• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 54 final

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
670
505
93
Chennai
இறுதி அத்தியாயம் 54

“கண்டிப்பா போனுமா?” ஆரா பாவமாய் கேட்க,

“கண்டிப்பா போனும்!” என்றான் ரகுவும் தலைவாரியபடி.

“ம்ம்ம் நான் வர்ல ராம். ப்ளீஸ் அத்தைக்கு ஹெல்ப்பா இருக்கேனே. கல்பனா அண்ணிக்கும் முடியல. நான் தானே பாத்துக்கணும்!” என்றாள் சிணுங்கலாய்.

“நோ வே ஆரா! ஒரு மாசம் வீட்டுல ரெஸ்ட் எடுத்தாச்சு தானே! இன்னைக்கு கண்டிப்பா ஆபீஸ் வர்ற! ஒரு வாரத்துலயே கூட்டிட்டு போனும் நினச்சேன். தர்ஷும் அம்மாவும் தான் பாவம் பாவம்னு உன்னை விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இனி நோ எக்ஸ்க்யூஸஸ்!” என்றான் உறுதியாய்.

“ராம்!” என அப்போதும் அவள் தயங்க,

“ஆரா!” என்றவன் அழைப்பு கண்டனமாய் வர,

“வர்றேன்!” என்றாள் முகம் தூக்கி.

“ப்ச்! என்ன ஆரா! ஆபீஸ் வர்றதுல என்ன பிராப்லம் உனக்கு? உன்னை என் சீட்ல வைக்கணும்னு தான் எனக்கும் ஆசை. ஆனா நீ உன் பிரண்ட்ஸ் கூட தான் இருப்பேன்னு சொன்ன அதுக்கும் ஓகே சொல்லிட்டேன். வேற என்ன?” என்று அவளருகில் அமர்ந்து கேட்க, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் வாகாய்.

“இங்க பாரு! முன்னாடி மாதிரி அப்படி பேசுவாங்க இப்படி பேசுவாங்கனு எதுவும் நினைச்சுட்டு இருந்தா இப்பவே சொல்லிடு. உன்னை தனியா இருக்க விட நான் தயாரா இல்ல ஆரா. அன்னைக்கு மாதிரி எங்க வேணா போனு சொல்ல மாட்டேன். ஆனா நீ போனாலும் பின்னாடியே தேடி வந்து அன்னைக்கு குடுத்ததை விட டபுள் ட்ரிபுளா குடுப்பேன்!” தன் மேல் சாந்திருந்தவள் முகம் பார்த்து குனிந்து தீவிரமாய் அவன் சொல்ல,

“அதுக்கு ஏன் தனித் தனியா போய்ட்டு? ஒன்னா ஹனிமூன் கூட்டிட்டு போலாம்ல?” என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கண் சிமிட்டி கேட்டவள் கேள்வியில் புன்னகைத்தவன்,

“கேடி! கிளம்பின அப்புறம் என்ன டி லுக் இது!” என்று அவள் கன்னம் பிடித்து கிள்ளியவன்,

“ஹனிமூன் தானே? போலாம். இந்த ப்ராஜெக்ட் சக்ஸஸ் பார்ட்டி முடிச்சுட்டு நிச்சயமா போலாம். அதுவரை என்னோட வா ஆரா. டெய்லி கூடவே இருந்துட்டு அங்க தனியா இருக்க முடில டி!” என்றான் கொஞ்சலாய்.

“சரியா போச்சு! இவ்வளவு நாள் வீட்ல பண்ணினது பத்தாதுன்னு ஆபீஸ்க்கு கூப்பிடுறீங்க சேட்டை தானே!” என்றவள் முறைக்க,

“இதெல்லாம் கிடைக்கும் போதே என்ஜோய் பண்ணனும் ஆரா! நீ என் மூடை மாத்தாத. கிளம்பு போலாம்.” என்றான் முத்தம் பதித்து.

“கல்யாணத்துக்கு என் பிரண்ட்ஸ் வந்தாங்க. விஷால் சார் வந்தாங்க. ஆனா இன்னும் சிலர் வர்ல. தெரியுமா உங்களுக்கு?”

“தெரியுமே! ஆபீஸ் எம்டி கூப்பிட்டும் என்னோட மேரேஜ்க்கு வரலைனா அவங்களுக்கு இந்த ஆரா பொண்ணு மேல எவ்வளவு வன்மம் இருக்கனும்?” என்றான் முகத்தில் கடுமை ஏற.

“அது அப்படி இல்ல?” என்றாள் அவனில் இருந்து பிரிந்து.

“ப்ச்! இப்ப நீ ஏன் எழுந்துக்குற?” என மீண்டும் அவளை தன் மேல் சாய்த்தவன்,

“அப்படி இல்லைனா எப்படி? என்ன வேணா இருக்கட்டும். அவங்க வந்திருக்கணும் தானே? பேசிக் சென்ஸ் போதும் இதுக்கு. ஆனா வர்ல இல்ல?” என்றான் மீண்டுமாய்.

“ம்ம்!” என்றவள் அமைதியாக,

“அவங்களை எல்லாம் நான் பாத்துக்குறேன். முன்னாடி பேசினாங்கன்னா அப்ப நான் கான்சியஸ்ல இல்ல. இப்பவும் அப்படி தான்னு நினைக்குறியா?” என்றவன் இதழ்களை ஆராத்யா கைகொண்டு மூடிட,

“என்ன பேசறீங்க நீங்க! நான் கிளம்பி தான் இருக்கேன். வாங்க போகலாம்” என்றாள் கோபமாய்.

“சில விஷயங்கள் உனக்கு புரியல ஆரா! புரியலைனா எப்படி சொல்றது? இன்னும் வளராத குழந்தையா யோசிக்குற நீ. இதுவும் அதுல ஒன்னு. ஸ்ருதி, அஜய், அவங்க ஹஸ்பண்ட் எல்லாம் உனக்கு வீடியோ கால் பண்ணி விஷ் பண்ணினாங்க தானே? இந்த மாதிரி பொசிடிவ்ஸ் மட்டும் உன்னோட எப்பவும் எடுத்துக்கோ..” என்றவன்

“ஆரா எங்க இருந்தாலும் நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பேன். என் கண்ணுக்குள்ளேயும் கண் பார்வையிலேயும் தான் எப்பவும் ஆரா இருப்பா. வேற எதையும் மைண்ட் பண்ணாத. உன் ராம் அங்க இருக்கேன். உனக்கு அங்கே அன்கம்ஃபோர்ட்டா பீல் ஆச்சுன்னா நீ என்ன பண்ணனும்?” என்று கைகளை மாலையாய் கோர்த்து அவளோடு ஒட்டி அவன் கேட்க,

“அதான் சொல்லிட்டீங்களே ராம் அங்கே இருக்கேன்னு. உங்ககிட்ட தான் சொல்லணும். போதுமா?” என்று உதடு சுழிக்க,

“நீ கோபப்பட்டாலும் பரவால்லனு உன்னை இந்த விஷயத்துல மட்டும் நான் மாத்திக்க சொல்லுவேன். எதையும் யாரையும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டாம் ஆரா. சில விஷயங்கள் விட்டு குடுக்கலாம். தப்பில்ல! சில விஷயங்கள் அப்படி இல்ல. போனா கிடைக்காது. வாழ்க்கையே தொலைஞ்சுடும்!” என்றான் தீவிர பாவனையுடன்.

“புரிஞ்சிகிட்டேன். அப்படி எல்லாம் தொலைச்சுடமாட்டேன். போதுமா! ஹப்பா! அப்பப்ப லெச்சர் எடுக்குறீங்க. வாங்க போலாம்!”

“லெச்சர் எடுத்தாலும் பேபிக்கு அப்பப்ப இங்க ஒன்னும் இல்லாம போயிடுதே!” என்றவன்,

“சொல்லி குடுக்கும் போது கேட்டுக்கணும் அழகியே!” என்றவனின் உதடுகள் அவள் இதழ்களுடன் விளையாட, கிளம்பி கீழே வரவே பல நிமிடங்கள் எடுத்தது.

“ஹரிஷ்க்கு மேரேஜ் முடிஞ்சிடுச்சு ம்மா.. ஏதோ அவசரமா முடிஞ்சிட்டதா சொன்னான். இன்னைக்கு ஈவ்னிங் நானும் ஆராவும் அவன் வீட்டுக்கு போய்ட்டு வர்றோம். டின்னர் முடிச்சிடுவோம்.” என்று அன்னையிடம் ரகு சொல்ல,

“நான் கேட்டேன்னு சொல்லு ரகு. ஒரு நாள் வீட்டுக்கு விருந்துக்கு வர சொல்லு!” என்றார் மகேஸ்வரி.

“அந்த இன்ஸ்பெக்டர் ஹரிஷ்ஷா நார்? உன் மேரேஜ்க்கு கூட வந்தார் தானே? அப்படி என்ன அவசரம்?” என்றாள் கல்பனா.

“ஆமா அண்ணி! என்னனு தெரியல. மேரேஜ் முடிஞ்சிட்டுன்னு என்னோட இன்னொரு பிரண்ட் தான் சொன்னான். அப்புறம் ஹரிக்கு கால் பண்ணி பேசினேன். வீட்டுக்கு வர சொன்னான். போனா தான் தெரியும்.” என்ற ரகு,

“போலாமா ஆரா?” என்று கேட்க,

“அந்த பொண்ணை இருக்க விடாம கூட்டிட்டு போறான் பாரு. ஏன் டா அவளை படுத்துற?”

“ஆரா உனக்கு போர் அடிச்சா வீட்டுக்கு வந்துடு.”

மகேஸ்வரியும் கல்பனாவும் சொல்ல, “ம்மா! அண்ணி! நீங்க தான் அவளை பாப்பா மாதிரி பார்த்து பார்த்து பேசி கெடுத்து வைக்குறிங்க! அவ என்னோடவே இருக்கட்டும்!” என்று சொல்லி, முறைத்து நின்றவளை இழுக்காத குறையாய் கூட்டி சென்றான்.

வெளியே வந்தவன் பைக்கில் ஏறி அமர அதிர்ந்தவள்,

“ராம்! கார் எடுங்க!” என்றாள். பைக்கை நினைத்தாலே கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும் பழைய நினைவில் ஆராத்யாவிற்கு.

“நோ ஆரா! நாம பைக்ல தான் போறோம். நீயும் நானும். எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?” என்று கண்கள் மின்ன புன்னகைத்தவன்,

“கம் கம் சிட்!” என்று பின்னால் காட்ட,

“ராம் ராம்! ப்ளீஸ் ராம்! எனக்கு பயமா இருக்கு. எப்பவும் கார்ல தானே ஆபீஸ் போவீங்க. இன்னைக்கு என்ன?” என்று அவள் கெஞ்ச,

“இன்னும் பயமா உனக்கு? உன்னோட...” என்று முறைத்தவன்,

“இதெல்லம் பீலிங்ஸ். வந்து உட்காரு. சும்மா பயந்துட்டு...” என்றவன் அவள் மறுக்க மறுக்க விடாது அழைத்து சென்றான் அவன் விருப்பப்படியே.

“வர வர ரொம்ப அடம் பண்றீங்க ராம்!” ஆராத்யா சொல்ல,

“ம்ம் ஆமா! என்னவோ உன்கிட்ட அடம் பண்றதுல ஒரு கிக். அதுவும் அதுல தோத்து போனா இன்னும் செம்ம கிக்!” என்றவன் முதுகில் இரண்டு கொடுத்தவள்,

“உங்களை எவ்ளோ கெத்தா பேசிட்டு இருக்காங்க தெரியுமா ஆபீஸ்ல? நீங்க என்கிட்ட இப்படி பண்றீங்க!” என்றவள் குறை போல கூறினாலும் அதில் பெருமையே கலந்தோடியது.

“அது தான் ராம் சார்க்கும் ராம்ன்ற கணவனுக்கும் உள்ள டிஃப்பெரன்ட்!” என அவள் என்ன பேசினாலும் எளிதாய் அவளை தன் வசம் இழுத்துக் கொண்டான்.

“குட் மார்னிங் சார்!” என்று ரகுவிற்கு வணக்கம் வைத்து,

“மணமகளே மணமகளே வா வா..” என்று பாட்டு பாடி கார்த்திகா அலுவலகத்தின் உள்ளே வரவேற்க,

“ஷ்ஷ்!” என்று ஆராத்யா வாயில் விரல் வைத்து திரும்ப, புன்னகையோடு ரகு அவன் அறைக்கு சென்றான்.

இன்னும் அதிகம் பேர் வந்திருக்கவில்லை. சிலர் மட்டுமே இருக்க,

“கார்த்தி! அடி வாங்காத!” என்ற ஆராத்யாவிற்கு,

“சரிங்க மேடம். நீங்க சொன்னா சரி தான். சொல்லுங்க மேடம்!” என்று கார்த்திகா கிண்டலை தொடர,

“கார்த்தி!” என்று சிணுங்கியவள் அருகே,

“ஹேய் முதலாளியம்மா!” என்று வந்து நின்றான் பிரேம்.

“அச்சோ ஆமால்ல! முதலாளியம்மா என்ன இந்த பக்கம். சார் அவரோட ரூமை உங்களுக்கு ஷேர் பண்ணலையா?” என்று கார்த்திகா தொடர,

“அச்சோ!” என்று கை கொண்டு முகம் மறைத்த ஆராத்யாவிற்கு முகமெங்கும் சிவந்துவிட்டது அவர்களின் பேச்சு கொடுத்த நாணத்தில்.

“பொண்ணு இனி அவ்வளவு தான். இனி ஆபீஸ் பக்கம் எல்லாம் எட்டி பார்க்காதுன்னு நினச்சேன். என்ன டி இந்த பக்கம்?” என்று கார்த்திகா கேட்க,

“இவ எங்க வரேன்னு சொல்ல. சார் தான் புடிச்சு இழுத்துட்டு வந்திருப்பார்!” என்றான் பிரேம்.

“அதெப்படி பிரேம் பார்த்த மாதிரியே சொல்ற?” ஆராத்யா ஆச்சர்யமாய் கேட்க,

“ஓஹ்! அப்ப அதான் உண்மையா?” எப்படி போட்டு வாங்குனேன் பார்த்தியா?” என்ற பிரேம் கார்த்திகாவோடு ஹைஃபை அடித்துக் கொள்ள, இருவரையும் சிரித்தபடி ஆராத்யா அடிக்க என அறையில் இருந்து மனைவியை பார்த்த ரகுவும் அவள் மகிழ்வில் இணைந்திருந்தான்.

ஆராத்யா இன்று மீண்டும் அலுவலகத்தில் இணைந்திருக்க, அறிவிப்பாய் அனைவரின் முன்பும் ஒரு தகவல் கொடுத்தான் ரகு.

“ஆராத்யா எப்பவும் மாதிரி அவங்க பொசிஷன்ல தான் இருக்கனும்னு வந்திருக்காங்க. ஹோப் யூ ஆல் அண்டர்ஸ்டாண்ட்!” என்று சொல்ல, ஆராத்யாவோடு மற்றவர்களுக்கும் அதற்கான அர்த்தம் நன்றாய் புரிந்தது.

மாலை ஆராத்யாவை காக்க வைக்காமல் சீக்கிரமே வந்து ரகு அழைக்க, அவனோடு வண்டியில் நண்பர்கள் முன் என மீண்டும் ஒருமுறை முகம் சிவந்து நண்பர்களின் கிண்டலில் சிணுங்கி என அந்த நாள் முழுதும் அவள் புன்னகை வாசம் தான்.

“ஆரா ஹாப்பி?” ரகு கேட்க,

“ரொம்ப!” என்றாள் அவன் இடையோடு கைசேர்த்து.

“வாவ்! இனி டெய்லியுமே பைக்ல வரலாம் போலயே!” என்றான் உற்சாகமாய்.

“ராம்!” என்றவள் செல்ல குரலில் அவனின் சீண்டல்களோடு இரண்டு வருட காதலின் தேடல் எல்லாம் தித்தித்து மனம் குளிர்வித்தது.

சுபம்.
 
  • Love
Reactions: prikar and sivaguru