• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதிய ஏற்பாடு - திருவிவிலியம்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
புதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும். ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும்.

1628058549737.png


கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலரின் பணிகள் திருத்தூதர் பணிகள் கூறும் ஒரு நூலும், 21 படிப்பினை வழங்கும் மடல்களும் மற்றும் ஒரு தீர்க்கதரிசன நூலும் காணப்படுகின்றன. கிபி 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் இணைக்கப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 
  • Like
Reactions: ircaroline