• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 13

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 13

இந்த மாதம் இருபதாம் தேதி வரை அரவிந்துக்கு எக்ஸாம் இருக்கிறது. அதன் பிறகு உடனே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை. அங்கோ தந்தையின் நிலைமை சரியில்லை என்று அவன் உள் மனது எச்சரித்துக் கொண்டேயிருந்தது... சூடான டீ யை அருந்தியபின் மூளை சுறுசுறுப்படைய அவனால் யோசித்து தெளிவான முடிவை எடுக்க முடிந்தது.

கணேஷ், “தம்பி... டீ மறுபடி பிளாஸ்கில் ஊத்தி வச்சிருக்கேன். போண்டா போட்டு டேபிள் மேல இருக்கு. எடுத்துக்கங்க.. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.

அரவிந்த், “சுனில். எனக்கு இன்னும் எந்த முடிவும் சரியா படலை. ஆனாலும் ஒரே ஒரு வழிதான் இருக்கு. நம்ம எக்ஸாம் முடிய ஒரு வாரம் இருக்கு. அது முடியற வரை எதுவும் பண்ண முடியாது. நடுவில அம்மாகிட்ட போய் பேச சான்சே இல்லை... அதனால...

எக்ஸாம் முடிந்து ஒரு வாரத்தில் நல்ல நாள் பார்த்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறோம். அது போதும். அதுவே ரொம்ப சேஃப் .அத்தை அப்புறம் உங்க ரெண்டு பேரோட பேரண்ட்ஸ் முன்னால இது நடக்கட்டும்... என் வீட்டில் மெதுவா தான் சொல்ல முடியும். தேவைப்பட்டா காவல் துறையில் புரொட்டக்ஷன் கேட்டுக்கலாம். நான் கிளம்பும் போது வசுவை என்கூட சென்னை கூட்டிட்டு போகறேன். சுனில் நீயும் வா... நீதான் அம்மாகிட்ட சொல்லணும்.

ஒரு நல்ல நாள் பார்த்து மேரேஜை கிராண்டா மண்டபம் பார்த்து அம்மாவே அரேஞ்ச் பண்ணிடுவாங்க. கணேஷ் அண்ணா கிட்ட விபரமா பேசணும். அவரையும் கூட்டிட்டு போகலாம். அத்தை கிட்ட சொல்லிடுங்க. இன்னிக்கே ரெஜிஸ்ராபீஸ் போய் பதிவு பண்ணிடலாம்.

மாலதி வழக்கமாக கோயிலுக்கு வரும் நேரம் பார்த்து காயூ அவரிடம் சென்று விபரம் தெரிவித்தாள். அரவிந்தின் தாய், தந்தை அறியாமலேயே அவனுக்கு திருமணம் நடப்பதில் அவருக்கும் துளியும் சம்மதமில்லை.

அரவிந்திடம் போனில் பேசினார்.“மாப்பிள்ளை உங்க அம்மாகிட்ட கூட சொல்ல முடியாதா? எனக்கு இது சரியா படலை. அவங்களுக்கு நீங்க ஒரே பையன்... பின்நாளில் இது தீராத வடுவா மனசில ஆழமா பதிஞ்சிடும். அப்பா எப்ப டிஸ்சார்ஜ் ஆகறாங்க...?”

“அவர் உடல்நிலை இப்ப நல்லாதான் இருக்கு அத்தை. ஆனா வீட்டுக்கு போனா ரெஸ்ட் எடுக்க மாட்டார்னு தான் டாக்டர் அங்கிள் விட மாட்டேங்கிறார். அம்மாவுக்கும் பிரஷர், ஷூகர் இரண்டுமே ஹையாக இருக்கு... அங்க இருந்தா ரெஸ்ட் எடுப்பாங்க. ஆனா இப்ப இது பத்தி பேசினா சரி வராது..

எங்க அம்மா, அப்பா வசுவை ஏத்துக்க மாட்டாங்க அப்படீங்கற கவலையே வேண்டாம். அவங்களுக்கும் வசுவை ரொம்ப பிடிக்கும்... அத்தை... ப்ளீஸ் நான் சொன்ன மாதிரியே செய்திடலாம். “பலவிதமாகப் பேசியபின் மாலதி அரைமனதாக சம்மதித்தார்...கோவிலில் இருந்த அர்ச்சகரே நாள் குறித்துக் கொடுத்தார். எக்ஸாம் முடிந்து மூன்றாம் நாள் அருமையான முகூர்த்தம். ‘அன்றே வைத்துக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்தனர்.

அரவிந்த் சுனிலிடம், “இரண்டு பேருக்கும் நானே டிரஸ் எடுத்திடறேன். ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ் மத்த எல்லா ஃபார்மாலிடீஸும் நான் பார்த்துக்கறேன்... வசு கிட்ட முதல் நாள் சொன்னா போதும். இல்லேன்னா அவ படற டென்ஷனே நம்மைக் காட்டிக் கொடுத்திடும். அன்னிக்கு அவங்க காலேஜ்ல கல்ச்சுரல்ஸ் இருக்கு. அதனால அதுக்கு கிளம்பற மாதிரி கிளம்பி காலேஜ் வந்திட சொல்லு. நாம சேர்ந்து போயிடலாம். உங்க ரெண்டு பேரோட பேரண்ட்சும். நேரா அங்கேயே வரட்டும். கணேஷ் அண்ணா நம்ம கூட வருவார். எக்ஸாம் முடியறவைர வசுகிட்ட பேச மாட்டேன். சொல்லிடு...” பதறாமல் அழகாக திட்டம் வகுத்தான். மாலதிக்கும் அரவிந்தின் கம்பீரமும்,தெளிவான சிந்தனையும், அறிவுக் கூர்மையும், சட்டென்று எந்த சூழ்நிலையிலும். முடிவெடுக்கும் சாதுர்யமும் பார்த்து பெருமையாக இருந்தது. வாஸ்ந்திக்கு பொருத்தமானவர் என்று மன நிறைவாக உணர்ந்தார்.

திருமணத்திற்கு முதல் நாள் அரவிந்த் வாஸந்தியை செல்போனில் அழைத்தான்.

“வசு...!குரல் குழைந்தது.

அவனின் குரலில் வாஸந்தி உயிர்த்தெழுந்தாள்.

“அர்வி...! எக்ஸாம் முடிஞ்சுதா...? எப்படி எழுதியிருக்கிங்க... உங்க குரலைக் கேட்டே ரொம்ப நாளாச்சு...’’

வாஸந்தியின் குரலில் ஈரம்...

“நல்லா எழுதியிருக்கேன்டா... இப்ப நாளைக்கு நடக்கப் போற எக்ஸாம் பத்தி நினைச்சு தான் மனசு முழுக்க எக்ஸைட்மெண்டா இருக்கு. நாளைக்கு இந்நேரம் என் வசு மிஸஸ். அரவிந்தா மாறியிருப்பா. என் வசுவா... எனக்கு மட்டுமே சொந்தமா... மனசு முழுக்க சந்தோஷமா இருக்கு. நீ எப்படிடா ஃபீல் பண்ற.? ஆர் யூ ஹேப்பி...?”

“ரொம்ப... ரொ...ம்....ப.... ரொ....ம்...ப... சந்தோஷமா இருக்கு. அதுக்கு ஒரு நைட் ஃபுல்லா காத்திருக்கணுமேன்னு இருக்கு. உங்களை பார்க்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனுமே... எல்லாம் நாம நினைச்ச படி கரெக்டா நடக்குமா... இப்பக் கூட முன்னால ரூம்ல அந்த செக்யூரிட்டி படுத்திருக்கான். ஒரு பிரைவசியே இல்லை.அர்வி”.

“விடுடா... இன்னிக்கு மட்டும் தானே. சரி நீ டின்னர் முடிச்சாச்சா... அத்தை தூங்கிட்டாங்களா..? அவங்களையும் கூட்டிட்டு வந்திடு. சரியா... நாளைக்கு நீ....ம் நினைத்தாலே இனிப்பா இருக்கு. ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்...”

“மீ... டூடூ...” அர்த்தமற்ற ஸ்வீட் நத்திஸ்ஸ் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

-12-

மணநாள் அழகாகப் புலர்ந்தது.. அரவிந்த் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மயில் வண்ண சில்க் காட்டன் புடவையில் அழகு மயிலென தயாரானாள். வாஸந்தி... பூஜையறையில் மாலதியின் பாதம் பணிந்ததும் இருவரின் கண்களிலும் வெள்ளம் பெருக்கெடுக்க, வாஸந்தி தன்னையும் மீறி தேம்பினாள்.

மாலதி, தன் மகளை அணைத்து உச்சி மோந்தார். “என் கண்ணே...! இன்னிக்கு உன்னோட நான் வர முடியாதுடா... யோகேஷ் இங்கே வருவதாக சொல்லியிருக்கான். என் ஒரே செல்ல மகள் புது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது கூட எனக்கு வர கொடுப்பினை இல்லாம போச்சு... நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி... தனியா உன்னை அனுப்பி வைக்கறனேன்னு மனசு துடியா துடிக்குது... நல்லபடியா போயிட்டு வா தங்கம்... மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்... உன்னை நல்லா பார்த்துக்குவார்... தெரு முனையில் சுனில் காத்திருப்பான். நீங்க மேரேஜ் பதிவு பண்ணியதும் நேரா கோயிலுக்கு வந்திடுங்க. நான் அங்க வந்து உங்களை ஆசிர்வாதம் பண்றேன்”.

மேகலாவும் உனக்கு அம்மா போலத் தான்...அவ வந்திடுவா. அவங்க எல்லாம் உனக்கு துணையா இருப்பாங்க. நான் இவங்களை எப்படியாவது சமாளிச்சுட்டு கோயிலுக்கு வந்திடறேன்....” மறுபடி முத்தமிட்டு வழியனுப்பினார்.

வாஸந்தியின் சற்றே அதிகப்படியான ஒப்பனையை பார்த்து செக்யூரிட்டிக்கு சந்தேகம்..!

வாஸந்தியிடம், “அண்ணி! இன்னிக்கு நீங்க காலேஜ் போகலையா...?” என்றான்.

‘அண்ணி’ என்றதும் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தாள். அவளைத்தான் அண்ணி என்று கூப்பிட்டான் என்பது அறிந்து படபடத்துப் போனாள். உள்ளங்கை வியர்க்க...

“ஏன் உனக்கு இந்த சந்தேகம்..? காலேஜ் தான் போறேன். இன்னிக்கு அங்க ஃபங்ஷன். எல்லா காலேஜ்லயிருந்தும் வருவாங்க. அதுக்கு என்ன இப்ப...” லேசாகக் குரல் நடுங்கியதோ...

“இல்ல... பார்த்தா காலேஜ் போற மாதிரி தெரியலை. அதான்....”

“அப்பன்னா எப்பவும்போல பின்னாடி ஆள் அனுப்பி செக் பண்ணிக்கங்க. எனக்கென்ன வந்தது. கொஞ்சம் சமாதானமானான்.

“சரி அண்ணி நீங்க கிளம்புங்க...” இருந்தாலும் தன் சந்தேகத்தை யோகேஷுக்கு தெரியப்படுத்தினான். தெரு முனையில் நின்ற காரில் வந்து ஏறுவதற்குள் வாஸந்திக்கு வியர்த்துப் போனது. அவளருகே அமர்ந்திருந்த அரவிந்தைக் கூட கவனிக்கவில்லை. அவள் நடந்து வரும்போதே ஓவியப் பார்வையாய் மிதந்து வந்தவளைக் கண்டு மயங்கினான்... உள்ளே அமர்ந்தும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை என்றதும் செல்லக் கோபம் தலை தூக்க, அவள் விரல்களை இறுகப் பற்றினான்.

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், தன்னவனைப் பார்த்ததும் டென்ஷனெல்லாம் வடிய, நாணத்தில் தலை குனிந்தாள்.

“என்ன மேடம்... என்னைப் பார்க்கக்கூட மாட்டேங்கறீங்க?”

“போங்க அர்வி. கிளம்பும் போது ரொம்ப டென்ஷன். அம்மாவும் வரமுடியலை” என்று நடந்ததைச் சொன்னாள்.

“ம்.. அத்தைகிட்ட இப்பதான் பேசினேன்.. அவங்க வரலைன்னு சொன்னாங்க. எனக்கும் வருத்தமாதான் இருக்கு. நம்மள நேரா கோயிலுக்கு வரச்சொல்லியிருக்காங்க.. நேரா அங்க போகலாம். ... யூ லுக் கார்ஜியஸ் மை லவ்... ” அவனின் குரலில் சிலிர்த்துப் போனாள்.

“அர்வி! ஆனாலும் அத்தை மாமாவுக்கு தெரியாம பண்றது தப்பில்லையா...? கஷ்டமா இருக்கு”. என்றதும் ,அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். தாயின் நம்பரை செல்போனில் ஒற்றினான். வாஸந்தி பதறினாள். அவளைத் தன்னருகில் இழுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டான்.

“ஹாய் மா... குட்மார்ணிங்... ”

“குட்மானிங் கண்ணா எக்ஸாம் முடிஞ்சுதில்ல. எப்ப வரப் போற...?”

“நாளைக்கு காலையில பிளைட் மா. லாஸ்ட் இயர் இல்லையா ... அதான் ஃபிரண்ட்ஸ்கூட நாலு நாள் ஜாலி ... அப்பாக்கு எப்படிம்மா இருக்கு.”

“இப்ப நல்லா இருக்கார் அர்வி. இன்னைக்கி இங்க அங்கிள் வீட்டு கார்டன்ல வாக்கிங் கூட போனார். கொஞ்சம் பிரிஸ்கா இருக்கார்.இன்னிக்கு தான் நிம்மதியா இருக்கு. சீக்கிரம் சரியாயிடுங்க நம்பிக்கை வந்திருச்சு.”

அம்மா. நாளைக்கு நான் ஒரு சர்ப்ரைஸோட வருவேன். இன்னைக்கு புதுசா ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லாம செய்யப்போறேன். நேர்ல தான் அதுபற்றி சொல்லணும். .. பிளீஸ். . என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா”

“என் அர்வி. எனக்கு தெரியாம ஒரு விஷயம் செய்யப்போறான்னா அதுக்கு முறையா ரீசன் இருக்கும். உன் பேச்சில சந்தோஷம் தெரியுது அதனால அது நல்ல விஷயமா இருக்கும். என்கிட்ட சொல்லமுடியாத சூழ்நிலைன்னா வேற யாரோ இதில சம்பந்தப்பட்டிருக்கணும். அவங்களுக்காத்தானே கண்ணா செய்யற? நீ எது செஞ்சாலும் எங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதமும் உனக்கு இருக்கும். நல்லபடியா உன் வேலையை முடிச்சுட்டு பத்திரமா வந்து சேரு. எங்க ஆசிகளோட வாழ்த்துகளும் உனக்கு உண்டு.”

அப்பாக்கு லெமன் டீ போட்டுக் குடுக்கணும் . போனை வைக்கட்டா கண்ணா.” போனை கட் பண்ணியதும் அவர் பேசியதைக் கேட்டு அனைவரின் கண்களும் பனித்திருந்தன...

அரவிந்தின் விழிகளையும் கண்ணீர் பனிப்படலமாய் மறைந்திருக்க, அதனூடே அவன் இதழ்கள் விரிய,

“இதுதான் என் அம்மா வசு... இப்ப புரிஞ்சுதா... ஏன் நான் துணிஞ்சு இதுக்கு ஒத்துக்கிட்டேன்னு...” வாஸந்தி சுற்றுப்புறம் மறந்தவளாய் ஒரு விம்மலோடு அவன் தோள் சாய்ந்தாள்.

“ஏய்...! என்னம்மா... நம்ம லைஃப்ல ஒரு முக்கியமான ஃபங்ஷன் நடக்கப் போகுது... என் வசு அழமாட்டா...” அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்னான். ரெஜிஸ்ட்ரார் ஆபீஸில் அனைவரும் காத்திருந்தனர். கௌசல்யாவின் பேச்சால் நிறைந்த மனதோடு இருவரும் மனமொப்பி கையெழுத்திட்டு திருமணத்தை முறையாகப் பதிவு செய்து தம்பதிகளானார்கள்.

அனைவரும் வாழ்த்த, சுனில் வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினான்.. காயூவிடம் குனிந்து,

“காயூ... நம்ம ரெண்டு வீட்லயும் பேரண்ட்ஸ் இங்க தான் இருக்காங்க. பேசாம ஒரு கையெழுத்தைப் போட்டு ஜோலியை இங்கேயே முடிச்சிடலாம். என்ன நாஞ்சொல்றது..?” கிசுகிசுப்பாக கேட்டவனை முறைத்தாள்.

“நிஜமா தான் செல்லம்..! அங்க பாரு அரவிந்தை...!” அரவிந்த் உணர்ச்சி மயமானவனாக அவளருகில் குனிந்து,

“கங்கிராட்ஸ் மிஸஸ். அரவிந்தாக்ஷன். லவ் யூ சோ மச்” என்றான். வாஸந்தி சிவந்து போனாள்...

அரவிந்த் மாலதியை அழைத்து, “அத்தை ... பதிவுத் திருமணம் நல்படியா முடிஞ்சுது. நாங்க இப்பவே கோயிலுக்கு கிளம்பி வரோம். நீங்களும் வந்திடுங்க. இருங்க.. வாஸந்தி பேசறா...”

கோயிலில் ஆசையும் எதிர்பார்ப்புமாக, மாலதி இவர்களின் வருகைக்காகக் காத்திருநதார். தெய்வம் இவருக்கு துணை செய்ய, இன்று வரமுடியாது. என்று யோகேஷ் தகவல் சொல்லியிருந்தான்.மாலதி இருவரையும் ஜோடியாகப் பார்த்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டார்.

மென்மையாக அவரது கண்ணீரைத் துடைத்த காயத்ரி, “ஆண்ட்டி அழாதீங்க. நல்ல விஷயம்தானே நடந்திருக்கு. அவங்களை ஆசீர்வாதம் பங்ணணுங்க”. இருவரும் மாலதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். கோயிலின் உள்ளே சென்று இருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து பிரசாதத்தை வாங்கிக்கொண்டார்கள். மாலதி இருவரை ஜோடியாக வீட்டுக்கு அழைத்துப் போக முடியவில்லையே என்று ஏங்கினார்.



அவரை சமாதானப் படுத்திய அரவிந்த், “அத்தை... வசுவை நான் தங்கியிருக்க வீட்டுக்கு கூட்டிட்டு போக ஆசைப் படறேன். ஈவினிங் காயூ கூட வந்திடுவா. நாளை நாங்க சொன்ன மாதிரியே சென்னை கிளம்பறோம். சுனில் எங்க கூட வர்றான். நாங்க அங்க போனதும் கண்டிப்பா அம்மா உங்க கூட பேசுவாங்க.”

சுனில் தன் பரிசாக, இரண்டு மோதிரங்களை வாங்கி வந்திருந்தான். மாலதியின் முன்னால் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அர்விந்த் ஒரு பெரிய ஹோட்டலில் லஞ்ச் அரேஞ்ச் செய்திருந்தான். அனைவரும் லஞ்ச் முடித்து விட்டு வீடு திரும்பினர்.. சுனில் காயூவோடு அவர்களின் பெற்றோரும் வாஸந்தியுடன் அரவிந்தின் வீட்டிற்குச் சென்றனர். மாலதி வாஸந்தியை முத்தமிட்டு அனுப்பி வைத்தார்.

கணேஷ் முதலிலேயே வீடு திரும்பியதால், இவர்கள் வருமுன் ஆரத்தி கரைத்து ரெடியாக வைத்திருந்தார். காயூவின் தாய் மேகலா ஆலம் சுற்ற, இருவரும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர்.. சுவாமி படம் முன் இருந்த விளக்கை ஏற்றச் சொன்னார்.

எல்லோரும் ஹாலில் அமர, சுனிலோ, வழக்கம் போல, “கணேஷ் அண்ணா.! அடுத்து ஸ்வீட் எடு.... கொண்டாடு தானே... எங்கே ஸ்வீட்?” என்று கலகலத்தான்.

இருவரின் பெற்றோரும் கிளம்பினர். “அரவிந்த் சீக்கிரமா வாஸுவை வீட்டுக்கு அனுப்பி வெச்சிடு.அவ அம்மா தவிச்சு போயிடுவா.. நாங்க கிளம்பறோம். சுனில் , வாஸுவை வீட்ல விட்டுட்டு, சீக்கிரமா இருட்டறதுக்குள்ள நீங்க வீடு வந்து சேரணும். ஊரைச் சுத்திகிட்டு இருக்காதீங்க.” என்று அறிவுறுத்திவிட்டு கிளம்பினார்.

“ஏண்டி..! உங்க அம்மா ஒரு நாள் கூட நம்மள சந்தோஷமா இருக்க விட மாட்டாங்களா.? இருக்கட்டும் நம்ம மேரேஜ் முடியட்டும். அப்புறம் வெச்சுக்கறேன் கச்சேரியை” காயூவிடம் சிடுசிடுத்தான்.

காயூ, அவனை முறைத்து விட்டு, “டைம் ஆச்சு வாசு. நானும் சுனிலும் உன்னை வீட்ல விட்டுட்டு கிளம்பணும் இல்லையா. நீ டிரஸ் எடுத்து வைக்க வேண்டாமா? நாளைக்கு ஈவினிங் தானே பிளைட்? காலையிலயே இங்கே வந்திடலாம். நானும் லீவ் போடறேன். கிளம்பு ”

அரவிந்த் சற்றே தயக்கத்தோடு, “காயூ! நானே வசுவுக்கு டிரஸ் வாங்கி வெச்சிருக்கேன். என் ரூம்ல இருக்கு. வசு நல்லா இருக்கான்னு வந்து பாரேன்..” குரலிலேயே ஆசையும் ஆர்வமும் தெரிய, வசுவின் முகம் குங்குமமாகச் சிவந்தது.

காயூ, “வாஸு..! போயிட்டு சீக்கிரமா வா. இல்லேன்னா அண்ணா பொக்குன்னு போயிடுவார். ஆனா உன் கழுத்தில முறையா தாலி ஏறலை. அதை நினைவில் வச்சுக்க. இப்ப நடந்த ரெஜிஸ்டர் மேரேஜ் உன் பாதுகாப்புக்காக மட்டும் தான். கொஞ்சம் பொறுமையா இருக்கணும் “பெரிய மனுஷியாக அறிவுறுத்தினாள். வாஸந்தியின் முகம் ரத்த நிறமே கொண்டு விட, “ம்ஹீம். நான் போகலை காயூ.கிளம்பலாம்.” என்றாள்..

“ஏய்... நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. பார் அண்ணா உன் முகத்தையே தான் பார்த்துகிட்டு இருக்கார்.. பத்து நிமிஷத்தில வந்திரு கிளம்பலாம்.”

கால்கள் பின்ன, தயக்கத்தோடு அவன் பின்னே மாடியேறினாள். “டேய் மாப்பிள்ளை... நாட்டில என்ன என்னமோ நடக்குதேடா... உன் கூடவே ஒட்டுப் புல்லா சுத்தறேன்... எனக்குத் தெரியாம எப்படா தனியா போய் டிரஸ் வாங்கின? படா கில்லாடி டா நீ. உனக்கு சீனியர் நான். இன்னும் எல்.கே.ஜி. லெவலே தாண்ட முடியலை. ஆனா நீ டாக்டரேட்டே வாங்கிட்டயேடா...” என ஓரக்கண்ணால் காயூவைப் பார்த்தான்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,121
679
113
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️ஒரு வழியா யோகேஷ் கண்ணுல மண்ணை தூவிட்டு அர்வி ♥️வாசு கல்யாணம் பதிவாயிடுச்சு இருந்தாலும் 🤔🤔🤔🤔🤔🤔இனிமேல் தான் பிரச்சனையே இருக்கு. மாலதி அம்மாவுக்கு என்னென்ன கஷ்டம் வரபோகுதோ தெரியலையே 😔😔😔😔😔😔