• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 41

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 41

தர்ஷினியை அழைத்து செல்ல திருச்சியில் இருந்து நந்தாவின் குடும்பம் வந்திருந்தனர்.

இன்று அதிகாலையில் தான் நந்தாவுமே டெல்லியில் இருந்து வந்து சேர்ந்திருந்தான் இரண்டு மாதங்களுக்கு பிறகு.

திருச்சியில் இரண்டு வாரம் தங்கிவிட்டு பின் ரகுவின் திருமணத்துக்காக மீண்டும் தர்ஷினி தாய்வீடு வந்து அடுத்த ஒரு வாரத்தில் டெல்லி செல்வது தான் நந்தாவின் ப்ளான்.

வீடே பரபரப்பாய் இயங்க, வீடு முழுவதும் ஆட்கள். இத்தனைக்கும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு. ரகுவின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்க, அதை பெரிதாய் வைத்து அனைவரையும் அழைக்கும் எண்ணத்தில் மிக நெருங்கியவர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுத்திருந்தனர் இன்று.

கல்பனாவின் தாய் தந்தைக்கும் அழைப்பு சென்றிருக்க, அன்னை வரவில்லை. கல்பனாவின் தந்தையும் அகிலனிடம் கூட சரியாய் பேசாமல் இருக்க, அகிலனுமேல அதற்கேற்றார் போல இருந்து கொண்டான்.

"யாருமே இல்லாத ஒரு ஆனதை பொண்ணை கட்டிக்க தான் அம்புட்டு ஆளும் பேருமா இருந்த நம்ம குடும்பத்தை வேண்டாம்னு சொன்னானா உன் கொழுந்தன்? என்ன மரியாதை எனக்கு இங்க?" என்று கல்பனாவிடம் வந்ததும் சண்டையிட்டார்.

"ப்பா! இதே மாதிரி இந்த வீட்டுல யார்கிட்டயும் பேசி வைக்காதிங்க.. அப்புறம் இன்னைக்கு தான் உங்க பொண்ணா நீங்க என்னை பாக்குற கடைசி நாளா இருக்கும்.." என்ற கல்பனா,

"எனக்கு இது நாளாவது மாசம்.. நான் மாசமா இருக்கேன்னு சொன்னதும் அம்மா பார்க்க வருவாங்க நினச்சேன்.. வர்ல.. சரி இன்னைக்கு வருவாங்க நினச்சேன்.. அப்பவும் வர்ல.. வந்த நீங்களும் என்னை விசாரிக்கல.. மரியாதை எல்லாம் தானா வரணும்.. உங்களை அதே மரியாதைக்கு தான் இன்னைக்கு இங்க கூப்பிட்ருக்காங்க.. வந்ததுக்கு அதை காப்பாத்திக்கோங்க!" என்று கூறிவிட,

மகள் இப்படி எதிர்த்து பேசுவாள் என எதிர்பார்க்காதவர் அமைதியாகிவிட்டார் அப்பொழுதே.

"என்ன டி சொன்ன உங்க அப்பாகிட்ட? இஞ்சி சாப்பிட்ட டேஷ் மாதிரி ஆகிட்டார்" என்று அகிலன் வந்து மனைவியை கேட்க,

"என் முன்னயே என் அப்பாவை குரங்குனு சொல்றிங்களா?" என ஓங்கி கொட்டிவிட்டு செல்ல, தலையை தேய்த்து யார் கண்ணிலும் படவில்லையே என சுற்றிலும் பார்த்துக் கொண்டான்.

"இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பணுமாம்! இவ எங்க டா?" என்று தர்ஷினி ரகுவிடம் கேட்க,

"போன் பண்ணினேன் பிக் பண்ணல.. வந்துடுவா!" என்று சொல்லும் பொழுதே, ஹாலில் வந்து கொண்டிருந்தாள் ஆராத்யா.

அங்கேயும் இங்கேயுமாய் பார்த்து புன்னகைக்க முயன்று தயங்கி என வருபவளை விழி எடுக்காமல் ரகு பார்த்து வைக்க,

"இவன் ஒருத்தன்! எல்லா ஃபன்க்ஷனையும் அவன் ஃபன்க்ஷனாவே பாக்குறான்!" என்று கூறி, ரகுவின் கழுத்தோடு நந்தா கை கோர்க்க,

"மாமா! என்று சிரித்த ரகுவும் தன் தலையிலேயே தட்டிக் கொண்டான். ஆனாலும் புடவையில் கவர்ந்து தன்னை கட்டி இழுக்க தான் செய்து கொண்டிருந்தாள் ஆரா.

நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் ரகுவின் வீட்டினுள் நுழைகிறாள். அப்பொழுதும் கூட வர மாட்டேன் என்றவளை மகேஸ்வரி தான் வந்து தான் ஆக வேண்டும் என கூறி இருக்க, அம்பிகா அழைத்து வந்துவிட்டார் ஆராத்யாவை.

"எவ்வளவு நேரம் உனக்கு?" என்று கடிந்து தன் அருகில் அவளை தர்ஷினி வைத்துக் கொள்ள, அத்தனை பேரின் பார்வையும் அவளை கடந்ததை அவளும் உணர்ந்து குழந்தையிடம் கவனத்தை திருப்பி இருந்தாள்.

ரகுவை பார்க்க வேண்டும் தான்.. ஆனாலும் இத்தனை பேருக்கு மத்தியில் நிமிர்ந்து தேட கூட முடியவில்லை அவளால்.

"தர்ஷி! முந்தானைல அம்மாகிட்ட அரிசி வாங்கிக்கோ!" தர்ஷினியின் மாமியார் சொல்ல,

"இதோ வர்றேன் த்தை!" என்று எழுந்து செல்ல, குழந்தையுடன் அங்கேயே அமர்ந்துவிட்டாள் ஆராத்யா.

"மாமா! நீங்களும் போங்க!" என்ற ரகு, நந்தாவிண் கிண்டலை எல்லாம் ஊதித் தள்ளி ஆராத்யா அருகே வந்தான்.

ஆராத்யா நிமிர்ந்து பார்த்து மீண்டும் குழந்தையிடம் கவனம் வைத்துக் கொள்ள,

"டிரஸ் எப்படி இருக்கு ஆரா?" என்றவனிடம் சரியாய் பார்க்காமலே ம்ம் என அவள் தலையசைக்க,

"நீ ஏன் சாரீ?" என்றான்.

"ஏன்?"

"நல்லா தான் இருக்கு.." என்றவன் இழுத்ததில் இவள் புன்னகைக்க,

"கார்ஜியஸ்!" என்றான் குழந்தையின் கன்னம் கிள்ளி. மனம் எங்கும் படபடப்பாய் வர,

"ராம்! நீங்க தர்ஷ்கிட்ட போங்க ப்ளீஸ்!" என்றாள் குழந்தையை மட்டும் பார்த்து.

"ஏன்?" என்றவனும் குழந்தையை பார்த்தே பேச,

"ராம் ப்ளீஸ்! எவ்வளவு பேர் இருக்காங்க?"

"சோ வாட்? நிச்சயம் முடிஞ்சா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரினு சொல்லுவாங்களே!"

"அய்யோ ப்ளீஸ்! எனக்கு டென்ஷன் ஆகுது!" என்றாள் லேசாய் படபடத்து.

"ரிலாக்ஸ் ஆரா! இது நம்ம வீடு.. எல்லாருக்கும் தெரியும்.." என்றவன் அவள் லேசாய் நிமிர்ந்து முறைத்ததில் அவனும் நொடியில் இதழ் குவித்து முத்தத்தை அனுப்பி வைக்க,

"உங்களை கொல்ல போறேன்!" என்றாள் சட்டென குனிந்து.

"வெல்கம் ஆரா!" என்று சிரித்தவனின் முன் நிற்க முடியாமல் அவள் தடுமாற,

"ஓகே ஓகே!" என்று சிரித்து, "பிரீயா இரு.. நான் வர்றேன்!" என்று சொல்லி திரும்பியவன்,

"ஆனாலும் ரொம்ப அழகா இருக்கியே இன்னைக்கு.. என் பொறுமை எல்லாம் போகுது.. போடி!" என்று சொல்லிச் செல்ல, இதழ்களுக்குள் சிரித்தவள் திரும்பிடவே இல்லை.

"அராஜகம் பன்றாங்க டா உங்க மாமா!" என குழந்தையிடமும் சொல்லி வைத்தாள்.

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தர்ஷினி கிளம்ப, வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர் மற்றவர்கள்.

"நானும் கிளம்புறேன் அத்தை!" என மகேஸ்வரியிடம் ஆராத்யா கூற, அணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி வேகமாய் படிகளில் இறங்கி வந்தான் ரகு.

"இன்னைக்கும் ஆபீஸ் போனுமா டா?" மகேஸ்வரி கேட்க,

"ப்ராஜெக்ட்ல இருக்குறவங்களுக்கு ஒரு சின்ன ப்ரோப்லேம் ம்மா.. லேப்டாப் வேற ஆபீஸ்ல வச்சுட்டு வந்துட்டேன் நேத்து!" என்றவன் அம்மாவிடம் கூறிக் கொண்டு ஆராவிடமும் தலையசைத்து கிளம்ப,

"நார்! அகி கார் ஸ்டார்ட் ஆகல.. உங்க கார் தான் எடுத்துட்டு போனாங்க வந்தவங்களை ட்ராப் பண்ண!" என்றாள் கல்பனா.

"ஓஹ்! ஓகே அண்ணி.. நான் பைக் எடுத்துக்கறேன்!" என்றவன் தன் பைக்கில் செல்ல,

"நீ சாப்பிடலையே ஆரா!" என்ற கல்பனாவிடம், சாப்பிட்டதாய் கூறி ஆராத்யாவும் மதியம் இரண்டு மணிக்கு எல்லாம் கல்பனா, மகேஸ்வரியிடம் சொல்லிக் கொண்டு வீடு வந்துவிட்டாள்.

அம்பிகா தைப்பதற்கு தேவையான சில பொருட்கள் வாங்க செல்ல வேண்டி இருக்க ஆராத்யா வீட்டில் இருந்ததால் தானும் வருவதாய் கூறி அவருடன் சென்றுவிட்டு வீடு திரும்பும் பொது மணி ஆறாகி இருந்தது.

மாலை ஐந்து மணி அளவில் ஆராத்யாவின் அலைபேசிக்கு தொடர்ந்து அழைப்புகள் வர, அம்பிகாவுடன் இருந்த ஆராத்யா மொபைலை வீட்டில் வைத்திருந்ததால் அவளுக்கு தெரியவில்லை.

ஆறு மணியாக இருக்கும் நேரம் தான் வீட்டிற்கு வர மீண்டுமாய் அழைப்பு கல்பனாவிடம் இருந்து.

"சொல்லுங்க கல்பனா க்கா!" என்று ஆராத்யா புன்னகைத்து கேட்க, அந்த பக்கம் அமைதியோடு சிறு சத்தம்.

"ஹெலோ அக்கா கேட்குதா?" ஆராத்யா மீண்டும் கேட்க,

"ஆரா!" என்ற கல்பனாவின் குரல் அழுகையில் விம்மி வர, நொடியில் ஆராத்யாவிற்கு பயம் தொற்றிக் கொண்டது.

"அக்கா என்னாச்சு? உடம்பு சரி இல்லையா? எங்க இருக்கிங்க? நான் வீட்டுக்கு வரவா?" என பதற,

"ஆரா!" என்று அழுகையோடு அழைத்த கல்பனாவிற்கு வேறு பேச்சே வரவில்லை.

"க்கா எனக்கு பயமா இருக்கு.. இப்படி அழாதீங்க.. என்னனு சொல்லுங்க!" என்றவள் கைகள் நடுங்க ஆரம்பிக்க,

"சொல்லுங்க க்கா!" என்றாள் மீண்டும் அமைதி தாங்காமல்.

"ஆரா! ரகு.. ரகுக்கு அச்சிடேன்ட்.." என்று சொல்லவுமே உலகம் நின்று போனது ஆராத்யாவிற்கு..

"ஆரா! ஆரா!" என்று கல்பனா அழைத்தும் பதில் தராமல் இருந்தவள்,

"க்கா! சும்மா தான... சொல்றிங்க... ஏன் க்கா.." என்ற வார்த்தைகள் திக்கி திணறி வர, உடலெல்லாம் பலமிழந்து தொய்ந்து அமர்ந்துவிட்டாள்.

"அய்யோ ஆரா நீ இங்க வா ஆரா.." என்று அழுகையோடு கல்பனா சொல்ல, அகிலன் அவளிடம் என்னவோ கூறுவது கேட்டது.

"ஆரா!" என்று கலங்கிய குரலோடு அகிலன் அழைக்க,

"ராம்.. ராம்க்கு ஒண்ணுமில்ல தான?" என்றாள் அகிலனிடம் ஆராத்யா. தனக்கு சாதகமான பதில் வந்துவிட வேண்டும் என்ற பலத்த வேண்டுதல் அவளிடம்.

"ஆரா அப்ப வீட்ல நீ இல்ல.. நாங்க.. நாங்க ஹாஸ்பிடல் வந்துட்டோம்.. நீ இங்க.. இங்க கொஞ்சம் வாயேன்.." என்று அகிலன் துக்கத்தை விழுங்கி அதே மருத்துவமனை பெயரை சொல்லி அழைக்க, அலைபேசி நழுவி விழுந்தது ஆராத்யா கைகளில் இருந்து.

ஆராத்யாவிற்கு திரும்ப திரும்ப அகிலன் அழைக்க அசைவற்று அமர்ந்திருந்தவள் விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தது.

அம்பிகாவிற்கு அழைத்து விவரம் சொல்லி ஆராத்யாவை அழைத்து வர சொல்ல, அம்பிகாவும் பதறி மேலே வந்தவர் ஆராத்யா நிலை கண்டு இன்னுமே பதறி போனார்.

எப்படி வந்தோம் என்றே அறியாமல் அம்பிகாவுடன் ஆராத்யா மருத்துவமனை வாசலை வந்தடைந்த போது உடல் நடுங்க,

'நீ என்னை தேடி வரணும்னா எனக்கு எதாவது ஆகணுமா ஆரா?' அதே இடத்தில் வைத்து அவன் கேட்ட கேள்வி இப்பொழுதும் காதுக்குள் கேட்க, இரு காதுகளையும் மூடிக் கொண்டவள் நகர மறுத்தாள்.

"வா டா! ரகுவுக்கு ஒன்னும் இருக்காது.." என்ற சொல் கேட்டு விழிகள் அலைபாய, அவனை பார்த்துவிட்டால் போதும், அவன் கைகளை கோர்த்துக் கொண்டால் போதும் என தோன்ற அம்பிகாவையும் தாண்டிக் கொண்டு வேகமாய் உள்ளே சென்றவள் பின்னோடு சென்றார் அம்பிகா.

"ராம்! ராம்!" என்ற அழைப்போடு அங்கும் இங்குமாய் அவனை தேடி செல்லும் ஆராத்யாவைப் பார்த்து பயந்து தான் போனார் அம்பிகா.

அகிலன் ஆராத்யாவை கண்டுவிட்டவன் அவளருகில் வர, அகிலனை கண்டு கொண்டவளும் அவனருகில் ஓடினாள்.

"ராம் எங்க? நான் அவரைப் பார்க்கணும்?" என்றவள் அகிலனைத் தாண்டிக் கொண்டு அவன் வந்த பக்கமாய் ஓட, அங்கே மகேஸ்வரி தரையில் அமர்ந்து அழுத விதம் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.

"ஆரா!" என்று கல்பனா அவளருகில் வர, இரு எட்டுக்களை வேகமாய் பின் வைத்தவள்,

"ராம் எங்க கல்பனா க்கா?" என்றாள் அவளை பக்கத்தில் வர விடாமல்.

"ஆராம்மா!" என்று மகேஸ்வரியும் பார்த்தவர் அழைக்க,

"நான் ராமை பார்க்கனும்.. நீங்க சும்மா தான சொல்றிங்க.. நான் சொல்லிருக்கேன்ல என்கிட்ட இப்படி விளையாடாதீங்கனு.." என்றவள் கண்ணீர் சிந்த, அதை துடைத்தவள்,

"ராம்! ராம் எங்க இருக்கீங்க?" என்று சத்தமாய் அழைத்து வைக்க, மகேஸ்வரி எழுந்து வந்தவர் அவளை அணைத்துக் கொண்டு கதறிவிட்டார்.
 
  • Sad
Reactions: sivaguru