• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 4

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India
அத்தியாயம் 4

தன் மனதில் இது நாள் வரை மறைத்து வைத்த காதலையெல்லாம் கண்களில் தேக்கி, “வசு! மை லவ்....” என்று அவள் கரம் பற்றினான். அவனின் குழைந்த குரலில் விதிர்த்துப் போனவளாய், காபிக் கோப்பையை அவன் கரங்களில் திணித்து விட்டு, சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

கௌசல்யாவோடு கோவிலுக்குள் நுழைந்த போது, திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. முக்கியமான சடங்குகள் நிறைவடைந்த பின், பொன் தாலி, கோர்த்த மஞ்சள் கயிறை அரவிந்தின் கரங்களில் கொடுத்தார். மனம் முழுக்க பரவசம் பொங்க, தனக்கே உரிய, தன் உயிரான வாஸந்தியின் கழுத்தில் இறைவனைப் பிரார்த்தித்து திருமாங்கல்யத்தை பிரியத்தோடு அணிவித்தான்.

யாரும் அறியா வண்ணம் அவள் சங்குக் கழுத்தை வருடிய அரவிந்த், “ஐ லவ் யூ வித் ஆல் மை ஹார்ட் மை டியர் வசு.” என்று அவள் காதருகில் கிசுகிசுசுத்தான். அவனின் மனதை வருடும் மாயக் குரலில் அவளையறியாமலேயே இதழ்கள் மலர்ந்து விரிந்தன. முகம் சிவக்க தலைகுனிந்த வாஸந்தியை ரசனையுடன் பார்த்தான். இருவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்ட கௌசல்யா, இனி இவர்கள் வாழ்வு மலர்ந்து விடும் என்ற நம்பிக்கையுடன் தன் பாதம் பணிந்த இருவரையும் மனதார ஆசிர்வதித்தார்.

மதியம் வீட்டில் கமலாவின் மேற்பார்வையில், கேட்டரிங் ஆட்களின் உதவியோடு மிகப் பெரிய விருந்து தயாரானது. வந்திருந்த விருந்தினர்களும், மதிய உணவு முடிந்ததும் மணமக்களை வாழ்த்தி விடை பெற்றனர். பெரிய கடமை ஒன்றை நிறைவேற்றிய நிம்மதியில் களைப்பும் சோர்வுமாக சோபாவில் சாய்ந்தவரிடம் வாஸந்தி ஓடி வந்தாள்.

“அம்மா. என்னம்மா பண்ணுது? டேப்லட் எடுக்க மறந்திட்டீங்களா? ரொம்ப ஓய்ந்து போய் தெரியறீங்க... படபடத்தவளிடம்

“எனக்கு ஒண்ணுமில்லை கண்ணம்மா. இரண்டு நாளா கொஞ்சம் அதிகமா அலைஞ்சதில டயர்டா இருக்கு. அவ்வளவு தான். ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். அரவிந்த் சரியாகவே சாப்பிடலை. நீயும் தான். ஃப்ரிஜில் ஜுஸ் இருக்கு. ரெண்டு பேரும் குடிங்க. நான் என் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கறேன்.

அவரது பேச்சை தட்ட முடியாமல், ஜுஸ் டம்ளரோடு அவன் அறை முன் நின்று, அறைக் கதவை மெல்ல தட்டினாள். ‘யெஸ் கமின்’” என்ற குரலில் தயக்கத்துடன் நுழைந்தவளைப் பார்த்ததும் திகைத்துப் போனான்.

தன் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து நின்று, இரு கைகளையும் விரித்து, மகிழ்ச்சி பொங்க,

“வெல்கம் டு அவர் ரூம், மை பிரின்சஸ்” என்று அவளருகில் வந்தான். டம்ளரை கையில் எடுத்த அரவிந்தின் பார்வையில் முகம் சூடாக, அவனை ஏறிட்டுப் பார்க்க துணிவின்றி, ஜன்னலருகே நகர்ந்து தோட்டத்தை வெறித்தாள். அவன் பார்வை அவள் முதுகைத் துளைப்பதை உணர்ந்து உடல் கூசிச் சிலிர்த்தது. அவள் மனதிலோ குழப்பம் மண்டியது.

அவன் மேல் இது நாள் வரை தான் கொண்டிருந்த கோபம், எங்கே போனது? தான் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்கள் மலையளவு இருக்க, அவன் பார்வைக்கே தன் மனது இத்தனை மயங்குகிறதே என்று தன் மேலேயே கோபம் வந்தது. கண்களில் நீர் முட்டியது.

‘ஐந்து வருடங்களாக நான் பட்ட துயரமும் வேதனையும் அதற்குள் மறந்து போனதா? நேந்று வரை அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மேல் இருந்த கோபம் கடுகளவும் குறையவில்லையே. இன்று எனக்கு என்ன ஆனது? இவனைப் பார்த்தாலே மனம் தடுமாறுதே! இது தான் மஞ்சள் கயிறு மேஜிக்கா? இனி இவனைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற என் வீராப்பு எங்கே போனது’. அவனது எண்ணங்கள் இடைவிடாது பயணித்துக் கொண்டே போனதில் சுற்றுப் புறம் மறந்து போனது.

அவளை இத்தனை நேரமாக இமையாது பார்த்த அரவிந்த், அவன் மனதில் ஓடும் எண்ணங்களை துல்லியமாக புரிந்து கொண்டான். இளம் முறுவலோடு அவள் தோள் பற்றி தன் புறம் திருப்பினான். உணர்ச்சி வேகத்தில் பட்டாம் பூச்சியாய் படபடத்த இமைகளின் மீது அழுத்தமாக தன் இதழ்களைப் பதித்து, அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அவள் உச்சியில் இதழ் பதித்த அரவிந்துக்கு இந்த உலகமே அவன் காலடியில் சேர்ந்த பெருமிதம்! அணைப்பு இறுகியது. அவன் கைகளின் ஸ்பரிசத்தில் வாஸந்தி நெகிழ்ந்து போனாள்.

தாபம் பொங்க, “வசு... மை லவ்... என் மனசில நிம்மதி தொலைஞ்சு போய் அஞ்சு வருஷமாச்சு. இந்த குட்டி மண்டைக்குள் இத்தனை நேரமா என்ன யோசனை? ம்... அதையெல்லாம் விட்டுத் தள்ளு. நாம இப்ப நமக்கேயான புது உலகத்தில் காலடி எடுத்து வெச்சிருக்கோம். இனி நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். உன்னோட எல்லா சஞ்சலங்களையும் இப்பவே மூட்டை கட்டி வெச்சிடு. நான் எதாவது தப்பு செஞ்சதா நீ நெனைச்சிருந்தா, அதுக்காக நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கிறேன். ரியல்லி சாரிடா”. இடை பற்றி தன்னருகே இழுத்து, அவனின் முகம் நோக்கி குனிந்ததும், வாஸந்தியின் மயக்கம் முழுவதுமாகக் கலைந்திருந்தது.

இதே முகம் தானே அன்று, கோபம் கொப்பளிக்க, ’யாரு மேடம் நீங்க? பர்மிஷன் கேட்காம உள்ள வரக் கூடாதுன்னு கூட தெரியாதா? வெளியே போங்க. எதுன்னாலும் என் செகரெட்டரிகிட்ட பேசுங்க. நான் இப்ப ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்’ என்று கடித்துத் துப்பியது. அந்த நாள் நினைவுக்கு வந்ததும், அவன் மார்பில் கை வைத்து அவனை பலமாக தள்ளி விட்டாள். அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒரே ஓட்டமாக கீழே ஓடி விட்டாள். அவனுடைய உணர்வுகள் அனைத்தும் வடிய, நடந்ததை நம்ப முடியாமல், முகம் இறுக கட்டிலில் அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான்.

வாஸந்தியின் மனம் தன்னை கணவனாக, ஏன் ஒரு மனிதனாகக் கூட மதிக்கவில்லை என்பது தெளிவானதும் திகைத்துப் போனான். தன் முகம் பார்த்து பேசக் கூட விருப்பமில்லாமல் ஒடுபவளையே வெறித்தான். இந்த அளவு வெறுக்கும்படி தான் செய்த தவறு என்ன என்று எத்தனை யோசித்தாலும் அரவிந்துக்கு புரியவேயில்லை. ஐந்து வருடங்களுக்கு முன் தன் காதலியாய் தன்னைச் சுற்றி சுற்றி வந்த வாஸந்தியா இப்படி நடந்து கொள்வது என்ற அதிர்ச்சியில் செயல் இழந்து போனான்.

தன் தாயின் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான், வாஸந்தி தன் கையால் மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. மனதில் வெறுமை சூழ, சற்று முன் அனுபவித்த மகிழ்ச்சியெல்லாம் வடிய, வருத்தத்தோடு அமைதியாக உடை மாற்றிக் கொண்டு, அலுவலகம் கிளம்பினான். அவள் மனம் மாறும் வரை தானும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்ற உறுதியோடு கீழிறங்கினான்.

ஃபார்மல் உடையில் கீழே வந்த அரவிந்தைப் பார்த்து திடுக்கிட்ட கௌசல்யா,

“அரவிந்த்... என்ன கண்ணா? எங்கே கிளம்பிட்ட? இன்னிக்கு நீ வீட்ல தான இருக்கணும். நீ....

“அம்மா... சாரி. ஆபீசில் ஒரு முக்கியமான பிரச்சனை. அதோட புது கிளையண்ட் ஒருத்தரை நான் மீட் பண்ணனும். பெரிய வொர்க். அந்த ஆர்டர் கிடைச்சா நமக்கு ரொம்ப நல்லது. வழக்கம் போல நான் வர லேட்டாகும். எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். சாப்பிட்டுட்டு தூங்குங்க. பைம்மா...” வாஸந்தியை திரும்பியும் பாராமல் காரில் ஏறிச் சென்று விட்டான்.

தன் பாராமுகம் தான் இதற்கு காரணம் என்பது வாஸந்திக்கு புரிந்தது. கண்களில் நீர் மல்க இலக்கின்றி வெறித்தாள். அரவிந்தின் செயலில் சற்றே மனம் கலங்கியது. ஆனால் கடந்த கால துயரங்கள் அவள் நினைவைப் புரட்டிப் போட்டது.

அரவிந்தோடு இயல்பாக பொருந்தி வாழ தன்மான இடம் கொடுக்கவில்லை. அதே சமயம் தன் மனதில் ஸ்திரமாக பதிந்திருந்த அரவிந்தை தூக்கி எறியவும் முடியாது தவித்தாள். வந்து படுக்கையில் விழுந்த அவளை உறக்கம் தழுவியது.

அரவிந்தின் செயலால் கௌசல்யாவும் குழம்பினார். இருவருக்குள்ளும் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது. கோயிலுக்கு போக சீக்கிரம் வரும்படி அரவிந்திற்கு போனில் உத்தரவிட்டார்.

அரவிந்த் நிலையோ பரிதாபமாக இருந்தது. ’வீட்டுக்குச் சென்றால் தன்னோடு கோயிலுக்கு கிளம்ப வாஸந்தி சம்மதிக்க மாட்டாள். போகாவிட்டால் அம்மா கோபித்துக் கொள்வார்கள். என்ன செய்யலாம்?’ என்று யோசித்து, அம்மாவின் கோபத்தை சமாளிப்பது எளிது என்று தாமதமாக வீடு திரும்பினான்.

அவன் வர லேட்டானதும் கௌசல்யா, ”வாஸந்தி, அவனுக்கு வேலை நெட்டி முறிக்குதாம். அதனால லேட்டா தான் வருவான். ஆபீஸ் போயிட்டா அவனுக்கு வீடே மறந்து போகும். அதனால தான் இன்னிக்கு போக வேண்டான்னு தடுத்தேன். கேட்டா தானே? வரட்டும்”. கோபத்தில் பொரிந்து தள்ளினார். கோயிலுக்கு தயாராகும் மருமகள் ஏமாந்து போவாள் என்ற ஆதங்கமும் கூட.

ஆனால் அரவிந்தன் மனம் புரிந்த வசு, “அதனால் என்னம்மா..? அவர் பாவம். அங்க என்ன முக்கியமான வேலையோ? வர முடிந்திருந்தால், கண்டிப்பா வந்திருப்பார். நீங்க வாங்க. டேப்லட் தரேன். அப்ப தான் இன்னும் அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்” என்று சமாதானப் படுத்தினாள்.

நள்ளிரவு தாண்டியும் அரவிந்த் வீடு வந்து சேரவில்லை மருந்தின் ஆதிக்கத்தில் கௌசல்யா நன்றாக உறங்கி விட்டிருந்தார். அதற்கு முன் வாஸந்தியை வற்புறுத்தி சாப்பிட வைத்து, தன்னுடனேயே படுக்க வைத்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து தான் இருவரும் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். வாஸந்திக்கு பல வித எண்ணங்களால் உறக்கம் கலைந்து போனது.

உடலோடு சேர்ந்து மனதும் களைத்திருக்க, சோர்ந்து போய் வீடு திரும்பிய அரவிந்தை இருளும் தனிமையுமே வரவேற்றது. ஆனால் கார் சத்தம் கேட்டதுமே விழிப்பு வந்ததால், தன் அருகே உறங்கும் வாஸந்தியை தொந்திரவு செய்யாமல், கௌசல்யா எழுந்து வந்தார். மகனின் முகத்தைப் பார்த்து, கோபிக்க மனமின்றி, மௌனமாக டிபனை பரிமாறினார்.

உடை மாற்றி, முகம் கழுவி வந்த அரவிந்த், வாஸந்தியை அறையில் காணாமல், இயல்பாய் எழுந்த ஆர்வத்தில்,

“ வசு எங்கேம்மா? தூங்கிட்டாளா? ”

“நீ உன் இஷ்டப்படி நடு ராத்திரியில் வந்து கதவைத் தட்டினா, அது வரை அவ ஏன் முழிச்சிருக்கணும்? அதான் என் ரூம்லயே படுத்து தூங்கச் சொன்னேன். கோயிலுக்கு போலான்னு எத்தனை ஆசையா இருந்திருப்பா? ம்... பாவம் அர்வி. அப்பக் கூட உனக்கு சப்போர்ட்டா தான் பேசினா?”.

அப்படி அவ ஆசைப்பட்டிருந்தா நான் இன்னிக்கு வெளியே போக அவசியமே இல்லையே என்ற வேதனையை தோசையோடு சேர்த்து விழுங்கி விட்டு,

“டேப்லெட் எல்லாம் கரெக்டா எடுத்து கிட்டீங்களா?”

“என் டாக்டர் மருமகளுக்கு இங்கே அதைத் தவிர வேற என்ன வேலை சொல்லு? அதெல்லாம் கரெக்டா பார்த்து கொடுத்திட்டா”.

சாப்பிட்டு முடித்ததும், தன் காதல் மனைவியைப் பார்க்கும் ஆசையை கட்டுபடுத்த முடியாமல், மெதுவாக தாயின் அறைக்குள் நுழைந்தான். அதைப் பார்த்தும் பார்க்காதது போல கௌசல்யா சமையலறைக்குள் புகுந்தார்.

தலையணையை கட்டிப் பிடித்து குழந்தையாக உறங்கும் ஆசை மனைவியை விழியகலாது பார்த்துரசித்த அரவிந்த்,அவளருகில் சென்று போர்வையை சரியாகப் போர்த்தி விட்டு, குனிந்து மென்மையாக அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான். அவள் கன்னங்களை அவனது விரல்களை தாமாக வருடியது. ஏதோ ஒரு வித அமைதி சூழ, நிம்மதியாக தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான்.

ஐந்து வருடங்களுக்கு முன் தான் உருகி உருகிக் காதலித்து மணந்த தன் தேவதைப் பெண், இன்று தன்னை நிமிர்ந்து பார்க்கக் கூட விருப்பமின்றி வளைய வருவதைக் காணச் சகியாமல், தினமும் இரவு அவள் உறங்கிய பின் வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். ஆசையாகப் பேசா விட்டாலும், ஒரு மனைவியாக சில கடமைகளைக் கூட செய்ய மறுத்து விலகுபவளைக் கண்டு மனம் நொந்து போனது.

நாளாக ஆக இருவரின் போக்கும் கௌசல்யாவுக்கு கவலையை அளித்தது. நிலைமை இப்படியே நீடித்தால் விபரீதம் தான் என்பதால், உடனே குடும்ப ஜோதிடரை சென்று சந்தித்தார். அன்றே நாள் மிகவும் நன்றாக இருக்கிறது என்றதால், அரவிந்தை அழைத்தார்.

“அர்வி...! நீ இன்னிக்கு ஆபீஸ் போக வேண்டாம்”

“அம்மா. இன்னிக்கு....”

“அர்வி... கல்யாணம் ஆன நாள் முதலாய், உனக்கு தினமும் வீட்டுக்கு கூட வர முடியாத படி, ஏதோ ஒரு அவசர வேலை இருந்துகிட்டே தான் இருக்கு. ஆபிஸ் பத்தி எனக்கும் தெரியும். நீ படிக்கும் போதே, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நான் தான் எல்லாத்தையும் கவனிச்சுகிட்டு இருந்தேன். ஆனால உன் முக்கியமான வேலையை எப்படி நடத்தி மூடிக்கணும். னு எனக்கு தெரியும். ஜி யெம்மை வரச் சொல்லி போன் பண்ணிட்டேன்”.

திகைத்துப் போனவனாய், “அம்மா....”

“வேற வேலை இருந்தா பார் அர்வி. சாயங்காலம் கோயிலுக்கு போகணும். இரண்டு பேரும் ஐந்து மணிக்கே கிளம்பிடுங்க. அஷ்டலஷ்மி கோயிலுக்கு போயிட்டு எட்டு மணிக்குள்ள வீடு வந்து சேரணும்”.

வாஸந்தி, “அம்மா. நீங்களும் கூட வாங்க. சேர்ந்து போகலாம்.

“இல்லைடா. முதல் தடவை வெளியே போறீங்க. நீங்க மட்டும் போயிட்டு வாங்க. தவிரவும் எனக்கும் இங்க ஒரு சின்ன வேலையிருக்கு முடிச்சு வைக்கிறேன். நைட் டின்னர் வீட்லதான். வந்திருடுங்க”.

கௌசல்யாவின் வற்புறுத்தலில், திருமண உடை அணிந்து காரில் அவன் அருகில் அமர்ந்தாள். அவனுடன் தனியாக வெளியே செல்வது தயக்கத்தை ஏற்படுத்த, சில்லிட்டிருந்த தன் விரல்களை ஆராய்ந்த படியே அமர்ந்திருந்த வாஸந்தி, தலையை உயர்த்தியும் பார்த்தாளில்லை. இப்படி ஒரு திருமண வாழ்வை கனவிலும் கூட நினைத்துப் பார்க்காத அரவிந்த், மனம் நொந்தபடியே தான் காரைச் செலுத்தினான். எதுவும் பேசாவிட்டாலும், மனம் கவர்ந்தவனின் அருகாமையும், அவளிடமிருந்து வந்த மல்லிகையின்மெல்லிய நறுமணமும் இதமளித்தது.

அரவிந்த் கோயிலுக்கு அடிக்கடி வரும் பழக்கத்தால், அவனுக்கு கிடைத்த மரியாதையைக் கண்டு வாஸந்தி பிரமித்துப் போனாள். தங்கக் காப்பு அலங்காரத்தில் அஷ்ட லஷ்மிகளும் அழகாய புன்னகைத்து அருள் பாலித்தனர். அதுவே வாஸந்தியின் மனதுக்கு ஏதோ ஒரு வகையில் நிறைவைத் தந்தது. மனம் நெகிழ, “அம்மா. இவர்களுக்கு பந்தம் இறுகி, பிரிக்க முடியாமல் போவதற்குள் நான் இங்கருந்து வெளியே நீ தான் துணை புரிய வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை அன்னை முன் சமர்ப்பித்தாள்.

அரவிந்தோ, வாஸந்தியோடு தன் திருமண வாழ்வைப் பற்றி தான் கற்பனையில் எண்ணிப் பார்த்தது கானல் நீராகப் போன நிராசையில் திரும்பி அவளைப் பார்த்தான். அழகுச் சிலையாக கண் மூடி அவள் நின்ற கோலத்தில் தன் மனதைப் பறி கொடுத்த அரவிந்த், தானும் கண் மூடி,

நான் மனதால் கூட இதுவரை யாருக்கும் தீங்கு நினைத்தில்லையே. என்னை ஏன் சோதிக்கிறாய்? என் மனம் போல திருமண வாழ்வு அமைந்தும் நிறைவாக மன

மொத்து வாழ முடியாமல் தவிக்கிறேனே. என் வசுவுக்கு என் மேல் எந்த கோபம் இருந்தாலும் அதை தணிய வைத்து, என்னோடு சேர்த்து வைத்து விடு என்று வேண்டிக் கொண்டான். மனதிலிருந்த சஞ்சலமெல்லாம் பறந்தோட, அமைதியடைந்தான்.

இரவு உணவு முடித்ததும், எளிமையாக வாஸந்தியை அலங்கரித்து, பூஜைறையில் விளக்கேற்றச் செய்தார்.

“வாஸந்தி... கண்ணம்மா. உனக்கும் அர்விக்கும் ஏதோ சரியில்லை என்பது புரியுது. ஆனா அதையெல்லாம் இன்னியோட மறந்திடுங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் வைக்கிற அன்பும், நம்பிக்கையும் எப்பவுமே சிதையக் கூடாது. இரண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க... அம்மாடி... எனக்காக உன்னை கொஞ்சம் மாத்திக்க. அர்வி இந்த நிமிஷம் வரை உன் மேல உயிரையே வெச்சுருக்கான். அது எனக்கு நிச்சயமா தெரியும்.

தாம்பத்யம் ஜெயிக்கணும் னா விட்டுக் குடுத்துப் போகணும்பா. நான் சொல்றது புரியுதா. சீக்கிரமா எனக்கு ஒரு பேரனைக் குடு. என் மகன் வாழ்வு வீணாப் போயிடு

மோன்னு வேதனையோடு குமுறிக் கிட்டு இருந்தப்போ தான் தேவதையா நீ இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்ச. வீடே லஷ்மிகரமா மாறிடுச்சு. அவன் மனசு போல நடந்துக்க. இதை உன் மாமியாரா இல்லாம அம்மாவா சொல்றேன்” என்று ஆசையோடு அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அரவிந்தின் அறைக்கு போகச் சொன்னார்.

மனதில் பதட்டமும், கண்களில் கலக்கமுமாக வாஸந்தி கையில் பிளாஸ்க்கோடு அரவிந்தின் அறைக்குள் நுழைந்தாள். கௌசல்யாவின் அறிவுரையால், அவள் மனதிலும் மெல்லிய சலனம். அவனை நிமிர்ந்து பார்க்க தயங்கியவளாய் கைகள் மெல்ல நடுங்க கதவருகே நின்றாள். ஓவியப் பாவையாக எந்த ஒப்பனையும் இன்றி எளிய அலங்காரத்தில் உள்ளே நுழைந்தவளை அரவிந்தின் கண்கள் ஆசையோடு அள்ளிப் பருகின.

அவளின் பாராமுகம் அவன் முகத்தை இறுகச் செய்தது. ஆனாலும் மெல்ல அவளருகில் சென்று

“வசு....” என்றழைத்தவனின் குரலில் அத்தனை மென்மை! இமைகள் படபடக்க நின்றவனின் கரம் பற்றி,

“வசு டியர்...! இங்கே வா... சோபாவில் அமர வைத்து அவளருகே அமர்ந்தவனின் பார்வை வாஸந்தியின் மீது ஆவலாகப் படிந்தது. அவள் கையை மென்மையாக வருடி,

“வசும்மா. உன் கிட்ட நான் கொஞ்சம் மனசு விட்டுப் பேசணும். நான் பேசறதை முழுமையா கேள். இந்தக் கல்யாணம் உனக்குப் பிடிக்கலைன்னு எனக்கு நல்லா தெரியுது. காலேஜ்ல படிக்கும் போது நடந்த எதையும் நீ மறந்திருக்க முடியாது. இல்லையா...? நம்ம நேசம் உண்மையானது. நம்பற தானே. ஐ லவ் யூ வசு. இப்பவும்… எப்பவும்…” உணர்ச்சி வசப்பட்டு குரல் கரகரக்க அவள் விரல்களில் முத்தமிட்டான்.

“நடுவில ஏதேதோ நடந்து நம்மள பிரிச்சிடுச்சு. இரண்டு பேருமே கெட்ட கனவா நெனச்சு அதை மறந்திடலாம். இனிமே புத்தம் புதுசான ஒரு வாழ்க்கை இன்னிலிருந்து ஆரம்பிக்கலாம். நாம படிக்கும் போது உன்னைக் காதலிச்சதை விட பல மடங்கு அதிகமா இப்ப உன்னை விரும்பறேன்டா. உனக்கு என் மேல எதுக்கு இத்தன கோபம்னு சத்தியமா எனக்கு தெரியலை. அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் டிரெய்னில் முதன் முதலா உன்னப் பார்த்து ஆசையா பேச வந்தப்ப அறிமுகமே இல்லாதவனைப் பார்க்கிற மாதிரி என்னை முறைச்ச பாரு..! நான் செத்துட்டேன் வசு.

ஆனா அன்னிக்கு எப்படியாவது உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போற முடிவோட தான் இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்திருச்சு. ப்ளீஸ். என்னை மன்னிச்சிடு. நம்ம சந்தோஷத்தில தான் அம்மாவோட நிம்மதி இருக்கு. என்னை விட உன் மேல தான் அதிகமா பிரியம் வெச்சிருக்காங்க. உன் மனசுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். ப்ராமிஸ். சரியாடா...” ஆசையும் ஆர்வமுமாக வாஸந்தியின் முகத்தையே பார்த்தான்.

அவள் விரல்களோடு கோர்த்திருந்த அரவிந்தின் விரல்களை விலக்கிய வாஸந்தி,

“சாரி...! என்னை மன்னிச்சிடுங்க அர்வி. என்னால இங்க இயல்பாகவே இருக்க முடியலை.”

ஐந்து வருடங்களுக்குப் பிறகு, அர்வி என்ற அவனின் இயல்பான அழைப்பு சங்கீதமாய் அவன் மனதை நிறைத்தது. தாபம் பொங்க அவளை இழுத்தணைத்து அவளின் அழகிய வதனத்தை இரு கைகளிலும் ஏந்தி, தன் மொத்தக் காதலையும் கண்களில் தேக்கியவனாய் அவள் அதரங்களில் அழுந்த முத்திமிட்டான்.

“வசு...! மை லவ்....” என்ற ஆழ்ந்த குரலில் தன்னையும் மீறி ஒரு நொடி மயங்கிய வாஸந்தி, பின் சுதாரித்துக் கொண்ட, வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.

“ச்சீ...” என்ற அவளின் ஒற்றை வார்த்தை அவன் அத்தனை மயக்கங்களையும் துடைத்தெறிந்தது.

எதுவும் புரியாதவனாய், ‘வசு...’ என்ற அரவிந்தின் அதட்டல், மேலும் அவள் கோபத்தை கிளர, முகச் சுளிப்போடு விலகி அமர்ந்தாள்.

“என்னடா....! என்னாச்சு....”

“வேணாம்... பிடிக்கல விட்டுருங்க. எனக்கு வெறுப்பா இருக்கு” அவன் முகம் பாராது முணுமுணுத்தவளை புன்சிரிப்போடு நெருங்கிய அரவிந்த்,

“ஹே... சரி... நீ என்னை எந்த அளவுக்கு வெறுக்கறன்னு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணி பார்த்திடலாம். அவளது இடையை வளைத்து தன்னருகே இழுத்து தன் மார்போடு சேர்த்தணைத்து, அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவனின் அருகாமையில் மென்மையான ஸ்பரிசத்தில், அவனை விலக்க வேண்டும் என்ற நினைவு கூட எழாதவனாய் மலங்க மலங்க விழித்தாள். வாஸந்தியின் கண்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் தான் உருகி உருகி காதலித்த அர்வி மட்டுமே தெரிந்தான். விழிகள் சாஸராய் விரிய, அரவிந்தின் அணைப்பில் நெகிழத் துவங்கியவளைப் பார்த்து முகம் கனிய, குனிந்து அவள் விழிகளில் முத்தமிட்டான்.

“வேண்டாம்.. கூடாது... இது தப்பு....” என்று அறிவு எச்சரித்ததை மனம் உதாசீனப்படுத்தத, அவளின் கண்கள் கலங்கி முகம் சிவந்தது.

“வசு... டியர்... ஐ லவ் யூ.....” அவன் கரங்கள் அவனின் இடையில் அழுத்தமாகப் பதிந்து அழுந்தியபோது, மயக்கம் முற்றிலும் தெளிய அதிர்ந்து போனாள்.

“ப்ளீஸ்.... குரல் நடுங்க. அவனிடமிருந்து விலகினாள்.

“என்ன வசு...”

அதற்குள் பழைய நிமிர்வுடன், “அர்வி...! தள்ளிப் போங்க. இனி ஒரு தடவை உங்க கை என் மேலபட்டா, கண்டிப்பா நான் என்னையே அழிச்சுக்குவேன். என்னோட பலவீனத்தை உங்களுக்கு சாதகமாக்கி, மனைவியா என் உடம்பை வேணா ஜெயிக்கலாம். ஆனா... என். எ...ன் மனசை என்னிக்கும் நீங்க நெருங்கவே முடியாது”.

உணர்வுகள் வடிய, கண்களை இறுக மூடி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படி ஒரு அவமானத்தை தாங்க முடியாமல் முகம் இறுக, அவளிடமிருந்து விலகி கட்டிலில் அமர்ந்தான்.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,121
679
113
Ariyalur
அருமை அம்மா, அட ஆண்டவா என்னதான் அப்பாடி பெரிய பாதகம் நடந்ததோ தெரியலையே, writer அம்மா ரெம்ப ரகசியம் காக்குறீங்க 🙄🙄🙄🙄🙄🙄