• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 7

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அத்தியாயம் 7

"ம்மா! கிளம்புறேன்!" என்ற ரகு அவசரமாய் இறங்கி வந்தான் மாடிப் படிகளில்.

"இன்னும் சாப்பிடலையே டா.. ரெண்டு இட்லி மட்டும் சாப்பிட்டு கிளம்பு!" மகேஸ்வரி எடுத்து வைக்க,

"வேண்டாம் ம்மா.. ஆல்ரெடி லேட்!" என்றவன் ஷூ லேஸ் மாட்ட,

"டைம்க்கு கரெக்ட்டா கிளம்புவியே! இன்னைக்கு என்ன ஆச்சு லேட்?" என்றார் அன்னை.

"நைட் கொஞ்சம் ஒர்க் பார்த்துட்டு லேட்டா தூங்கினேன்.. மார்னிங் லேட் ஆகிடுச்சு.. நான் அங்க போய் பார்த்துக்குறேன் மா.. தர்ஷி சாப்பிட்டாச்சா?" என்று கேட்க,

"அவ சாப்பிட்டாச்சு.. காலையிலே உன் மாமா கால் பண்ணி வாக் போக சொல்ல இவ மாட்டேன்னு சொல்ல, இப்ப தான் அகி கிளம்பவும் கல்பனா தோட்டத்து பக்கமா கூட்டிட்டு போயிருக்கா நடக்க சொல்லி!" என்றார்.

"இவளுக்கு மாமா கூட இருந்தா தான் சரி.. மதியம் சாப்பிடற டைம் வந்துடுறதா மாமா என்கிட்ட சொன்னாங்க.. பார்த்துக்கோங்க.." என்றவன் கைகடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு,

"ஓஹ் காட்!" என்றவன்,

"சரி பை மா!" என்று கூறி வேகமாய் வெளியே வந்து ஆராத்யா வண்டி இருக்கிறதா எனப் பார்க்க, வாசலில் அவளே நின்றிருக்கவும், சட்டென தன் நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டவன்,

"தர்ஷி!" என்று அதட்டலாகவே அழைக்க, ஆராத்யாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் தர்ஷினி, கல்பனாவோடு அவளுமே திரும்பி இருந்தாள் ரகுவின் புறம்.

"ஏன் டா கத்துற! இங்க தானே நிக்குறேன்!" என்றாள் தர்ஷினியும்.

"வாக் பண்ண சொன்னா என்ன பண்ற நீ? சொல்லிட்டே இருப்பாங்களா உனக்கு? நீங்க சொல்ல மாட்டிங்களா அண்ணி?" என்று அப்போதும் கோபமாய் கேட்க,

"சாரி சார்! அவங்க நடந்துட்டு தான் இருந்தாங்க.. நான் தான் அவங்களை பார்த்ததும் நின்னு பேசினேன்.." என்று ஆராத்யா சொல்ல, அமைதியாய் நின்றான் அவன்.

"தர்ஷி நடந்துட்டு தான் இருந்தா ரகு.. இப்ப தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா பேச வந்தா.." கல்பனாவும் சொல்ல,

"சரி நான் கிளம்புறேன்.. பை!" என்று பொதுவாய் சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ஆராத்யா.

கோபத்தோடு வேகமாயும் தர்ஷினி ரகுவின் புறம் வர,

"ஹே ஹே! மெதுவா தர்ஷி!" என்று ரகு பதற,

கல்பனாவும், "தர்ஷி! என்ன இது?" என்று அவளை கைப்பிடிக்கவும்,

"நீ எல்லாம் காலத்துக்கும் தனியா தான் டா இருக்க போற!" என்கவும் ரகு அவளை முறைத்தான்.

"அந்த பொண்ணு என்ன நினைச்சிருக்கும்.. உன் உருட்டல் மிரட்டல் எல்லாம் ஆபீஸ்ஸோட வச்சுக்கோ.." என்று சொல்ல,

"ப்ச்! உன்னை யாரு காலைல எந்திச்சதும் போய் அங்க பேச சொன்னது.. ஒருவாட்டி சொன்னா புரியாதா உனக்கு? அந்த கோபத்துல தான் பேசிட்டேன்!" என்றான் ரகுவும்.

இவர்கள் பேச்சுக்கு இடையே கல்பனா என்ற ஒருத்தி இருப்பதையே மறந்திருக்க, இவர்கள் பேச்சு சுத்தமாய் புரியவில்லை அவளுக்கு.

"நான் ஒன்னும் வேணும்னு போகல.. தற்செயலா பார்த்தோம் பேசினோம்.. பெரிய இவனாட்டம் கத்துற.. இப்ப அவ கில்ட் ஆகி போறா! ம்ம்ம்ஹும் நீ சாமியார் தான்.. என் புருஷன்கிட்ட சொல்லி நானே காவி வாங்கி தரலைனா பாரு!" என்று கூற, தவறு செய்துவிட்டோமோ என விழித்தவன், பின் தான் நேரமாவதையும் அவள் முன்னே சென்றதையும் உணர்ந்து,

"டைம் ஆச்சு! நான் கிளம்புறேன்!" என்றுவிட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

"ஆமா! இப்ப நீங்க ரெண்டு பேரும் தமிழ் தானே பேசினீங்க?" கல்பனா கேட்க,

"அண்ணி!" என்ற தர்ஷினி அவள் கேட்ட விதத்தில் சிரித்துவிட்டாள். பின்பு ஆராத்யா ரகுவிடம் வேலை பார்ப்பதாக சொல்ல,

"ஓஹ்! ஆனா கல்யாணம் பத்தி எல்லாம் பேசினியே!" என்றாள் அப்போதும் குழப்பமாய் கல்பனா.

"ஆஹா! உங்களுக்கு இப்ப சொன்னா புரியாது.. அப்புறமா சொல்றேன்!" என்ற தர்ஷினி,

"அவர் வந்து எவ்வளவு நேரம் நடந்தேன்னு கேட்பாரு.. ஒன்றரை மணி நேரம்னு சொல்லணும் ஓகே!" என்று கல்பனாவிற்கு வகுப்பெடுத்துக் கொண்டே உள்ளே செல்ல, அந்த பேச்சில் கல்பனாவும் இதை மறந்துவிட்டாள்.

ஆராத்யா அலுவலகத்தின் உள்ளே வண்டியை நிறுத்திய நேரம் சரியாய் ரகுவும் உள்ளே வந்திருக்க, ஆராத்யா திரும்பி பார்த்தவள் பின் தன் கைப்பயை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ரகுவிற்கு அது சாதாரணமாய் தெரிந்தாலும் தர்ஷியிடம் கோபம் கொண்டதை இவள் வேறு விதமாய் புரிந்திருக்க கூடாதே என்ற பயமும் இருக்க, அவனும் சென்றான் லிப்ட் நோக்கி உடனே!

அவன் நினைத்தது போல தான் ஆராத்யா நினைவும் இருந்தது.

"ஏன் என்கிட்ட அவங்க சிஸ்டர் பேச கூடாதாமா? நாங்க என்ன தீண்டத்தகாதவங்களா? அவ்ளோ கோவமா பேசுறாரு.. இதுக்கு தான் அப்பாடக்கர்ங்க பக்கம் எல்லாம் சீண்டுறதே இல்ல.. ச்ச! எப்பவும் போல இருந்துக்கணும்.. யாரா இருந்தாலும் அடுத்தவங்க தான் அவங்க நமக்கு.." என்று அத்தனை புலம்பல் வண்டியில் தனியாய் தனக்கு தானே ஆராத்யாவிற்கு.

"அப்படி என்ன அவங்களுக்கு கீழ போய்ட்டோம்? ஏதோ அவங்க சிஸ்டர் நல்லா பேசவும் நானும் கேசுவலா பேசினேன்.. என்னை சொல்லணும்! தீபாவளிக்கு அவங்க பேமிலியை அப்படி பார்த்ததுனால தானே தர்ஷினியை தெரியும்? ஒரு க்ரேஸ் தான்.. மொத்த குடும்பமும் பார்த்து கொஞ்சம் மனசு ஏங்கிடுச்சு.. இனி அந்த வீட்டு பக்கம் திரும்புவ?" என்று நினைத்து லிப்ட்டில் ஏறி நின்றவளுக்கு என்னவோ கண்ணீர் வரும் போல இருந்தது.

எளிதில் இவ்வளவு உணர்ச்சி வசப்படுபவள் இல்லை ஆராத்யா. ரகு எப்பொழுதும் அலுவலகத்தில் காட்டும் முகம் தான் அது என்றாலும் அவன் வீட்டு வாசலில் நின்ற போது, என்னவோ தன்னை குறைவாய் அவன் நினைத்துவிட்டானோ என்று ஒரு ஆதங்கம்.

இப்படி யாரும் நினைக்கும் இடத்தில் தான் இருக்க கூடாது என்பதில் அத்தனை வைராக்கியம் உண்டு ஆராத்யாவிற்கு.

தான் கடந்து வந்த பாதைகளே அதற்கு உதாரணமாய் இருக்க, இனி இப்படி நடந்து கொள்ள கூடாது என்று நினைத்து நின்ற நேரம் அவளை தொடர்ந்து ரகு லிப்ட்டினுள் வர கண்டவள் குனிந்து கொண்டாள் இமை அருகே வந்த கண்ணீரை கண்ணில் கொண்டு.

உள்ளே வந்து பட்டனை அழுத்தியவன் அவள் புறமாய் திரும்ப, உன்னை பார்க்கவே மாட்டேன் என்பதை போல நின்றவளைப் பார்த்து சிறு ஏமாற்றம்.

காலை வணக்கம் என்ற அவள் குரல் கேட்கவில்லை கூடவே அவள் விழிகளும் அவனை நோக்கவில்லை.

நான்காம் தளம் வரவும் ரகு செல்வான் என ஆராத்யா நிற்க, அவன் அசையாமல் நிற்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் பளபளத்த கண்களை கண்டு கொண்டான் ரகு இரு நொடிகளில்.

அவன் செல்லவில்லை என்றதும் ஆரா வெளியேற, "ஒரு நிமிஷம்!" என்று அழைத்துவிட்டான் அதற்கு மேலும் யோசிக்க நேரம் எடுக்காமல்.

நின்றவள் திரும்பி அவனைப் பார்க்க, லிப்ட்டினுள் இருந்து வெளி வந்தவன்,

"ஆரா! தப்பா எடுத்துட்டிங்க நினைக்குறேன்.. தர்ஷி நடக்கனும்னு டாக்டர் சொல்லி இருகாங்க.. ஆனா அவ ஹஸ்பண்ட் இல்லைனா ஏமாத்திடுவா எல்லாரையும்.. சோ நான் தர்ஷிகிட்ட அப்படி நடந்துகிட்டது அதனால தான்.." என்று சொல்ல, விழிவிரித்து பார்த்து நின்றாள் ஆராத்யா அவனை.

'இவ்வளவு விளக்கம் அதுவும் ராம் சார் வாயால்?' என்று தான் தோன்றியது ஆராத்யாவிற்கு. அந்த சிந்தனையில் அவனின் ஆரா என்ற அழைப்பு எல்லாம் அவள் புத்திக்கு எட்டவே இல்லை.

இப்பொழுது அழுகை கண்ணீர் எல்லாம் வரவில்லை என்றாலும் வந்திருந்த கண்ணீர் எல்லாம் கண்ணின் ஓரம் மொத்தமாய் திரண்டு நின்றிருக்க வருத்தமாய் போனது ரகுவிற்கு.

அதை அவளிடம் காட்ட முடியவில்லை என்னும் இயலாமையில் இன்னும் வெந்து நின்றவன், முதலில் அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை போல இன்னும் விளக்கம் கொடுக்க தயாராய் நின்றான்.

"இட்ஸ் ஓகே சார்!" என்றாள் மெல்ல.

"புரியுது தானே?" என்றான் மீண்டும்.

அதில் அவள் விழி சுருக்கி அவனை கேள்வியாய் பார்த்தாள். இத்தனை முறை கேட்பவன் அல்லவே அவன் என்ற கேள்வி அதில் தெரிய, சுதாரித்தவன்,

"இல்ல தர்ஷி தான் பீல் பண்ணினா.. அதனால தான்.. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்!" என்று கூறி அவள் முகம் பார்க்க,

"ஓஹ்! தர்ஷ்க்காகவா? அதானே பார்த்தேன்!" என்பதை அவள் முகம் வெளிப்படுத்த, அதில் தெளிவும் தெரிந்தபின் தான் நிம்மதியானது ரகுவிற்கு.

"இல்ல சார்! நோ ப்ரோப்லேம்.. ஐம் சூர்!" என்று கூற, சிறு புன்னகை கொடுத்தவன்,

"ஓகே! குட் மார்னிங்!" என்று கூறி நடக்க, தான் கூறவில்லை என்பதும் நடு மண்டையில் அப்போது தான் உரைத்தது.

"குட் மார்னிங் சார்!" என்றாள் அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து ஓடி சென்று.

அத்தனை அழுத்தமும் ரகு பேசி சென்ற பின் மொத்தமாய் சென்றுவிட, அன்றைய நாள் எளிதாய் கழிந்து வீடு வந்து சேர்ந்தாள் ஆராத்யா.

இரவு எட்டு மணி அளவில் மற்ற வேலைகளையும் முடித்துக் கொண்டு ரகு வீட்டிற்கு வந்த போது அங்கே தோட்டத்தின் விளக்கு வெளிச்சத்தோடு குரல் சத்தமுமாய் நந்தா, கல்பனா, தர்ஷினி, அகிலன் என அமர்ந்திருக்க கண்டு காரை அதனிடத்தில் நிறுத்திவிட்டு அவர்களிடம் வந்தான் ரகு.

பார்வை மொத்தமும் எதிர்வீட்டு மாடியில் ஊஞ்சலில் அஜயுடன் இருக்கும் ஆராத்யாவிடம் இருக்க, நடை மட்டும் தன் வீட்டாரை நோக்கி இருந்தது.

"என்ன ரகு இவ்வளவு நேரம்?" நந்தா கேட்க,

"அவருக்கு என்ன வேலையோ!" என்ற தங்கையை முறைத்தவன்,

"கொஞ்சம் ஒர்க் மாமா.. நீங்க எப்ப வந்திங்க?" என்றபடி அவனும் அமர்ந்தான்.

"நீ எப்ப டா வந்த?" என்று வந்த மகேஸ்வரி கைகளில் ஹாட் பாக்ஸ் இருக்க,

"நான் போய் பிளேட் எடுத்துட்டு வர்றேன் த்த!" என்று சென்றாள் கல்பனா.

"என்னம்மா இங்க?" என்றான் ரகு.

"மாமா தான் இங்கேயே சாப்பிடலாம் எல்லாருமா சேர்ந்துன்னு சொன்னாங்க.. உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்!" என்றான் அகிலன்.

"ஓஹ்! சரி சாப்பிட்டுட்டே இருங்க.. நான் இப்ப வந்திடுறேன்!" என்று ரகு எழுந்து கொள்ள,

"சீக்கிரம் வா ரகு.. உன் மாமா நீ வராம எங்களை சப்பாட்டுல கை வைக்க விடமாட்டார்!" என்றாள் தர்ஷினி.

"உனக்கு பசிச்சா நீ சாப்பிடு தர்ஷி!" நந்தா சொல்ல,

"ம்ம்ஹும் அவனும் வரட்டும்.. எல்லாரும் ஒன்னா சாப்பிட தானே வெயிட் பண்ணினோம்!" என்றாள் தர்ஷி.

அதில் சிரித்த ரகு, "டூ மினிட்ஸ்!" என்றவன் திரும்பும் முன் எதார்த்தமாய் மேலே பார்க்க, இன்னும் ஆராத்யா அங்கே தான். ஆனால் அவளிடம் அஜய் இல்லை. பார்வை முழுதாய் இங்கே மட்டுமே என்பதை காண முடிந்து ரகு கேள்வியாய் பார்க்க, அவனை பார்த்திருந்த தர்ஷினுயும் என்னவென்று அவன் பார்த்த பக்கமாய் பார்த்தவள்,

"ஹாய் ஆரா!" என்று அழைத்துவிட்டாள் சத்தமாய். திடுக்கிட்டு விழித்தாள் ஆராத்யா.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
அவளும் நோக்கினால் அவனும் நோக்கினான்....
அதை தர்ஷியும் நோக்கினாள் 🤩🤩🤩🤩
ஆரா வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அவளும் நோக்கினால் அவனும் நோக்கினான்....
அதை தர்ஷியும் நோக்கினாள் 🤩🤩🤩🤩
ஆரா வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்....
அவளும் நோக்கினால் அவனும் நோக்கினான்....
அதை தர்ஷியும் நோக்கினாள் 🤩🤩🤩🤩
ஆரா வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்....
அவ்வளவு சீக்கிரம் வந்திருவாளா என்ன😷😷