• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம் 6

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"மிர்லா உப்பிலிநாதன்" என்றவுடன் தோன்றிய சிரிப்பை அவள் தன்னை கவனிப்பதற்குள் தொண்டைக்குழியிலேயே விழுங்கியும் விட்டிருந்தான் உபேந்திரன்.

அன்றைய நாள் முழுவதும், டிஸ்கஷன், டீம் மெம்பர்ஸ் தேர்வு செய்ய அவர்களுக்கான பணியை நியமிக்க, என அவனுடனேயே நேரம் செலவிடும் படியானது மிர்லாவிற்கு.

மிர்லா என்ன கூறினாலும் அவளுக்கு தலையாட்டும் உபேந்திரனைக் கண்டு கோபம் கொண்டான் இன்பா. அதனாலேயே பல நேரங்களில் கலந்துரையாடலின் போது இன்பா, மிர்லாவின் கூற்றுக்கு எதிர்வாதம் செய்து கொண்டும், அவளை குறை கூறிக் கொண்டும் இருந்தான்.

"இன்பா ப்ரோ... இது என்ன டீவி ப்ரொக்ராமா!!! அவங்க எது சொன்னாலும் எதிர்கட்சிக்காரன் மாதிரி அப்போஸ் பண்ணியே பேசிட்டு இருக்கிங்க..." என்று விளையாட்டுப் போக்கில் எதார்த்தமாக வினவிட,

"அப்போ நீங்க ஆளுங்கட்சியா!!! அவங்க என்ன சொன்னாலும் எஸ் மேம் சொல்றிங்க?" என்று இன்பா கடுப்புடன் வினவினான்.

அப்போதைக்கு "ஹி...ஹி...ஹி... குட் ஜோக் ப்ரோ... பரவாயில்லே நம்ம டீம்ல காரசாரமான பேச்சுக்கு குறையிருக்காது போல... இன்ட்ரெஸ்டிங்..." என்று கூறி முடித்துக் கொண்டான்.

ஆனால் மனதளவில் தன் தவறு என்ன என்பதனை யோசித்து, இனி மற்றவர் முன்னிலையில் மிர்லாவை சீண்டக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான்.

அதன்பின் வந்த நாட்களில் மிர்லாவிடம் வம்பு வளர்க்கிறானோ இல்லையோ தினமும் காலை காவலாளியிடம் வம்பு வளர்த்துவிட்டு தான் தன் பணியைத் தொடங்குவான்.

அன்றும் அப்படித் தான் அவனது பொழுது விடிந்தது. "குட் மார்னிங் மச்சா..."

"சார் ஏன் சார் டெய்லியும் லந்தக் கூட்டுறிங்க? நீங்க என்னை பேரைச் சொல்லி கூட கூப்பிடுங்க... ஆனா மச்சானு மட்டும் கூப்பிடாதிங்க சார்..." என்று கோபமும் வருத்தமுமாகக் கூறினார்.

"உங்களை பாக்கும் போது ரொம்ம்ம்ப நல்லவராத் தெரியுது. அதனால உங்ககிட்ட மட்டும் ஒரு உண்மை சொல்றேன்... எனக்கு அல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சி... என் பொண்டாட்டி கூட உங்க தங்கச்சி மிர்லா மாதிரி தான் இருப்பா... அதான் உங்களை மச்சானு சொல்றேன்... வர்ட்டா மச்சான்..." என்று கண் சிமிட்டிவிட்டுச் சென்றான்.

அந்த காவலாளியோ 'வண்டலூர் ஜூ-ல இருக்க வேண்டியது எல்லாம் இங்கே வந்து என் உயிரை வாங்குது...' என்று முணுமுணுத்து தலையில் அடித்துக் கொண்டார்.

சிறிது நேர்த்திற்கெல்லாம் உள்ளே நுழைந்த மிர்லாவிடம் புலம்பித் தள்ளிவிட்டார் அவர்.

"மிர்லா மேடம் அந்த புதுசா வந்திருக்க சார் பேசுறது எதுவும் சரியில்லேங்க... டெய்லியு காலைல என்னை தொல்லை பண்ணுறாருங்க..." என்றிட,

அவளுக்கும் அதனைக் கேட்கும்போது 'அய்ய்யோ' என்றிருந்தது. நீங்க ஆபிஸ்ல கம்ப்லைன் பண்ணுங்க ண்ணா... என்னோட மேனேஜர் அவரு... அதனால நான் எதுவும் சொல்ல முடியாதே." என்று ஒருவித இயலாமையோடுக் கூறினாள்.

"இல்ல மேடம்... அவரு என்கிட்ட பேசுறதே உங்களை வெச்சு தான். அதனால தான் உங்ககிட்ட சொல்றேன். இல்லேனா பெரிய சார்கிட்டயே சொல்லிடுவேன்..." என்று அவர் பேசியவிதத்திலேயே அவளுக்குத் தெரிந்தது அவனின் மேல் பயங்கற கோபத்தில் இருக்கிறார் என்று.

"என்னை வெச்சா!!! என்னை வெச்சு என்ன வம்பு பண்ணுறார்?" என்று பீதியும் ஆர்வமுமாய் வினவினாள்.

"நீங்க என்னை அண்ணானு கூப்பிடுறதுனால அவரு என்னை மச்சானு கூப்பிடுறார். மச்சானு கூப்பிடாதிங்க... பேர் சொல்லி கூப்பிடுங்கனு சொன்னா... ஏதோ லூசு மாதிரி ஒளறிட்டுப் போறார்." என்றிட அவளுக்கு ஒருநொடி கண்முன் இருந்த காட்சிகள் அனைத்தும் மறைந்து அவனின் உருவம் மட்டுமே தோன்றியது... அதுவும் பாகுபலி கட்டவுட்டில் 😝.

அவள் அமைதியாக நிற்கவும், அவரே தொடர்ந்தார்.

"உங்களுக்கும் அவருக்கும் நடுவுல என்ன இருக்குனு எனக்குத் தெரியாது. நாளைபின்ன கோபத்துல அவரை ஏதாவது செய்துட்டா என்னை ஏதுவும் சொல்லிடாதிங்க... அதுக்கு தான் இப்பவே உங்ககிட்ட சொல்லி வெக்கிறேன்..." என்று இன்னமும் காட்டமாகத் தான் பேசினார்.

"சரி ண்ணா... நான் அவர்கிட்ட சொல்லி வைக்கிறேன். அதுக்கும் மீறி அவர் உங்களை தொல்லை பண்ணினா என்னனாலும் செய்துக்கோங்க..." என்று கோபமாக உரைத்துவிட்டு அதே வேகத்தோடு அவனுடைய கேபினுக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாகத் தெரியும் அளவிற்கு ஈஈஈ இன்று இளித்துக் கொண்டிருந்தவனின் முன் சென்று நின்று கத்திக் கொண்டிருந்தாள். அவனோ எதற்கும் முகத்தை மாற்றினான் இல்லை. இவ்வளவு திட்டியும் சிரித்துக் கொண்டிருக்கிறானே என்ற கடுப்பில் அவள் தன் கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்திட,

அவனோ தன்னுடைய ஒரு காதில் இருந்து, இயர்பட் புளூடூத்தை எடுத்து அவள் காதில் வைத்தான்.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


என்ற வரிகள் காதுக்குள் இசைத்திட, கோபத்தில் இயர்பட்டை தூக்கி அவன் மேல் எறிந்துவிட்டு தன் இடத்திற்குச் சென்றாள்.

"அடி சண்டாளி... பிரான்டடு புளூடூத் டீ இது..." என்று வேகமாக தன் மேல் எறிந்தவற்றை கீழே விழுகாமல் பிடிப்பதிலேயே குறியாக இருந்தான். மிர்லாவோ ஏதோ பற்றிக் கொண்டு எரிவது போல் பாட்டில் பாட்டிலாக தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தாள்.

'இவன் கெட்ட கேட்டுக்கு இவனுக்கு சேதி சொல்லனுமா!!! இருக்கட்டும் கபி ஊர்ல இருந்து வரட்டும் இவனை கவனிச்சிக்கிறேன்...' என்று திட்டிக் கொண்டே தன் வேலையைத் தொடங்கினாள்.

மாலை ப்ரோக்கிராம் ரன் ஆகவில்லை என்றதும் அவன் அவளுக்கு உதவிக்கு வந்தான். எரர் என்னவென்று இருவருமாக பார்த்துக் கொண்டிருக்க, அவனது திறன்பேசி ஒலிர்ந்தது அதே பாடலை இசைத்த படி.

வேலை ஆர்வத்தில் அவளை கவனிக்கத் தவறினான் உபேந்திரன். அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கிவிட சிறிது நேரத்தில் மீண்டும் ஒலித்தது. அப்போதும் துண்டித்துவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான். மறுபடியும் ஒலிர அடுத்த நிமிடம் சுவரில் மோதி செத்து சின்னாபின்னமாகச் சிதறியது அவனது திறன்பேசி...

"அய்யோ ஒன்றறை லட்சம்... என் ஒரு மாச சம்பளம்... ஆறு மாசம் இ.எம்.ஐ கட்டி வாங்கின போனை செதறு தேங்காய் ஆக்கிட்டாளே... சதிகாரி..." என்று கீழே சிதறிக்கிடந்த தன் மொபைலின் முன் குத்தவைத்து அமர்ந்து தலையில் கை வைத்தவாறு புலம்பினான்.


-தொடரும்.​