• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 32

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
“இது நம்ம ஹாஸ்பிடல் தான். கட்டி முடிச்சாச்சு. இன்டீரியர் வொர்க் கொஞ்சம் இருக்கு. முடிஞ்சா நெக்ஸ்ட் மன்த் திறந்திடலாம். இனிமே இந்த ஹாஸ்பிடல் முழுவதும் உன் பொறுப்பு.”

நிவிகூட இங்கதான் ஒர்க் பண்ணப்போறாங்க.இங்கிருக்க அத்தனை வசதிகளும் உதவிகளும் இலவசமா அதுக்குத் தகுதியானவர்களுக்கு போய்ச் சேரணும்.வசதியிருப்பவர்களுக்கு சார்ஜ் பண்ணலாம். ஆனா இல்லாதவங்களுக்கு எல்லா ட்ரீட்மெண்ட்டும் அதே தரத்தோடு இலவசமா கொடுக்கப்படணும், இது என் அப்பாவோட கனவு. தமிழ்நாடு முழுக்க எல்லா இடத்திலும் இதுமாதிரி மருத்துவ உதவி செய்யணும்னு ஆசைப்படறேன். இதை நிர்வகிக்க உன்னை விட தகுதியான பர்சன் கிடையாது ஷ்ங்கர். இங்கே உள்ளேயே உனக்குரிய பங்களா ரெடியா இருக்கு. திறப்புவிழா அன்னிக்கு மூணுபேரும் ஜாயின் பண்றீங்க.

சங்கருக்கு இது கனவா நிஜமா என்றே புரியவில்லை.’ இத்தனை பெரிய வாய்ப்பு தனக்கா’ என்று நம்ப முடியாமல் திகைத்து விழித்தான்.

சுனில், “சங்கர் நீ எனக்கு இதுக்காக பெரிய ட்ரீட் கொடுக்கணும். எங்கே போகலாம் சொல்லு...”

“உன்னிஷ்டம் சுனில்.”

அரவிந்த், “எதுக்கும் வீட்ல போன் பண்ணி ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். நம்ம வீட்டு பெண்ணரசிகள் முணு பேரும் கிச்சனில் தான் இருந்தாங்க. ஏதாவது ஸ்பெஷலா சமைச்சு அதை நாம மிஸ் பண்ணிட கூடாதில்ல. “அப்போது வெளியே கார் ஒன்று வந்து நின்றது...

சங்கர், “ஆமாம் ... நைட் வேணும்னா எல்லோரும் சேர்ந்து வெளியே போகலாம். வீட்ல சமைச்சிருந்தா...? சந்தேகமாய் இழுத்தான்.

“அந்த கஷ்டத்தை இப்ப ஏங்கடா ஞாபகப்படுதிறீங்க. ஒரு நாளாவது அந்தச் சோதனையிருந்து தப்பிக்கலான்னு பார்த்தா விடமாட்டீங்கறீங்க. உனக்கென்னடா… கமலாக்கா விதவிதமா சமைக்கிறாங்க. சங்கர் பாவம்! நானே ஒத்துக்கறேன்…! நிவி மேடம் க்கு சமையல் னு எழுதினா கூட படிக்க தெரியாது னு வேலூர் போனப்ப தெரிஞ்சுகிட்டேன்!!அதுக்கு காயூ பரவாயில்ல. ஹ்ம்ம்… நான் கணேஷ் அண்ணன் கையால சாப்பிட்டதோட எல்லாம் போச்சு. அது எல்லாம் பொற்காலம் டா அரவிந்த். அது இனிமேல் திரும்பி வரவே வராது.” பெருமூச்சு விட்டான்.

ஆனால் வாசல் பார்த்து நின்ற அரவிந்தோ உள்ளே வந்தவர்களைப்பார்த்து அதிர்ந்து போனான்.

“அது திரும்பாட்டி என்ன..? நீ கொஞ்சம் திரம்பிப் பாரேண்டா...” கண்களால் ஜாடை செய்தும் சுனில் கவனிக்கவில்லை.

“திரும்பி பார்த்து என்னடா பிரயோஜனம்.? அந்த நாட்கள்.. ஹா...ஹா... ஆனா பாரு காயூவோட சமையலுக்கு பேதி மருந்தே பரவாயில்லைடா அரவிந்த்.வந்து நின்றவர்களை பார்த்து விட்டு உமிழ்நீரை விழுங்கிய சங்கர்,” உனக்கு நேரமே சரியில்லை சுனில் .. பேச்சை இத்தோட நிறுத்திடு.”

“கரெக்டா சொன்ன சங்கர் எனக்கு நேரம் சரியில்லாம போயி... வருஷம் எட்டாகப் போகுது. லவ் பண்ணும்போது நான் ஏண்டா இதுபத்தி யோசிக்கவே இல்லை. காயூ... அப்ப தேவதையா தெரிஞ்சா.. ஆனா ... இப்ப எப்படின்னு ஏண்டா ஒருத்தர் கூட கேட்க மாட்டீன்றிங்க? அத்தனை பரிதாபம் என் மேல..? இப்ப... பத்ரகாளி மாதிரி... எதுக்கெடுத்தாலும் ... “ அவன் பேச்சை முடிப்பதற்குள் வேகமாக சங்கரை கைபிடித்து இழுத்த அரவிந்த்..

“சுனில் ...! நாங்க இந்த ஆட்டத்துக்கு வரலை. இன்னிக்கு அந்த பேதி மருந்து கூட தேவையிருக்காது... உனக்கு அரைமணி நேரம் டைம் ... அதுக்குள்ள உனக்கு எதுவும் ஆகலைன்னா, கார்ல வெயிட் பண்றோம். வந்து சேரு.” அவனை பரிதாபமாகப் பார்த்து விட்டு நொடியில் மறைந்தான்.

குழம்பிய சுனில் அப்பாவியாக, என்னாச்சு இவனுக்கு கொஞ்சம் முன்பு வரை நல்லாத்தானே இருந்தான். திடீரென உளற ஆரம்பிச்சுட்டான். முகம் வேற பேயடிச்ச எஃப்பெக்ட்.. என்னவோ புரியலை போ. டேய் டேய் எங்கடா திடீர்னு ஓடறீங்க....” என்று திரும்பியவனுக்கு நிஜமாகவே பேயடித்தது. !

வாஸந்தி, நிவியோடு, தன் கோப விழிகளை உருட்டிக்கொண்டு இடுப்பின் மேல் கைவைத்து அவனை பஸ்பமாக்கிவிடும் உத்தேசத்தில் இருந்தது… நம் காயூ... என்கிற காயத்ரியே தான். !! சுனிலுக்கு விழி பிதுங்கயது.

சில நொடிகளில் சூழ்நிலையை சமாளிக்காவிடில் அது சுனில் அல்லவே..! அவளருகில் சென்று,

“ஹாய் காயூ. ...” நீ எங்கடா இங்க? ஆச்சரியமா இருக்கு.! உனக்கு நூறாயுசு போ.. இப்பதான் உன் சமையலைப்பத்தி நம்ப பசங்ககிட்ட பெருமையா பேசிகிட்டு இருந்தேன். தெரியுமா? பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா .. நீயே உன் காதால அதைக் கேட்டு சந்தோஷப்பட்டிருப்ப” அதற்கு மேல் வழிவதற்கு அவனிடம் அசடு ஸ்டாக் இல்லை. !!! காதலிக்கும்போது என்ன பேசறதுன்னு தெரியாம முழிக்கிறதும், கல்யாணத்துக்கு பின் எப்படி போறதுன்னு தெரியாம மாட்டிக்கிறதும் தான் ஆண்களின் பிரச்னையே! பல்லைக்கடித்து அவனை முறைத்த” காயூ, “நான் வந்துபதினஞ்சு நிமிஷம் ஆச்சு... டா...” என மரியாதையா விளிக்கவும் அவசரமா வாஸந்தியை பார்த்து,

“வாஸு! நிவிக்கு ஹாஸ்பிடலை சுத்தி காமிச்சுட்டு இரும்மா... நான் காயூகூட கொஞ்சம் பர்சனலா பேசிட்டு அஞ்சு நிமிஷத்தில அனுப்பி வைக்கிறேன்...”என்றான். சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்கள் அகன்றதும், அரவிந்த் அர்த்தமில்லாமல் பேசிவிட்டு சங்கரை இழுத்துவிட்டு அவசரமாக ஓடியதன் பின்னணியை முழுவதுமாக புரிந்து கொண்டான்.

“கவுத்துட்டியே பரட்டை... கொஞ்சம் ஜாடையாவது காமிச்சிருக்கலாமே... ஒரு மனுஷன் எத்தனை இடைஞ்சல்களைத் தான் சமாளிக்கிறது” என்று புலம்பிய சுனில், சமாளித்துக் கொண்டு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியருக்கு இதெல்லாம் தூசு என்று வீறு கொண்டு எழுந்தான்!

“காயூ குட்டி! இப்ப பார்த்தியே. அரவிந்த் எத்தனை சந்தோஷமா (!) போறான்? நீ வந்து பதினஞ்சு நிமிஷம் தான ஆகுது ... ஆனா ஒரு அரைமணி நேரம் முன்னாடி வந்திருக்கணும்! அப்ப அவன் எத்தனை விரக்தியா பேசினான்னு நீயே கேட்டிருக்கலாம்.. மிஸ் பண்ணிட்ட! விடு, போனாப் போகுது.

அவனை குஷிப் படுத்த தான் உன் சமையலை கொஞ்சம் டேமேஜ் பண்ணி பேசிட்டேன். உன் சாப்பாட சாப்பிட குடுத்து வெச்சிருக்கணுமில்ல. அவனுங்களுக்கு அந்த அதிர்ஷடம் இல்ல.. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் என் வாழ்க்கையே பிரகாசமா இருக்கு... (உன் கிட்ட நான் வாங்கின பல்போட எண்ணிக்கை அவ்வளவு!) தெரியுமாடா செல்லம்.

கௌசிம்மா வீட்ல நீயா சமைச்ச? அப்ப சாப்பிட வீட்டுக்கே போகலாம். அவங்க வேணா எங்கேயோ போய் சாப்பிடட்டும். உன் கையால சாப்பிடற திருப்தி வேற எங்கே போனாலும் கிடைக்காது.” அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் கற்பனைக் குதிரை அதே இடத்திலேயே நிற்க, “என்னால முடியலைடா! என்னை நம்பிடேன்” என்று பரிதாபமாக காயூவைப் பார்த்து விழித்தான்...

காயத்ரிக்கு அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை. “நீ அண்டப் புளுகன்... ஆகாசப் புளுகன்டா... ச்சு... போடா உன்னை திருத்தவே முடியாது” என்று செல்லமாக முறைத்ததும் தான் சுனிலுக்கு அப்பாடா என்றிருந்தது. அவளின் ‘போடா’ வில் அத்தனை காதல்!! அது அவனுக்கு மட்டுமே புரியும் மேஜிக்.!!

அவளருகே வந்து, “இந்த போடா’வுக்கு மட்டுமே நீ இன்னிக்கு நைட் ட்ரீட் தரணும் செல்லம்... ரைட்? நான் போய் ‘உயிர் காப்பான் (!) தோழன்.. ங்க இரண்டு பேர் கார்ல வெயிட் பண்றாங்கள்ள, அவங்கள கவனிக்கணும். வரட்டா...?”

“மாமா.! லஞ்ச் வெளியவே பார்த்துக்குங்க... இன்னிக்கு வீட்ல செய்யலை. நாங்களும் வெளியே போறோம். ஷர்மி, கௌசிக்இரண்டு பேரையும் அம்மா பார்த்துக்குவாங்க..”

“தேங்க்ஸ்டா... இன்னிக்கு நைட் கண்டிப்பா... வீடு தான்..! அதில் எந்த சேஞ்சும் இல்ல!” அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு வெளியே பறந்தான்.

காயூவிடம் தப்பித்து, காரில் ஏறிய சுனிலின் முன்னால் தயாராக வைத்திருந்த சோடாவை நீட்டினான் அரவிந்த்... இருவரும் ஒருவரையொருவர் மௌனமாக பார்த்து விட்டு, வெடித்துச் சிரித்தனர்.. எட்டு வருடங்களுக்குப் பிறகு இருவருடைய மனமும் கல்லூரி நாட்களில் கொட்டமடித்தது போல சிறகடித்துப் பறந்தது...

அரவிந்த், “அடி பலமோ?!” என்று அவனைத் தடவிப் பார்த்தான். சுனிலோ, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று தூசு தட்டி விட்டு... ஷங்கரைப் பார்த்து சிரித்தான்... ஷங்கருக்கு இவர்களின் பலமான நட்பைப் பார்த்து சற்றே பொறாமையாகக் கூட இருந்தது. அதை வாய் விட்டு சொல்லியும் விட்டான்.

சுனில், “இன்றோடு நாம் மூவரானோம் “ என்று ராமர் பாணியில் பேசி ஹைஃபை கொடுத்தான்.. அதோடு, நம்ம ட்ரீட் இப்பவே தொடங்குது.. தொடங்குது..

“வீட்டு சாப்பாட்டிலயிருந்து எஸ்கேப் டா.! நம்ம வீட்டரசிகளும் வெளியே தான் லஞ்ச்சுக்கு போறாங்க... நாம எங்க போறோம்..? காயுவை சமாளிச்சதில் கொலப்பசிடா ..!” என்றான்.

ஈவினிங் வீடு திரும்பிய போது, கௌசல்யா, நிவி, காயூ, வாஸந்தி, குட்டீஸ், கமலாம்மா என்று வீடே கலகலத்தது...

அரவிந்த், “அம்மா..! நம்ம ஹாஸ்பிடலுக்கு சீஃப் டாக்டரா சங்கரை அப்பாயிண்ட் பண்ணப் போறோம்.. நிவி..! இங்க சென்னையில ஹாஸ்பிடல் ரொம்ப பெரிசு... பார்த்த தானே... நிறைய டாக்டர்ஸ் வரப் போறங்க.. நீ கூட சீஃ டாக்டர்கிட்ட அப்ளை செஞ்சு பாரு! அவர் மனசு வெச்சா உனக்கு கூட வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு..

அங்கேயே உங்களுக்கு புது பங்களா ரெடியாயிருக்கு.. நெக்ஸ்ட் மனத் இங்க வந்து செட்டிலாகப் போற நிவி.. ஆர் யூ ஹேப்பி நௌ.?” வாஸந்தியை ஒரக்கண்ணால் பார்த்து, “இன்னொரு ஹேப்பி நியூஸ்.. அன்னம்மாவும் இனி நிவிக்கு துணையா இங்க வந்திருவாங்க.. நிவி... நீ உன் பையனை பிரியத் தேவையே இல்லை.. தினமும் கொஞ்சலாம்... இப்ப ஒ.கேயா...”

வசு திக்குமுக்காடிப் போனாள்.. அரவிந்துக்கு கண்களாலேயே நன்றி சொல்லி, நிவியை அணைத்துக் கொண்டாள். விளையாடிக் கொண்டேயிருந்த கௌசிக், இதைப் பார்த்து, நிவியிடம், “அம்மா..! நானு தூக்கு” என்று அவள் காலைக் கட்டிக் கொண்டான்.

அரவிந்த் அவனைத் தூக்கி மேலே போட்டுப் பிடித்து, “ஏய்... வாலுப் பையா... அப்பா உனக்கு எத்தனை டாய்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..” என்றதும், கௌசிக் அவன் கன்னத்தை ஈரமாக்கி விட்டு, பெரிய மனுஷனாக “தேங்க்யூ பா” என்று ஷம்முவோடு அதை வைத்து விளையாடப் போய் விட்டான்..

கௌசல்யா, “சங்கர். உன் வேலை ரொம்ப பொறுப்பானதுப்பா... ஃப்ரீ மெடிக்கல் ஹெல்ப் கொடுக்கணும் என்பது அப்பாவோட நெடு நாள் கனவு. அர்வி படிச்சு முடிச்சிட்டு வந்ததும் அதை நனவாக்கணும்..னு ஆசையோட இருந்தார்... “அவரின் நினைவில் கண்கள் கலங்க, “இப்ப எம்பையன் அதை நிறைவேத்தி வெச்சுட்டான்.இங்க அதை நீதான் செயல்படுத்தணும். இது உன் கையில தான் இருக்கு...”

“கண்டிப்பா நிறைவேத்தறேன் மா. இது ரொம்ப உயர்வான லட்சியம்.. இந்த வயசில அரவிந்த முழு முனைப்போடு அதற்காக பாடுபட்டிருக்கான்.. அப்பா ஆசைப்படி தமிழ்நாடு முழுக்க ஆரம்பிப்போம். நானும் சுனிலும் கண்டிப்பாக அதற்கு உறுதுணையா இருப்போம்.. இந்த சான்ஸ் எனக்கு குடுத்ததுக்காக நான் தான்மா உங்களுக்கு நன்றி சொல்லணும்..”

இத்தனை நாட்களாக தன் அருமை மகனுக்கு எதுவுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில்,ஷாப்பிங் சென்று, கண்ணில் கண்ட உடைகளும் பொம்மைகளுமாக வாங்கிக் குவித்திருந்தான் அரவிந்த்...

சங்கரே, “ போதும் அரவிந்த்.. கௌசிக் வளருகிற பையன். சீக்கிரமா டிரஸ் பத்தாம யோயிடும்.. மறுபடியும் வாங்கலாம்...”

“சரி சங்கர்.. நீ போய் காரை எடுத்துட்டு வெளியே வந்திரு... நான் பில் பே பண்ணிட்டு வந்திடறேன்..” கார் சாவியை அவனிடம் கொடுத்து அனுப்பினான்..

பின் உள்ளே வந்து சங்கர், நிவி, சுனில், காயூ, ஷர்மி எல்லோருக்குமே உடைகளை தேர்வு செய்து வாங்கி வந்தான்.. அதை யாருக்கும் தெரியாமல் தன் அறையில் வைத்துக் கொண்டான்..

வேலை முடிந்து, ரூமுக்குள் நுழைந்த வாஸந்தி, அரவிந்தைக் காணாமல் தேடினாள்.அவன் அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்தான். வெற்று மார்போடு, ஈரம் சொட்ட சொட்ட டீ-சர்ட்டை தேடி எடுத்து போட்டுக் கொண்டு, கட்டிலில் சாய்ந்து டி.வி.யை உயிர்ப்பித்தான்.. அவளுடைய அறைக் கதவை திறந்து உள்ளே சென்ற வாஸந்தியின் மனம் அவள் வசம் இல்லை. சோப்பு மணம் கமழ, தன்னைக் கடந்து சென்ற தன்னவனின் அருகாமைக்காக மனம் கிடந்து தவித்தது.. டி.வியில் ஆழ்ந்து போன அரவிந்தின் கவனம் அதிலிருந்து துளியும் சிதறவில்லை. வாஸந்தி வேகமாக அறைக் கதவை தாளிட்டாள்..

‘கடவுளே..! அரவிந்த் என்னை மன்னிக்கவே மாட்டாரா? அவர் வாயிலிருந்து இதுவரை ‘வசு’ என்ற சொல் கூட ஒலிக்க வில்லை.. என்னிடம் பேசவும் முயலவில்லை... வந்த அன்று திட்டியதோடு சரி.. பின் அது கூட இல்லை.. நான் நிஜமாகவே திருந்திட்டேன் அர்வி.. இனி எந்த சூழ்நிலையிலும் உங்களை சந்தேகப்பட மாட்டேன்.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கங்க.. உங்க கூட பேசாம இருக்க என்னால் முடியலையே.. நான் உங்களை உதாசீனப்படுத்திய போது நீங்களும் இப்படித் தானே தவிச்சிருப்பீங்க.. சாரி... ரியல்லி சாரி... அந்த வேதனையும் வலியும் எப்படி இருக்கும்..னு இப்ப புரியூது.. இந்த தண்டனை எனக்கு வேண்டியது தான்..என்னை நிஜமாகவே உங்க வாழ்க்கையிலிருந்து ஓரேடியாக விலக்கி வைத்துட்டீங்களா? ஆனா உங்க கோபத்தையும் வெறுப்பையும் மீறி,கண்களில் நேசம் தெரியுதே... அது பொய்யா.? முருகா... நான் பட்ட தெல்லாம் போதும். இனியும் சோதிக்காதே.. அவரோட என்னை சேர்த்து வெச்சிடு.. நான் குடும்பத்தோட வந்து உனக்கு பாலபிஷேகம் பண்றேன்..” புலம்பிக் கொண்டே உறங்காமலே இரவைக் கழித்தாள்..

அந்த வாரம் முழுவதும் மூன்று ஜோடிகளும் சேர்ந்து ஊர் சுற்றினார்கள்.. பார்த்தசாரதி கோயில், மகாபலிபுரம், பஞ்சவடி, இஸ்கான் டெம்பிள், மால், தீம் பார்க் என்று எல்லா இடங்களுக்கும் சென்றனர்.. கௌசல்யா, கௌசிக், ஷர்மிதா இருவரையும் அவர்களோடு அனுப்ப மறுத்து விட்டார்..

“அர்வி..! குழந்தைங்களை நான் பாத்துக்குவேன். துணைக்கு கமலா இருக்கா.. நீங்க தாராளமா எங்க வேணாலும் தினமும் போயிட்டு வாங்க.. வெயில்ல சுத்தினா குழந்தைங்களுக்கு சேராது.. சாப்பாடும் ஒத்துக்காது.. இத்தனை வருஷமா நம்ம வீடு, உணர்வே இல்லாம,வெறும் கட்டடமா இருந்தது.. இப்ப பாரு... இந்த செல்லங்களோட காலடி பட்டதும், எத்தனை உயிரோட்டமா மாறியிருக்கு.. வீடே என் மனசு மாதிரியே இப்ப நிறைஞ்சு போயிருக்கு.” என்றதும் அனைவருமே பதில் பேசாமல் ஷர்மி, கௌசிக்கை அவர் கையில் கொடுத்து விட்டு கிளம்பினார்கள்..

வாஸந்தி வந்த பிறகு, கௌசல்யாவிடம் முன்பு போலவே உணவு, மருந்து விஷயத்தில் கவனம் எடுத்துக் கொண்டாள். அதோடு குழந்தைகளின் வரவும் சேர, பழையபடி அவரின் ஆரோக்கியம் மீண்டிருந்தது.. கௌசிக்... இப்போதெல்லாம் பாட்டி இருந்தால் மட்டும் போதும்.. என்று அவரையே சுற்றி வந்தான்.. அவருக்கும் அதில் பெருமை.!

வெளியே ஒன்றாக சுற்றிய போதும், தேவைப் பட்டால் மட்டுமே வாஸந்தியிடம் அரவிந்த் ஓரிரு வார்த்தைகள் பேசினான்.. வாஸந்தியும்.. அவனை விட்டு விலகியே இருந்தாள்.. தன் வேதனையை மறைத்துக் கொண்டு, உற்சாகமாக வளைய வருவது போல் நடித்தாள்..

சுனில் இருந்ததால் அங்கு கலகலப்புக்கு பஞ்சமில்லை அவனோடு சேர்ந்து அவனுக்கு சமமாக அரவிந்தும் கொட்டமடித்ததுதான் எல்லேருக்கும் வியப்பாக இருந்தது.. கல்லூரி மாணவனாக இருந்த போது கூட இந்த அளவு உற்சாகமான அரவிந்தை யாரும் பார்த்ததில்லை.. அத்தனை சந்தோஷம்.! உற்சாகம்! ஆனந்தம்.! அவனைப் பார்த்தாலே ஐந்து வயது குறைந்தது போல இருந்தது.. அதைப் பார்த்த சங்கர் கூட இயல்பிலிருந்து மாறிப்போய் கலகலத்தான்.. அரவிந்த் அப்போதும் கூட வாஸந்தியிட மிருந்து ஒதுங்கியிருந்தான். மறந்தும் கூட ‘வசு’ என்ற அழைப்பு வரவில்லை... ஆனால் அடிக்கடி வீட்டுக்கு போன் செய்து, குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டேயிருந்தான்.

அவனின் ஒதுக்கம் வாஸந்தியை சோர்வடைய வைத்தது.. அன்றும் அந்த தீம் பார்க்கில் அதே போல அரவிந்த் அவளிடமிருந்து விலகி நடக்க,வாசந்தியின் கண்களில் நீர் கோர்த்தது. வாட்டர் கேம்ஸ் விளையாட, வேறு உடை அணிந்து வந்தனர். வாஸந்தி வர மறுத்து,

“நிவி, காயூ நீங்க ரெண்டு பேரும் போய் விளையாடுங்க.. நான் இங்கேயே இருக்கேன் லைட்டா தலைவலிக்குது..”

நிவியோ, “அடிக்கற வெயிலுக்கு கொஞ்சநேரம் தண்ணியில போய் நின்னா நல்லா இருக்கும்பா.. நீயும் வா.. சரியாயிடும்.. நீ மட்டும் தனியா...”

“பளீஸ்.. ஆர்க்யூ பண்ணாத நிவி... சுனில் அண்ணா! வரச்சொல்லி கையாட்டறார் பார். நீங்க போங்க.. நான் உங்களை பார்த்து கிட்டு இங்க தான் உட்கார்ந்திருக்கேன்.” வேறு வழியின்றி அருகில் இருந்த புல்தரையில் அமர்ந்த வாஸந்தியை விட்டு விட்டு நிவி, காயூ இருவரும் அவர்களோடு இணைந்து கொண்டனர்.. கால் மணி நேரத்துக்குப் பிறகு, வசு இல்லாததை கவனித்த அரவிந்த்,

“காயூ.! வசு எங்கம்மா.?”

“அவளுக்கு ரொம்ப தலைவலிக்குதாண்ணா.. வரலைன்னு அங்கேயே உட்கார்ந்திருக்கா” அவளிருக்கும் இடத்தை சுட்டிக் காட்டினாள்..

-26-

அவர்களின் உடைமைகளுக்கு அருகே, ரவிவர்மாவின் ஓவியப் பாவையாக, இலக்கின்றி எதையோ வெறித்துக் கொண்டு வாஸந்தி அமர்ந்திருந்த தோற்றம் அரவிந்தைக் கலக்கியது. மனம் பிசைய அவளை உற்றுப் பார்த்தான்.. அவளின் கண்கள் நீரில் பளபளப்பது போல தோன்றவும் பதறிப் போனான்.. சுனிலிடம் சொல்லிவிட்டு அவளருகே விரைந்தான்... அப்போதும் அவளின் கவனம் வேறெங்கோ இருக்க, அவளின் மிக அருகே சென்று அமர்ந்ததும், உள்ளுணர்வு உந்த திரும்பிய பார்த்து,அரவிந்தைக் கண்டதும் தடுமாறினாள்..

அவனை மறுபடி சந்தித்த பிறகு, இத்தனை நெருக்கத்தில் அவனைப் பார்ப்பது இதுவே முதல் முறை... வெளியே விழத் தயாராக இருந்த கண்ணீர்த் துளிகளை உள்ளிழுத்துக் கொண்டாள்..

அன்று முதல் நாள் அவன் பேசிய போது, “இனி ஒரு முறை என்னை ‘அர்வி’ என்று கூப்பிடாதே..” என்று கைநீட்டி எச்சரித்திருந்தான். அவனின் கடுஞ் சொற்கள், அவள் மனதை பலமாக காயப்படுத்தியிருந்ததால் அவனை ‘அர்வி’ என்று அழைப்பதையே நிறுத்தியிருந்தாள்..

கௌசிக்கிடம் மட்டுமே அரவிந்தின் தேவைகளை கேட்டு வரச் சொல்வாள்.. அதுவும் இந்த இரண்டு நாட்களும் முகம் வாடிப் போயிருந்தாள்... எதாவது கேட்டாலும், அவனைப் பாராமல் பதிலளித்துவிட்டு அவ்விடம் விட்டு விலகிவிடுவாள்.. அரவிந்தும் அதை உணர்ந்திருந்தான்..

“எதாவது வேணுமா” - அரவிந்த்..

வேண்டாம் என்று தலையசைத்த வாஸந்தியிடம்,

“நீ ஏன் விளையாட வரலை..”

“தலை வலி”

“காயூ அவ பேக்ல ஜெனரல் மெடிசின்ஸ் எப்பவுமே வெச்சிருப்பா... ஒரு டேப்லட் எடுத்துக்க. நான் போய் காஃபி வாங்கிட்டு வந்திடறேன்.. குடிச்சா கொஞ்சம் சரியாயிரும். சீக்கிரமா வீட்டுக்குப் போயிடலாம்.. சரியா.?” அவனையும் அறியாது குரல் கனிந்து ஒலித்தது..

அவனின் குரலில் அவன் மனதை புரிந்து கொண்ட வாஸந்திக்கு மகிழ்ச்சியில் மனம் பொங்கியது.. இத்தனை நாட்களாக மருகி மருகி தனக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் மொத்தமான பதில இன்று கிடைத்தது.

“ம்.. நீங்க போய் விளையாடுங்க. இப்ப தான் தண்ணி குடிச்சேன். டேப்லட் என் கிட்டயே இருக்கு.. அதை மட்டும் போட்டுக்கறேன்.. நீங்க வந்த பிறகு ஒண்ணா காபி ஷாப் போய்க்கலாம்.. நான் இங்கேயே இருக்கேன்..”

“சரி நாங்க பத்து நிமிஷத்தில் வந்திடறோம்.. இங்கேயே இரு” மனமில்லாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

வாஸந்தியின் கண்களில் கண்ணீர் பெருகிய அதே வேளையில், அவள் இதழ்கள் மலர்ந்து சிரித்தன. அவன் மனது புரிந்தது. இந்த ஐந்து நிமிடங்களில் அரவிந்த் அவளிடம் காட்டிய அக்கறையும், கண்களில் தோன்றிய தவிப்பும் தான் உண்மை. அன்று அவன் பேசிய அத்தனை கடுஞ்சொற்களையும் அது பொய்யாக்கியிருந்தது. ‘அவன் மனதில் இன்னும் நான் இருக்கிறேன்’ என்ற நினைப்பில் குளிர்ந்து போனாள். இனி அவன் எத்தனை முறை திட்டினாலும் கோபித்தாலும் ஏன் அடித்தாலும் கூட அவளை அது பாதிக்காது என்ற நினைவில் நிம்மதியானாள்.

அரவிந்திற்கு அதற்கு மேல் விளையாட்டில் நாட்டமில்லாமல் போக, சிறிது நேரத்திலேயே,

“போதும் சுனில்... போகலாம்.. குளிருது.. சூடா காபி குடிக்கணும் போல இருக்கு. வாங்க...” அரவிந்தை சுனில் கேலியாக,

“டேய்.. அடங்குடா... காபி யாருக்குன்னு பச்சப் புள்ளய கேட்டா கூட சொல்லும்.. ஆனா உனக்கு குளிர் விட்டுப் போய் ரொம்ப நாளாச்சு. நானும் இந்த ஒரு வாரமா உன்னை நோட் பண்ணிகிட்டு தான் இருக்கேன். என் தங்கையை ரொம்ப தான் டார்ச்சர் பண்ற மாதிரி தெரியுது.. உனக்கு அத்தனை கோபம் இருந்தா, அவளை வரவேண்டான்னு வீட்லயே விட்டுட்டு வரவேண்டியது தானடா.. கூட்டிட்டு வந்து ஏன் அவமானப் படுத்தற...