• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம் 3

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"என் விருப்பத்தை ஏத்து என்னை கல்யாணம் செய்து என் கூட கடைசி காலம் வரை என் துணைவியா, மனைவியா வர நீ தயாரா இருக்கியா?" என்று கேட்டுவிட்டு அவளின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.

"பரவாயில்லயே.. மானே தேனேனு உருகாம, நீ தான் என் உயிரு, மத்ததெல்லாம் ..........னு, டயலாக் விடாம, நிதர்சனத்தை சொல்லிருக்கிங்க." என்றிட, எதிரில் அமர்ந்திருந்தவனோ இவள் இப்படி எல்லாம் பேசுவாளா என்று அதிசயமாகப் பார்த்தாலும் பதிலுக்கு ஒரு புன்முறுவலை மட்டுமே விடையாகக் கொடுக்கமுடிந்தது அவனால்.

சிறிய இடைவெளிவிட்டு மீண்டும் அவளை தொடர்ந்தாள். "இன்பா... அஸ் அ ஃப்ரெண்டா உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும். நீங்க என்னை விரும்பினாலும், வரம்பு மீறி ஒரு நாளும் பேசினது இல்லே. இன்டேரெக்ட்டா கூட உங்க விருப்பத்தை என்கிட்ட காமிச்சிகிட்டது இல்லே...

இப்போ இந்த ரெண்டு வர்ஷம் நீங்க டைம் எடுத்துக்கிட்டதுக்கு ஒரு ரீஸன் சொன்னிங்களே... நிச்சயம்மா அதுக்கு ஹாட்ஸ் ஆஃப் சொல்லியே ஆகனும்... உங்க கடமைகளை முடிச்சப் பின்னாடி இப்போ தான் காதலிக்க நேரம் இருக்கு... காதலிக்கலாமானு கேட்குறிங்க!!! அதுவும் முறையா கல்யாணம் செய்துகிட்டு காதலிக்கலாமானு கேட்குறிங்க... அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"ம்ம்ம்... டெஸ்ட் வெக்கிற!??..." என்று சிரிப்போடு கூறியவன், தன் பதற்றத்தை மறைத்து இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு "கேளு" என்று அவளை உந்தினான்.

"இன்னும் சில பொறுப்புகள் இருக்குனு சொன்னிங்கல்ல... அதுவும் உங்க வருங்கால மனைவியோட சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள்... அது என்னென்னு தெரிஞ்சுக்கலாமா? ஏன் கேட்குறேன்னா! நாளைக்கு அந்த பதிவுக்கு வந்த பின்னாடி என்னால இதெல்லாம் செய்ய முடியாதுனு சொல்லி ஜகா வாங்கிட கூடாது பாருங்க... முடியாதுன்ற பட்சத்துல இப்பவே மறுப்பு சொல்லிடலாமேனு தான்." என்று அவளும் மறைமுகமாக தன் முடிவை இப்போதே சொல்லியிருந்தாள்.

ஆனால் அவனோ தெளிவாகவே குழம்பினான். இவள் என்னை நண்பன்னு தான் சொல்லிருக்கா... ஆனால் பிடிச்சிருக்கு... மனைவியா வந்த பின்னாடி மறுப்பு சொல்ல முடியாது, இப்போவே சொல்லிடுறேன்னு சொல்றா? இதுக்கு என்ன அர்த்தம்!!! என்று யோசித்துக் கொண்டே அவளைப் பார்த்தவன்,

"என் அப்பா, அம்மாவையும் சரி, என் தங்கச்சி குடும்பத்தையும் சரி ஒரு போதும் உன் பொறுப்புனு உன் தலைல பாரம் ஏத்தமாட்டேன். அவங்க என்னைக்கும் என் பொறுப்பு தான்... ஆனால் அவங்களுக்கு நான் செய்யும் போது மனைவினு என் பக்கத்துல நின்னாலே போதும்.

ஆனால் என்னோட கஷ்டங்களில் பங்கெடுத்துக்கனும். பணக்கஷ்டமா இருந்தாலும் சரி, மன கஷ்டமா இருந்தாலும் சரி... அதேபோல என் சந்தோஷத்தை ரெண்டு மடங்கா கொடுப்பேன் அதையும் சலிக்காம ஏத்துக்கனும்..." என்று மனதில்பட்டதை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சொல்லி முடித்தான்.

"அதாவது உங்களை என்கரேஜ் பண்ணற, உங்களுக்கு பக்கபலமா இருக்கக் கூடிய ஒரு ஆள் வேணும். அது மனைவியா இருந்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நினைக்கிறிங்க?"

"அல்மோஸ்ட்... ஆனால் அந்த மனைவி நீயா தான் இருக்கனும்னு விரும்புறேன்..." என்று அவளின் கேள்வியிலேயே ஒரு பதிலை சொருகி வைத்தான்.

" எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்ல. அதே மாதிரி இப்போ நீங்க உங்க மனைவியா வரதுக்கு எனக்கு என்னென்ன க்வாலிஃபிகேஷன் இருக்குனு நினைக்கிறிங்களோ அது எதுவும் எனக்கு இல்லே.

நான் ஆஃப்டர் மேரேஜ் வெர்க் பண்ற ஐடியால இல்ல. அதைவிட முக்கியமான ஒன்னு என்னை கட்டிக்கப் போறவன் கண்டிப்பா ஐ.டி எம்ப்லாயியா இருக்கக் கூடாது. நிச்சயமா என்னைவிட நல்ல பொண்ணு, அன்பான பொண்ணு, உங்களுக்குக் கிடைப்பா...." என்று கூறிக் கொண்டிருந்தவள்,

இன்பாவின் முகத்தில் வேதனை படர்ந்தைக் கண்டு, தன் பேச்சை நிறுத்தி,

"சாரி இன்பா... ரியலி சாரி... உங்களை ஹர்ட் பண்ணனும்னு நெனைக்கலே. உங்களுக்கு உங்க மனைவி எப்படி இருக்கனும்னு எதிர்பார்ப்பு இருக்கோ அதே போல எனக்கும் என் கணவர் எப்படி இருக்கனும்னு நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு. என் கணவர் எனக்காக மட்டுமே என்னை விரும்பனும்... கமிட்மெண்ட்ஸ், கம்பல்ஷன்ஸ் இல்லாம என் லைஃப் இருக்கனும்னு நெனைக்கிறேன்." என்று உருக்கமாக தன் ஆசைகளைக் கூறினாள்.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த இன்பா ஒரு பெருமூச்சை வெளிவிட்டு,

"நானும் ஆரம்பத்துல இருந்து கண்ணே, மணியே உன்னை சுத்தி சுத்தி வந்திருந்தா என் காதலை இவ்ளோ ஈசியா தூக்கி எறிஞ்சிருக்கமாட்டேனு நினைக்கிறேன்." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தான்.

"இல்ல இன்பா... தப்பா புரிஞ்சிட்டு இருக்கிங்க... வெறும் வார்த்தைகளாலோ, அரவணைப்பினாலோ.... இல்லாத காதலை வெளிகொண்டு வர முடியாது. உங்களுக்கு புரியும் படி சொல்லனும்னா, நாளைக்கு கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி என்னை காதலா பாக்கமாட்டிங்க... உங்க பொறுப்புகளில் ஒன்னா தான் பார்ப்பிங்க... அதையே தான் என்கிட்டயும் எதிர்பார்ப்பிங்க...

நீங்க சொல்லாமல் விட்ட சில பொறுப்புகளை சொல்றேன் சரியானு பாத்துக்கோங்க... கல்யாணத்துக்குப் பின்னாடி வீடு வாங்கினா ஹவுஸிங் லோன், கார் வாங்கினா அந்த லோன், மற்ற சேவிங் பாலிசீஸ் இதுக்கெல்லாம் என் சம்பளம் வேணும். அதே போல பிள்ளைங்களை பெறுமைக்காகனாலும் பெரிய ஸ்கூல்ல சேக்கனும், அதுக்கும் என் சம்பளம் வேணும்.

இது எல்லாத்தையும் நான் பாத்துக்கிட்டா நீங்க குடும்பத்தைப் பார்த்துப்பிங்க... சொஃபெஸ்ட்டிக்கேட்டடான ஒரு லைஃப் அதுக்கு சம்பாதிக்கிற ஒரு வொய்ஃப்... அந்த வொய்ஃப் உங்க மனசுக்கு பிடிச்ச நான். இது தானே உங்க ஃபியூட்சர் ப்ளான்?" என்றிட

முகம் கருத்து ஆமாம் என தலையசைத்தான் இன்பா.

"உங்க ப்ளான் எனக்கு செட் ஆகாது... சோ உங்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கோங்க... ஆல் தி பெஸ்ட்..." என்று கூறி தன் ஆக்டிவா-வை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

வீடு நோக்கி செல்லச் செல்ல அவள் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஏன் கோபம்? எதற்கு இந்த கோபம்? யாரின் மேல் கோபம்? என்ற எந்த கேள்விக்கும் அவளிடமே விடையில்லை.

வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளின் பாத அணிகலன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு பக்கம் பறந்து சென்றது. தடாபுடாலென அவள் உள்ளே நுழையும் சத்தம் கேட்டு அறையைவிட்டு வெளியே வந்த ருக்மணியம்மாள்,

"என்ன டா? ஏன் இவ்வளவு கோபம்?" என்று வினவிட,

"ஆன்டி அந்த ராஸ்கல் என்ன தைரியம் இருந்தா என்னை லவ் பண்றதா சொல்லுவான்!!! இப்படி ஏதாவது சொல்லிடுவான்னு தானே நான் அவனை அவாய்ட் பண்ணினேன். அது தெரிஞ்சும் எந்த தைரியத்துல என்னை கல்யாணம் செய்துக்கப் போறதா சொல்றான்!!!

ஒரு பொண்ணு ஏதோ காரணத்துக்காக குடும்பத்தை விட்டுட்டு தனியா வந்து வேலை பார்த்தா திரும்ப வீட்டு பக்கம் போகவே மாட்டானு நெனப்பு போல... அப்படியே கல்யாணம் செய்து கூடவே வெச்சுக்கலாம்னு ஐடியா பண்ண வேண்டியது" என்று இவ்வளவு நேரம் மனதில் அழுத்திக் கொண்டிருந்தவற்றை எரிமலை போல் வெடித்துச் சிதறினாள்.

இவளின் கோபத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ருக்மணியம்மாள் தான் பெற்றெடுக்காத மகன் கபிலனின் செயலோ என்று ஒரு நிமிடம் கதி கலங்கினார்.

"சரி டா... அவனை நேர்ல பார்க்குறப்போ நானும் நல்லா நாலு வார்த்தை கேக்குறேன்... இப்போ நீ கை, கால் கழுவிட்டு வா..."

"இனி ஒரு முறை அந்த இன்பா என்னை தொல்லை செய்யட்டும் ஆபிஸ்னு கூட பார்க்கமாட்டேன். அங்கேயே நல்லா லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிடுவேன். என்னை என்ன சம்பாரிச்சு போடுற மிஷின்னு நெனச்சானா அவே?" என்று இன்னமும் பொறிந்திட,

ருக்மணியம்மாவிற்கு இப்போது தான் அப்பாடா என்றிருந்தது. ஒருவழியாக அவளை சமாதானம் செய்து மாலை சிற்றுண்டியில் இருந்து இரவு உணவு வரை உண்ண வைத்து அவளின் படுக்கையறைக்குத் தள்ளினார்.

அதன்பின் தன்னறைக்கு வந்து கபிலனுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க, அது அவனுக்கு மறுநாள் காலை தான் கிடைத்தது. தகவல் கிடைத்த மறுநிமிடம் அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

"யாராவது காஃபி ஷாப் கூப்பிட்டா ஒடனே சரினுட்டு போயிடுவேயா? அறிவில்லை!!! பசங்க தங்கச்சினு சொல்லுறதுக்கா காஃபி ஷாப் கூப்பிடுவாங்க!!! அவன் இது தான் பேசப் போறானு தெரிஞ்சும் எதுக்கு போன? இரு நான் நாளைக்கே கிளம்பி வரேன்..." என்று போனிலேயே பாப் கார்ன் போல் துள்ளிக் கொண்டிருந்தான் கபிலன்.



-தொடரும்​