• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம் 15

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"ஆண்கள் வெட்கப்படும் போது கூட அழகாத் தான் யா இருக்கு" என்று யோகன் ரசனையாகக் கூறிட, கபி அதிர்ச்சியும், கலவரமுமாக தாராவை நிமிர்ந்து பார்த்தான்.

அவளின் முகமும் வெட்கத்தில் சிவந்திருந்தது. இப்போது அவன் கண்களை நேருக்கு நேர் காண முடியாமல் அவளது கண்கள் நர்த்தனம் ஆடிட அதில் தொலைந்தவன் மெய் மறந்து அவளையே பார்த்திருந்தான். அந்த நொடி அவனுள் தோன்றிய உணர்வுகளுக்கு பெயரிட்டு வார்த்தைகளால் வடிவமைக்கத் தெரியவில்லை அவனுக்கு.

"சார் டைம் ஆகுது... Otp சொல்லுங்க சார்?" என்று டாக்ஸி ஓட்டுனர் அழைத்திட,

"யோவ்... அவங்கள ஏன்யா தொந்தரவு பண்ணுறே!!! ஆமா!!! அது என்ன கார் ஓட்டுறதுக்கு கூட otp கேக்குற... பணம் கட்டும்போது, டிக்கெட் புக் பண்ணும் போது கேக்குறாங்க சரி... நீங்க என்னடானா கார் ஓட்றதுக்கெல்லாம் otp கேக்குற?" என்று யோகன் விவரம் கேட்டு ட்ரைவரை குடையத் தொடங்கினான்.

அதற்குள் கபி தன்னுணர்வு பெற்றவனாய், "சரி..... வா... உன்னை உங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு நாங்க வீட்டுக்குப் போறோம்" என்றிட, தாராவும் சம்மதித்தாள். அவளும் அந்த யோசனையில் தான் இருந்தாள். ஆனால் மிர்லா கோபமாகச் செல்லவும், கபியிடம் தன்னை ட்ராப் செய்ய சொல்லி உதவிகேட்க தயங்கினாள்.

முன்னிருக்கையில் ட்ரைவருடன் யோகன் அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் கபியும், தாராவும் அமர்ந்து கொண்டனர். தாராவை அவள் இல்லத்தில் விட்டுவிட்டு கபி தன் இல்லத்தின் முன் வந்து இறங்க, அங்கே இந்தர் பால்கனி வழியாக மிர்லாவின் அறைக்குள் நுழைவதைக் கண்டான்.

யோகனை அழைத்துக் கொண்டு தனதறைக்குச் செல்ல, யோகனோ "உப்பிலி இங்கே வரலேயா?" என்றிட, "இன்னு கொஞ்ச நேரத்துல வந்திடுவார்!!" என்று சிரித்துக் கொண்டே கூறினான் கபி.

அவன் கூறியது போலவே பக்கத்து அறையில் திடீரென தடாபுடாலாக சத்தம் கேட்க இருவரும் கூடம் வந்து பார்க்க, இந்தர் அந்த அறையில் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று வெளியேறி வந்தான்.

தன்னைப் பார்த்து கபி சிரிப்பதையும், யோகன் குழப்பமாகப் பார்ப்பதையும் கண்ட இந்தர் உணவு மேசையில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து மடமடவென தண்ணீரை மண்டிவிட்டு, யோகனைப் பார்த்து "அமைதியான பொண்ணு சொல்லி என் தலையில கட்டி வெச்சிட்டியே!!! உள்ளே போனா அடிக்கிறா!!!" என்று முணுமுணுக்க, அறையிலிருந்து அவளது ஹார் ஸ்ப்ரே பறந்து வந்து இந்தரின் தலையில் விழுந்தது.

"ஸ்ஸ்ஸ் அம்மே..." என்ற கத்தலோடு இந்தர் தன் தலையை தேய்த்துக் கொள்ள யோகனோ சந்தோஷமாக சிரித்துக் கொண்டே "இந்த சுந்தரிய பாக்கத்தானே தவம் கெடந்தோம்... பரவாயில்லே டா வந்த அஞ்சு மாசத்துலேயே பழைய சுந்தரியா மாத்திட்டேயே!!!" என்று தன் தம்பியின் தோளைத் தட்டிக் கொடுக்க,

"உன் மூஞ்சி... போடாங்ங்ஙக..." என்று கூறி தலையில் கை வைத்தபடி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, "அப்போ நான் காலியா!?? தினமும் அடி வாங்குறது தான் என் பொலப்பா?" என்று உண்மையாகவே விழிகள் பிதுங்கி வினவினான்.

யோகனும் கபியும் இந்தரைப் பார்த்து சிரித்திட, இந்தர் இருவரையும் முறைத்தான். "இந்தர் நீங்க மிருவைத் தேடி தான் இங்க வந்திங்களா!!! இல்லே வந்த இடத்துல மிருவை மீட் பண்ணினிங்களா?" என்று கபி தன் பயத்தை கேள்வியாய் கேட்க, கபியின் பயம் எதனால் என்பதை உணர்ந்த இந்தர்,

சின்ன சிரிப்போடு "சுண்டுவுக்காக மட்டும் தான் இங்கே வந்தேன். ப்ராஜக்ட் விசயமா ஆஸ்ட்ரேலியா போக வேண்டி இருந்தது. கோவை ஆபிஸ்ல இருந்து யாராவது ஒரு ஆள் உங்க கூட வருவாங்கனு சொல்லி நாலு பேர் பத்தின டீடெய்ல்ஸ் மெயில் அனுப்பியிருந்தாங்க... அதுல சுந்தரிய பாத்ததும் செம ஷாக்... எனக்கு சுந்தரின்ற பேரைத் தவிர வேற எதுவும் தெரியாது...

அதுல என்னடானா மிர்லானு பேர் இருந்திச்சு... பல குழப்பங்களுக்கு பிறகு, நேர்ல பாத்து முடிவு பண்ணிக்கலாம்னு எனக்கு பதிலா வேற ஒருத்தரை அனுப்பிட்டு நான் மிர்லாவை பாக்க வந்தேன். முதல் நாள் என்ன தான் என்னை தெரியாத மாதிரி நடந்துக்கிட்டாலும், அதையும் தாண்டி அவ முகத்துல என்னை பாக்கும் போது ஒரு கோபம் வந்துட்டு போச்சு... அதுக்கு விடை கண்டுபிடிக்க நெனச்சப்ப தான் அவ பேர் 'மிர்லா உப்பிலிநாதன்' னு சொன்னா... அதை கேட்டதும் ஏதோ வானத்துல பறக்குற மாதிரி இருந்திச்சி.

என்ன தான் அவளுக்கும் இது பிடிக்காத கல்யாணமா இருந்தாலும், அதை ஏத்துக்கிட்டானு நெனைக்கும் போது என்னையும் அறியாம ஏதோ சந்தோஷமா இருந்துச்சு... ஆனா வேற ஏதோ காரணத்துக்காக தான் கோபமா இருக்கானு மட்டும் தெரிஞ்சுச்சு... அவ கோபம் கொறையிறதுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள வில்லனா நீங்க வந்து நின்னிங்க" என்றிட,

"நானா!!! நான் என்ன செய்தேன்?" என்று குழப்பமாக வினவிட,

"நீங்களும் சுண்டுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்...." என்று அவன் முழுதாக முடிப்பதற்கு முன் கபி ஒரே தாவாக தாவி இந்தரின் வாயை அடைத்தான். இந்தர் புரியாமல் பார்க்க, கபியோ மிர்லாவை அறையை எட்டிப் பார்க்க விளக்குகள் அணைக்கப்பட்டு எந்த சத்தமும் இல்லாமல் இருக்க, உறங்கி இருப்பாள் அல்லது பேசியது காதில் விழுந்திருக்காது என்று நினைத்து இந்தரின் வாயிலிருந்து கையை எடுத்து நகர்ந்து நின்றான்.

அடுத்த நிமிடம் பட்டையான அகலமான ஹார் ப்ரெஷ் வந்து இந்தரின் முதுகில் விழுந்தது. கண்களை மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்த நினைத்தவன், முடியாமல் போக "இவளை என்ன பண்றேனு பாரு" என்ற பல்லைக் கடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

"அடி வாங்குறதுக்கு எவ்வளவு வீராப்பா உள்ளே போறான் பார்!!!" என்று யோகன் தன் தம்பியை கேலி செய்ய கபி சின்ன சிரிப்பு சிந்திவிட்டு, "சரி வாங்க நாம தூங்கலாம்..." என்று தனதறைக்கு அழைத்துச் சென்றான். மூவருக்குமாக சேர்த்து தரையில் பாய் விரித்து படுத்துக் கொண்டனர்.

அங்கே மிர்லாவின் அறைக்குள் சென்ற இந்தர், மிர்லாவிடம் "இப்போ எதுக்கு டீ கண்டதையும் என் மேல தூக்கி எறியிற?" என்று முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு வினவினான்.

"சத்தம் போடாதே... ஆன்டி தூங்குறாங்க... நீ மொதோ வெளியே போ..." என்று கூறி ருக்குவின் அருகே படுக்கச் சென்றவளை, கையில் ஏந்திக்கொண்டு உடைமாற்றுவதற்காக திரைசீலை இடப்பட்ட சிறிய பகுதிக்குத் தூக்கிச் சென்றான். பெண்ணவளின் துள்ளல்களை தன் வலிய கரம் கொண்டு அடக்கி அவளை மறைவாக நிறுத்தி திரைச்சீலையை மூடினான்.

அவனின் செயலில் ஒரு நொடி படபடத்தவள், பட்டாம்பூச்சியாய் கண்களைச் சிமிட்டிட, அவளின் அன்பனோ அந்த பட்டாம்பூச்சிகளின் ரசிகனாய் மாறி இரு கண்களுக்கும் முத்தமிட்டான். அதில் பெண்ணவள் தன் கெண்டைமீன் கண்களை பெரிதாக விரித்துக் காண்பித்திட, அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி "முடிஞ்சா நீ கொஞ்ச நேரம் சத்தம் போடாம இருக்க முயற்சி பண்ணு..." என்று கூறி மர்மமாக சிரிக்க, பெண்ணவள் 'தன்னை எதற்கு சொல்கிறான்!' என்று யோசிப்பதற்குள், தன் மனையாளின் மலரிதழ்களை தன் இதழ் கணை கொண்டு தாக்கத் தொடங்கினான்.

இந்தரின் இந்த திடீர் தாக்குதளில் முதலில் நிலைகுலைந்தவள் தன்னையும் அறியாமல் அவன் கழுத்தில் தன் கைகளை வளைத்து அணைத்துக் கொள்ள, அவனோ அனுமதி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தன்னவளின் இடையை வளைத்துப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து தன் தாக்குதலுக்கு மேலும் வழுவூட்டினான்.

மிர்லாவிற்கோ "My Favorite Sweet Dish Is Yours Honey Lips" என்ற ஒரு ஆணின் கவிதை வரிகள் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு கவிதை தளத்தில் படித்தது நினைவில் வர, தன் இதழ்களை தன்னவனுக்கு விருந்தாகப் படைத்தாள். இதழ் தாக்குதலில் கண்ட வெற்றி அவனுக்கு போதை ஏற்றிட, அடுத்த தாக்குதலாக நா-சண்டையிட்டான். முத்தச் சண்டையில் பற்களும் பங்கு கொள்ள, நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்த அவனது தாக்குதல்களால் பெண்ணவள் இனிமையான இம்சைக்கு ஆளாகினாள்.

ஒருகட்டத்திற்கு மேல் பெண்ணவளும் எதிர் தாக்குதல் புரிந்திட, போர்வீரர்களான அவர்களின் அதரங்கள் படும் பாட்டை இருவரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. இறுதியில் உயிர் காற்று இன்றி தவித்த பெண்ணவள் அவனை நகர்த்த முற்பட, மது உண்டவனிடம் கோப்பையை பறிக்க முற்படுவது போல் மேலும் ஆழமாக தன் உதடுகளை அழுத்தி அவளது இதழ் தேனை ருசிக்கத் தொடங்கினான் அவன். அதற்கு மேல் தாங்காதவள் தன்னவனின் தடித்தக் கீழ் இதழை நருக்கென கடித்து வைத்தாள்.

"ஸ்ஸ்ஸ் ஆஆஆ..." என்ற சத்தத்தோடு அவளை விடுவித்திட, பெண்ணவளோ "என்னை சத்தம் போடாதேனு சொல்லிட்டு நீங்க சத்தம் போடுறிங்க!!!" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு வினவினாள். இந்தரின் பார்வை முதலில் முறைத்தும், பின் அவளின் கோலம் கண்டு ரசனையாகவும் மாறியிருந்தது. அவனின் பார்வை மாற்றத்தில் தன்னை குனிந்து பார்த்தவள், இடைவரை கலைந்திருந்த தன் சேலையைக் கண்டு அதிர்ச்சியுற்று ஒரே எட்டில் அவனை நெருங்கி அவன் கண்களை மூடியபடி,

"ச்சீ போடா பொறுக்கி..." என்று திட்டினாள். அவளின் குரலிலேயே அது பொய்க் கோபம் என்று உணர்ந்தவன், "ஒரு நல்ல புருஷன் தன் பொண்டாட்டி கிட்ட எப்பவுமே பொறுக்கியாத் தான் இருக்கனும் டீ..." என்று இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

"வலிக்கிது உபேன் விடுங்க..." என்று செல்லமாய் சிணுங்கிட, தன் கைகளை தளர்த்தி பெண்ணவளை விட்டி தள்ளி நிற்க, அவனுக்கு முதுகு காண்பித்து நின்று தன் சேலையை சரி செய்தாள் அவள்.

மீண்டும் தன் மனவாட்டியை பின்னால் இருந்து நெருங்கி அவளின் வெற்றிடையில் கைகளை சுந்திரமாக சுற்றவிட, பெண்ணவள் பின்பக்கமாக சரிந்து தன்னவனின் காதை பிடித்தபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். "சுண்டு என் கூட சண்டைபோடு டீ.... என்னை பிடிச்சு வெளியே தள்ளிவிடு... இப்படி கிரங்காதே டீ... தாட்ஸ் டேன்ஜரஸ் ஃபார் யூ... ஐ கான்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்" என்றிட,

பெண்ணவளின் மனமோ 'என் மூளையும், மனதும் வேலை நிறுத்தம் செய்து, உன் கட்டளைக்கு அடிபணிய காத்திருக்கிறதே!!! இனி என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்!!!' என்று மனதிற்குள் நினைத்த நொடி அவளின் முகம் நாணத்தில் சேலை நிறத்திற்கு பொருத்தமாக பின்க்-காக மாறிவிட, அடுத்த போருக்குத் தயாராகினான் இந்தர்.

இந்த முறை மென்மையாக ஆரம்பித்தது போர். கண்கள், காது, கன்னம், நாசி என அவன் இதழ்கள் பயணித்து இறுதியில் அவளின் இதழ்களை அடைந்து பிறவிப்பலனை பெற்றது அவன் இதழ்கள்.



-தொடரும்​