அத்தியாயம் 5
"ஏன் டி அதான் ஆவாதுன்னு முடிவாகி போச்சுல்ல? என்ன இன்னும் தாளிச்சுகிட்டு கிடக்க? சும்மா இருக்க ஆவாதா உனக்கு?" ஈஸ்வரி சத்தம் போட,
"இப்படியே உங்க மவன் பண்ற ஒவ்வொண்ணுக்கும் நல்ல ஒத்து பாட்டு பாடுங்க. இன்னும் நல்லா எங்க தலைமேல ஏறி உக்காரட்டும்!" என்று கோபமாய் கூறினார் வள்ளி.
"என்ன செய்ய? நடந்தது நடந்து போச்சு. ஊர்ல வேற பொண்ணா இல்ல?"
"அதையே தான் நானும் கேக்குறேன் த்தை. ஊருல வேற பொண்ணே இல்லைனா இவ்வளவு அவசரம்கூட்டி என் மவன சபையில வச்சு இப்படி கலங்க வைக்கணும். என்னை என்ன பண்ணினாலும் ஓரளவுக்கு பொறுமையா இருப்பேன். என் பையன் விஷயத்துல பெத்த அப்பாவேனாலும் பாத்துட்டு இருக்க முடியாது"
"இப்ப என்ன பண்ணனும்ங்க நீ? எல்லாம் அவன் நேரம்!" ஈஸ்வரி வாயும் அடங்கவில்லை.
"இந்த பேச்சு தான் பேசாதீங்கங்கேன்.. என்ன அவன் நேரம்? என்னத்த கண்டீங்க? வேண்டாம்த்த. எதாவது சொல்லிற போறேன்!" கோபத்தில் குரலும் உயர்ந்தது வள்ளிக்கு.
"ம்மா! ம்மா!" என்று மேலிருந்து வந்துவிட்டான் சிவா.
"என்னம்மா நீங்க! அதான் அப்பவே சொன்னேனே இத்தோட விடுங்கனு. எல்லாருக்கும் பாக்குற முதல் பொண்ணு பையனோடவே கல்யாணம் நடந்துடுமா என்ன? இப்ப எனக்கு என்ன? வேற பார்த்துக்கலாம் ம்மா!" என்று அன்னையை கட்டிக் கொண்டான்.
"பாத்திங்க இல்ல என் தங்கத்த? இனிமே பொண்ணு காட்டுதேன் மண்ணு காட்டுதேன்னு எங்கேயாவது கூப்பிடுங்க. அப்போ இருக்கு!" என்று சொல்ல, முனகியபடி சென்றார் ஈஸ்வரி.
வள்ளிக்கு மட்டுமில்லாமல் ஈஸ்வரி வாழவந்தான் என அனைவருக்குமே தெரியும் இனி மகனை பெண் பார்க்க என எங்கும் அழைக்க முடியாது. நிச்சயம் அவன் வர போவதில்லை என்று.
நினைக்க நினைக்க மனம் தாளவில்லை வள்ளிக்கு. பகட்டுக்கு ஊர் கூட்டி செல்லும் பொழுதே அத்தனை கூறினார் வள்ளி.
"இவளுங்க கண்ணே போதும். வந்ததும் சுத்தி போட்டுறனும் சிவாக்கு" என்று.
சிவா அத்தனை பேரின் முன்பும் அன்னை அருகே அமர்ந்திருந்தவன் இயல்பாய் அன்னையோடு பேசி சிரித்து அமர்ந்திருக்க, மகனுக்கு பிடித்துவிட வேண்டும் என வேண்டுதலோடு வள்ளி.
"பொண்ணு ரொம்ப பெரிய இடத்துல தான் பிடிச்சிருக்க போலயே வாழவந்தான்!" என்று கேட்டவர்களுக்கு மிதப்பாய் ஒரு புன்னகை அவரிடம்.
"மேகல! மணிமேகல! புள்ளைங்க வந்திருக்காங்க பாரு டா! பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல... அதனால வெக்கம் விட்டு போகல!" என்ற வடிவேலு வீடியோ மகிமா என்ற பெயரில் ஸ்டேட்டஸ் காட்ட, ப்ளுடூத்தில் கேட்டபடி இருந்த சிவா மகிமாவை நினைத்து பல்லைக் கடித்தான்.
"அவ்வளவும் திமிரு! இவளை..." என நினைத்தாலும் அந்த நிமிடம் அதை அன்னையிடம் கூட காட்டிட முடியாதே!
"நாளைக்கு பாத்துக்குறேன் உன்னை!" என்ற நினைப்போடு தன்னை சுற்றி இருக்குமிடத்துக்கு கவனத்தை கொண்டு வந்தான்.
வந்து பல நிமிடங்கள் கடந்தும் பெண்ணை அழைத்து வராமல் இருக்க, பெரியவர் ஒருவர் முதலில் வாய் திறந்தார்.
"எவ்வளவு நேரம் பேசிட்டே இருக்க? பொண்ணு வந்தா பார்த்துட்டு அடுத்து என்ன ஏதுனு பேசலாம் இல்ல?".
"அதான. பொண்ணை வர சொல்லுங்க!" என்று மற்றவர்களும் கூற,
"இதோ இப்ப வந்துடுவா!" என்றார் பெண்ணின் தந்தை.
பெண் வீட்டில் மொத்தமே ஐந்து பேர் தான் இருந்தனர். அதுவும் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமாய் தெரிந்தது.
கனகவள்ளி நினைத்ததும் அது தான். முதலில் தங்கள் குடும்பம் மட்டும் சென்று பார்த்து உறுதியாகிய பின் உறவுகளுக்கு சொன்னால் போதாதா என்று.
கேட்க வேண்டுமே! நான் சொல்வது தான் என்று நிற்பவரிடம் என்ன பேச? குறைந்தது பதினைந்து தலைகள் உடன் வந்திருக்க, பொடுபொடுவென்று வந்த போதும் மகன் முதலில் சம்மதம் கூறட்டும் என காத்திருந்தார் வள்ளி.
"பொண்ணு வீட்டுல தான் இருக்குதா?" என்று கேட்டு ஒரு சிரிப்பு வேறு பெரியவரிடம் . வந்ததே அதற்கு தானே? ஆனால் பெண்ணை காட்டாமல் எவ்வளவு நேரம் கதை பேச? என்று தான் அப்படி கேட்டது.
"இதோ ரெடியாகிட்டு இருக்குறா!" என்று பெண்ணின் தந்தை கூறும் பொழுது அரை மணிநேரம் கடந்திருந்தது தாங்கள் வந்து.
"என்ன சொன்னதே சொல்லிட்டு இருக்கீங்க? விடுங்க நான் பாத்துட்டு வாரேன்!" என்ற பெண்மணி ஒருவர் வேகமாய் எழுந்து வீட்டிற்குள் சென்றார்.
"வந்து சும்மா அவங்க முன்னக்க நின்னுட்டு வந்துடு டி. நீ பாக்க கூட வேண்டாம்" என்று அன்னை மகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,
"எனக்கு இஷ்டம் இல்லனு சொல்லிட்டேன் இல்ல?. சும்மா யார் யார் முன்னாடிலாமோ அப்படி வந்து நிக்க முடியாது!" என்று பெண் கூறும் வேளையில் தான் அறைக்குள் நுழைந்திருந்தார் அந்த பெண்மணி.
"இஷ்டம் இல்லையா?" என்று அதிர்ச்சியில் வாய் பிளந்தவர் வெளியே வந்து கனகவள்ளி காதில் விஷயத்தை கூற, அதிர்ந்தார் அவர்.
"ஏப்பா இன்னும் எவ்வளவு நேரம்?" என்று கேள்வியோடு சலசலப்பும் எழ, பெண்ணின் தந்தை கைகளை பிசைய, உள்ளே சென்று வந்த பெண்மணி ஒவ்வொரு காதிலும் ரகசியம் பேச, வெளியில் விஷயம் கசிய ஆரம்பித்தது.
அவ்வளவு ரண களத்தின் பின்னும் அந்த பெண் வெளிவரவே இல்லை. பேச்சுக்கள் வேறு விதமாய் செல்ல ஆரம்பிக்க, சலசலப்பு சத்தங்களாக வாழவந்தான் எழுந்துவிட்டார்.
"உன் பொண்ணுக்கு விருப்பம் இல்லைனா எங்களை ஏன்யா வரவச்சு இப்படி அவமானப்படுத்துன? எத்தனை நாளா காத்து கிடந்த? அம்புட்டு இளக்காரம்ன உனக்கு?" என்று குதிக்க ஆரம்பிக்க, பெண் வீட்டார் பக்கம் அமைதியாய் மன்னிப்பை கேட்டு நிற்க, கொஞ்சமும் யோசிக்கவில்லை சிவா.
"ப்ச்! ம்மா! நீங்க வாங்க!" என்றவன் அன்னை கைப்பிடித்து அழைத்து வெளியே வந்துவிட்டான் அங்கு நடப்பது புரிய ஆரம்பித்தபின்.
அவன் வெளியே வந்த பின் தான் சண்டையிட்டு வாய் வார்த்தை அதிகமாகி ஒவ்வொருவராய் கலைய ஆரம்பிக்க, அன்னையுடன் கிளம்பி வீட்டிற்கே வந்துவிட்டான் சிவா.
வந்ததும் அறைக்கு சென்றவன் மீண்டும் அன்னை பாட்டியிடம் சத்தமிடும் குரல் கேட்டு வெளியே வந்துவிட்டான்.
சிவா, வள்ளி வந்து அரை மணி நிமிடம் சென்ற பிறகே வாழவந்தான் உடன் இன்னும் இரண்டு பெரியவர்கள் வீட்டிற்குள் வந்து அமர,
"என்னத்தா! இன்னும் விசனமா தான் இருக்கியா!" என்று ஒருவர் வள்ளியிடம் கேட்க,
""பின்ன இருக்காதா ண்ணே! ஓரு வார்த்தை எதுத்து பேசாம அவர் கூப்பிட்ட இடத்துக்கு என் புள்ள வந்து நின்னதுக்கு நல்ல மரியாதை கிடைச்சதுல்ல?" என்றார் கோபமாய்.
"என்ன டி என்னமோ அவன் மட்டும் அசிங்கப்பட்ட மாதிரி பேசிகிட்டு இருக்க? பேசாம இருந்திரு. கொலைவெறில இருக்கேன்!" என்று பதிலுக்கு எகிறினார் வாழவந்தான்.
"உங்களை யாரு ஊரை கூட்டி போக சொன்னா? அவன்கிட்ட நீங்க கேட்கல... அவங்களும் அவங்க பொண்ணுகிட்ட கேட்கல. தான் தான் எல்லாம்... தான் சொல்றது நடந்தே ஆகணும்னு திரிஞ்சா இப்படி தான். அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கான். இப்படி ஒரு பிள்ளையை வச்சுட்டு அடுத்தவன் முன்னாடி அசிங்கப்பட்டு நிக்கணும்னா உங்களை மாதிரி அகம்பாவம் பிடிச்சவங்களால மட்டும் தான் நடக்கும்!"
நடந்த நிகழ்வின் தாக்கம் வள்ளியை பேசாமல் இருக்க விடவில்லை. தன் மகன் தனக்கு ராஜா எண்ணம் எப்பொழுதும் பெருமையை தரும். அப்படிப்பட்டவனை இப்படி நிற்க வைத்து விட்டாரே எனும் ஆதங்கம்.
ஏற்கனவே அவ்வளவு கோபம் வாழவந்தானுக்கு. தானே சென்று தான் பெண் கேட்டது என்றாலும் அதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்கள் தானா என பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தார். குடும்பத்தின் பெயர், குணம் என அனைத்தும் அவரே பார்த்து தெரிந்து தான் கேட்டது.
சொத்து பத்தை விட தன் பேச்சை மதிக்கும் எவரும் தனக்கு அடிமை என்பதை போல ஒரு மமதை அவரிடம் உண்டு.
அப்படி தான் அந்த பெண்ணின் தகப்பனும் தனக்கு அடங்கி இருக்க, அதுவே அவரை இந்த சம்பந்தத்தை முடித்து வைக்க போதுமானதாய் இருந்தது.
இப்படி நேரில் வரவைத்து முதுகில் குத்திவிட்டானே என அந்த இடத்திலேயே முடிந்த மட்டும் பேசிவிட்டு தான் வந்திருந்தார். இன்னமும் என்ன செய்தால் மனம் அடங்கும் என்பதை போல உருமிக் கொண்டிருக்க, மனைவி பேச்சு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதை போல ஆனது.
"விட்டா பேசிட்டே போற நீ?" என்று வாழவந்தான் எழுந்து வந்த வேகத்தில் அரைந்திருந்தால் நிச்சயம் கண்ணம் பழுத்திருக்கும் இடையில் சிவா வராமல் இருந்திருந்தால்.
"ப்பா!" என்ற சிவாவின் ஒரு சத்தத்தில் அமைதியாகிவிட்டார். இவ்வளவு சத்தம் இதுவரை அந்த வீட்டில் அவனிடம் இருந்து வந்ததில்லையே!
"இத்தனை வருஷத்துல இன்னும் அடிக்க மட்டும் தான் இல்ல. அதையும் செய்ய பாக்குறீங்க?" சிவா கேட்க,
"நான் மட்டும் என்ன இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சா இதெல்லாம் செஞ்சேன்? அவனை தூக்கி போட்டு மிதிக்க முடியலையேனு நான் மருவிட்டு இருக்கேன். இவ என்னமோ நான் வேணும்னே பண்ணதாட்டம் இந்த குதி குத்திக்கிறா!" என்றார்.
"ம்மா! அதான் நான் சொல்றேன்ல? நீங்களுமா என் பேச்சை கேட்க மாட்டிங்க?" என்று அன்னையிடம் சிவா திரும்ப,
"போடா!" என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
"சரி விடுப்பா! பொம்பளையாளுங்க வேற யாருகிட்ட கோவத்தை காட்டிக்கும்? வருத்தம் இருக்க தான செய்யும்!" என்று வந்திருந்த பெரியவர் கூறி,
"நீ மனசுல எதுவும் வச்சுக்காத சிவா. ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணத்தை நடத்திருவோம். அப்போ நாங்க கிளம்புறோம்!" என்று சொல்ல, அமைதியாய் தலையசைத்து மட்டும் அனுப்பி வைத்தான் சிவா.
அனைவரும் சென்றதும் தன் அறைக்கு வர, அங்கே தான் அமர்ந்திருந்தார் தன் அன்னையும். பெரிதாய் எந்த கனவும் இல்லை திருமணம் பற்றி. திருமண வாழ்க்கை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இதுவரை வந்ததில்லை அவனிடம்.
பொதுவாகவே இதுநாள் வரை அந்த பக்கம் செல்ல விரும்பாதவன் சரி அப்பா இவ்வளவும் செய்த பிறகு ஏன் மறுத்துக் கொண்டு என்று சம்மதம் சொல்லி இருக்க, நடந்த இந்த அசம்பாவீதம் அவனை அதிகமாய் யோசிக்க வைத்தது இந்த திருமணம் என்ற வார்த்தையில் அடுத்த அடியை எடுத்து வைக்க.
அன்னை அந்த பெண்ணை பார்க்க அவ்வளவு புலம்பி யோசித்த போது புரியாத ஒன்று இப்பொழுது புரிந்தது இது அவ்வளவு சாதாரணம் அல்ல என்று.
ஆனால் அந்த பொறுப்பை கையில் எடுக்கவும் இப்பொழுது ஒரு பயம். எப்படி அமையும்? என்ன மாதிரியாக மாறும் தன் வாழ்வு என்று.
தொடரும்..