வந்தா என்னவாம்?" கள்ள புன்னகை நெளிய அவன் கேட்க,

"பேசுறது காதுல விழுது எனக்கு.. அப்புறம் என்ன? வீடியோ கால் வந்தா நீங்க பேசவே விடமாட்றிங்க!" என்றவள் குரல் முணுமுணுப்பாய் மாறினாலும் அவனுக்கு கேட்டுவிட, பலமாய் சிரித்தான் அவன்.

"ஆரா பொண்ணு இப்பலாம் அதிகமா பேசுது.." என்றவன் நன்றாய் நினைவில் வைத்திருந்தான் இது தான் அவளின் பேச்சு என்பதை.

தர்ஷினி கல்பனாவிடம் அவளின் பேச்சு இப்படி தான் இருக்கும்.. இவனிடம் மட்டும் தான் அவளின் எல்லைக் கோடுகள் எல்லாம்.

இதோ இப்பொழுது அவளே அதை கொஞ்சம் கொஞ்சமாய் அழித்திருக்க, ரகுவிண் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க, தன்னவளை அதிகத்திற்கு அதிகமாய் தான் தேடினான்.

"கண்டிப்பா வரணுமா?" ஆராத்யா கேட்க,

"இல்ல.. உன் இஷ்டம் தான் ஆரா!" என்றவனிடம் எப்படி மறுக்க முடியும்?.

"நீங்க இருக்கீங்களே! வர்றேன்.." என்றவள் பதில் முன்பே அறிந்ததை போல அவன் முகத்தில் மாறா புன்னகை.

இதோ கிளம்பிவிட்டனர் அடுத்த இரண்டு நாட்களில். அலுவலகம் முடிந்ததும் ஆராவை அவன் நிறுத்தி வைத்திருக்க,

"என்ன டா கொஞ்ச நாளா ஆராவை கூப்பிடலையேனு லைட்டா எனக்கு இடிச்சது.. இந்தா ஆரம்பிச்சுட்டார்ல.." என்று கார்த்திகா கிண்டல் செய்ய,

"உனக்கு இடிக்க ஆரம்பிக்க போய் தான் நமக்கு பெரிய ட்ரீட் குடுத்தா ஆரா நியாபகம் இருக்குல்ல.. கிளம்பு கிளம்பு.. கல்யாணம் முடியவும் பிரியாணி ட்ரீட் வாங்கிடணும்!" என்று கூறி கார்த்திகாவை அழைத்து சென்றனர் பிரேம் விக்ரம்.

ஆராத்யா ரகு அறைக்கு வெளியே காத்திருக்க, அங்கிருந்து வெளி வந்த விஷால் அவளுக்கு சிறு புன்னகையை கொடுத்துவிட்டு உடனே கிளம்பிவிட்டான்.

அவன் செல்லும் வரை பார்திருந்தவள் ரகு வெளிவர காத்திருக்க, அவன் வெளிவர காத்திருந்தவளை நோக்கி பெரும் புன்னகையை அடக்கி வந்தான் ரகு.

"உள்ள வந்திருக்கலாமே ஆரா!" என்றவன் புன்னகையும் பார்வையும் என தடுமாறி,

"சிக்கிட கூடாதுன்னு எனக்கு அட்வைஸ் பண்ணிருக்காங்க!" என்று சொல்லி அவனுக்கு முன் நடக்க,

"க்லெவர் கேர்ள்!" என அவளை கலாய்த்து வெளிவந்தவன்,

"கார் நிக்கட்டுமே ஆரா! உன் பைக்ல போலாம்!" என்று மீண்டும் மீண்டும் உல்லாச புன்னகையுடன் அவளிடம் விளையாடினான்.

"ஷ்ஷ்!" என்று வாயில் விரல் வைத்துக் காட்டியவள் சுற்றிலும் பார்த்துவிட்டு,

"உங்களுக்கு தான் சேட்டை அதிகமாகுது.." என்று கூறி காரை நோக்கி நடக்க, உடல் குலுங்க சிரித்தபடி சென்றான் அவளவன்.

"எவ்ளோ பேசுறீங்க நீங்க.. ஹப்பா!" காரில் ஏறியதும் அவள் சொல்ல, அப்பொழுதும் அவனிடம் புன்னகை தான்.

"லீவ் நாள்ல போகலாம்னா இப்ப போனா தான் ஆச்சுன்றிங்க.. தர்ஷி போன் பண்ணி என்னை தான் கலாய்ச்சு தள்ளுவாங்க!" என்றதற்கும் அவனிடம் அமைதியான புன்னகை.

மகேஸ்வரி கூறியதை எல்லாம் அவன் சொல்லி அவளையே தேர்வு செய்ய சொல்ல, அவனிடம் கேட்டு கேட்டு தேர்வு செய்தவள் தர்ஷிக்கும் அனுப்பி பிடித்திருக்கிறதா என கேட்க,

"டேய் உங்களுக்கு புடிச்சதா பார்த்து வாங்கிட்டு வாங்க டா!" என்று அழைத்து சொல்லிவிட்டாள் தர்ஷினி ஒரு கட்டத்திற்கு மேல்.

அதில் முகம் சுருங்க "அவங்களுக்கு பிடிக்கணுமே!" என்று ரகுவிடம் கேட்க,

"ஆரா என்ன வாங்கினாலும் பிடிக்கும்.. என்னை வாங்கினாலும் பிடிக்கும்!" என கண்ணாடி முன் அமர்ந்து நகையை கையில் வைத்திருந்தவளின் பின் நின்று, இரு கைகளையும் அவள் பக்கவாட்டில் ஊன்றி சொல்ல, அமைதியானவள் அவனிடம் பிடித்திருக்கிறதா என கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை.

"உனக்கு நோஸ் ரிங் வாங்கலாமா ஆரா?" மற்ற அனைத்தையும் வாங்கிவிட்டு அவன் கேட்க,

"ஏன்?" என்றாள் கேள்வியாய்.

"சும்மா தான்.. உனக்கு நல்லாருந்துச்சு.." என்று சொல்ல, என்றோ ஒருமுறை அலுவலகத்திற்கு அவள் அணிந்து வந்த நியாபகம் அவளிடத்தில்.

என்று? எப்பொழுது? நாள், கிழமை, எதற்கு என அனைத்தும் அவன் நியாபகத்தில் ஓயாமல் இருக்க, அவன் பார்வை கண்டு சரி என்று தலையசைத்தவளுக்கு தானே தேர்வு செய்தான்.

"அம்மாவோட ரிங் ஒன்னு இருக்கு.. அது தான் எப்பவாச்சும் போடுவேன்.." என்று அவன் கேளாமலே ஆராத்யா சொல்ல,

"அது ஸ்பெஷல்னா, இதுவும் ஸ்பெஷல் தான்!" என்று சொல்லி அவன் ஒன்றை கொடுக்க, அதை அங்கேயே போட்டு காண்பித்தவள்,

"இதுவும் அம்மா வாங்கி கொடுத்தது தான்!" என்று சொல்ல, மனம் நிறைந்த சொல்ல வார்த்தைகள் இல்லா உணர்வு ரகுவிற்கு
 
  • Love
Reactions: prikar