• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 49

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
670
505
93
Chennai
Insjv

அத்தியாயம் 49

"இப்ப சொல்லு! என்ன பண்ணலாம்?" தன் அணைப்பில் நின்றவளை சில நிமிடங்கள் கடந்து ரகுவே விலக்கி நின்று கேட்க,

"கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்ற பதில் உடனே வந்தது தவிப்புடன் ஆராத்யாவிடம் இருந்து.

"சூர்?" ஆட்காட்டி விரலை நீட்டி இன்னும் நம்பாமல் ரகு கேட்க, அது தான் அதிகமாய் வலித்தது ஆராத்யாவிற்கு.

"ராம்! நான் உங்க கூட வாழனும். எனக்கும் ஆசை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமில்ல?" பாவமாய் அவள் கேட்க, தன் விரல் பதிந்த அவள் கன்னங்களை தொட்டுப் பார்த்தவன் நெஞ்சமும் கசிந்தது அவள் வலியினில்.

"அது சரி ஆகிடும்!" அவன் முகம் பார்த்து ஆராத்யா சொல்ல,

"இதெல்லாம் மட்டும் தெரியும்!" என்றவன் கோபமும் ஆதங்கமும் புரிந்தாலும் இன்னும் அவளின் முகம் அதில் சோர்ந்தது தான் நிஜம்.

இப்பொழுது ஆராத்யா அவன் நெற்றியில் கைவைக்க அப்பொழுது தான் வலியினையே உணர்ந்தான் அவன்.

"இப்ப நீ வெளில போனாலும் கேள்வி வரும்.. நான் போனாலும் கேள்வி வரும்!" என்றவன் அமைதியாய் யோசித்து நிற்க,

"நீங்க இன்னும் சாப்பிடலையே!"

"பசிக்கல!" என்றவன்,

"சரி வா!" என்று சொல்லி அவளோடே வெளியில் வந்தான்.

கல்பனா, தர்ஷினி இருவரும் இவர்களை எதிர்பார்த்து இருக்க, மகேஸ்வரி குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

கல்பனா தர்ஷினி கேள்வியாயும் என்ன சொல்வார்களோ என்று யோசித்தும் இருவரையும் பார்த்து நிற்க, பார்த்த நொடியில் ஆராத்யாவை கண்டு கொண்டார் மகேஸ்வரி.

"ஆரா!" என்று வேகமாய் எழுந்தவர் குழந்தையை தர்ஷினி கைகளில் கொடுத்துவிட்டு ஆராத்யா அருகில் சென்று கன்னங்களை தொட போக, நன்றாய் தெரிந்தது அவள் முகத்தில் கைத்தடம்.

"அது நான் தான் த்தை தெரியாம சுவத்துல இடிச்சுக்கிட்டேன்!" ரகு உள்ளே கேட்ட பொழுதே யோசித்து வைத்த பதிலை உடனே கூறினாள் ஆராத்யா.

இன்னும் நம்பாமல் அவர் இருவரையும் பார்க்க, அன்னையை நேராய் பார்த்திட முடியவில்லை ரகுவிற்கு.

முகத்தை வைத்து கண்டு கொள்ள முடியவில்லை என்றாலும் மகனின் ஒருவித அமைதியான முகத்துடன் அவனின் மௌனமும், முகம் சிவந்து வீங்கி என ஆராத்யாவை பார்த்ததும் தெளிவாய் கண்டு கொள்ள முடிந்தாலும் இருவரின் மௌனமும் என அவரை இன்னும் திகைக்க வைக்க தான் செய்தது.

எதுவோ சரி இல்லை என்று உணர்ந்தவருக்கு நேராய் கேட்க முடியாதபடி கேட்கும் முன்னரே ஆராத்யாவிண் பொய்யான பதில் வேறு தடை விதித்தது.

"ஆரா! சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?" தர்ஷினி கேட்க,

"அவங்க இன்னும் சாப்பிடல!" என்றாள்.

"என்ன ஆரா!" என்று தர்ஷினி சொல்லவும் மகளுக்கும் என்னவோ தெரிந்திருந்க்கிறது என உணர்ந்து மகேஸ்வரி சாப்பாட்டினை எடுக்க செல்ல போக,

"ம்மா ஒரு நிமிஷம்!" என அவரை நிறுத்தி இருந்தான் ரகு.

"சொல்லு ரகு!" என்ற மகேஸ்வரி எதுவும் கேட்காமல் இருந்ததும் ஆராத்யாவிற்கு இன்னும் கஷ்டமாய் போக,

"ம்மா! இப்ப நான் கொஞ்சம் பெட்டர் தான். இந்த ஒன் வீக்ல மேரேஜ் சிம்பிளா வைக்க முடியுமான்னு கொஞ்சம் பாருங்களேன்!" என்றதும் தர்ஷினி, கல்பனா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஆராத்யா அவன் முடிவில் தலையிடவில்லை.

"சிம்பிளாவா?" என்று மகேஸ்வரி கேட்ட போதும் வேறு எதுவும் கேட்காமல் இருக்க,

"ரகு! சட்டுனு எல்லாம் எதுவும் முடிவு பண்ண வேண்டாம்.. இன்னைக்கு போகட்டும்." தர்ஷினி சொல்ல,

"இல்ல தர்ஷ்! நான் தான் அவங்களை கஷ்டப்படுத்திட்டேன். அவங்க சொல்றது சரி தான்!" என்ற ஆராத்யா,

"மன்னிச்சுடுங்க த்த! என்னால தான் அவங்க இந்த முடிவுக்கு வந்தது." என்றவள் தான் செய்ததை சொல்ல தயங்கி,

"இனி உங்க யாரையும் விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்! நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான்" என்று கூற, புரிந்தும் புரியாத நிலை மகேஸ்வரிக்கு.

"நான் பேசிக்குறேன் ஆரா!" என்ற ரகு,

"ம்மா! நீங்க சொல்லுங்க. ஆரா நம்மோட இருக்கட்டும்னு எனக்கு தோணுது. அவ கூட இருந்து நீங்க பார்த்துப்பிங்க தான?" என்று கேட்க,

"ஆமா ஆமா! நான் தனியா இனி இருக்க மாட்டேன். தனியா யோசிக்கவே மாட்டேன்!" என அனைவர்க்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டுமே என ஆராத்யா ஆளுக்கு முந்திக் கொண்டு சொல்ல, சிறு புன்னகை எழுந்தது தர்ஷினியோடு கல்பனாவிற்கும்.

"ப்ச் ஆரா!" என்று பார்வை பார்த்தவன்,

"நீங்க சொல்லுங்க ம்மா. ஆரா நம்ம வீட்டுக்கு வரட்டும். கல்யாணம் மட்டும் வச்சுக்கலாமா? மத்த ஃபார்மாலிடிஸ் எல்லாம் நீங்க எப்படி என்ன சொன்னாலும் ஓகே!" என்றான் அன்னையிடம்.

"நான் எப்ப டா மாட்டேன்னு சொன்னேன். ஆனா நீ நம்ம வீட்டுக்கு கடைக்குட்டி. உன் கல்யாணத்த எப்படி சிம்பிளா வைக்க? அதுவும் இப்ப தான் உனக்கு சரியாகிட்டு இருக்கு. இப்ப போய் சிம்பிளா வச்சா ஆளாளுக்கு பேச்சு வரும்." என்றார் குழப்பமாய்.

"ம்மா! சிம்பிளான்னா அவ்ளோ சிம்பிளா யோசிக்காதிங்க. ரகு சொல்றதும் சரி தான? அவன் ஓகே தான் அதனால கல்யாணம் தள்ளி போக வேண்டாம். நமக்கு ரொம்ப வேண்டியவங்க எல்லாருக்கும் சொல்லலாம். கோவில் மண்டபம் ஏதோ ஒன்னு. அகி இருக்கான். நான் அவரையும் வர சொல்றேன்!" என நந்தாவை சொல்லிய தர்ஷினி,

"ஒரு பத்து நாளுக்குள்ள நாம எவ்ளோ நல்லா பண்ண முடியுமோ அவ்ளோ நல்லா பண்ணுவோம்!" என்று கூற,

"அவ்வளவு அவசரமா பண்ணனுமானு தான் யோசிக்குறேன். நான் என்னவோ நினைச்சேனே?" என்றார் மகேஸ்வரி.

"ம்மா!" என்றவன் அன்னை நிலை புரிந்தாலும் ஆராத்யாவையும் இனி அப்படியே விட்டுவைக்க முடியாமல் யோசிக்க,

"நான் சொல்லிடுறேன். அப்ப தானே அவங்களுக்கு புரியும்" என்று ஆராத்யா சொல்ல, ரகு முறைப்பதை பார்த்தும் தான் செய்யவிருந்ததை அவள் சொல்ல, நம்ப முடியாமல் பார்த்தார் மகேஸ்வரி.

"நீ வெளிநாட்டுக்கு கிளம்புனியா? அதுவும் தனியா?" என்று அவர் அதிர்ச்சியாய் கேட்க, தலை குனிந்து தலையாட்டி நின்றாள் மன்னிப்பு வேண்டிய பாவனையில்.

"ம்மா! ஏதோ தெரியாம பண்ணிட்டா விடுங்க." தர்ஷினி அன்னை எதுவும் பேசி விடுவாரோ என நினைத்து இடை புக,

"அதனால தான் நான் மறுபடியும் லூசாட்டம் எதுவும் பண்ணிடுவேனோன்னு உடனே வைக்க சொல்றாங்க!" என்று யார் முகமும் பாராமல் குனிந்தே ஆராத்யா சொல்ல,

"என்ன டா சொல்றா இவ?" என்றார் மகனிடம்.

"அதான் சொல்றாளே! நான் என்ன சொல்ல?" என்றவன் நிஜமாய் அவளை இப்படியே விட்டுவைக்க விருப்பமில்லை.

நம்பிக்கை இல்லாமல் இல்லை. சும்மா இருக்கும் மனம் ஆயிரம் சாத்தான்களுக்கு சமம் தானே? எதையாவது நினைத்து வைத்து எதையாவது செய்து வைத்தால் என்று தான் தோன்றியது. இன்னும் அவள் மேல் கோபம் குறையவில்லை என்றாலும் அவன் காதலும் குறைவில்லாமல் இருக்க, முடிவெடுத்து அன்னை முன் நின்றான்.

"நீ இவ்வளவு எல்லாம் யோசிச்சியா? உன்னை குழந்தைன்னுல்ல நான் நினச்சேன்?" என்று குனிந்திருந்த ஆராத்யா முகம் தாங்கி மகேஸ்வரி பார்க்க, கண்ணீர் மீண்டும் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது ஆராத்யாவிற்கு.

"அவனுக்காக ஒரு முடிவு எடுத்திருக்க.. அதுக்கேன் டா அழுகுற?" என்று ஆராத்யாவை தன் தோளில் சாய்த்து மகேஸ்வரி கேட்க, நன்றாய் அழுதுவிட்டாள் அவள்.

"மடில வச்சு கொஞ்சுங்க!" என்றது ரகு.

"ஏன் கொஞ்சுனா என்ன? என் மகனை எவ்வளவு புடிச்சிருந்தா இவ்வளவு யோசிக்க தோணும்?" என்று கேட்க,

"இதுக்கு அவளே பெட்டர் ம்மா." என்று முறைத்தவனைப் பார்த்து தர்ஷினி இப்பொழுது புன்னகைக்க,

"நான் ரொம்ப மோசம். ஆனா என்னை நீங்க தாங்குறீங்க." என்றாள் ஆராத்யா அழுகையை குறைக்க முயன்று.

"ப்ச்! இப்ப அது இல்ல விஷயம்." என்று ரகு தான் சொன்னதை மீண்டும் நினைவுபடுத்த,

"அதான் ஆரா சொல்றாளே டா.. இனி இப்படி எல்லாம் பண்ண மாட்டா!" என்றது தர்ஷினி.

"ஆமா நார்! நல்லா கிராண்ட் மேரேஜ் தான் நல்லாருக்கும். உங்க மேரேஜ்க்கு நாங்க எவ்வளவு யோசிச்சு வச்சிருக்கோம்!" என்றது கல்பனா.

"உனக்கு உன் கவலையா டி!" என்ற மகேஸ்வரி,

"சட்டுனு முடிவு பண்ண முடியாது ரகு. இனி ஆராவை நான் பாத்துக்குறேன். நீ சொல்றதையும் யோசிச்சு சொல்றேன்!" என்று சொல்ல, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான் ரகு.

"நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்.. ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க!"

"ம்மா! இப்ப வேண்டாம்.. காபி மட்டும் குடுங்க!" என்ற ரகு இன்னும் தெளிவில்லாமல் இருக்க, கவலையாய் இருந்தது ஆராத்யாவிற்கும்.

"சரி காபியே குடுங்க ம்மா.. இனி டின்னர் சாப்பிடட்டும்."

"ஆரா உனக்கு?"

"அவளுக்கும் காபி குடுங்க ம்மா!" சாப்பிடும் மனநிலை நிச்சயம் அவளுக்கும் இருக்காது என்றான் ரகுவே.

யாரும் எதுவும் பேச முடியவில்லை. தர்ஷினி கல்பனா இருவருமே ரகுவின் அதிகபட்ச கோபத்தை எதிர்பார்த்திருக்க, இது பரவாயில்லை என்றளவுக்கு இருக்கவுமே பெரும் நிம்மதி தான் அவர்களுக்கு.

மகேஸ்வரிக்கு அதிர்ச்சி என்றாலும் இப்பொழுது ஆராவின் மனம் புரிய அது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சி தான். இனி அவர்களுக்குள் எல்லாவற்றையும் பேசி தீர்வு காண்பர் தானே என்று.

ரகு ஆராத்யா இருவரின் மனநிலை தான் வெவ்வேறாய் என்றாலும் இன்னும் நடந்ததில் இருந்து மீளாமல் இருந்தது.

ரகுவின் கோபம் புரிந்து ஆராத்யா அமைதி காக்க, அவன் இனி எது செய்தாலும் சரி என்று சொல்லும் முடிவுக்கு வந்திருந்தாள்.

"தர்ஷ்!" தயங்கி தயங்கி ஆராத்யா அழைக்க,

"சொல்லு ஆரா!" என்றாள் அவள்.

இன்னும் அதிகமாய் அவள் தயங்க, ரகு சிந்தனையில் இருந்தவன் அவர்களை காணவில்லை.

"என்னனு சொல்லு ஆரா! இனியும் இப்படிலாம் மனசுல வச்சுட்டு இருந்தா எல்லாம் தப்பா தான் முடியும். இவ்வளவு நாளும் ஷேர் பண்ணிக்க யாரும் இல்லைனு சொன்ன ஓகே. இப்ப பாரு உனக்காக எவ்வளவு பேர் இருக்கோம்? எங்ககிட்ட பேச என்ன உனக்கு?" என்று சொல்லவும்,

"தர்ஷிகிட்ட தனியா பேசணுமா? நான் கோச்சுக்க மாட்டேன். நான் வேணா உள்ள போகவா?" என கல்பனா கேட்க,

"இல்ல இல்ல! உங்க ரெண்டு பேர்கிட்டயுமே தான் கேட்கணுமே!" என்றாள்.

"சரி சொல்லு என்ன?" என்னவோ என நினைத்து இருவரும் கேட்க, தர்ஷினி ஆராத்யாவிற்கு அட்வைஸ் சொல்லிய விதத்தில் அவர்கள் பக்கம் கவனம் கொண்டு வந்திருந்தான் ரகுவும்.

"அதான் நான் எங்கயும் போகலையே! இனி போகவும் மாட்டேன்.. உங்களுக்கு இவரோட போய் நான் நல்ல கிப்ட் வாங்கி தர்றேன்.. நான் இப்ப குடுத்தத திருப்பி குடுங்க!" என கேட்க, அவ்வளவு தீவிரமாய் கேட்டிருந்த இருவருக்கும் அப்படி ஒரு புன்னகை அவள் கேட்டதில்.

தரமாட்டேன் என அவர்கள் வம்பு செய்ய, இவளும் விடாப்பிடியாய் தந்தே ஆக வேண்டும் என்று கேட்க, பெருமூச்சு விட்டுக் கொண்டு பார்த்திருந்தவனுக்கு இன்னும் மனம் சமனடையாமல் சண்டித்தனம் செய்தது.
 
  • Love
Reactions: prikar and sivaguru