• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 13)

Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
புதுமனை புகுவிழா

அத்தியாயம் 13


எதுக்காக சித்தி கூப்பிட்டீங்க!..


நீ சாப்பிட்டியா!..


ம்ம்ம்..சாப்பிட்டேன்.. சித்தி…


காலையில் கிளம்பு, இப்ப ராத்திரி ஆச்சு.. … அதான் உன்னை நான் போக வேண்டாம்னு சொன்னேன்…


சரி.. சித்தி… வேலையெல்லாம் முடிஞ்சதா!.. நான் எதுவும் வேலை செய்யவா சித்தி… .


அதெல்லாம் வேண்டாம்… நீயும் காலையில் இருந்து வேலை பார்த்துட்டு தான் இருக்கிறாய்.. நீ போய் தூங்கு… காலையில் சீக்கிரம் கிளம்பனும்ல..போ.. மா.. கல்யாணி என்றாள் சித்தி…


கல்யாணியும் கீதாவின் அருகிலேயே போர்வை விரித்து கொண்டு படுத்தாள்…


சாந்தினிகா தனது பணியை முடித்து வீடு திரும்பினாள்.. அப்போது அவ கூட சங்கீதாவும் கூடவே வர,சாந்தினிகா,அவளுடன் பேசி பழக்கமில்லாததால் என்ன பேசுவதென்று குழப்பத்தில் நடந்து வந்தாள்…


இருவரும் கடையிலிருந்து வரும் போது பேசாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.. சாந்தினிகா அக்கம் பக்கம் பார்த்தபடியே அவளது விழிகள் இரண்டும் யாரையோ எதிர்பார்ப்பது போல தெரிந்தது…


சாந்தினிகா நீ யாரையோ எதிர்ப்பார்க்கின்ற மாதிரி தெரியுது..


இல்ல!.. அதெல்லாம் யாரையும் தேடல, என்று சொல்லிட்டு திரும்பினாள்… மனசுக்குள்ளேயே பவித்திரனை ஒரு வாரமாக பார்க்கலயே!..


எப்போதும் இந்த பஸ் ஸ்டாப்பில் தான் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்… அவனை பார்க்கவே முடியலயே!..என்ற வருத்தத்தில் இருக்க, சங்கீதா வளவளவென பேசிக் கொண்டே இருந்தாள்.. அவளது பேச்சு சாந்தினிகாவை எரிச்சலடைய வைத்தது… சங்கீதா பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் விறுவிறுவென நடந்தாள்…


சங்கீதாவின் தெருவை வந்து அடைந்ததும், அப்பாடா!.. இவளுடைய தொல்லை தாங்க முடியல.. மனதில் நினைக்க, மறுகணம் சங்கீதா, என் தெரு வந்துட்டும்மா!.நீ பார்த்து போம்மா என்றாள்… சாந்தினிகாவும் அவளுக்கு டாட்டா, என்று கை காட்டினாள்… .இன்னும் நம்ம எந்தவொரு தொந்தரவு இல்லாமல் போகலாம் என்று நடந்து கொண்டிருக்க,.. எதிர்க்கே அவங்க அப்பா அனுகரன் வந்தார்…


வாம்மா!..சாந்தினிகா… உன்னை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்… நீ தனியாக தான் வருவாய். அதுமட்டுமல்ல நம்ம வீட்டுக்கிட்டே கரண்ட் இல்ல, உங்க அம்மா,வீட்டுலயே இருக்க விடாமல் நம்ம சாந்தினிகா வந்து கொண்டிருப்பாள். அவளை அழைத்து வாருங்கள் எனச் சொல்லி கையில் லைட்டை கொடுத்து அனுப்பி வைத்தாள்…


வா.. மெதுவாக வா.. என அனுகரன் சாந்தினிகாவை கூட்டிட்டு சென்றார்.. கங்காதேவி வாசல் வரைக்கும் வந்து பார்த்துட்டு உள்ளே நுழைய, சாந்தினிகாவும் வருகிற சத்தம் கேட்டதும், அப்பாடா.. வந்துட்டாங்க என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்…


இரவும் அதே போல் அம்மா,டிபன் எடுத்து வைத்ததும், மூவரும் இரவில் தான் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்… பின்பு தூங்கச் சென்றாள்…


மறுநாள் காலையிலும் தனது பணியைச் செய்வதற்கு கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் பாய்.முகமது.. வந்தார்…


கங்காதேவி பார்த்ததும் வாங்க.. வாங்க.. என்று முகமலர்ச்சியோடு வரவேற்க, பாய் முகமது சார், இந்த நாற்காலியில் அமருங்கள் என்றார் அனுகரன்…


பாய்.. பா.. வாங்க நலமாக இருக்கீங்களா!.. சாந்தினிகா கேட்க,


பாய்.. பா.. ம்ம்ம்.. நல்லா இருக்கிறேன்… நீ தான் வீட்டு பக்கமே வருவதில்லையே.. வேலைப் பளு அதிகமாகி விட்டது.. பாய்.. பா…


அவளும் உங்களைப் பத்தி தான் சொல்லிட்டே இருப்பாள்.. பாய்.. பா.. வீட்டுக்குப் போகவே இல்லை..நம்ம இரண்டு பேரும் போவோம்னு ..ஆனால் லீவ் கிடைக்கவே இல்ல.. அவளால் ஓய்வு எடுக்கவும் முடியல… ரொம்ப அதிகமாக வேலை இருந்துக்கிட்டே இருக்குதுனு… என்றாள் கங்காதேவி…


வேலை அதிகமாக இருக்கிறதா!..நான் வேணா உங்க முதலாளியிடம் பேசட்டும்மா!.. இதெல்லாம் போய் அவங்கிட்ட சொல்லிட்டு கஷ்டப்பட்டால் தானே பாய் பா முன்னேற முடியும்.. நீங் முதலாளியிடம் பேச வேண்டாம்…. பாய். பா.. இன்னும் கொஞ்ச நாள் தான்.. அதுக்குள்ளேயும் குடும்பத்தை ஓரளவுக்குகொண்டு வந்துடுவேன் என்றாள் சாந்தினிகா…


இந்தாங்கம்மா!.. உங்களுக்கு தேவையான பணம்.. வீடு கட்டுவதற்கு யூஸ் புல்லாகஇருக்கும் என்று கங்காதேவியினா கைகளில் கொடுத்தார்…


கங்காதேவியும், அனுகரனும், கண்கலங்கி நின்றதைப்பாய் ..பா.எதுக்காக..மா.. அழறீங்க… முதலில் அழாமல் இருங்க,கண்ணைத் துடைச்சுக்கோங்க!..



உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல… என சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சாந்தினிகாவும் அழுதாள்..


நீங்க எல்லாம் என்னோட குடும்பம்… என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உதவி செய்யனும்னு தோணுச்சு.. அதான்..


அதற்கு கங்கா தேவி.. எங்களுக்கு சொந்த பந்தங்கள்.. எல்லாரும் இருந்தும் யாருமே உதவ முன் வரவே இல்ல ...இது நாள் வரைக்கும் என்னோட தம்பி கூட எட்டிப்பார்க்கவே இல்ல… ஆனால் நீங்க எங்களை உங்க குடும்பத்தில் ஒருத்தியாக நினைச்சு இவ்வளவு பெரிய உதவியை செஞ்சுருக்கீங்க!..


இறுதி வரைக்கும் உங்களுக்கு நாங்க கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்கள்..


இங்க பாருங்க, சாந்தினிகாவும்.. எம் பொண்ணு மாதிரி தான்… நீங்க நல்லபடியாக வீட்டைக் கட்டி முடிக்கனும்.. எனக்கு ஒரு அவசரமான வேலை வந்துருச்சு.. அதுவும் டெல்லியில் இப்பவே கிளம்பனும்… .நான் டெல்லிக்குப் போய்ட்டு எப்போது வருவேன் என்று கூற முடியாது.. அதனால் என் மனைவியை பார்த்துக்கோங்க!..


அவங்க தனியாகவா இருக்காங்க!..


இல்லம்மா!..அவங்க பெரியம்மா கூட இருக்காங்க!..அவங்க குழந்தைகளும்வ வந்துருக்காங்க!..நீயும் நேரம் கிடைக்கும் போது பார்த்துட்டு வாம்மா என்று சொல்லிட்டு கிளம்பினார்..



சாந்தினிகா பணத்தை வாங்கி பீரோவில் வைக்கச் சொல்ல,அடுத்ததாக இன்ஜினியருக்குப் போன் அடித்தாள் ..


சார்,உங்களால் ஆறு மாசத்தில் வேலையை முடிக்க முடியுமா?..


ம்ம்ம்.. தாராளமாக முடித்து விடலாம்.. என சந்தோஷ் கூறினார்.. ஆனால் கொஞ்சம் பணம் தேவைப்படும் என்றார்… வீட்டுக்கு வந்து வாங்கி கொள்கிறீர்களா!..அப்பாவிடம் கொடுத்து விடவா!..


ம்ம்ம்.. அப்படியே கொடுத்து விடுங்கள்.. இன்னும் ஒரு வாரத்தில் வேலையை பாதி முடிச்சுருவேன் எனச் சந்தோஷ் சார் கூறியதும் சீக்கிரமாக முடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினாள்..அப்பாவை அழைத்து விவரமாக கூறி கொடுத்தனுப்பினாள்…


வேலையும் விறுவிறுப்பாக நடக்க, இன்னொரு பக்கமும் பேக்டிரியில் ஏதோ ஸ்டைக் ஆரம்பிச்சுட்டாங்க எனீற காரணத்தினால் பணிக்குப் போகாமல் இருந்தார்… இரவும் பகலுமாக சாந்தினிகா கஷ்டப்படுவதை சிந்தித்து அவளுக்கு துணையாக ,அவங்க அம்மாவும் மாவு பாக்கெட் வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டார்கள்…


சுயதொழில் செய்வதால் வீட்டுச் செலவுக்கு சரியாக போகிறது போக, இலாபகரமாக 800ரூபாய் மிஞ்சியது.. அதனைக் கண்டதும் கங்காதேவியும் சந்தோஷமடைய, கங்காதேவிக்கு உதவியாக அனுகரனும் துணையிருந்தார்… ..


சாந்தினிகாவும், டெக்ஸ்டைல்ஸ் கடையின் அணுகுமுறையை மாற்றி,சேலைகளுக்கு customer பிடிச்ச டிசைனிங்கில் போட்டுகொடுக்கப்படும் என்ற விளம்பரத்தை அறிமுகப்படுத்தினாள்.


டிசைனிங் உங்களுக்கு பிடித்தமான முறையில் ஸ்டோன், எம்பிராய்டரி எல்லாமே வைத்து தைத்து தரப்படும்..மற்ற கடைகளில் விட அந்த கடையில் தான் கூட்டம் அலை போல பெருகியது..அவளுடன் வேலைப் பார்க்கும் ரேஷ்மா, சிவானி..என மற்ற தோழிகள், மற்ற பணிகளை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்… …


மற்றவர்கள் வேலை பார்ப்பதைவிட சாந்தினிகா தனது சொந்த கடையாக நினைத்து அயராது பாடுபட்டு அந்த கடையை நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு கொண்டு வந்ததும் முதலாளியே ஆச்சரியப்பட்டார்..


அவளுக்கு எந்தவொரு உதவியைச் செய்வதற்கு ஆவலாகஇருந்தார்.. ஏனென்றால் அவள் வரைந்த ஓர்க் எல்லாம் ஊர்களிலும் பேமஸ்ஸாக ஆனது… முதலாளி ஜெயச்சந்திரன் பெருமைப்பட்டார்…


அந்த நகரிலேயே அவர்களின் ஜவுளி கடை முதலாவது இடத்தில் பிடித்தது.. அதை நினைத்து ஜெயச்சந்திரன் பெரும் மகிழ்ச்சியானார்..


சாந்தினிகா வாழ்க்கை வெற்றி பயணத்தை தொடர ஆரம்பித்தது…


கல்யாணி பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும், கார்த்திகேயனும் வந்து சாவியைக் கொடுக்க, அவளும் வாங்கிட்டு பைக்கில் ஏறினாள்…


ஏங்க..பைக்கை எடுங்க! .


இல்லம்மா.. என்னால் ஓட்ட முடியாது..


என்னாச்சு,.. என பதற்றமாக கேட்க…


காலில் லேசாக அடிப்பட்டுவிட்டது.. அதனால் நீ ஆட்டோவில் போம்மா,.. என்று பரிவுடன் பேச..


கல்யாணி எதுவும் பேசாமல் ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏறி திரும்பிக் கூட பார்க்காமல் வீட்டுக்குச் சென்றாள்..


டேய்.. என்னடா!.. உன் மனைவி செம கோபத்துல போறாங்க!.. நீ எதுவுமே சொல்லலயா!..


ஆமாம்.. டா.. அங்கிருந்து கிளம்பும் போதே என்னிடம் கேட்டால் காலில் அடிப்பட்ட விஷயத்தைசொல்லவே இல்ல, அதான் கோபத்தில் போகிறாள்.. மதியம் சாப்பிடும் போவோன்ல.. அப்போது அவளை சமாளிச்சிருவேன்…


இப்ப நீ முதலில் பைக்கை எடு… என்றான் கார்த்திகேயன்…


கல்யாணி கோபத்தோடு இருந்தாள்… மதியம் சாதம் எதுவுமே வடிக்காமல், சாப்பிடாமல் உட்கார்ந்து இருந்தாள்…


கார்த்திகேயன் உள்ளே நுழைந்தான்… அதை கவனித்த கல்யாணி.. நில்லுங்க… காலில் எப்படி அடிப்பட்டது கொஞ்சம் விவரமாக சொல்றீங்களா!..


அதான் பஸ் ஸ்டாப்பில் சொன்னேன்ல, பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டேன்..


ம்ம்ம்.. நான் உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. பைக் ஓட்டும் போது drinks குடிக்காதீங்க, அந்த கெட்ட பழக்கத்தை விட்டுருங்க!.. என தலைப்பாட அடிச்சுக்கிட்டேன். இப்ப நான் ஊருக்கு போன சமயத்துல நல்லா, குடிச்சுட்டு பைக்கை எடுத்துருக்கீங்க, பைக்கை திருப்ப முடியாமல் கீழே போட்டு விழுந்துட்டீங்க!.. எனப் பட்டாசு வெடிப்பது போல பேசி முடித்தாள்..


கார்த்திகேயன் அவள் பேசி முடிக்கட்டும்.. அப்புறம் நடந்ததைச் சொல்லுவோம்.. என பொறுமை காத்திருக்க ,


என்னடி.. பேசி முடிச்சாச்சா!..


அப்பவே உம் தலையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறேன்…drinks எப்படி குடிப்பேன்… அடியே!..நீ கோபமானால் என்ன பேசுவேனு உனக்கே தெரியாது..


கொஞ்சம் நேரம் அமைதியாக உட்காரு..என்றான் கார்த்திகேயன்… ..தண்ணீர் கொண்டு வந்து அவளை குடிக்க சொன்னான்…


ஏங்க.. மாமா.. நீங்க drinks அடிக்கலயா!..


ஆமாம்.. டி.. பட்டு.. என்று கன்னத்தை தடவி கொண்டான் கார்த்திகேயன்…


பைக்கிலிருந்து எப்புடி விழுந்தீங்க!..காலில் எதனால் காயம் வந்தது எனக் கேள்வியை கேட்டுக்கிட்டே இருக்க,..


கார்த்திகேயன் சொல்ல ஆரம்பித்தான்… நேற்று வேலையை முடிச்சுட்டு வேகமாக வந்துட்டு இருந்தேன் போது.. நம்ம தெருவுக்குள் உள் நுழையும் போது.. வருகிற வழியில் ஒரு கிடங்கில் தண்ணீர் கெட்டிக் கிடக்கின்ற பக்கத்தில் கல் தட்டி பைக்கை அதனுள் விட்டு நான் கீழே விழுந்ததில் காலில் அந்த கல் இடித்து லைட்டாக அடிச்சிருச்சு.. என்றான் ..


ஏங்க பெரும்அடியா, என கால்களைப் பார்த்த அவள்.. பெரிய காயமாக தான் அவளுக்கு தெரிந்தது..


கார்த்திகேயன் மூட்டில் பலத்த காயத்தைப் பார்த்ததும் கல்யாணியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதை துடைத்த கார்த்திகேயன்,.. இதுக்கெல்லாம் போய் ஏம்மா கண் கலங்குற…என்றான் ...


நீங்க இந்த வலியோடு தான் இருந்துள்ளீர்கள் ..என்னிடம்சொன்னால் வருத்தப்படுவேன் என்று நினைச்சு நீங்க சொல்லாமல் இருந்துட்டீங்க!. ..என்றாள் வருத்தமாக..


ஆமாம்.. மா.. நீ ரொம்ப நாள் கழித்து உங்க சித்தி வீட்டுக்குப் போயிருக்க!.. உன் சந்தோஷத்தைக் கலைக்க வேண்டாம் என்று நினைத்தேன்… அது தப்பா… என கேட்டான்..


..மீண்டும் வருவாள் சாந்தினிகா… .














.