• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 53

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 53

“ஹை! லெக் பீஸ்!” கீழே வந்த ஆராத்யாவை நன்றாய் தர்ஷினி கல்பனாவோடு சேர்ந்து கலாய்த்து வைக்க, அனைத்தையும் வாங்கிக் கொண்டு கணவனை முறைத்த ஆரா அப்பொழுது தான் உணவினை பார்த்தாள்.

தட்டில் தனியாய் இருந்த லெக் பீஸ்ஸை முதலில் ஆராத்யா எடுக்க போக, படக்கென்று எடுத்துக் கொண்டாள் தர்ஷினி.

“இங்க பாரு ஆரா! நாம எவ்வளவு தான் பிரண்ட்ஸ்னாலும் லெக் பீஸ்னு வந்துட்டா ஆராக்கு ஆறாவது இடம் தான்.” என்று தர்ஷினி சொல்ல,

“எனக்கும் அப்படி தான். நான் தான் முதல்ல பார்த்தேன் எனக்கு தான் வேணும்!” முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு கூறினாள் ஆராத்யாவும்.

“முடியாது!” என்ற தர்ஷினி கையில் சிக்கனை எடுத்துக் கொள்ள,

“பாவம் தர்ஷி குடு அவளுக்கு!” என்றது கல்பனா.

“அண்ணி! என்ன மருமகள் கூட்டணியா. நான் நாத்தனார். பாக்குறீங்களா யாருக்கு பவர்னு!” என்ற தர்ஷினி,

“ஏங்க சொல்லுங்க!” என கணவன் கையை இழுக்க,

“விடு ஆரா. நீ டெல்லி வா உனக்கு நான் வாங்கி இவ கையாலையே எல்லாத்தையும் சமைச்சு தர்ற மாதிரி பண்றேன்!” என்றான் நந்தாவும்.

“யூ டூ நந்து ண்ணா?” என்று முறைத்த ஆராத்யா கணவன் புறம் திரும்ப, ரகுவும் அகிலனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“நீங்க சொல்லுங்க!” என கணவனை இடித்தாள் ஆராத்யா.

“விடு ஆரா! இவ்வளவு இருக்குல்ல? நாளைக்கு நான் வாங்கி தர்றேன்!” என்றான் ரகுவும்.

“நந்தா அண்ணாவை பாருங்க. எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி வைஃப்க்காக பேசினார். நீங்களும் இருக்கீங்களே!” ஆராத்யா முறைத்து அனைவரின் முன்பும் சத்தமாய் கேட்டுவிட,

“கோவமா பேசுறியா ஆரா?” என்று ரகு சிரித்து கேட்ட பின் தான் சுற்றத்தோடு மொத்தமும் நினைவு வர, திரும்பிப் பார்த்தாள் தான் பேசிய அனைத்தும் நினைத்து.

“ஆத்தி! ஒரு கிலோ சிக்கன் இனி அதிகமா வாங்கணும். இல்லைனா உசுருக்கு உத்திரவாதம் இல்ல போல!” என்று அகிலன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் அனைவரின் முகத்திலுமே புன்னகை.

“சாப்பிட்டீங்களா இல்லையா? இந்தா ரகு உனக்கு லெக் பீஸ் புடிக்குமே!” என இன்னொன்றை கொண்டு வந்த மகேஸ்வரி ரகு தட்டினில் வைக்க, மகேஸ்வரி நிற்கும் பொழுதே அதை ஆராத்யா தட்டிற்கு மாற்றினான் ரகு.

“ஆராக்கும் புடிக்குமாம் ம்மா!” என்ற சொல்லோடு.

“இன்னொன்னு இருந்துச்சே டா!” என்று அங்கிருந்த பாத்திரங்களை பார்த்துவிட்டு தர்ஷினி கையில் இருந்ததைப் பார்த்தவர்,

“குடு தர்ஷி!” என்று வாங்கி,

“இந்தா ரகு இதை நீ சாப்பிடு!” என்றவர்,

“அவ தான் எது குடுத்தாலும் சாப்பிடுவாளே!” என தர்ஷினியையும் வாரிவிட்டார்.

ஆராத்யா பழிப்புக் காட்ட, மொத்த குடும்பமும் புன்னகைக்க, “ம்மா நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன் ம்மா. என் மேல பாசமே இல்லை இல்ல உங்களுக்கு?” என்று தர்ஷினி பாவமாய் முகம் வைத்துக் கேட்க,

“நீ பெரிய பொண்ணு தர்ஷி. இன்னுமா சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சின்ன பசங்க கூட போட்டி போடுவ?” என்றார் மகேஸ்வரி.

“ம்மா நான் என்ன கிழவியா? அது என்ன சின்ன விஷயமா? லெக் பீஸ்ன்றது எமோஷன் ம்மா!” என்றாள் அதற்கும்.

“போதும் போதும் தர்ஷி! ஆராத்யாக்கு பல்பு குடுக்க நினச்ச உனக்கு ரிட்டர்ன் ஆகுது. சாப்பிடு!” என்றாள் சிரித்தபடி கல்பனா.

“ஆரா! ஊருக்கு கிளம்புறேனேன்னு சும்மா விடுறேன்!” தர்ஷினி சொல்ல,

“சும்மா சொல்றா ஆரா! இவளுக்கு வச்சாலும் அதுல வெறும் எலும்பு தான் இருக்குன்னு வேற பீஸ் எடுப்பா.. இன்னைக்கு உன்கிட்ட சண்டை போடணும்னே எடுத்து வச்சு விளையாட்டு காட்டினா!” என்றது நந்தா.

“இவங்க சண்டைக்குள்ள சிக்கன் ஆசையே பட கூடாது போல. ம்மா இடியாப்பம் பார்த்த மாதிரி இருந்துச்சே. எனக்கு வையுங்க!” அகிலன் கேட்க,

“ஆமா டா ஆரா தான் செஞ்சா!” என்று எடுத்து வைத்தார் மகேஸ்வரி.

“ரகு! நீ அன்னைக்கு தான் சாப்பிடல. இன்னைக்கு சாப்பிடலாம் தானே?” நந்தா கேட்கவும்,

“அவங்களுக்கு புடிக்காதே ண்ணா!” என்றாள் ஆராத்யா ரகுவிற்கு முன்.

“பரவால்ல நீ குடுத்தா சாப்பிடணும்ல? பின்ன என்ன லவ்வு?” தர்ஷினி கேட்க,

“அதுக்காக பிடிக்காததை குடுத்து சாப்பிட்டு தான் நிரூபிக்கணுமா என்ன? தர்ஷ்! சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க!” என்று சாதாரணமாய் புன்னகைத்து ஆராத்யா சொல்ல,

“சரி குடு டேஸ்ட் பண்ணலாம்!” என்றான் தர்ஷினியிடம் ரகு.

“ப்ச் வேணாம் விடுங்க!” ஆராத்யா சொல்ல,

“இல்ல இன்னைக்கு அவன் சாப்பிடட்டும்!” தர்ஷினி சொல்ல,

“அச்சோ! நான் அவங்களுக்கு பண்ணவே இல்ல. பிச்சு பிச்சு தர்ஷ்.” என்ற ஆராத்யா,

“ராம்! பிடிக்காத எதையும் மாத்திக்க வேண்டியதில்லை. நீங்க இதையே சாப்பிடுங்க!” என்றாள் அவனிடம்.

“டேய்! எப்புட்றா!” தர்ஷினி தலையில் கைவைத்து கேட்க,

“அதான் ஆரா! எனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டா!” என்று கண்ணடித்தான்.

“இவன் பண்ற அலம்பல் வேற தாங்க முடியல. போங்க டா போங்க டா நல்லாருங்க!” என்ற தர்ஷினியோடு,

“ஷ்யப்பா! இப்பவே கண்ணை கட்டுதே!” என்று கல்பனாவும் சொல்ல, மொத்தமாய் சிரிக்க, நேரம் சென்றதே தெரியவில்லை.

தர்ஷினியை அனுப்பி வைக்க மொத்த குடும்பமும் ஏர்போர்ட் வர, நந்தா அன்னை தந்தையும் நேராய் ஏர்போர்ட் வந்துவிட்டனர்.

ரகுவிடம் நந்தா தனியாய் பேசிக் கொண்டிருக்க, “அடுத்து எப்ப வருவீங்க தர்ஷ்! உங்களையும் ஏஞ்சலையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” என்றாள் ஆராத்யா கவலையாய்.

“அட நீ வேற ஏன் மா! ஒரு பேச்சுக்கு உன் புருஷன்கிட்ட உன் லவ்வை சக்ஸஸ் பண்ணி கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான் ஊருக்கு போவேன்னு சொன்னேன் நிஜமாவே அப்படி தான் நடந்துச்சு. இத்தனை மாசம் நந்து தனியா இருந்ததே பாவம். இதுல நீ வேற! நெக்ஸ்ட் மன்ந்த் ரெண்டு பேரும் கண்டிப்பா வாங்க!” என்று சொல்லி அனைவரிடம் இருந்தும் விடைபெற்று கிளம்பினாள் தர்ஷினி.

“ம்மா நானும் ஆராவும் வெளில போய்ட்டு வர்றோம். நீங்க அகி கூட கிளம்புங்க!” ரகு அன்னையிடம் சொல்ல,

“சரி டா போய்ட்டு வா நாங்க பாத்துக்குறோம்!” என்று சொல்லி அகிலன் ஏர்போர்ட்டில் இருந்து மகேஸ்வரி கல்பனாவுடன் செல்ல, கல்பனா ஆராவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

“என்ன நீங்க? எல்லாரும் ஒன்னா தானே வந்தோம்? இப்ப தனியா போனா என்ன நினைப்பாங்க? என்ன ராம்?” ஆராத்யா கேட்க,

“எதுவும் நினைக்க மாட்டாங்க. அவங்களும் நம்ம மாதிரி இருந்து வந்தவங்க தானே?” என்றான் அசால்ட்டாய் ரகு.

“அச்சோ! கல்பனா க்கா பார்வையாலேயே கிண்டல் பன்றாங்க. போங்க!” என்றவள்,

“எங்க போறோம்?” என்றாள்.

“எங்க வேணா போலாம். ஆராகூட இருக்கும் போது!” என்று கண் சிமிட்டியவன், “வெயிட் பண்ணு கார் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி நகர, செல்லும் அவனை புன்னகையுடன் ரசித்து பார்த்திருந்தாள் ஆரா.

காரை திருப்பிவிட்டு தற்செயலாய் கண்ணாடி பக்கம் திரும்பிய ரகு அதில் ஆராத்யாவைக் கண்டவனுக்கும் பழைய நியாபகங்கள் இன்னும் புதிதாய்.

அலுவலகத்தில் அவள் வரவுக்காக எத்தனை நாட்கள் இதனுள் அமர்ந்து கண்ணாடியை மட்டும் பார்த்து அமர்ந்திருப்பான்? நினைக்கவும் இனிமையான நாட்களில் தானாய் ஒரு மென்னகை.

அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசமாய் அவன் கண்களில் பட்டது என்னவோ அவள் வகிட்டினில் இருக்கும் குங்குமமும் கழுத்தில் இருக்கும் மாங்கல்யமும் தான்.

முன் கதவை திறந்து கொண்டு அவள் அமர, “லாங் டிரைவ் ஓகே தானே?” என்று ரகு கேட்கவும் தலையசைத்தவளுக்கும் அவன் புன்னகை அதிகமாய் ஒட்டிக் கொண்டது.

சிறு சிறு ஆசைகளை தோன்றும் நேரம் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தால் மனம் கொள்ளும் நிம்மதிக்கு வரையறை கூறிட முடியாது.

தான் விரும்பி காதலித்து மூச்சடைக்க தவித்து அவள் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து என காத்திருந்தவன் அதன் பலன் கைவந்து சேர்வதற்குள் அடைந்த சோதனைகள் எல்லாம் தடைகளை தாண்டிய சாதனையாய் தான் கண்டான்.

இதோ இந்த ஒரு வாரத்தில் ஒரு நிமிடமும் பிரியாமல் என அவளோடு அவனும் அவனோடு அவளுமாய். காதலை வார்த்தைகளால் கூறவும் முடியாது வாழ்ந்து பார்க்க காலமும் போதாது என தான் தோன்றியது ரகுவிற்கு.

சின்ன சின்ன சீண்டல்கள் செல்ல சண்டைகள் என நேரம் நகர இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

“ஒரு டீஷர்ட் எடு ஆரா!” என்றவன் குளியலறை நகர, அவன் உடைகள் இருக்கும் கப்போர்டை திறந்தவள் விழிகள் பெரிதாய் விரிய, பார்த்ததும் தெரிந்து கொண்டவள் அதை கையில் வைத்து பார்த்தபடி நிற்கும் பொழுதே வந்து சேர்ந்தான் அவனும்.

“ஆராக்கு இன்னும் மயக்கம் தெளியலையா? என்னோட ட்ரெஸ் எல்லாம் எங்க இருக்குன்னு தெரியலை போலயே!” என குறும்பாய் சிரித்தவன் அவனே வந்து எடுத்து அணிந்து கொண்டவன் அவள் கையில் இருக்கும் அவன் உடையை வாங்கி தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டு படுத்துவிட்டான்.

“ராம்! என்னை அழ வைக்குறீங்க!” ஆராத்யா கண் கலங்கி சொல்ல,

“என்னவாம்?” என்று புருவம் உயர்த்தி கேட்டவன் எழுந்து அமர்ந்து,

“இதை இன்னைக்கு தான் பார்க்குறியா?” என்றதும் ஆம் என தலையசைத்தாள்.

“அன்னைக்கு நான் இதை விட துடிச்சுட்டேன் ஆரா! நீ என் பக்கம் வந்து நிக்குறன்னு ஒரு பீஸ்ஃபுல்லான ப்ளேசன்ட் மைண்ட்க்கு நான் போக இருந்தேன். ஆனா நீ அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு பயந்து கையை கீறி காயமாக்கி மயங்கி வச்சுட்ட.” என்றான் அந்த சட்டையைப் பார்த்தபடி.

“அதுக்காக ரத்தக்கரையோட வச்சுருப்பிங்களா? அதுவும் அந்த ட்ரெஸ்க்கு மட்டும் தனி இடம்!”

“நான் ட்ரை பண்ணினேனே! உன்னை மாதிரியே அதுக்கும் என்னை விட்டு போக இஷ்டம் இல்லையாம். நான் என்ன பண்ண? அதான் அப்பப்ப நீ என்னை வேண்டாம்னு சொல்லும் போதெல்லாம் இதை இப்படி இறுக்கிப் புடிச்சுப்பேன்!” என சொன்னது போல செய்தும் காட்ட, ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

“சரி நீ இன்னும் எதுக்காக அன்னைக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்னன்னு சொல்லவே இல்லையே?” கள்ளப் புன்னகையோடு கேட்டவன் கேள்வியில் ஆராவின் கண்ணீர் நின்றுவிட, கரைந்த கண்ணீரோடு அவன் தோளில் அடித்தவள் அவன் மேல் வாகாய் சாய்ந்து கொண்டாள்.

“இந்த ட்ரெஸ் வேண்டாம். கரை இருக்கு!” ஆராத்யா மீண்டும் சட்டையை பார்த்து சொல்ல,

“உனக்கு தான் அது கரை. எனக்கு என் காதல்!” என்றவன் மீண்டும் சென்று எடுத்த இடத்தில் வைத்துவிட்டு முதல் போல அணைத்து, பின் அவள் மடியில் சாய்ந்து,

“சில விஷயங்கள் எல்லாம் எமோஷனல் தாண்டியது. மாத்திட முடியாது. ம்ம் இப்ப சொல்லு கேட்போம்!” என்றான் மீண்டும்.

ஏற்கனவே அவன் சொல்லியது தான். உனக்கு எப்பொழுதும் என்னை பிடித்தது என்று நான் தெரிந்து கொள்ள ஒரு நேரம் வரும் என்று கூறி இருந்தவன், அதை கேட்கும் பொழுதெல்லாம் அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொள்ள, அவள் காதலோடு அவள் பேசும் அழகையும் ரசித்து கேட்டவன் ஒரு நாள் இரு நாள் என்று நில்லாமல் இரவில் தினமும் அதை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.

அவளும் சலிக்காமல் காதலை சொல்லி கவனம் ஈர்த்து என ரகுவை காந்தமாய் கட்டி இழுத்தாள்.
 
Top