• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 20

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 20

ஆமா காயூ. அர்விக்கு அப்பா இல்லை - அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. - பிசினஸ் நெருக்கடின்னு நானும் பதினைஞ்சு நாள் விட்டேன். அதுக்குப் பிறகு கூட அவர்கிட்டயிருந்து போனே வரலை. அப்படியே பேசினாகூட ஒரிரு வார்த்தைதான், அப்புறம் - “ப்ளீஸ் டயர்டா இருக்குடா.. அப்புறம் பேசலாம்.”. இதேதான். எனக்கு சலிச்சு போயிருச்சு காயூ. காலேஜ் வேற திறக்கப்போகுது. அதுக்குள்ள மெட்ராஸ்ல சொல்லி தேர்ட் இயர் சேர்ந்துக்கலாம்னு சொன்னார். அதுபற்றி பேச்சே இல்லை. அதோட சுனில் அண்ணாவும் பிஸி. பிஸின்னு மழுப்பினார். எனக்கு இங்க இருக்கவே முடியல. அம்மா என்னை சமாதானப்படுத்தினாக் கூட அவங்களும் கவலைப்பட்டாங்க. - லவ் மேரேஜ்னு தெரிஞ்சு பயம்கூட வந்திடுச்சு.

இதே மாதிரி மறுபடியும் ஒரு வாரம் போச்சு. நான் என்ன நினைக்கிறது..? அத்தை ... அதான் அவங்க அம்மா இந்த மேரேஜை ஒத்துக்கலைன்னு நானா ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட பேசறது குறைந்துபோய் ஒரு கட்டத்தில் நின்னே போச்சு. தினமும் அம்மாவுக்குத் தெரியாம நைட்டெல்லாம் அழுவேன். என்னை திட்டவும்முடியாமஆறுதல் சொல்லவும் முடியாம அம்மாவும் ரொம்ப தேஞ்சு போயிட்டாங்க. உனக்கு மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டதால நீயும் வெளியே வர்றதில்ல. எனக்கு வெறுத்துப் போச்சு காயூ.

சாகலான்னுகூட தோணுச்சு. அம்மாவை நெனச்சு பாத்துதான் என் முடிவை மாத்திகிட்டேன். ஆனா அர்வி மேலே எனக்கு ரொம்ப ஆத்திரம். அப்பக்கூட மனசில ஒரு ஓரத்தில என் அர்வி என்னைவிடமாட்டார். நேர்ல போய் பார்த்து விஷயம் தெரிஞ்சுக்கணுங்கற வெறி. சென்னை போக டிக்கெட் எடுத்தேன். ஆனா யாருக்கும் சொல்லலை. நான் ஏன் கோயம்புத்தூரை விட்டுப் போனேன்னு அப்பறம் சொல்றேன். சென்னையில் இருந்து வந்ததும் தான், உடனே ஊரைவிட்டுப் போகணும்னு முடிவெடுத்தேன்.

சந்தோஷி அக்கா கணவருக்கு டெல்லி மாற்றலாகி போனாங்க. டெல்லி மெடிக்கல் காலேஜ்க்கு அப்ளை பண்ணி கிடைச்சதும், அவங்க வீட்டுக்கு பக்கத்திலேயே குடி போயிட்டோம். என் காலேஜ் லைஃப் தொடர்ந்தது.அவங்களை மாதிரியே என் எதிர்காலமும் வீணாப்போச்ன்னு அம்மா எப்பவும் அழுவாங்க. உடல் நலிஞ்சு போச்சு. சாப்பிடாம ரொம்ப வீக்காயிட்டாங்க. ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து தூக்கத்திலேயே என்னை அனாதையாக்கிட்டு போயிட்டாங்க.

அந்த சந்தர்ப்பத்தில எனக்கு வேறு யார் ஞாபகமும் வரல. யோகேஷ் மாமாவைத் தான் கூப்பிட்டேன். பதறிப்போய் ஃபிளைட் புடிச்சு உடனே வந்து எல்லாக் காரியமும் ஒரு தம்பியா அவரே செஞ்சார்.

அவர்கிட்ட சொல்லாம வந்ததுக்கு ரொம்ப கோபப்பட்டார். அவர்கூடக் கிளம்பச் சொன்னார். சந்தோஷி அக்காவும்,

“ஆமா வாஸு .. உன் மாமா சொல்றது கரெக்ட்தான். நீ தனியா இருக்க வேண்டாம். எங்களுக்கு டிரான்ஸ்ஃபர் எப்ப வேணா வரும்.. நீ கிளம்பு.”

இல்லைக்கா... சாரி, நான் இங்கதான் படிப்பேன். தமிழ்நாடு வேண்டாம். இனி அங்க போகமாட்டேன். மாமா. .. நீங்க உடனே வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். எனக்கும் ஆதரவுக்கு நீங்க இருக்கீங்கன்னு மனசுக்கு ஆறுதலா இருக்கு. நான் டிகிரி முடிக்கிறதுக்குள்ள எத்தனை ஊர் மாத்தறது..? நீங்களே என்னை ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க. நான் அங்கிருந்தே படிக்கிறேன்.

அரை மனதா சம்மதித்து ஹாஸ்டலில் சேர்த்தாலும் மாதம் இரண்டு தடவையாவது தவறாம என்னைப் பார்க்க வந்திடுவார். என் ரூம்மேட் நித்யாவுக்கு அவர்மேல கொஞ்சம் ஆர்வம்... அவளுக்கும் பேரண்ட்ஸ் இல்லாம அக்கா ஆதரவோட படிக்க வந்தவ. அவ மனது புரிஞ்சு, மாமாகிட்ட சொன்னேன். ரொம்பவும் மறுத்துப் பேசினார். அவளோட நல்ல குணம், அமைதி எல்லாம் மெல்ல மெல்ல புரிஞ்சு அவ மேல ஈர்ப்பு வந்தது. அவ இன்டர்ன்ஷிப் முடிக்கும் போது மாமா அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டார்.

அதுக்குப் பிறகு நான் அங்கேயே மேற்படிப்பை தொடர்ந்தேன். அவரை ஏமாத்திட்டேன் - என்கிற குற்ற உணர்ச்சி மறைஞ்சுது. நித்யாவோட படிப்பு முடிஞ்சுது. “மாமா..! இனி உங்க லைஃபப் பாருங்க. நித்தி ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க நெனச்ச மாதிரியே உங்க வாழ்க்கை அமையும். இனி நானே என்னை பார்த்துக்குவேன்.

நானா கூப்பிடறவரை என்கிட்ட பேச முயற்சி பண்ணக்கூடாது”ன்னு சத்தியம் வாங்கிட்டேன்.

“நீ பெரிய தியாகிடி.. நாங்க எல்லாம் செத்தா போபயிட்டோம். ஆன்ட்டி போனதைச் சொல்லக்கூட மனசு வரலை உனக்கு. அப்படி என்னடி உன்னை ஏமாத்தினேன்... சொல்லு.” ஆத்திரத்தில் காயூ பொரிந்தாள்.

“காயூ... காலையில பேசலாம்.. நாளைக்கு சண்டே தானே . ஃப்ரியா பேசலாம். இந்த விஷயம் பூராவும் ஏற்கெனவே நிவிக்கு தெரியும். அவ தூக்கத்தில் சாமியாடறா. பார்.. காலையில பேசிக்கலாம்.. இனி படுக்கலாம்.. வா நிவி”

அதே சமயம் சங்கரும் சுனிலும் மனம்விட்டுப்பேசி தாங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவாதித்து முடித்திருந்தனர். அந்தத் திட்டம் இருவருக்கும் திருப்தியாகவும் இருந்தது. மறுநாள் காலை குழந்தைகளோடு இருவரும் வாஸந்தியின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

சுனில் “காயூ.. நாங்க பிரஷ் பண்ணியாச்சு.. குடிக்கஏதாவது கொண்டு வா.”

குழந்தைகளுக்கு போர்ன்விட்டா கலக்கி குடிக்க வைத்து நிவி இருவரையும் குளிக்க அழைத்துச் செல்ல, வாஸந்தி அன்னம்மாவுக்கு உதவ சமையலறைக்குள் புகுந்தாள்.

சங்கர் “சுனில் உன் டிரஸ் எடுத்துட்டு வந்திடு. நம்ம வீட்டிலேயே ரெடியாகலாம். நான் போய் முதல்ல குளிக்கிறேன். நீ வா..”

காயூ. என் டிரஸ் எடுத்துக் குடேன். நைட் ரெண்டு குட்டீசும் சமத்தா தூங்கிட்டாங்க. கௌசிக் பெட்டை நனைச்சுட்டான். ஏசி கொஞ்சம் அதிகமாக வச்சுட்டேன். மெல்ல அறைக்கதவைச் சாத்திட்டு அவளை பின்னால் இருந்து அணைத்தான்.

“செல்லம். ஒரு நைட் உன்னப் பார்க்காதது கூட ரொம்ப நாள் ஆனமாதிரிஇருக்கு. ஏங்கிப் போயிட்டேன். ஐ மிஸ் யூ... அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, பொங்கிய நேசத்தை மறைத்துக்ககெண்டு,

“போங்க மாமா... இப்ப அதைவிட முக்கியமா, நாம அண்ணாவோட இந்தக் கழுதையைச் சேர்த்து வைக்கணும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிங்க...”

“எனக்கும்தெரியும்மா. சங்கர்கிட்ட நாம இப்ப எங்கே இருக்கோம்ன்னு எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன். இருவரும் சேர்ந்து பக்காவா பிளான்பண்ணியிருக்கோம். அது வேறு. ! இது வேறு. ! ” இடைபற்றி வளைத்து தன்னருகில் இழுக்க,

“ஷ்... விடுங்க மாமா. நான் கொஞ்சம் தனியா பேசணும். ”

விழிகளில் குறும்பு கூத்தாட ... ”ஓ.கே. காயூ. நான் வெளியே போறேன். தனியா பேசி முடிச்சிட்டு கூப்பிடு...!”

ஒரு நொடி கழித்தே அவன் சொன்னது புரிய, அவன் சட்டைக் காலரைப்பற்றி இழுத்து, “உனக்கு ரொம்பதான் லொள்ளு டா.. நான் சொல்றவரை இங்கேயே உட்காரு.நாம அரவிந்த் அண்ணாகூட பேசிட்டு இருக்கோன்னு இப்போதைக்கு இவளுக்கு தெரிய வேணாம். தெரிஞ்சா மறுபடியும் சொல்லாம எங்கேயாவது கிளம்பிடுவாளேன்னு பயமா இருக்கு. அதோட இந்த ஹாஸ்பிடல் அரவிந்த் அண்ணாவோடதுன்னு தெரிஞ்சா இன்னிக்கே கிளம்பிடுவா. சங்கர் அண்ணாகிட்டயும் சொல்லி வைங்க. அவளுக்கு என்ன கோபம்..? எதுக்காக கோயம்புத்தூர்லயிருந்து கிளம்பினான்னு இனிதான் பேசணும். காலையில டிபன் சாப்பிட்டுட்டுஹாஸ்பிடல் போய் ஒரு ரவுண்டு சுத்திப் பாத்துட்டு வாங்க. அத வெச்சுதான் அரவிந்த் அண்ணாவை இங்க வரவழைக்கணும். அதுக்குள்ள நான் வாஸு கிட்ட எல்லா விவரமும் கேட்டுக்கறேன்”. சுனில் விழியகலாது காயூவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். தன் தோழியின் வாழ்வு சீராக வேண்டும் என்று தவித்தவளைப் பார்த்து மனம் கனிந்தாள்.

“ஐ லவ் யூ. காயூ.. சரி என் டிரஸ் கொடு . நான் போய் குளிக்கிறேன். வாண்டுகளுக்கு டிபன் கொடுத்து ரெடி பண்ணி வை. அவங்களையும் கூட்டிட்டு போயிடறேன். அப்பதான் நீங்க ஃப்ரியா பேச முடியும்.” அவள் நெற்றியில் முத்தமிட்டவனின் கண்களில் காதல்…காதல் மட்டுமே இருந்தது!

சங்கருக்கு ஹாஸ்பிடலில் ஒரு மணி நேரம் வேலை இருந்தது. குழந்தைகளோடு கிளம்பிச் சென்றதும், நிவி, “காயூ..! நீங்க பேசுங்க. நான் கொஞ்சம் வீடு வரைக்கும் போயிட்டு ஹாஸ்டல் போய் லீவ் சொல்லிட்டு வரேன். அன்னம்மா சமையலை முடிக்கறதுக்குள்ள வந்திடறேன்.”

17

படுக்கையறைக் கதவைத் தாளிட்ட காயூ... “வாஸு. இப்ப சொல்லு. நீ கிளம்பிப்போக என்ன காரணம்..? என் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண வேண்டாம்னு முடிவெடுக்கற அளவு என்ன நடந்துச்சு. சொல்லுடி...”

என் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாலகூட கண்டிப்பா வரேன்னு சொன்னதானே.. சென்னை போயிட்டு வந்துதான் உன் போக்கே மாறுச்சு... யார் என்ன சொன்னா..? ஆன்ட்டி என்கிட்ட பேச வந்தபோது கூட தடுத்திட்ட. அரவிந்த அண்ணா ஒரு மலையளவு பிரச்சினையைச் சமாளிச்சுட்டு உன்னைப் பார்க்க ஆசை ஆசையா ஓடிவந்தார்.. சுனில்கூட அவரோடதானே இங்கே வந்தார். என்கிட்டயும் என்ன காரணம்னு சுனில் சொல்லலை. நானும் கேட்கலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் வரை அவங்களால வர முடியாத அளவு சிக்கல்னு புரிஞ்சுகிட்டேன். மாமா மேல எனக்கு கோபமும் வரலை. ஏன்னா எங்க லவ் உண்மையானது. முகூர்த்த நாள் அன்னைக்கும் கூட அவர் வரலைன்னாலும் அதுக்கும் ஒரு நியாயமான இருக்கும்னு தெரியும். நான் அவரை நம்பறேன். கோபம்.. சந்தேகம் வராது.

நீ என்னடி செஞ்ச..? காதலையும் புரிஞ்சுக்கல, நட்பையும் மதிக்கல. தூக்கி எறிஞ்சுட்டு ஓடிட்ட. வெளி உலகமே தெரியாம வெகுளியா இருந்த உன்னை ஒரு பெண்ணா மலரச் செய்ததே அண்ணா உன் மேல வச்ச நேசம்தான்... எத்தனை பொறுமையா உன்கிட்ட பேசுவார். மறந்திடுச்சா..?

அன்னிக்கு உங்க ரெண்டு பேரையும் காணாம அவர் துடிச்சதை இப்ப நெனைச்சாலும் பதறுது. சுனில்,எங்க கல்யாணத்தையே தள்ளி வைக்கச் சொன்னார். ஆனா அண்ணாதான் விடலை. பிடிவாதமா மேரேஜ் நடந்தே ஆகணும்னு கட்டாயப்படுத்தினார்.

பாவம்... அவர். ..! ஒரு மனுஷன் அடுக்கடுக்கா தொடர்ந்து எத்தனை கஷ்டத்தைதான் ஃபேஸ் பண்ணுவார். அதுவும் உன்னை கல்யாணம் செஞ்ச நாளோட அவர் தூக்கம் போச்சு. அங்க என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா...? அவரை இரண்டு வருஷமா காதலிச்சேன்னு பீத்திக்கிறியே ... ஒரு பர்சன்டாவது அண்ணாவை புரிஞ்சு வச்சிருக்கியா. அவசரத்துக்கு பொறந்தவளாடி நீ... எதிலேயும் பிடிவாதம். அவசரம்..? அதனால உனக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கா? நீயும் சந்தோஷப்படாம ... மத்தவங்களையும் வேதனைப்படுத்திவிட்டு ... உன்னையும்ஒருத்தன் காதலிச்சான் பாரு. அவனைச் சொல்லணும்."... பட்டாசாய் பொரிந்தாள்.

அவளின் பேச்சைக்கேட்டு கொதித்துப் போன வாஸந்தி, “என்னடி .. விட்டா பேசிக்கிட்டே போற. நான் ஒண்ணும் விசாரிக்காம உன் அண்ணனைப்பத்தி குறை சொல்லை. நேர்ல போய் பார்த்துப் பேசி, பட்டு அனுபவிச்சுதான் இந்த முடிவெடுத்தேன். அதே காரணம் தான் இரண்டாவது முறையா பிரிஞ்சதுக்கும்...” முகம் கோபத்தில் பளபளத்தது.

முதலில் அவள் பேசட்டும் என்று காயூ தலையசைத்து, அவளை மேலே சொல்லச் சொன்னாள்.

“நான் அர்வியை பார்க்கணுங்கற எண்ணம் வந்ததுக்கு காரணமே அவர்தான். அவர் போன் எப்பவும் ஸ்விச் ஆஃப்லயே இருக்க ஆரம்பிச்சது. சுனில் அண்ணா நம்பருக்கு பண்ணினா இருண்டு நிமிஷம் கடமைக்கு பேசுவார். .. யாருகிட்டேயோ பயந்த மாதிரி தயங்குவார்.

ஒரு வேளை அத்தை மறுத்துட்டாங்களோன்னு எனக்கு பயம். காலேஜ் திறக்கிறதுக்கு முன்னால போய் பார்க்கலான்னு கிளம்பிட்டேன். அம்மா கிட்ட,

“அம்மாகாயூகிட்ட சொல்லிடாதீங்க,அவமேரேஜுக்கு பதினஞ்சு நாள்கூட இல்லை. அவரை நேர்ல பார்த்து ஒரு முடிவு தெரிஞ்சுக்கணும். சிக்கல், பிரச்சனைன்னு எப்பவுமே பேசினா எப்படி..? அதுக்காக ஒரு தடவை கூடவா நேர்ல வந்து பார்க்க முடியாது? நான் போய் பார்த்துட்டு வரேன்.”. அம்மா கலக்கத்தோட தான் என் வாழ்வு சீராகணுங்கற ஆசையில சம்மதிச்சு என்னை அனுப்பினாங்க… அதன் பிறகு...

சென்னை!அர்விந்த்தின் ஆபீசுக்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள்.அந்த பிரம்மாண்டமானகட்டிடத்தைப் பார்த்து மலைத்துப் போனாள்.

அரவிந்த் எக்ஸ்போர்ட்ஸ்..

அரவிந்த கம்ப்யூட்டர்ஸ்..

அரவிந்த் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..

வரிசை கட்டிக்கொண்டு நின்ற பெயர்ப்பலகைகளை பார்த்து மலைத்துப் போனாள். இத்தனை செல்வம் படைத்தவனா தன் கணவன் என்று கொஞ்சம் பயந்துகூடப் போனாள். தன்னை ஒரு முறைபார்த்ததும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ஆடை நலுங்கி, தலை கலைந்து தொடர்ந்த பயணத்தால் களைத்துப்போய் தோற்றமே ஒரு மாதிரி இருந்தது.

உள்ளே காலடி எடுத்து வைத்தவளை ரிசப்ஷன் பெண் புன்னகையோடு வரவேற்றாலும் ’இதன் உள்ளே வர உனக்கு என்ன தகுதியிருக்கிறது’ எனக்கு என்றது பார்வை.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
வாஸந்திக்கு ரெம்பவே பொறுமை பத்தலை என்ன பொண்ணு அவ, இனிமேல் எங்கயும் ஓடாம இருந்தா பரவால்ல, அபி அம்மா கொஞ்சம் தயவு பண்ணுங்க இந்த வாஸந்தி பிள்ளையை புடுச்சு வைக்குறது உங்க கைலதான் இருக்கு 😃😃😃😃😃😃😃😃😃😃