• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 5

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அத்தியாயம் 5

"அப்புறம் மாமா! தர்ஷி என்ன சொல்றா?" மனையில் அமர்த்தி வளையல் அணிவித்து வாழ்த்துக்களோடு ஆசீர்வாதமும் பெற்று என நந்தாவழி சொந்தப்பந்தங்கள் எல்லாம் சாப்பிட்டு கிளம்பிக் கொண்டிருக்க, அகிலன் நந்தா அருகில் அமர்ந்து கேட்டான்.

"ம்ம் பேபி வர்ற வரைக்கும் லீவ் போட சொல்றா! போட்டுடலாமா?" என்று கேட்டு நந்தா கண்ணடிக்க,

"உங்க பொண்டாட்டி கேட்டு நீங்க இல்லைனு சொல்லுறது தான் நடக்காத காரியம் ஆச்சே?" என அகிலன் கேட்க,

"சொல்ல வேண்டிய கட்டாயம் மச்சான்.. இப்ப சொல்லலைனா வேலைக்கு ஆப்பு ரெடி ஆயிடும்.." என்று நந்தா சிரிக்க,

"அது சரி! லீவ் சேவ் பண்ணி இருப்பிங்க தானே?"

"இல்லாமலா.. பேபி வரட்டும்.. ஒரு மாசம் டேரா போட்டுடலாம் மாமியார் வீட்டுலனு இருக்கேன்.. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?" நந்தா கிண்டலாய் கேட்க,

"ஆமானு சொன்னாலும் நீங்க முடிவு பண்ணினா மாத்திக்க போறது இல்ல.. சொல்லிட்டா உங்க பொண்டாட்டி மட்டும் இல்ல என் பொண்டாட்டியும் சேர்த்து என்னைய வீட்டை விட்டு தூரத்திடும்ங்க.." என்றவன்,

"ரகு!" என தம்பியை அழைத்தான் அவன் அந்த பக்கமாய் செல்வதைப் பார்த்து.

"எங்க டா போற?" அகிலன் கேட்க,

"தர்ஷி லெமன் சோடா கேட்டா அதான் வாங்கலாம்னு.." என்று கூற,

"தர்ஷி எங்க?" என்ற நந்தா,

"இங்க பக்கத்துல ஷாப் இல்ல ரகு.. நீ இரு நான் பாத்துக்குறேன்!" என்று கூறி அங்கு வேலையாய் இருந்த மற்றொருவனை அழைத்து வண்டி சாவியை கொடுத்து வாங்கி வர அனுப்பிவிட்டு மனைவியிடம் சென்றான்.

"இருங்க ப்பா.. ப்பா நான் சொல்றேன்ல! நான் எங்க வீட்டுல பேசுறேன்.. ரகுகிட்ட பேசி முடிவு பண்ணிட்டு அப்புறம் பேசலாம்.. வந்த இடத்துல.. எதுக்கு இதெல்லாம்?" என கல்பனா தன் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,

"நீ சும்மா இரு கல்பனா.. உனக்கு தெரியாது.. நாங்க பெரியவங்க பாத்துக்குறோம்!" என்ற அருளரசன் கல்பனாவின் தந்தை மகள் பேச்சை கேட்காமல் ரகுவை தேடி வந்துவிட்டார் அவன் அருகே.

"மாப்பிள்ள!" என்று அவர் அழைக்கவும் அங்கே அகிலனும் ரகுவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் எழுந்தனர்.

"வாங்க மாமா! அத்தை வரல?" அகிலன்.

"உங்களை தான் தேடிட்டு இருந்தேன்!" என்றவர்,

"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல!" என்று பொதுவாய் அருளரசன் ஆரம்பிக்க, கைகளைப் பிசைந்து நின்றாள் கல்பனா.

"என்ன?" என்று கண்களால் அகிலன் கல்பனாவிடம் கேட்க, கைகளை விரித்தவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"சாப்பிட்டீங்களா மாமா? உட்காருங்க!" என அருகே அமர சொல்ல, அவரும் இரண்டு வார்த்தைகள் பேசியபடி அங்கே அமர்ந்தார்.

"நீ பேசிட்டு இரு அகி.. நான் வர்றேன்!" என ரகு செல்ல பார்க்க,

"அட உட்காருங்க மாப்பிள்ள.. உங்ககிட்ட பேச தான் வந்தேன்!" என்று அருளரசன் கூற, கொஞ்சம் பதறி வந்தது கல்பனாவிற்கு.

அப்பாவைப் பற்றி தெரியும்.. எதையும் நேருக்கு நேராய் கேட்கிறேன் என்ற பெயரில் சுருக்கென பேசிவிடுவார்.

அதை விட கொழுந்தனைய் அறிவாள். பிடிக்கவில்லை என்றாலும் அவனை நிறுத்த நினைத்தால் யாரென பார்க்காமல் பேசிவிடுவான்.

"சொல்லுங்க மாமா!" என்ற அகிலனுக்கும் ஓரளவு யூகம் வந்துவிட, தம்பியை சிந்தனையாய் பார்த்தான்.

"அதான் மாப்பிள்ள.. உங்க அம்மாகிட்ட போட்டோ குடுத்து விட்டிருந்தேனே.. அவங்களா எதாவது சொல்லுவாங்க பார்த்தேன்.. சரி நேர்ல கேட்டுடலாம்னு தான்.." என்றார்.

"மாமா அதை வீட்டுல போய் பேசிக்கலாமே!" என்று தவிர்க்கவே பார்த்தான் அகிலன்.

"பேசுறதுன்னு முடிவான பின்ன எங்க பேசினா என்ன? நான் ரகுட்டயே கேட்டுக்குறேன்!" என்றவர்,

"போட்டோ பாத்திங்க தானே மாப்பிள்ள.. எல்லாருக்கும் சம்மதம்னா தம்பியை கூட்டிட்டு வர்றேன்.. இல்ல நீங்க நேர்ல பாக்கணும்னா பொண்ணு பார்க்க வாங்க.. பேசி முடிச்சிடுவோம்!" என்றார் நேரடியாய்.

சரியாய் மகேஸ்வரியும் இவர்களை தேடி வந்திருக்க, அருளரசன் கேட்டு முடித்திருந்தார்.

"ஆத்தீ! அகி மாதிரி இவனை நினச்சு கேட்டுட்டாரா உன் அப்பா..?" என்று கல்பனா அருகே மகேஸ்வரி நிற்க,

"எனக்கு பயமா இருக்கு த்த!" என்றவள் கலக்கம் அவள் விழிகளில் அப்பட்டமாய் தெரிந்தது.

"இல்ல மாமா இது சரி வராது.. நீங்க வேற பாருங்க!" என்ற சொல்லோடு ரகு நகர பார்க்க,

"அட இரு ப்பா.. அதென்ன பேசிட்டு இருக்கேன்ல!" என்ற அருளரசன் தோரணையே மாறிவிட,

"மாமா! மெதுவா பேசலாம்!" என்ற அகிலன் பேச்சை காதில் வாங்கவே இல்லை அவர்.

"என்ன சரி வராது? என் பொண்ணுக்கு குடுத்தத விட அவன் நல்லா செய்வான்.. பொண்ணுக்கு என்ன குறை? என்னனு சொன்னா தான தெரியும்? சரி உடச்சே கேட்கேன்.. எவ்வளவு எதிர்பார்க்கிங்க?" என்று கேட்டுவிட, அகிலனை பேசவே இடம் தரவில்லை அவர்.

அனைவரும் சாப்பிட சென்றிருக்க, வீட்டின் முன் சிலர் மட்டுமே என்றாலும் அத்தனை பேர் பார்க்க அவர் இவ்வளவு பேசியதில் சுத்தமாய் விருப்பமில்லை ரகுவிற்கு.

"என் பொண்ணுக்கே இவ்வளவு செஞ்சேன்.. அவன் நகைகடை வச்சிருக்கவன்.. குறைச்சு எடை போடாதிங்க!" என்று ஆரம்பிக்க, அவ்வளவு தான் ரகுவின் பொறுமை எல்லாம்.

மகேஸ்வரி, அகிலன், கல்பனா என யாருக்கும் உடன்பாடில்லை என்றாலும் அழைத்து வந்துவிட்டு அவரை எதிர்த்து பேசவும் தயங்கி சங்கடமாய் நிற்க,

"அகி! அண்ணி வரும் போது எவ்வளவு என்ன கொண்டு வந்தாங்க? அதை பார்த்து திருப்பி கொடு.. அண்ணி மட்டும் போதும் நமக்கு.." மட்டுமில் அழுத்தம் கொடுத்து சொல்லியவன்,

"விருப்பமில்லைனு சொன்னா அதோட விடுறது பெட்டர்.. பேச வைக்க வேண்டாம்! வேண்டாம்னு சொன்னா வேண்டாம் தான்!" என்று கூறியவன்,

"ம்மா!" என்று அன்னையை அழைத்தவன்,

"பார்த்துக்கோங்க!" என்று சொல்லி விருவிருவென சென்றுவிட்டான் தர்ஷினி அருகே.

"என்ன இப்படி சொல்லிட்டு போறாரு? பொண்ணு கொடுத்தோம்னு ஏத்தமா? திருப்பி தருவாராமே? என்ன தருவாரு? நான் உள்ளதை தானே கேட்டேன்?" என்று அருளரசன் சத்தமிட,

"மாமா!" என்ற அத்தனை கோபமான அழைப்பு அகிலனிடம் இருந்து வரவும் அருளரசன் அவன் பக்கம் திரும்ப,

"சொல்லி காமிக்குற இடமா இது? இத்தனை பேர் முன்னாடி என்ன பேசுறீங்க? கல்பனாக்கு இதெல்லாம் தந்தா தான் கல்யாணம் பண்ணுவேன்னு நான் சொன்னேனா? நீங்களா குடுத்ததை இப்படி சொல்லி காமிச்சா கேட்பிங்க? பேசுறதுக்கு இடம்னு ஒன்னு இருக்கு.." என்றவன், கல்பனாவை திரும்பி பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

மகேஸ்வரி தான் என்ன இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர் ஆகிற்றே என்று பேச, அவரிடமும் எகிறியவர் மகள் பேச்சையும் கேட்காமல் கிளம்பிவிட்டார் தனியே!

"சரி விடுங்க த்த! நான் அம்மாகிட்ட பேசிக்குறேன்.. அப்பா எப்பவும் இப்படி தான்..!" வருத்தமாய் இருந்த போதிலும் மகேஸ்வரிக்கு கல்பனா சொல்ல,

"மன்னிச்சுடு டா கல்பனா!" என்றார் ஒரு மகளின் அன்னையாய் வருத்தம் நிறைந்து.

"என்ன த்த நீங்க? அப்பா பேசினதும் தப்பு தானே? அதுவும் ரகு எப்படினு எனக்கு தெரியாதா? நல்லவேளைக்கு அண்ணியையும் திருப்பி அவங்க அப்பாகிட்ட குடுன்னு சொல்லாம விட்டார்.. இல்லைனா அவரை மாதிரியே உங்க மூத்த மகனும் பிள்ளையாரா உட்கார வேண்டியது தான்!" என கிண்டல் பேச, மகேஸ்வரி முகம் தெளிவடையவே இல்லை.

உள்ளே வந்த அகிலன் ரகு அருகே பேச வர, "விடு அகி! எதையும் கேட்கற மைண்ட்ல நான் இல்ல!" என்றுவிட்டான் ரகு.

தர்ஷினி,நந்தா என்னவென கேட்கவும் அகிலன் நடந்ததை சொல்ல,

"கழுதை வயசுலயும் கல்யாணம் பண்ணாம இருந்தா இப்படி தான் கேட்பாங்க!" என்றாள் ரகுவை முறைத்து தர்ஷினி.

"இதே வார்த்தையை நான் சொல்லி இருந்தா கடிச்சு குதறி இருப்பான்.. இருக்குறத பாரேன் பச்ச பிள்ளையாட்டம்!" என அகிலன் கிண்டல் பேச,

"அட கொஞ்ச நேரம் மாப்பிள்ளய தனியா விடுங்க.." என்றார் நந்தா.

ஆளாளுக்கு பேசி சிரித்து என ரகுவை மலையிறக்க பார்க்க, அவன் மனமோ ஆராத்யாவிடம் இருந்தது.

மீண்டுமாய் மனதில் நினைத்துக் கொண்டான் முடிந்த வரை விரைவில் ஆராத்யாவிடம் பேசுவது என்று கோடியாவது முறையாய்.

"மாமா நீங்க போய் ரகுவை சாப்பிட கூப்பிடுங்க.. அப்ப தான் சாப்பிடுவான்.. எல்லாரும் சாப்பிட்டு கிளம்ப ரெடியாயாச்சு!" அகிலன் நந்தாவிடம் சொல்ல, தலையசைத்து அவன் அருகே சென்றான் நந்தா.

"ரகு சாப்பிடலாம் வா!" என்று அழைக்க,

"பசிக்கல மாமா! கிளம்பலாமா?" என்றான் நேரம் பார்த்து.

"சாப்பிடாமலா? எனக்கு வேற பசிக்குது.. சரி பார்த்துக்கலாம்.. கிளம்புவோம்!" என்று அழைக்க,

"எது உங்களுக்கு பசிக்குதா? தர்ஷி கூட உங்களுக்கும் ஊட்டினாங்க தானே? இதுல தலைவாழை இலை போட்டு சாப்பிடுட்டு..." என்று ரகு முறைக்க,

"ஷ்யாப்பா! டேய்! என்னங்கடா!" என்ற நந்தா,

"வெளில ஒருத்தன் நான் சாப்பிட சொன்னா தான் நீ சாப்பிடுவன்னு சொல்லி அனுப்பினான்.. அந்த மரியாதையை காப்பாத்திக்கலாம்னு பாத்தேன்.. போதுமா?"

"மாமா! உங்களை.." என்று சிரித்த ரகுவும்,

"நான் சாப்பிட்டு வர்றேன்.. நீங்க போய் மத்தவங்களை பாருங்க!" என்றான் மெல்ல சிரித்து.

"சாப்பிடுவ தான?" என மீண்டும் கேட்க,

"போட்டோ எடுத்து அனுப்புறேன்!" என்று சொல்லிக் கொண்டே சென்றுவிட, நந்தாவும் புன்னகைத்து அடுத்த வேலையை பார்க்க சென்றான்.

ரகு சாப்பிட்டு வர, மகேஸ்வரி அவன் அருகே செல்லவே தயங்கி நின்றார். அவன் கேட்கும் கேள்விக்கு பயந்து.

அப்படியும் அன்னையை முறைத்துக் கொண்டு ரகு வந்து நிற்க,

"சரி விடு டா.. அம்மா என்ன பண்ணுவாங்க?" என்ற அகிலனுக்கு,

"எதாவது பண்ணி இருக்கனும்ல டா.. போட்டோ பார்த்தீங்க தானேனு கேட்குறார்.. அப்ப போட்டோ வாங்கினது யாரு? அப்பவே வேண்டாம்னு சொல்லி இருந்தா இது தேவையா?" என சண்டையாய் நிற்க,

"நான் சொன்னேன் டா ஆனா அவர் கேட்கல..!" என்றார் பாவமாய் மகேஸ்வரி. அருகே இன்னும் கவலை முகத்தோடு கல்பனா நிற்க, அவளைப் பார்த்த பின் தான் நிதானத்திற்கே வந்தான் ரகு.

"சாரி அண்ணி!" என்றான் நிஜமாய்.

"இல்ல இல்ல.. எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்ல.. அப்பா பேசினதும் தப்பு தானே?" என்றவள்,

"அத்த பாவம்.. அப்பா தான் கம்பெல் பண்ணி குடுத்துருப்பாங்க.. இனி இப்படி நடக்காது.. விட்ருங்களேன்!" என கெஞ்சலாய் கேட்க, தலையசைத்து காருக்கு சென்றுவிட்டான்.

இம்முறை காரில் தர்ஷினியும் ஏறிக் கொள்ள,

"நாளைக்கு நான் வர்றேன் தர்ஷி! டேக் கேர்!" என்ற நந்தா,

"ரகு! பார்த்து!" என்று கூறி குடும்பத்துடன் சேர்ந்து வழியனுப்பி வைத்தான்.

மெதுவாய் ரகு காரை செலுத்த ஐந்து மணி நேர முடிவில் வீட்டின் முன் வந்து நின்ற போது அஜயை கையில் ஏந்தியபடி எதிரில் வந்து நின்றாள் ஆராத்யா.


தொடரும்..
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
இப்படி ஏதாவது குழப்பம் பண்ணா தான்
கோபம் வந்து சார் ஏதாவது நல்ல முடிவு எடுப்பாரு😂😂😂😂😂
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
இப்படி ஏதாவது குழப்பம் பண்ணா தான்
கோபம் வந்து சார் ஏதாவது நல்ல முடிவு எடுப்பாரு😂😂😂😂😂
அவர் எப்ப எடுத்து.... 🤣🤣