• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 46

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
670
505
93
Chennai
அத்தியாயம் 46

காலை எழுந்ததுமே கோவிலுக்கு சென்று வர ஆராத்யா கிளம்பி இருக்க, அம்பிகா தையல் வேலைக்கு செல்ல நேரம் ஆகியும் ஆராத்யா வராததால் வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினார்.

"இதென்ன கவர்? கீழ கிடக்குது!" என வாசலில் கிடந்ததை எடுத்து பார்த்தவர்,

"ஆராவோடதா தான் இருக்கும்.. வந்து தேட போறா!" என கையில் வைத்துக் கொண்டவர் ரகுவை பார்த்துவிட்டு செல்ல அங்கே வந்தார்.

மகேஸ்வரியிடம் பேசிவிட்டு ரகுவின் உடல்நிலையையும் விசாரித்த அம்பிகா,

"ஆரா காலையிலே வெளில போனா.. இன்னும் வர்ல.. வந்ததும் இந்த சாவியை குடுத்துடுங்க!" என மகேஸ்வரியிடம் சாவியை கொடுத்தார்.

"எங்க போயிருக்கா?" ரகு கேட்க,

"தெரிலயே தம்பி! நான் எழுந்துக்கும் போதே வீட்டுல இல்ல.. கோவிலுக்கு தான் போகும்.. வேற எங்க போக போகுது!" என்றவர் கையில் இருந்த கவர் நியாபகம் வர,

"ஆராவோடது தான்னு நினைக்குறேன்.. வாசல்ல கிடந்துச்சு.. நீங்க குடுத்துடுங்க!" என்று ரகுவிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்ப, ரகுவும் கையில் கவரை வாங்கிக் கொண்டவன்,

"எனக்கு பசிக்கல ம்மா.. ஆரா வந்ததும் சாப்பிடுறேன்!" என்று சொல்லி எழுந்து கொள்ள,

"மெதுவா எழுந்துக்கோ ரகு.. நானும் வர்றேன் இரு!' என மகனோடு சென்று அவன் அறையில் விட்டு வந்தார்.

அருகில் இருந்த டேபிளில் கவரை வைத்துவிட்டு லேப்டாப்பை கையில் எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தவன் மணியைப் பார்த்த போது பதினோன்றை தாண்டி இருந்தது.

"இன்னும் இவ வரலையா?" என்று நினைத்து தர்ஷினியை அழைத்து கேட்க,

"இல்லையே டா.. அண்ணி ஆரா வந்தாளா?" என கல்பனாவிடம் தர்ஷினி கேட்க, அவளும் இல்லை என்றதும்,

"ஏதாவது வேலையா இருப்பா.. நீ சாப்பிடு.. நான் கொண்டு வர்றேன்!" என்று தர்ஷினி எடுத்து வர, அதை வாங்கி வைத்துவிட்டு ஆராத்யாவிற்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை.

"கோவிலுக்கு போக இவ்வளவு நேரமா இவளுக்கு?" நினைத்து காத்திருந்தவன் கண்களுக்கு அந்த கவர் தென்பட, கையில் எடுத்துப் பார்த்தவன் அதை பிரித்தான்.

***********************

"என்ன ஆரா திடிர்னு கிப்ட் எல்லாம்?" தனக்கும் குழந்தைக்கும் என ஆராத்யா கொடுத்ததை பிரித்தபடி தர்ஷினி கேட்க,

"சும்மா தான்.. உங்களுக்கு எதாவது தரணும்னு ரொம்ப நாளா தோணிச்சு.. இன்னைக்கு பிரண்ட்டோட வெளில போயிருந்தேன்.. அதான்.." என்றாள் ஆராத்யா.

"அப்ப எனக்கு எதுக்கு கிப்ட்?" என்ற கல்பனா கேள்விக்கு,

"நீங்க வேற தர்ஷ் வேறயா எனக்கு?" என்று ஆராத்யா கேட்க,

"ப்ப்பா! நெஞ்சு லைட்டா வலிக்குது உன் பாசத்துல!" என்று பாவனை காட்டியவளைப் பார்த்து ஆராத்யா மெலிதாய் சிரித்தாள்.

"அம்மாக்கு கூட வாங்கிருக்கியே!" என மகேஸ்வரிக்கு வாங்கிய கண்ணாடியை எடுத்து தர்ஷினி காண்பிக்க,

"அட நல்லாருக்கே!" என்று வாங்கிக் கொண்டார் மகேஸ்வரி.

"அன்னைக்கு பேசிட்டு இருக்கும் போது பேச்சு வாக்குல சொன்னேன்.. அதே மாதிரி வாங்கி இருக்கா.. சமத்து!" என்று மகேஸ்வரி கொஞ்சிக் கொள்ள,

"நல்லா ஐஸ் வைக்குற இப்பவே!" என்றாள் கல்பனா.

"சரி சரி! உன் ஆளுக்கு வாங்கினது என்னனு எனக்கு மட்டும் காட்டேன்!" கல்பனா ரகசியம் போல கேட்க,

"அவங்களுக்கு நான் எதுவும் வாங்கலையே!" என்றாள் ஆராத்யா.

"அட பங்கெல்லாம் கேட்க மாட்டோம்... சும்மா காட்டு பாப்பா!" என்றாள் தர்ஷினியும் விளையாட்டாய்.

"நிஜமா தான்.." என்று கண்களை விரித்து கூறியவளுக்கு,

'இந்த பொருட்கள் எல்லாம் அவனுக்கு தேவையா தன்னை நினைவுபடுத்த!' என்று தோன்றாமல் இல்லை.

"விடு விடு தர்ஷி! எதானா ஸ்பெஷல் கிப்ட் இருக்கும்.. எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?" என்று கல்பனா கிண்டல் செய்ய,

"மத்த நேரம் எல்லாம் கால் வலிக்குது கை வலிக்குது, குமட்டுதுன்னு அகியை பாடா படுத்த வேண்டியது.. இப்ப மட்டும் வாய் நீளும் உனக்கு.." என்று வந்த மகேஸ்வரி,

"ஆரா! காலையில வச்ச டிபன் நீ வராம அவன் இன்னும் சாப்பிட்டுருக்க மாட்டான்.. இதை கொண்டு போ.. உனக்கும் அதுலயே வச்சிருக்கேன்.." என்று சொல்லி மகேஸ்வரி கொடுக்க, மனம் நெகிழ்ந்தது அவரின் அன்பில்.

இப்படி பாசமாய் இருப்பவர்களிடம் சொல்லாமல் செல்ல இருப்பது நெஞ்சை அறுக்க, சொல்லி செல்லும் நிலையும் இல்லையே என எண்ணி வருந்தினாள்.

"பாப்பா முழிச்சுப்பா.. நான் ரூம்க்கு போறேன்!" என்று தர்ஷி எழுந்து கொள்ள,

"பை தர்ஷ்!" என்றாள் ஆராத்யா.

"ரூம்க்கு தான் போறேன்.. என்ன புதுசா பை எல்லாம்?" என்று சிரித்தவள்,

"நீ போய் ரகுவை பாரு.. அப்ப தான் உனக்கு தெளியும்!" என்று சொல்லி சிரித்து செல்ல, ஆராத்யாவும் ரகு அறைக்குள் வந்தாள்.

"அண்ணி! நம்ம ஸ்டைல்லேயே உள்ள போய் ரகு கிப்ட் என்னனு பார்த்துடலாமா?" ஆராத்யா உள்ளே சென்றதும் தர்ஷினி கல்பனாவிடம் ஹஸ்கியாய் கேட்க,

"நமக்கு என்ன வேற வேலையா வெட்டியா.. போலாமே!" என்றாள் கல்பனாவும் விளையாட்டாய்.

"ஓகே ஓகே! ஒரே நிமிஷம்.. பாப்பாவை போய் எட்டி பார்த்துட்டு வர்றேன்!" என்று சொல்லி தர்ஷினி குதுகலமாய் செல்ல, கல்பனாவும் காத்திருந்தாள்.

ஆழ்ந்த பெருமூச்சில் தன்னை சமன்செய்து ரகுவின் அறைக்குள் நுழைந்தாள் ஆராத்யா.

"ப்ச்! என்ன நீங்க! நான் வரலைனா சாப்பிட மாட்டிங்களா? கோவிலுக்கு போனேன்.. பிரண்ட்டை பார்த்ததும் அப்படியே அவ கூட பர்ச்சேஸ் போய்ட்டு வர நேரமாகிடுச்சு.." என்று சொல்லியபடி திருநீரை பையில் இருந்து எடுத்தாள்.

"நானும் சாப்பிடல.. இப்ப பசிக்குது.." என்று சொல்லி ஆராத்யா ரகு அருகே வர, இன்னும் அவளை திரும்பிப் பார்க்காமல் கவரில் இருந்த பேப்பரை கையில் வைத்திருந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரகு.

"ஒர்க்ல பிஸியா?" என்று சொல்லி அவன் முன் வந்து நின்று திருநீற்றை அவனை நோக்கி கொண்டு செல்ல, ரத்தமென சிவந்திருந்தது ரகுவின் கண்கள்.

"ராம்! என்னாச்சு?" என்று நொடியில் பதறியவள்,

"உடம்புக்கு முடியலையா? என்ன பண்ணுது?" என்றவள் திருநீறை ஓரமாய் வைத்துவிட்டு அவன் கன்னம் கழுத்து என கைவைத்துப் பார்த்தவள்,

"என்னாச்சு ராம்? ஏன் கண்ணெல்லாம் இப்படி இருக்கு? " என்று அவனை உலுக்க, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் முகத்தினில் முதலில் தோன்றியது என்னவோ சொல்ல முடியாத வலி தான்.

"ராம்?" என்றவளுக்கு இன்னும் பயம் அதிகரிக்க, அவன் பார்வை உள்ளுக்குள் கலவரம் கொடுக்க அவனைப் பார்த்தாள்.

"என்ன ராம்? என்னாச்சு?" என்றவள் அவனை மேலிருந்து கீழாய் என பார்த்து நிற்க, அந்த பேப்பரை அவள்புறம் நீட்டி இருந்தான்.

அது ஆராத்யா புதிதாய் செல்ல இருக்கும் அலுவலகத்தில் அவள் தேர்வாகி இருப்பதற்கான அப்ளிகேஷன்.

பார்த்தவள் கண்கள் விரிய கைகள் நடுங்க ஆரம்பிக்க ரகுவை நேர்கொண்டு பார்த்திட முடியவில்லை.

'இது எப்படி ராம்கிட்ட?' என்றவள் மனம் திடுக்கிட, காலையில் கோவிலுக்கு கிளம்பி வெளியே வருகையில் தான் அவள் கைப்பையில் இருந்து தவறி விழுந்திருந்ததை அவள் அறியாள்.

ஒற்றை காகிதம் அவள் செய்ய இருக்கும் செயலை அலுங்காமல் குலுங்காமல் ரகுவிடம் சொல்லி இருக்க, விழிகள் முழுதும் இன்னும் அந்த காகிதத்தில் இருந்து வெளிவரவில்லை ஆராத்யாவிற்கு.

ஏர்போர்ட்டில் தேவைப்படலாம் என்று தோழி சொல்லியதை கேட்டு முன்பே தனக்கு வந்திருந்த மின்னஞ்சலில் இருந்து ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த தன் நேரத்தை என்னவென்று அவள் சொல்ல?

"என்ன ஆரா இது?" இன்னும் அவள் செய்யவிருக்கும் முழு வேலையும் தெரியாமல் தன்னிடம் எதுவும் கூறாமல் அவள் தேர்வாகி இருக்கும் வெளிநாட்டு அலுவலக காகிதத்தை மட்டும் வைத்து அவன் கேட்க,

"ராம்!" என்றவள் வார்த்தைகள் வெளிவராமல் இருக்க, இதனை எதிர்பாராதவள் திணறியே அவனுக்கு தன்னை காட்டிக் கொடுத்தாள்.

"சொல்லு! எப்ப அப்ளை பண்ணின?" என்றவன் அதில் இருந்த தேதியை கவனிக்கவும் தவறவில்லை.

தான் நினைப்பது தவறோ? தன்னை புரிந்து கொள்ளும் முன் அவள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து இருக்கலாம்.. அப்பொழுது வந்த கடிதமாக இருக்கலாம் என்று நினைத்து அதில் இருந்த தேதியை பார்த்து உறுதி செய்தான் இது சில நாட்களுக்கு முன்பு மட்டுமே விண்ணப்பித்து கிடைத்திருக்கும் வேலை வாய்ப்பு என்று.

"நீங்க... உங்களுக்கு... நான்.. அன்னைக்கு..." என்றவள் வார்த்தைகளை தேட, சுத்தமாய் எதுவும் அகப்படவில்லை அவளுக்கு.

என்னவென்று அவனிடம் சொல்ல? எப்படி அவனுக்கு புரிய வைக்க என தெரியாமல் தடுமாறி அவள் நிற்க,

"சொல்லு ஆராத்யா!" என்றவனின் அழைப்பில் அவன் பொறுமை குறைந்திருந்ததை உணர முடிந்தது அவளுக்கு.

"ராம்! நான் சொல்றேன்.. அது.." என்றவளுக்கு எங்கே தொடங்கி வைக்க என புரியாமல் நேரமெடுக்க, ஆராத்யாவின் மொபைலில் அழைப்பு.

அதை பார்த்தவள் ரகுவையும் திரும்பிப் பார்க்க, இன்னும் கூர்ந்து கவனித்தான் அவளை.

எடுத்தே ஆக வேண்டிய அழைப்பு.. இரவு ஏழு மணிக்கு விமானம்.. இப்பொழுது தோழியிடம் பேசி தன் வரவை உறுதி செய்ய வேண்டிய நிலை.

ஏற்கனவே கூறியது தான் என்றாலும் தான் எடுக்காவிட்டால் திரும்ப திரும்ப அழைப்பாள் தானே! என நினைத்து பார்த்து ஆராத்யா நிற்க, அருகில் இருந்தவன் மொபைலை அவள் கவனம் இங்கில்லாத நேரமாய் கைப்பற்றி இருந்தான்.

"ராம்!" என்றவள் பதறி அதை பறிக்க வர, அவன் பார்வை அவளை அசையவிடவில்லை.

காலை அட்டன் செய்து ஸ்பீக்கர் ஆன் செய்து வைத்தது தான் தாமதம், "எல்லாம் பத்திரமா எடுத்துட்ட தானே ஆரா? நான் இங்க ஆபீஸ்ல இருப்பேன் நீ வர்ற நேரம்.. என் பிரதர் உன்னை பிக்கப் பண்ண வருவாங்க.. உன் போட்டோ குடுத்துருக்கேன்.. உனக்கும் அவங்க பிக் அனுப்பி இருக்கேன்.. இவ்வளவு தூரம் தனியா வர்ற.. எனக்கு கொஞ்சம் டென்ஷன் தான் நீ இதுவரை வந்தது இல்லையே அதனால.. சரி பார்த்து வா.. எதுனாலும் மெசேஜ் பண்ணு.. நான் பிரீனா கூப்பிடுறேன்.." என்று சொல்லி முடித்து,

"பிளைட் ஏழு மணிக்கு தானே? பத்திரம் டி.. ஹாப்பி ஜார்னி!" என்றவள்,

"உனக்கு ஓகே தானே? நான் வரலைனு எல்லாம் ஒரி பண்ணலையே?" என்று கேட்க, கண்கள் சிவக்க, அத்தனை இறுக்கமாய் அமர்ந்திருந்தவன் கோபத்தில் பல்லைக் கடித்து மனம் முழுதும் ஆத்திரமாய் எதிர்ப்பக்கம் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தான் ரகுராம்.

"ஏய் லைன்ல இருக்கியா டி!" என்று மீண்டும் கேட்ட குரலில் அலைபேசியை தூக்கி எறிந்தவன் கோபத்தில் ஸ்தம்பித்து நின்றிருந்தாள் ஆராத்யா.

"ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? எப்பவுமே இப்படி தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை கொன்னுட்டே இருப்பியா?" என்று அத்தனை அமைதியாய் கேட்டவன் எழுந்து நிற்க தடுமாற,

"ராம்!" என்று அருகில் வந்தவளை கைநீட்டி தடுத்தவன் தானே எழுந்தான்.

"வெளில போ!" என்றவனின் அமைதியான சொல்லில் அசையாது அவள் நிற்க,

"பார்க்க பார்க்க அவ்வளவு ஆத்திரம் வருது.. நீயா வெளில போய்டு!"

"இல்ல ராம் நான் சொல்றதை..." என்றவள் சொல்லி முடிக்கும் முன் தரையில் விழுந்து கிடக்க, கன்னம் எரிந்ததில் தான் அவன் அடித்ததே உரைத்து உறைந்து இருந்தாள்.
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru