• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 1

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India
அத்தியாயம் 1

கோவை ரயில் நிலையம்! அந்த இரவு நேரத்திலும்கூட பயணிகளும் அவர்களை வழியனுப்பவந்த கூட்டமுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆர்வத்தோடு உள்ளே சென்றுகொண்டும் களைப்போடு வெளியேறிக் கொண்டும் சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டிருந்தனர். பயணிகளின் அன்பான கவனத்திற்கு... என்ற இனிமையான குரல் ஆங்காங்கே அமர்ந்து உறக்கத்தைத் தழுவ முயன்று கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.

ரயில்நிலைய வாயிலில் இருளைக் கிழித்துக்கொண்டு, வெள்ளை நிற வெர்னா ஒன்று வெண்ணெயாய் வழுக்கி நின்றது. அதிலிருந்து இறங்கிய இளைஞனுக்கு முப்பது வயதுக்குள் இருக்கும். சாக்லெட் நிற பேண்ட், வெளிர்மஞ்சள் சைனீஸ் காலர் டீ. சர்ட்டில் வசீகரமாகத் தோற்றமளித்தான். குனிந்து டிரைவரிடம் ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை நீட்டி, சின்னப் புன்னகையோடு தலையசைத்துவிட்டு, தன் பிரீப்கேசுடன் கம்பீர நடையுடன் உள்ளே விரைந்தான்.

அவன் செல்லவேண்டிய பிளாட்பாரத்தில் பச்சை விளக்கு ஒளிர, கிளம்ப ஆயத்தமாக இருந்த நீலகிரி எக்ஸ்பிரசில் தாவி ஏறினான். தன் இருக்கையை தேடி அடைவதற்குள் ஒலியெழுப்பியபடி ரயில் மெதுவாக அங்கிருந்த நகரத் தொடங்கியது.

கூபேயின் உள்ளே நுழைந்து, பிரீப் கேசை மேலே வைத்துவிட்டு, ஆசுவாசமாக கண்மூடித் திறந்ததும், எதிர் இருக்கையைப் பார்த்து திகைத்துப்போனான். கண்கள் பிரகாசிக்க, நம்பமுடியாத ஒன்றை நேரிலேயே கண்டதுபோல விழிவிரித்தான். சந்தோஷமின்னல் தெறிக்க விழியகலாது பார்த்துக்கொண்டேயிருந்தான்...! ஆம். 25 வயதிருக்கும் அவளுக்கு...! சௌகரியமாக கால்களை மடித்து, தன் கையில் இருந்த நாவலில் சுற்றுப்புறமே மறந்தவளாக அதிலேயே மூழ்கிப் போயிருந்தாள். தனது நீண்ட பின்னலை முன்புறம் போட்டு அதன் நுனியில் மெல்ல அளைந்து கொண்டிருந்தது, அவளது நகப் பூச்சணிந்த மெல்லிய விரல்கள்...

அவளது கடல் போன்ற விழிகளை அடர்த்தியான குடைவிரித்த இமைகள் வளைந்து பாதுகாத்துக் கொண்டிருந்தன. அவளை அவன் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

உள்ளுணர்வு உந்த, மெல்ல தலையை உயர்த்தியவளின் கண்களில் அவனைப் பார்த்ததும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே தோன்றி மறைந்த மின்னலை அவனும் கண்டு கொண்டான். மெல்ல முறுவலித்தவனைக் கண்டு முகம் சுளித்துவிட்டு மறுபடியும் தன் புத்தகத்தில் ஆழ்ந்துபோனாள் . அதை உணர்ந்துவனது முகம் பாறையாக இறுகியது.

ரயில் பயணத்தில், தான் அவளைப் பார்த்த செயலும் கண்ணியமானது அல்ல என்பதும் புரிந்தது. அவளிடம்,

‘ஐ யாம் சாரி’ என்றவனை ஏறிட்டுப்பார்த்ததோடு சரி. பதிலேதும் சொல்லாதவளாக மறுபடியும் தன் கையில் உள்ள புத்தகத்தில் மூழ்கிப் போனாள். அவளின் செய்கையில் தோளைக் குலுக்கியவன், தன் பிரீப் கேசில் இருந்த ஒரு பிசினஸ் மேகசினைக் கையில் எடுத்து படிக்கத் துவங்கினான்.

ஒரு மணிநேரம் அமைதியாக கழிய ஏதோ ஒன்று அவன் கவனத்தைக் கலைத்தது. அவள்தான் ...! முகம் சிவந்து பளபளக்க மூச்சு விடவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்து திகைத்தவன், தவிப்போடு வேகமாக எழுந்தான்.

ஹலோ... இங்க பாருங்க...? என்னாச்சு? ரொம்ப ரெஸ்ட்லசா இருக்கீங்க. என்ன பண்ணுது. எதாவது உதவி வேணுமா? தயங்காம கேளுங்க...? என்றவனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவளைறயும் பேச வைத்தது.

அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றவளாய்,

“ஒன்றுமில்லை... ஃபீவர் கொஞ்சம் அதிகமாக இருக்கு. ஏசி குளிரில் மூச்சு விட சிரமமா இருக்குது.

மேல் பரத்தில் மடித்து வைத்திருந்த பிளாங்கெட்டை விரித்து அவளிடம் நீட்டினான்.”

“தேங்க்யூ...” என்று புன்னகைத்த,அவளை தன் கூர் விழிகளால் அளந்தபடி,

“பை த வே.. ஐ யாம் அரவிந்தஃப்ரம் சென்னை. பிசினஸ் மேன். அப்பவோட பிசினஸ் எல்லாம் இப்ப நான் பார்த்துகிட்டு இருக்கேன்.

அவனின் பார்வையில், தயக்கம் மேலிட, தலை குனிந்தவள், “நான் டாக்டர் வாஸந்தி. சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். சென்னையில் புதுசா ஜாயின் பண்ண போயிட்டு இருக்கேன். பேச்சு அவ்வளவுதானா? என்பது போல புருவத்தை உயர்த்தியவனிடம் தடு மாற்றத்தோடு தன் சிவந்த விழிகளால் அரவிந்தை ஏறிட்ட வாஸந்தி,

“ ப்ளீஸ்.. நீங்க படிக்கலைன்னா லைட்டை ஆஃப் பண்ணிட்டு படுக்கலாமே. எனக்கு கொஞ்சம் அன் ஈசியா இருக்கு என்று சொன்னவளுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்தவன், லைட்டை அணைத்து விட்டு, தன் பர்த்தில் கால்களை நீட்டி ஜன்னலோரம் சாய்ந்து அமர்ந்து கொண்டான். உறக்கம் வர மறுத்தது.

கல்லூரி நாட்களின் பசுமையான நினைவுகள், தன் மனப் பெட்டகத்திலிருந்து மெல்ல கிளம்பி, மேலெழுந்து வந்தது. அதோடு, இன்று அவன் படித் கல்லூரியின் ஓசான் டே! பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கொண்டாடியிருந்தனர். ஐந்து வருடங்களுக்கு முன் எம்டெக் முடித்து, இப்போது சென்னையில் சிறந்த தொழிலதிபருக்கான விருதை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் முன்னேறிக் கொண்டிருப்பவன் அரவிந்த். தன் நண்பர்கள் அனைவரோடும் இன்று முழுவதும் பேசிக் களித்த நினைவில் அவன் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.

ஏறக்குறைய அவன் நண்பர்கள் அனைவருக்குமே திருமணம் ஆகியிருந்தது. அதிலும் அரவிந்தின் உயிர்த் தோழன் சுனில் - அவன் மனைவி காயத்ரி இவர்களின் குட்டி தேவதை - ஷர்மிதாவின் சந்திப்பில் இதயம் இனித்தது. சுட்டிப் பெண் ஆசையோடு, ஓடி வந்து ‘மாமா’ என்று இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டதும், அதன் பஞ்சுப் பொதி போன்ற ஸ்பரிசத்தின் இனிமையில் உருகிப் போனான்.

இந்த ஐந்து வருடங்களாய், தன் உயிர் நண்பனைக் கூட சந்திக்கவில்லை. ஆனாலும் இன்று அவனை பார்த்த போது, இந்த ஐந்து வருடங்களில் அவர்களுக்கிடையே இருந்த சுணக்கமும், மனக் கிலேசமும் அப்படியே பொடிப் பொடியாய் உதிர்ந்து போனது. இருவரும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்ட போது, மனதால் இருவருக்கும் இத்தனை வருடங்களாக பிரிந்த உணர்வே சற்றும் எழவில்லை.

தன் நண்பர்கள் அனைவருமே, மனைவி, குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகியிருந்தார்கள். அரவிந்ந் மட்டுமே வாழ்க்கையை தொலைத்து விட்டு, தொழிலே வாழ்க்கையாக, அதன் பின்னே நிற்காமல், ஓடிக்களைத்திருந்தான். இந்த சந்திப்பு, ஏதோ ஒரு விதத்தில் சோர்ந்திருந்த அவன் மனதிற்கும் உடலுக்கும் நிம்மதியையும், உற்சாகத்தையும் மீட்டுத் தந்திருந்தது.

சுனிலைப் போல அழகான கவிதை போன்ற ஒரு குடும்பம் அமைய தனக்கு கொடுப்பினை இல்லையே என்ற ஏக்கத்தில் மனம் வெதும்பியது. கண்களைத் திறந்தவனின், பார்வை எதிரில் எழிலோவியமாய் துயில் கொண்டிருந்த வாஸந்தியின் மீது படிந்தது. ஒரு மெல்லிய பெருமூச்சோடு முயன்று உறக்கத்தை தழுவினான்.

வெகு தொலைவிலிருந்து யாரோ அவன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் தேய்ந்து ஒலிக்க, சிரமப்பட்டு கண்களைத் திறந்தான். இரவு நண்பர்களின் வற்புறுத்தலை மீற முடியால் சிறிதளவு மது அருந்தியிருந்தான். இதுவே முதல் முறை என்பதால் தலை சுற்றியது. கண் விழிக்கவே முடியாமல் எரிச்சலாக இருந்தது. இதுவே கடைசி என்றும் நினைத்கொண்டே தான் ஒப்புக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அவனின் புத்திக்குள் உரைத்த தீனமான மெலிந்த குரல் அவனின் நினைவை மீட்டிருந்தது.

வாஸந்தியின், “அரவிந்த்” என்ற அழைப்பில் தூக்கமெல்லாம் பஞ்சாய் பறக்க, விரைந்து எழுந்து அவளருகில் வந்து,

“வாஸந்தி... என்ன பண்ணுது?”

மூச்சு விட திணறியவளால் பேசக் கூட முடியவில்லை. உடனடியாக அவளுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததும் தயங்கியது சில விநாடிகளே... அதன் பின் தேவையான முதலுதவியில் அவள் சுவாசம் சீரானதும், அவள் அருகில் அமர்ந்து, அவளின் தலையை தன் மடி மீது வைத்துக் கொண்டான்.

அவனின் உத்தரவுக்கு காத்திராமலேயே அவனின் ஆரோக்கியமான விரல்கள், அவன் கன்னத்தில் ஒட்டிக் கிடந்த கேசத்தை ஒதுக்கியது. அவளைப் பார்க்கப் பார்க்க முகம் மென்மையானது. கலைந்த ஓவியம் போல ஓய்ந்து போய் உணர்வின்றி தன் மடியில் கிடந்தவளை கண்டு மனம் பொங்கியது. அவளின் பட்டுக் கன்னங்களை மிருதுவாக வருடினான். இவள் தான் எத்தனை அழகு...! விழியகலாது அவளையே தான் பார்த்திருந்தான்.

அவனின் ஸ்பரிசத்தில் உடல் கூசிச் சிலிர்க்க, வாஸந்தி லேசாக அசைந்தாள். அரவிந்தைப் பார்த்ததும் மெல்லிய கீற்றாக அவள் இதழ்களில் புன்னகை! ‘தேங்க்ஸ்’ என்றதும் வெறுமே தலையசைத்தான்.

“இப்ப கொஞ்சம் பெட்டராக இருக்கு” என்றதற்கும் அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. அழகிய சித்திரமாய் தன் மடி மீது கிடந்தவனையே அவன் விழிகள் ஆர்வத்துடன் விழுங்கிக் கொண்டிருந்தன. மாசு மருவில்லாத குழந்தைத் தனமான முகத்தைப் பார்த்ததும், மலைத்துப் போனன்.

அவனின் பார்வை வாஸந்தியை சிலீரென்றுதாக்க, தான் இருக்கும் நிலை உணர்ந்து, தன் சோர்வையும் மீறி எழ முற்பட்டாள். அது முடியாமல், தடுமாறி அவன் சட்டையை கொத்தாகப் பற்றி, “அர்வி...” என பேச ஆரம்பித்ததுமே, அவளை பேச வேண்டாம் என்பது போல தலையசைத்ததோடு மட்டுமல்லாமல், அவள் இதழ்களை தன் விரல்களால் மெல்ல வருடி, தான் மாட்டாமல் அவன் நெற்றியில் இதழ் பதித்து, அவனை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவனின் செயலால் நிலை குலைந்து போன வாஸந்தி, அதிர்ச்சி, திகைப்பு, கோபம் என உணர்ச்சிக் குவியலாய், அவனிடமிருந்து விலக முயன்று திமிறினாள்.

கதகதப்பான நெற்றியில் அரவிந்தின் இதழ்கள் புதைந்த போது, ஏதேதோ உணர்வுகள் பொங்கியெழ, நிலை குலைந்து போனான். வாஸந்தியின் மென்மையான ஸ்பரிசம், பேரழகோடு, அவன் அருந்தியிருந்த மதுவின் போதையும் சேர்ந்து, அவன் இத்தனை வருடங்களாக காத்து வந்த ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் தகர்த்தெறிந்தது.

ரயிலின் மெல்லிய தாலாட்டு, ஏசியின் குளிர், தனிமை அனைத்தும் அவனின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டான்.

அழுகையோடு, ஆத்திரமும் சூழ வெறுப்போடு அவனை விலக்க முற்பட்டவனைப் பார்த்து, அரவிந்த்

“பளீஸ்..” என்றான்.. அவன் கைகள் நடுங்கியது. ஆவேசத்தோடு, விழுந்த வாஸந்தியின் அடிகள், பூப்பந்தாய் அவனைத் தாக்க, புன் சிரிப்போடு அவள் கைகளைப் பற்றிய அரவிந்த குனிந்து, அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். அவள் உடல் பலவீனம், அரவிந்தின் வலிமைக்கு முன் தோற்றுப் போக, எளிதாக அவளின் பெண்மையை தனதாக்கிக் கொண்டான். அவளின் அத்தனை முயற்சிகளும் எதிர்ப்புகளும் கண்ணீரும் பயனற்றுப் போனது.

சிறிது நேரம் கழித்தே அரவிந்துக்கு தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது. போதை முற்றிலுமாக தெளிய, தன்னையே நொந்து கொண்டான். முந்தானையால் தன் தோள்களை போர்த்தி மூடி முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்த வாஸந்தியின் கண்ணீர் நிற்கவேயில்லை. தன் இயலாமையை எண்ணி அழுகையில் அவள் உடல் குலுங்கியது. அவளை ஏறிட்டுப் பார்க்கவும் மனம் கூசியவனாய், தன் இரு கைகளாலும் நெற்றியை அழுத்திப் பிடித்து அமர்ந்திருந்தான். «அவளின் ஓய்ந்த தோற்றம் அரவிந்தின் குற்றவுணர்வை பன் மடங்காக்க, வெகு நேர மௌனத்திற்குப் பிறகு,

“வாஸந்தி...! சாரி... நான் உன் கிட்ட நடந்துகிட்டது. ரொம்ப கேவலமான செயல் தான்... ஆனா...

“ச்சீ.... என் கிட்ட பேசாதே..” சீற்றத்தோடு கண்ணகியாய் அடிக் குரலில் வெளிப்படுத்திய வெறுப்பு அவன் இதயத்தை கூறு போட்டது.

“வாஸந்தி... ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேள். உன்னை நான் பார்த்ததுமே என் மனசில...”

என்னை விட்டிருங்க. “கை கூட்டினாள். அவளின் செயலில் மேலும் கலங்கிப் போன அரவிந்த் அவளருகில் வந்து, அவள் கைபற்றி,

“வாஸந்தி... கொஞ்சம் என்னைப் பேச விடேன்...” அவன் கைகளை உதறியவள், “இங்க பாருங்க.. சார் இனிமே என் மேல உங்க விரல் பட்டா கூட நான் டிரெயினிலிருந்து குதிச்சிடுவேன். தயவுசெய்து இங்கேயிருந்து போயிடுங்க. என்ன விட்டிருங்க.

உடம்பு சரியில்லாம உதவிக்கு உங்களை கூப்பிட்ட பாவத்துக்கு என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா உங்களுக்கு..? உங்க கூடப் பிறந்தவளுக்கு இது மாதிரி யாராவது செஞ்சா அவனை என்ன பண்ணியிருப்பீங்க? ச்சே.. உங்க முகத்தில முழிக்கறது கூட பாவம். என் கண் முன்னாலயே வராதீங்க... கண்களில் நீர் வழிய கொதித்தவளைக் கண்டு, எதுவும் பேச வகையில்லாதவளாய் தன் சீட்டில் போய் அமர்ந்து கொண்டான்.

ஒரே இரவில் அவன் வாழ்க்கையே சூறாவளியானது. அவளை ஏறிட்டுப் பார்க்கவும் துணிவின்றி இருளையே வெறித்து அமர்ந்திருந்தான். இதே நிலை எத்தனை நேரம் நீடித்ததோ! வாஸந்தியின் முனகல் மறுபடி அவன் கவனத்தைக் கலைக்க, மீண்டும் அவனருகில் சென்ற போது, அவளுக்கு பாதி உணர்வு மங்கியிருந்தது. அரவிந்த் பதட்டமானாள்.

“ம்ம்... மா...” என்று அனத்திக் கொண்டே உடலை முறுக்கினாள். அவள் நெற்றியைத் தொட்டவனின் கை சூடு தாங்காமல் பின் வாங்கியது. சுற்று முற்றும் தேடி, அவள் ஹேண்ட் பேக்கை கையிலெடுத்து, பீவருக்கான டேப்லட்டை கண்டு பிடித்தான். அதில் ஒன்றை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்து, அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டான். காய்ச்சலில் அவள் முகம் சிவந்து பளபளத்தது. தன் உணர்வின்றி, ஓய்ந்து போய் கிடந்தவளை குற்றவுணர்வு மேலோங்க உறுத்து விழித்தவனின் கண்களில் ஈரம். தன்னிச்சையாக அவனின் கைகள் அவள் நெற்றியை வருடியது. அவளை தன் மார்போடு சேர்ந்தணைத்த போது, நெஞ்சம் கலங்கிப் போனது.

ஐந்து வருடங்களுக்கு முன் தன் தந்தை இறந்த போது சந்தித்த இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே இந்தளவு கலங்கியிருக்கிறான். அரவிந்த் இயல்பிலேயே திடமானவன். எத்தகைய சூழ்நிலையையும் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை அவனுக்கிருந்தது. நேர்மையாளனும் கூட. முதன் முறையாக இனி என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து விழித்தான். யோசித்து ஒரு திடமான ஒரு முடிவெடுக்கும் போது, அந்தக் கொடுமையான நீண்ட இரவு கழிந்து, இரயிலும் சென்னை சென்ட்ரலை வந்தடைந்திருந்தது. தாமதம் செய்யாமல், போர்ட்டரை அழைத்து இருவருடைய லக்கேஜையும் தூக்கிக் கொடுத்து விட்டு, அவளுடைய ஹேண்ட் பேகை மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். மறுகையால் அவள் இடையை சுற்றி வளைத்து, தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு, கைத்தாங்கலாக நடத்திச் சென்றான்.

“வாஸந்தி... இங்க பாருடா... சென்னை வந்தாச்சு. மெதுவாக நட.. நம் கார் வெளியே வந்திருக்கும். போகலாம் என்றவளின் குரலில் இருந்த திடமே, அவன் கம்பீரத்தை மீட்டெடுத்து ஏதோ ஒரு முடிவெடுத்து விட்டதை பறைசாற்றியது.

மறுத்து ஏதோ சொல்ல முயன்றவளை அவனின் கண்டிப்பு கலந்த ஒரே பார்வை அடக்கியது.​
தொடரும்...
 

S_Abirami

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 29, 2021
3
3
3
Dindigul
என்ன அரவிந்த் இப்படி பண்ணிட்டான். அதுவும் முதல் சந்திப்பிலே! ஆனால் அரவிந்த் ஒரு முடிவு எடுத்துட்டான் போல, பார்க்கலாம் என்ன நடக்குதுனு!
 
  • Like
Reactions: Admin 02