• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம் 7

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
மறுநாள் காலை அலுவலகம் வந்தவன் கையில் ஏதோ ஒரு சைனா ஃபோன் இருக்க அதனைத் தாராவிடம் கூறி அவளின் காதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் மிர்லா.

இதனைக் கண்டு உபேந்திரனின் காதுகள் புகைந்திட, அதனைக் கண்டு இன்னொரு மனமும் மகிழ்ந்தது.

வேறயாரு இன்பா தான். 'ரெண்டு வர்ஷம் அவளை ஃபாளோ பண்ணின நான் கூட இப்படியேல்லாம் நோஸ் கட் வாங்கினது இல்லே. வந்த கொஞ்ச நாளிலேயே வாட்ச்மேன் மொதோக் கொண்டு எல்லார்கிட்டேயும் அசிங்கப்படுறான். இருந்தும் அடங்குறானா பார்!!!' என்று ஏளனமாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.

"இந்தர் ப்ரோ... போன் சூப்பரா இருக்கே!!!" என்று தாரா அவனை மேலும் சீண்டினாள்.

"வயித்தெறிச்சலை கெளப்பாதிங்க தாரா... எல்லாம் உங்க ப்ரெண்டு பண்ணின வேலை..." என்று புலம்பினான்.

"கொடுங்கலேன் பாத்துட்டு தாரேன்..." என்ற தாராவை நம்பாத பார்வை பார்த்திட,

"அட சத்தியமா பாத்துட்டு கொடுத்திடுறேன் ப்ரோ..." என்று கூறி அவனிடம் இருந்து பரித்துக் கொண்டாள்.

தாராவின் கெட்ட நேரமோ? இல்லை உபேந்திரனின் கெட்ட நேரமோ? தாராவின் கைக்கு வந்தவுடன் போன் ஒலிர்ந்தது.
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திரு ஓணம்...

அடுத்த வரி பாடுவதற்கு அது உயிரோடு இல்லை. ப்ராண்டடு போனே சிதறு தேங்காய் என்றால், சைனா போன் சொல்லவா வேண்டும்...

தாராவோ, போனை சாதாரணமாக தூக்கி எரிந்துவிட்டுச் சென்ற மிர்லாவைப் பார்க்க, உபேந்திரன் தாராவை பாவம் போல் பார்த்து,

"இதுக்கும் பொங்க வெச்சாச்சுல... வழியவிடுங்க..." என்றிட,

"இஇஇஇ..." என்று அவனைப் பார்த்து அசடு வழிந்து சிரித்துவிட்டு... "வாஸ்து சரியில்லே... ஐ ஆம் வெரி சோரி..." என்று தங்களிடம் இருந்து விலகிச் செல்லும் மிர்லாவைப் பார்த்துக் கொண்டே விளையாட்டாகக் கூறினாலும் உண்மையாகவே வருந்தினாள்.

வருந்த வேண்டியவனோ மிர்லாவைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். "இந்தர் ப்ரோ நீங்க இப்படி சிரிச்சுக்கிட்டே நிக்கிறதுனாலத் தான் உங்களை எல்லாரும் ஒரு மாதிரி நெனைக்கிறாங்க..."

"தாரா ஒன்னு சொல்றேன் மனசுல பதிய வெச்சுக்கோங்க. சுத்தி இருக்கிறவங்க என்ன நெனப்பாங்கனு யோசிக்க ஆரம்பிச்சா... நாம செய்ய நினைக்கிறதை மூளை மறந்திடும்..." என்று கூறிவிட்டு தன் இருப்பிடம் சென்றுவிட்டான்.

மதியத்திற்கு மேல் அவனின் பெயருக்கு கொரியர் பாக்ஸ் வந்ததாக அலுவலகப் பணியாளர் கொடுத்துச் செல்ல, அதனைப் பிரித்துப் பார்த்தவனுக்கு சற்று அதிர்ச்சியே. நேற்று மிர்லா உடைத்த அதே மாடல் ஃபோன் இருந்தது. தான் ஆர்டர் செய்யவில்லையே என்று யோசித்துக் கொண்டே மிர்லாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ தன் பணியே சித்தம் என்பது போல் கணினித் திரையில் முகம் பதித்திருந்தாள்.

'அவள் தான் வாங்கினாளா என்று எப்படித் தெரிந்து கொள்வது!!!' என்று யோசித்துக் கொண்டிருந்த உபேந்திரனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றிட, எழுந்து தாராவின் கேபினுக்குச் சென்றான். அதே கேபினில் மறுபுறத்தில் மிர்லா அமர்ந்திருந்தாள். இவன் வந்ததைக் கண்டும் காணாதது போல் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

"தாரா... இந்த ஃபோனுக்கு அப்பறமா வந்த மாடல் ஏதாவது நெட்ல பாத்து சொல்லேன்?" என்றிட,

"அதுக்குள்ள அடுத்த ஃபோன் வாங்கிட்டிங்களா!!! செம ப்ரோ நீங்க..." என்று ஆச்சரியமாகக் கூறினாள். அப்படியே அதற்கு அடுத்த வந்த மொபைல் மாடலையும் அதன் அதிநவீன வசதிகளையும் அவனுக்குக் காண்பித்திட,

"எந்த வெங்காயம் இந்த ஃபோனை என் பேர்ல ஆர்டர் போட்டுக் கொடுத்துச்சுனு தெரியலே!!! போட்டது தான் போட்டானுங்க நல்ல ட்ரென்டியா ரீசன்ட் மாடல் மொபைலைப் போட வேண்டிதானே!!!" என இன்னும் சில நல்ல வார்த்தைகள் சொல்லி திட்டிக் கொண்டிருந்தான்.

அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மிர்லா தன் பொறுமையை பறக்கவிட்டு, வெளியே இருந்து பார்த்தால் மற்றவர்களுக்குத் தெரியாத வண்ணம் அவன் அருகே தன் ரோலர்ச்சேரை நகர்த்தி அவன் சட்டையைப் பிடித்து தன்னருகே குனிய வைத்து,

"டேய் தகர டப்பா... பாவமே நேத்து ரொம்ப பொலம்புனியேனு, என் சேவிங்ஸ்ல இருந்து சிங்கில் பேமட்ல உனக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தா.... ஆயிரம் நொட்ட சொல்லிட்டு இருக்கே... உனக்கு அந்த ஃபோன் வேண்டாம்... குடு அதை..." என்று மிரட்டிட

"ஐயோ நான் சும்மா சொன்னேன்டி தங்கம்... நீ வாங்கி கொடுத்த ஃபோன் எனக்கு பிடிக்காம போகுமா!!! நான் விளையாட்டா சொன்னதெல்லாம் நீங்க உண்மனு நம்பிட்டிங்க... அய்யோ... ஹய்யோ... அவ்வ்வ்வ்..." என்று வடிவேலு பாணியில் உரைத்துவிட்டு அவளிடம் இருந்து தப்பித்துச் சென்றான்.

இருவரையும் பார்த்தபடி முழித்துக் கொண்டிருந்த தாரா, உபேந்திரன் அங்கிருந்து சென்றவுடன்,

"என்னடி நடக்குது இங்கே!!?" என்று மந்திரித்துவிட்டது போல் மிர்லாவிடம் வினவினாள்.

"என்ன நடக்குது? ஒன்னும் நடக்கலே... உன் வேலையப் பார்..." என்று பதில் கூறிவிட்டு தன் கணினி முன் நகர்ந்தாள்.

"ஆமாடிம்மா... ஒன்னுமே நடக்கல... யாரையும் எதிர்த்து பேசவே பல தடவை யோசிக்கிறவ, அவர் பொருளை தூக்கிப்போட்டு உடைக்க ஒரு தடவக் கூட யோசிக்கலே... எந்த ஆம்பளையா இருந்தாலும் பத்தடி தள்ளி நின்னு பேசுறவ, இந்தர்-கிட்ட மட்டும் சட்டையப் பிடிச்சு சண்டை போடுற அளவுக்கு வந்துட்ட... கேட்டா ஒன்னும் நடக்கலையாம்... இதை நாங்க நம்பனுமாம்..." என்று அவளை வாரிவிட்டாள்.

"தெரியுதுல... போய் வேலையப் பாரு..." என்று விரைப்பாகக் கூறிவிட்டு மீண்டும் தன் பணியில் மூழ்கினாள்.

நாளடைவில் உபேந்திரனின் குணம் அங்கே அனைவருக்கும் பிடித்துவிட, காவலாளி கூட மச்சானு சொல்லாதிங்க சார் என்று தினமும் கூறினாலும், அவனிடம் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தார்.

கபிலன் ப்ளான் செய்திருந்ததற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்திருந்தான். மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்றவள் கபியைக் கண்டதும் மகிழ்ச்சியில்,

"டேய் தடியா... எப்போ டா வந்தே? நாளைகழிச்சி தான்னே வரதா இருந்தது?!! மொதவே சொல்லிருக்கலாம்ல... கொஞ்சம் சீக்கிரம் வந்திருப்பேன்ல..." என்று அவன் தோளில் அடித்துக் கேட்டாள்.

"ஸ்ஸ்ஸ் அப்பாபாபா... குண்டோதரி... அடிக்காம கேளேன்... இந்த ஆறு மாசம் நான் வந்தனா, போனனானு கூட கண்டுக்காம இப்போ என்ன!!! ரெம்பத் தான் அக்கர..." என்று ருக்மணியம்மாள் செய்து வைத்திருந்த வடையை வாயில் திணித்துக் கொண்டே வினவினான்.

"ஏன் தெரியாம!!!... நீ எப்போ வர்றே? எப்போ போறே? என்ன சாப்பிட்டே? எப்போ தூங்கினே? ஆல் டீட்டெய்ல் ஐ நோ..." என்று பெறுமையாகத் தலையைத் தூக்கிக் கூறினாள்.

அவளை சின்ன சிரிப்போடு பார்த்திருந்தவன், "நாளைக்கு வெளிய போலாமா? லீவ் போடுறியா? உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..." என்றான்.

விடுப்பு எடுத்தால் உபேந்திரனைச் சந்திக்க முடியாதே என்று யோசித்தவள், "லீ...வ்... கண்டிப்பா போடனுமா? எங்கே போறோம்?" என்றிட,

"கோவிலுக்கு... நீ, நான், அம்மா எல்லாரும் தான் போறோம்..."

அறைகுறை மனதோடு "சரி" என்றாள்.

மறுநாள் காலை விடுப்பு சொல்லி ஒரு மெயிலை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு காலையே மூவருமாக கோவிலுக்குப் புறப்பட்டனர்.

சாமி தரிசனம் முடித்து வெளியே இருந்த படிக்கட்டில் அமர்ந்திட கபி மெதுவாகக் கூற ஆரம்பித்தான்.

"மிர்லா... எனக்கு கோவை ஏற்போர்ட்ல செக் இன் செக்ஷன்ல வேலைமாற்றம் கிடைச்சிருச்சி.. இனிமே இங்கேயே தான் வேலை..." என்று கூறிட,

அவளோ தலையில் கைவைத்து "ஐயோ... இனி தினமும் வீட்ல உன் தொல்லை வேற இருக்குமா? நான் காலி..." என்று பீதியுடன் கூறினாள்.

"ஓய்... நான் உனக்கு தொல்லையா?" என்று கோபம் போல் கேட்டான்.

"பின்னே இல்லேயா!! கபீஸ் கொரங்கு..." என்று கூறி குரங்கு போல் செய்து காட்டினாள்.

"அம்மா... பாருங்க ம்மா இவளை... என்னை இந்த நேம் சொல்லியே கிண்டல் பண்ணுறா?" என்று அவன் சிணுங்கிட, அவனின் புகாரில் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"டேய்... கொழந்தை மாதிரி புகார் பட்டியல் வாசிக்காதே டா... இன்னைக்கு இதையே சமாளிக்க முடியலேனா நாளைப் பின்னே அவளை கல்யாணம் செய்துகிட்டு எப்படி சமாளிப்பே!!!" என்று போட்டு உடைத்தார் ருக்மணியம்மாள்.

மிர்லாவிற்கு தன் காதுகளில் விழுந்த வார்த்தைகள் சரியாகத் தான் விழுந்ததா? இல்லை தனக்கு தான் தப்பாகக் கேட்டதா!!! என்று அதிர்ச்சியாக நின்றிருந்தாள்.

கபிலனுமே இதனை எதிர்பார்த்திடவில்லை. நேரம் பார்த்து பக்குவமாக சொல்ல நினைத்திருந்தான். ஆனால் ருக்மணியம்மாள் சட்டென சொல்லிவிட அவனுமே அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.



-தொடரும்​