• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம் 17

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"உனக்கும் நம்ம கல்யாணம் பெரிய ஷாக் தானே!!!. என்னைப் போலத் தானே நீயும் பலியாடு மாதிரி மாட்டிக்கிட்டே... பின்ன உன் மேல என்ன தப்புனு யோசிச்சப்ப தான், டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு தோனுச்சு... ஆனால் நீ வர்ற வரைக்கும் துக்கம் விசாரிக்கிற மாதிரி வீட்டுக்கு வந்து கேள்வி கேட்கிறவங்களுக்கு எனக்கு பதில் சொல்ல பிடிக்கலே...

அதான் யாருக்கிட்டேயும் சொல்லாம கபிகிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன். நான் அவனை தேடி வரும்போது அவனுக்கும் பல ப்ரச்சனை... இதை வேற சொல்லி அவனை கஷ்டபடுத்த பிடிக்கலே... போன வர்ஷம் தான் கல்யாணம் நின்னதை மட்டும் சொன்னேன். அந்த ராஸ்கல் அப்பாகிட்ட பேசி நான் இங்கே இருக்குறதை சொல்லிட்டான்.

நான் ஒரு லூசு... நீ கேட்டதை விட்டுட்டு ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன் பார்... உன் மேல இப்படி விட்டுட்டு போறதுக்கு எதுக்கு கல்யாணம் செய்துகிட்டேனு தான் கோபம்... அதுவும் நீ திரும்ப என்னை தேடி தான் வந்தனதும் இருந்த இடம் தெரியாம காணா போயிடுச்சு..." என்று தன் நீண்ட உரையை முடித்தாள்.

அவனிடம் அமைதி நிலவ, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், குழப்பத்திற்கு ஆளாகினாள். அதில் இருந்தது கோபமா? இல்லை வருத்தமா? என்று யோசித்த படி,

"ஏன் இப்படி இறுக்கமா இருக்கே!!! இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்த?" என்று குழப்பம் தெளியாமல் வினவினாள்.

"ஒன்னு இல்லே...." அவள் கையைப்பிடித்து வருடி அவள் விரல்களோடு விரல் கோர்த்துக் கொண்டு, "என்னை மட்டுமே யோசிச்சு உன்னை ரெம்ப கஷ்டபடுத்திட்டேனு நெனைக்கும் போது எனக்கே என் மேல கோபம் வருது... நான் செய்த தப்புக்கு என்னை அடிச்சிருக்கலாம்? எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திருக்கலாம்? ஏன் அதெல்லாம் பண்ணாம என்னை லவ் பண்ணின?"

"இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லு..." என்றவள் அவன் தலையசைக்கவும், பேச ஆரம்பித்தாள்.

"நான் வீட்டைவிட்டு போயிட்டேன்னதும் உனக்கு என்ன தோனுச்சு?"

"எனக்கு ஊருக்குள்ள பேசிக்கிட்ட விஷயம் தெரியாது... அதனால....." என்று தயங்கிட,

"இன்னைக்கே எல்லாம் பேசி முடிச்சிடலாம்... தயங்காம சொல்லு" என்று ஊக்கினாள்.

"என் சூழ்நிலை உன்னை அங்கு விட்டுட்டு வர வேண்டியதாகிடுச்சு... யோகன், அம்மா யார்கிட்டேயும் பேச பிடிக்கல. பேசினாலும் விட்டுட்டு போனது என் தப்புனு தான் சொன்னாங்க... நான் சிங்கபூர்ல ஃப்ரெண்ஸோட தான் ஸ்டே பண்ணிருந்தேன்.

உன்னை அழச்சிட்டு பேகனும்னா உனக்கு விசா வாங்கனும், வீடு பாக்கனும் எல்லாத்தையும் விட முக்கியமா உனக்கு என்கூட வர சம்மதமானு கேக்கனும்... இது எல்லாத்துக்கும் என் டைம் தேவையா இருந்தது. ஆனா அதுக்குள்ள நீ....... கொஞ்ச நாள் பொறுத்து போக முடியாம அப்படி என்ன கோபம் இவளுக்கு!!!னு யோசிச்சு உன் மேல கோபம் தான் வந்துச்சு..." என்று அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

"அந்த கோபம் எப்போ காதலா மாறுச்சு? எந்த நம்பிக்கைல என்னை பாக்க கோவை வந்தே?"

இந்த கேள்விக்கு பதில் தெரியாதே என்பது போல் அவளைப் பார்த்தவன், அடுத்த நொடியே தெரியாதுனு சொன்னா திட்டுவாளே!!! என்று யோசித்தபடி,

"அ.... அது....அது...?" என்று இழுத்தான்.

"தெரியாதுல!!!" என்றிட ஆம் என தலையசைத்தான். "அதே தான் எனக்கும்... எப்போ உன்னை விரும்பினேனு தெரியாது. ஏன் உன்னை நீ சொன்ன மாதிரி அடிச்சி அசிங்கப்படுத்த தோனலேனு தெரியாது.

ரெண்டு வர்ஷத்துக்கு அப்பறம் உன்னை பாத்ததும் பயங்கற அதிர்ச்சி, எப்படி இங்கே வந்தே? யாரும் சொல்லி வந்தேயா? இல்லே எதார்த்தமா வந்தேயா? முக்கியமா எதுக்கு வந்தே?னு யோசிக்கும் போது மண்டய பிச்சுக்கலாம் போல இருந்துச்சு... ஒருவேளை நான் யோசிச்ச மாதிரியே நீயும் யோசிச்சு டைவர்ஸ் கேட்க வந்திருக்கேயோனு நெனைக்கும் போது ஒரு வலி மனசுக்குள்ள வந்துச்சி.

வந்த முதல் நாளே என்கிட்ட வம்பு பண்ணின போது கொஞ்சம் நிம்மதியா கூட இருந்தது. அப்பறம் வாட்ச்மேன் அண்ணாவே மச்சானு சொன்னது, பாட்டு மூலமா உன் மனசை எனக்கு தெரியபடுத்தினது, என்னை பாக்காம எனக்காக தவிச்சது, பல நேரங்களில் என் மேல அக்கரையா இருந்தது எல்லாம் சரியா தான் போற மாதிரி இருந்துச்சு...

இடையில தேவையில்லாத கன்ஃபியூஷன். அது நேத்து நீ கபிக்கிட்ட சொல்லும்போது தான் புரிஞ்சது. அதுக்கு நான் என் மனமாற்றத்தை உன்கிட்ட சொல்லாமவிட்டது காரணமா இருக்கும்னு நெனைக்கிறேன். அதனால என்ன!!! இப்போ சொல்றேன், நல்லா கேட்டுக்கோ...

என்ன காரணம் சொல்லி என்னை விட்டுட்டு போனேயோ, அதே காரணத்தை உதறி தள்ளிட்டு நான் தான் வேணும்னு என்னை தேடி வந்த உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்." என்று அவன் தோள்பட்டையில் தன் தாடையை வைத்து அவனது கன்னத்தில் கை வைத்து தன்னைக் காணச் செய்து அவன் கண்களைப் பார்த்தபடி கூறினாள்.

மிகவும் நெருக்கமாக விடியற்காலை வெளிச்சத்தில் தன்னவளின் காதல் மொழியில் தன்னை மறந்து அவள் கண்களைப் பார்த்திருந்தான் இந்தர்.

"டேய் இங்கே என்னடா பண்ற!!!?" என்ற கணீர் குரலில் இருவரும் நகர்ந்து அமர, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, 'நாம தான் இடஞ்சலா வந்துட்டமோ!!!' என்று நினைத்தபடி கையில் வேப்பங்குச்சியோடு நின்றிருந்தான் யோகன்.

"உன்னை யாருடா இவ்ளோ சீக்கிரம் எழுந்துக்க சொன்னது!!!" என்று கடுப்புடன் வினவினான் இந்தர்.

"தப்பு தான் டா... பழக்க தோசத்துல எழுந்துட்டேன்..."

"எந்திரிச்சா பாத்ரூம்ல போயி பல்லு தேய்க்க வேண்டிதானே!!! இப்போ நீ பல்லு வெலக்கலேனு யாரு கவலைப்பட்டா!??" என்று சலிப்பாகக் கூறினான்.

"டேய் ரெம்ப ஓவரா போற... சுந்தரிக்காகத் தான் அமைதியா இருக்கேன். இல்லேன பல்ல ஒடச்சிடுவேன் பாத்துக்கோ..." என்றபடி யோகன் அங்கிருந்து நகர்ந்தான். "ரெண்டு பேரும் பனில உக்காந்திருக்காம வேகமா கீழ வாங்க..." என்று சத்தமாக கத்திவிட்டு சென்றான்.

யோகன் சென்றவுடன், "சரி வா கீழ போகலாம்" என்றவன் எப்படி அவளை இறக்கிவிட்டானோ அதே போல் ஏத்திவிட்டான். இருவரும் கீழே வந்து மிர்லா அவள் அறையில் முடங்கிட, இந்தர் கபியின் அறைக்குள் நுழைந்தான். அன்று ஞாயிறு விடுமுறை நாள். கபிக்குமே அன்று விடுமுறை தான்.

காலையில் எப்போதும் போல் எழுந்து கொண்ட ருக்மணியம்மாளிடம் கபி மிர்லா மற்றும் இந்தரின் திருமணம் பற்றிக் கூறிட, அவரோ

"உனக்கு வருத்தமா இல்லேயா கபி?" என்றார்.

"அம்மா... மிரு எப்போ என்னை ஃப்ரெண்டா மட்டும் தான் பாக்க முடியும்னு சொன்னாளோ அப்பவே என்னாலேயும் அவளை ஃப்ரெண்டா மட்டும் தான் பாக்கமுடியும்னு புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு அன்னைக்கு வருத்தப்படவும் தோனலே, நேத்து இந்தர் அவளை அவளுக்காகத் தான் தேடி வந்தேனு சொன்னப்போ சந்தோஷப் படாமலும் இருக்க முடியலே...

அநேகமா இன்னைக்கு இந்தர் அவளை அழச்சிட்டுப் போயிடுவார்னு நெனைக்கிறேன். அவளுக்கு என்னென்ன வேணும்னு பார்த்து வாங்கனும்... ரெடியா இருங்க எல்லாரும் போகலாம். மதியம் சமைக்க வேண்டாம் வெளிய சாப்பிட்டுக்கலாம்..." என்று குளிக்கச் சென்றான்.

தாராவிற்கோ இந்தர்-மிர்லா பற்றி பாதி மட்டுமே தெரிந்த நிலையில் முழுதும் தெரிந்து கொள்ள நினைத்தாள். பற்றாக்குறைக்கு காலையில் எழுந்ததில் இருந்தே கபியின் வெட்கம் கலந்த முகம் நினைவில் வந்து இம்சிக்க,

"காலங்கார்த்தலேயே இப்படி டார்ச்சர் பண்றானே!!! என்னோடு சேர்த்து வைத்துப் பேசவும் அவனுக்கு ஏன் முகம் சிவந்தது!!! ஒருவேளை அவனுக்கு என்னைப் பிடிச்சிருக்குமோ!!! இருக்கும்... இருக்கும்... அன்னைக்கு கையைப் பிடிச்சி உக்காந்திருந்த போதும் நான் தான் பதறியடிச்சு கைய உறுகிக்கிட்டேன்... அவன் தேமேனு வேடிக்கைல பார்த்துட்டு இருந்தான்... சரி இப்போ அதை விட்டுத்தள்ளிட்டு, மிரு-இந்தர் மேட்டர் என்னாச்சுனு கேப்போம்..." என்று யோசித்தபடி படுக்கையில் படுத்திருந்தபடி, கபிக்கு அழைத்தாள்.

அழைப்பு எடுக்கப்படவில்லை என்றவுடன், "இன்னும் எழுந்திரிக்கல போல" என்று நினைத்து குறுந்தகவல் அனுப்பினாள்.

"என்னாச்சு? மிரு & இந்தர் இப்ப ஓகே வா? மிரு யோகன் கிட்ட பேசினாளா?"

அதற்கும் எந்த பதிலும் இல்லை. நொடிக்கொருமுறை பதில் வந்துள்ளதா என்று எடுத்து பார்த்தபடி இருந்தாள். அரைமணி நேரம் கழித்து வந்த நாணயம் சுண்டும் சத்தத்தில் காலை உணவு உண்டு கொண்டிருந்தவள், மின்னூட்டம் ஏறிக்கொண்டிருந்த தன் திறன்பேசியை எடுத்துப் பார்த்தாள். கபியிடம் இருந்து தான் வந்திருந்தது.

விடியும் வரை இந்தருடன் மொட்டைமாடியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், காலையில் தான் இருவரும் உறங்கச் சென்றதாகவும்... தான் யோகனின் மூலம் அறிந்து கொண்ட விஷயத்தை அனுப்பி வைத்திருந்தான்.

மேலும் சிலவற்றை குறுந்தகவல் மூலமே பகிர்ந்து கொண்டவர்கள், இறுதியில் என்ன பேசுவது என்று தெரியாமல், 'then?' என்று பெண்ணவள் அனுப்பி வைக்க,

'ப்ரேக்பாஸ்ட் என்ன?" என்று வினவினான்.

அவன் தன்னோடு சும்மாவேணும் ச்சாட் செய்ய விரும்புகிறான் என்று தோன்றிட, நங்கையவள் காற்றில் மிதந்தாள்.

'கேரட் தோசை வித் ரெட் சட்னி"

'அப்பறம்?' என்ற அவனது கேள்வியில் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு,

'வேற என்ன!!! நீங்க என்ன சாப்பிட்டிங்க?'

'இன்னு சாப்பிடலே... இனிமே தான்...'

'ம்ம்ம்...' அதற்கு மேல் இருவருக்கும் என்ன பேசிக்கொள்வது என்று தெரியவில்லை. சற்று நேர அமைதிக்குப் பின் அவனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது.

"மிருவுக்கு கொஞ்சம் திங்கஸ் வாங்க ஷாப்பிங் போறோம், நீயும் வரேயா?" என்று இருக்க, 'தைரியம் தான்... வயசு பொண்ணை அவுட்டிங் கூப்பிடுறிங்களா!!' என்று பதில் அனுப்பி வைத்தாள்.

அவனிடம் இருந்து தனித்தனி வாக்கியமாக பதில் வந்தது.

'சாரி...'

'தெரியாம கேட்டுட்டேன்'

'இனிமே இப்படி கேட்கமாட்டேன்'

அவனின் ஒவ்வொரு பதிலும் கோபிச்சுக்கிட்டானோ!!! என்று யோசித்தவள் அவசரமாக பதில் டைப் செய்தாள். 'நான் சும்மா ஃபன் பண்ணத்தான் அப்படி கேட்டேன்.. தப்பா எடுத்...' என்று தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே அடுத்த பதில் அவளது திறன்பேசியில் வந்து விழுந்தது.

'ஒன்லி ஆர்டர் தான். 10 மணிக்கு ரெடியா இரு. நான் கூப்பிட வரேன்... என் கூட நீ வர்ற...' என்று அவளுக்கு உத்தவிட்டிருந்தான் அவள் மனம் கவர்ந்த காந்தனவன்.



- தொடரும்