• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 16)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
புதுமனை புகுவிழா


அத்தியாயம் 16


அம்மா !.என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. ஆனால் நீங்க பேசாமல் இருக்கவே மாட்டிங்களா என்று கோபமாக சொன்னாள்…


அதற்கு கங்காதேவி ஏன்டி..சும்மா ஒரு பேச்சுக்குத் தானே அப்படி சொன்னேன்..இதுக்கு போய் இப்படி கோபப்படுற,


சாந்தினிகா,சேலையில் பாதி ஒர்க் வேலையை முடிச்சுட்டு அம்மாவிடம் எதுவும் பேசாமல் மெளனமாக அவளது அறைக்குள் நுழைந்தாள்…


அனுகரன் கங்காதேவியிடம் சாந்தினிகா சாப்பிட்டாளா!..


ம்ம்ம்.. சாப்பிட்டாள்… கல்யாணத்தைப் பத்தி பேசியதுக்காக தான் கோபத்துலபோய் படுத்துட்டாள்… இல்லைனா, இன்னும் கொஞ்ச நேரம் வேலைப் பார்த்திருப்பாள்… என்று சொல்லிக் கொண்டே லைட்டை அமர்த்திய பின்பு தூங்கச் சென்றாள் கங்காதேவி…


படுத்தபிறகும், பவித்திரனின் நினைவு அவளை வாட்டியது… மனசுக்குள்ளேயே அவன் அருகில் இருப்பதாக நினைத்து பேசினாள்…பவித்திரன் எங்க தான் இருக்குற, என்னமோ தெரியல எனக்கு உன்னுடைய ஞாபகமாகவே இருக்குது.. நீயும் என்னுடைய நினைவாக இருக்கியா!.. இல்ல வேற யாரையாவது திருமணம் செஞ்சுட்டியா, எனக்கு தெரியல… என்று அவளுக்குள்ளேயே பேசிக் கொண்டு தூங்கி விட்டாள்..


பவித்திரன், சம்பத்திடம் கூட சொல்லாமல் சாந்தினிகாவைச் சந்திப்பதற்கு சென்னைக்கு வந்தான்.. முதலில் ஒரு தனியாக ரூம் எடுத்து, தங்கிட்டு விடிஞ்ச பிறகு அவளை சந்திப்போம் என்று எண்ணி ஹோட்டலுக்குச் சென்று புக்கிங் செய்து அறையில் தங்கியிருந்தான்..


கல்யாணி, விடியற்காலையில் எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்… அப்போது கார்த்திகேயன் எழுந்து வந்து வாசலில் அமர்ந்தான்… சமையலில் மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க,வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்…


என்னங்க!.. காலையில் வாசலில் உட்கார்ந்து இருக்கீங்க,.. இந்தாங்க காபி என்று சூடாக கொடுக்க.கார்த்திகேயனும் வாங்கி பருகினான்…


என்னம்மோ!.. தெரியல.. கல்யாணி.. அம்மா,அப்பா..ஞாபகமாகவே இருக்கிறது கல்யாணி… அவங்க எங்க இருக்காங்கன்னு.. தெரியல.. ஒரே குழப்பமாக இருக்கிறது.. எனக்கு அவங்கள நல்லா தெரியும்.. ஆனால் என்னை தான் அவங்க பார்த்ததில்லை… . இப்போது நான் ஒரு மகளுக்கு அப்பாவாக இருக்கிறேன்… அவங்களை எப்போதும் பார்ப்பேன் என்ற எதிர்பார்ப்பில இருக்கிறேன்…



ஏங்க, இன்னிக்கு காலையிலேயே கவலைப் பட ஆரம்பிச்சுட்டீங்களா!முதலில் எழுந்திருங்க… என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்…


அதற்குள் ராகவி, எழுந்து விட்டாள்.. அவளுக்கு காய்ச்சிய பாலை கொடுக்க,குடித்து முடித்ததும் மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்… .


சாந்தினிகா காலையில் கொஞ்சம் தாமதமாக தான் எழுந்தாள்.. அப்போது அவளுடைய போன் ஒலித்துக் கொண்டிருக்க, தூக்க கலக்கத்தில் அப்படியே நடந்து வந்து செல்ப்பில் இருந்த போனை அழுத்தி பேசினாள்..


சொல்லு ரேஷ்மா,.. ஏய்!. சாந்தினிகா.. நீ சீக்கிரமாக கடைக்கு வரனும்மா!..உனக்கு யாராவது போன் செய்தார்களா,..


மறுபக்கம் எனக்கும் இப்போது தான் போன் பண்ணாங்க!.. அம்மா தான்.. பேசுனாங்க, இதோ கிளம்ப போகிறேன் என்றாள்..


ஓ.. கே.. சாந்தினிகா.. கடையில் பார்க்கலாம் என்று கூறினாள்…


பவித்திரன் காலை டிபனை முடித்து சீக்கிரமாக கிளம்பி வெளியே வந்தான்.. அதுவும் முதல் சந்திப்பில் வந்த இடத்தில் வெயிட் பண்ணினான்…


சாந்தினிகா,வீட்டிலிருந்து கிளம்பும் போது கங்கா தேவி வந்து என்னை மார்க்கெட்டில் இறக்கி விட்டுவிடு.. நானே வரும் போது ஆட்டோ பிடித்து வந்துடுறேன் என்று கூறினாள்…


அதே போல் கங்காதேவியை மார்க்கெட்டில் விட்டுட்டு, அம்மாவை கூப்பிட்டு கவனமாக வீட்டுக்கு போங்க என்றாள்.


.சாந்தினிகாவும்.. ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டிருந்தாள்.. அப்போது வருகிற வழியிலே ஒரு பெரியவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தார்…


அதனைப் பார்த்ததும் வேகமாக இறங்கி அவரைத் தூக்கி,கடையில்ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி முகத்தில் தெளித்தாள்.. கூட்டமாக பார்த்துக் கொண்டிருக்க,பவித்திரனும் வந்து பார்க்க,.. அந்த பெரியவர் கண் விழிக்க.. மெதுவாக எழுந்திருச்சு..


சாந்தினிகாவை பார்த்து நன்றி சொல்கிறார்.. அதற்கு அவளும்.. பரவாயில்லை.. நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க!.. அங்கேயே போய் விடுகிறேன் என்றாள்…



வேண்டாம்… மா… நானேசெல்கிறேன் என வேகமாக எழுந்து சென்றார்…கூட்டமும் கலைந்தது… அவளும் ஸ்கூட்டியை ஸ்டாட் செய்கிறார்…


இவளோ ரோட்டிற்கு வலதுபுறம் நிற்க, பவித்திரன் இடது பக்கத்தில் நிற்க.. அவளை பார்த்தவுடன்.. சாந்தினிகா.. சாந்தினிகா என்று அவளை கூப்பிட.. ஸ்கூட்டியை எடுத்து கிளம்பினாள்.. அவளுடைய காதில் விழ வில்லை…


பின்னாலேயே ஓடி வந்த பவித்திரன் சாந்தினிகாவை நெருங்க முடியாமல் அப்படியே நின்று விட்டான்…


கடையில் ரேஷ்மா, சிவானி ஒற்றுமையோடு அவரது பணிகளைச் செய்து கொண்டிருக்க, சாந்தினிகாவும் வருகின்றாள்… ஒர்க் செய்து முடித்த சேலையை கொடுக்கின்றாள்..


முதலாளி ஜெயச்சந்திரனும் அதைப் பார்த்து மிகவும் அருமையாக இருக்கிறது..இன்னும் எத்தனை சேலை ஒர்க வைக்காமல் கிடைக்கிறது ..


சாந்தினிகா,சற்று யோசித்து.. இன்னும் ஐந்நூறு சேலைகள் இருக்கிறது ஐயா…


ஓ.. கோ.. நீ போய் மற்ற சேலைகளுக்கு ஒர்க் வைத்து முடித்து விடும்மா!..பிறகு உன்னை அழைக்கும் போது வா என்று உத்தரவிட்டார்…


ஐயா!..காலையிலேயே போன் பண்ணீங்க,.. நம்ம கடைக்கு யாரும் வரப் போறாங்களா!..


அட.. ஆமாம்.. அத சொல்றதுக்காக தான் வரச் சொன்னேன… நானே உங்களிடம் சொல்றதுக்கு மறந்துட்டேன்…


கடையில் பணி செய்யும் அனைவரையும் வரச் சொல்லு என்று கூறினார்.. சாந்தினிகாவும் எல்லாத்தையும் கூப்பிட்டதும் கும்பலாக வந்து நின்றார்கள்..


இன்னிக்கு நம்ம கடைக்கு புதுசாக ஒரு எம். டி வரப் போறாங்க…

சாந்தினிகா குழப்பத்தில் நீங்க எம்.. டி.. வேற யாரு சார்.. எம் ..டி யாக வரப்போறாங்க,.. எங்களுக்கு புரியல என்றாள்…


சாந்தினிகா.. இன்னும் நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்கவில்லை…அடுத்த வாரத்தில் என்னால் கடைக்கு வர முடியாது… எனக்குப் பதிலாக என்னோட பையன் தினேஷ் வருவான்… அவனை தான் நீங்க சந்திக்கப் போறீங்க என்று கூறினார்… புது எம்.. டி.. காலையில் 11மணிக்கு வருவார்.. அவனுக்கு இந்த கடையில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தி வைப்பதற்காக தான் கொஞ்சம் நேரத்தோடு வரவழைத்தேன்..


அதுக்காக உங்க எல்லாருக்கும் சின்ன பார்ட்டி.. ஒரு மணி நேரம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம்… இப்போது போய் சிறிது வேலைகளை முடியுங்கள் என்றார்.. அவரவர் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்..


ரேஷ்மா.. சிவானியிடம். நீ அவங்க பையனை பாத்திருக்கியா என்று கேட்க..

இல்லைரேஷ்மா.. சின்னபுள்ளையாக இருக்கும் போது பார்த்தேன்… அவங்க வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார்கள்… அங்கிருந்து படிச்சு முடிச்சு வந்துட்டாங்க போல… என்று கூறினாள் சிவானி…


கார்த்திகேயன் எப்போதும் போல கடைக்குச் சென்று கொண்டிருக்க..அவனது போன் அடித்தது…பைக்கை ஓரமாக நிறுத்தி பேசினான்..


சொல்லுங்க!..மேடம்…


நீங்க எங்க இருக்கீங்க,.. கார்த்திகேயன்…என்று மறுபக்க எதிரொலிப்பில் ...


மேடம், நம்ம கடைக்குத் தான் வந்துட்டு இருக்கேன்..


நீங்க நேற்று நளன் டெக்ஸ்டைல்ஸ் முதலாளியிடம் பேசிட்டு ஒர்க் சேலை கூட வாங்கிட்டு வந்தீங்களே அது கூட ரொம்ப நல்லா இருந்ததே!..


எஸ்.. மேடம்.. தெரியும்…


நம்ம ஒரு ஆர்டர் கொடுத்தால் எப்போது செஞ்சு முடிப்பீங்க!.. Payment எவ்வளவு ஆகும் என்பதை நேராக விசாரித்து விட்டு வாருங்கள் என்றார்கள்..


கார்த்திகேயன் பேசிவிட்டு பைக்கை ஸ்டாட் செய்து கிளம்பினான்… பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தான்…


பவித்திரன் அதே இடத்திலேயே ஒரு கடையில் அமர்ந்திருந்தான்… அப்போது ஒரு வண்டியும் காரும் வேகமாக வந்து மோதியது.. அதனைப் பார்த்த பவித்திரனும் செல்ல…


கடையில் உள்ள எல்லாரும் பதறடித்து ஓடி பைக்கில் இருந்து கீழே விழுந்தவரை தூக்க முயற்சி செய்து நிற்க வைக்க, அவரும் போதையில் இருந்ததால் அனைவரும் அமைதியாக சென்றனர்…


காரில் இருந்து இறங்கிய தினேஷ், அவரிடம் வாக்குவாதம் செய்ய, அவர்களுக்குள் மோதல் அதிகமாகி தினேஷின் சட்டையைப் பிடித்த அந்த ஆள் நல்லா குடிபோதையில் இருந்தார்…


கண்ணுக்கு முன் எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பது எப்போதும் அவனது வழக்கம்.. அதே போல தினேஷின் சட்டையைப் பிடித்த அந்த நபரிடம் பவித்திரன் வந்து பேசினான்…


ஹலோ!..சார்… .கையை எடுங்க .நாங்க தான் கவனிக்காமல் வந்தோம்… அதனால் எங்க மேல தான் தப்பு.. நீங்க பைக்கை எடுத்தால் நாங்க காரை எடுக்க முடியும் நிதானமாக பேசி அவரை அனுப்பி வைத்தான்..


உடனே. தினேஷ்.. என்ன ஜி நீங்க… அவன் தான் குடிச்சுட்டு வேகமாக வந்தான் ..அவனுக்கு ஆதரவாக பேசி அனுப்பி வைச்சுட்டீங்க… .


சார், தப்பா நினைக்காதீங்க,..உங்க சட்டையை பிடிச்சவன் ..ஏற்கனவே போதையில் இருக்கின்றான்.. இந்த சூழ்நிலையில் அவனிடம் என்ன சொன்னாலும் காதில் வாங்கி கொள்ள மாட்டான்.. பேசியதை திரும்ப திரும்ப பேசுவான்.. அதனால் தான் அவனுக்கு ஆதரவாக பேசினேன்…



ஓ.. அப்படியா… சரிங்க. ஜி..ரொம்ப நன்றி.. என சொல்லிட்டு கிளம்ப.. தினேஷின் பையிலிருந்து பர்ஸ் விழுந்தது. அதை எடுத்து தினேஷிடம் கொடுக்கும் போது அவனது கையில் பச்சை குத்தியிருந்தது. .


அதை பார்த்த பவித்திரன்… .அவன் பள்ளியில் படிக்கும் அவனுக்கு ஒரு தோழன் தினேஷ் குமார்… எப்போதும் கையினில் பிரண்ட்ஸ்ஷிப்க்கு அடையாளமாக இன்சியல் போடும் பழக்கம் உண்டு.. அதை பார்த்து கேட்டான்…


உன்னோட பெயர் தினேஷ் என கேட்டதும்…


அவனும் ஆமாம்.. நீங்க யாரு.. உங்களுக்கு எப்புடி என்னுடைய பெயர் தெரிந்தது..


டேய்!.. தினேஷ்.. ஜி.. நான் பவித்திரன்… உன்னோட கிளாஸ் மேட்… டா…


ஏய்!.. நீயா.. டா… என்று அவனை கட்டி தழுவிக் கொண்டான்.. .தினேஷ் பார்த்து எத்தனை வருடங்களாக ஆயிடுச்சு.. இன்னும் என்னை மறக்காமல் வச்சிருக்கியே ..டா.. இது தான்டா.. நம்ம நட்பு…


இவ்வளவு நாள்களாக எங்கடா.. இருந்தேன்.. உன்னை பார்க்கனும் ..உன்கூட பேசனும் நினைச்சேன்.. ஆனால் நீ எந்த ஊருல இருக்கிற.. என்ற தகவலும் எனக்கு தெரியல…என்றான்.பவித்திரன் வருத்தமாக…


இப்ப தான் பார்த்தாச்சே… இனிமேல் தினமும் என்னை பார்க்கலாம்… சந்திக்கலாம்… நம்ம இரண்டு பேரும் ஊரை சுத்தலாம் என்றான் தினேஷ்…நீ.. வா .நம்ம ஒரு ரெஸ்ட்டாரண்ட் போவோம் அழைத்துச் சென்றான்…


இருவரும் ஒரு ரெஸ்ட்டாரண்ட்ல போய் உட்கார்ந்து பேசினார்கள்… தினேஷ் முதலில் காபி ஆர்டர் செய்தான்…


சொல்லுடா!..என்ன பண்ற… உங்க அப்பா, அம்மா.. எங்க இருக்காங்க… என கேட்க..


அதற்கு பவித்திரன்… எனக்கும் அப்பா ,அம்மா.. இல்ல தவறி விட்டார்கள்… டா..எங்க சொந்த ஊரில் தான் இருக்கிறேன்… வீடு, தோட்டம்.. எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்கேன்… இங்க ஒரு வருடமாக வேலை பார்த்துட்டு இருந்தேன் .அப்போது நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்லி முடித்தான்…


டேய்.. உன் வாழ்க்கையில் இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்குதே!.. ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு அவளை தேடி வந்திருக்கிறாய்… அந்த பொண்ணுக்கு ஒரு வேளை கல்யாணம் முடிந்திருந்தால் நீ அடுத்த என்ன செய்வ.. டா.. என்றான் தினேஷ்.


என்னோட விதி அப்படித்தான் என எழுதியிருந்தால் யாரால அத மாத்த முடியும். .


ஓ.. கே.. டா.. காபியை குடி என்றான்..


நீ.. என்னடா பண்ற… மறுகேள்வி தினேஷிடம் கேட்க..


நானும் வெளிநாட்டில் இருந்து படித்து முடித்து விட்டு நேற்று தான் வந்தேன்…அப்பா இந்த ஊரில் டெக்ஸ்டைல்ஸ் கடை வச்சிருக்காங்க.. அதை நான் தான் பார்த்துக்கனும் என்று கட்டாயமாக சொல்லி விட்டார்..


இப்ப அங்க தான் போய்ட்டு இருந்தேன்…இடையில் பிரச்சினை வந்து விட்டது..


சரிடா… தினேஷ்… எனக்கு அவளை தேடி எப்படியாவது என் காதலை சொல்லனும என்ற ஆவலோடு இருக்கிறேன்.. நம்ம இன்னொரு நாள் சந்திப்போம் என்று சொல்லி விடைபெற..


இருடா!.. நான் வேணா.. போகும் போது ட்ராப் பண்றேன்..என்றான் தினேஷ்.. அதற்கு பவித்திரன் பரவாயில்ல.. டா.. Bye என்று சொல்லிட்டுச் சென்றான்..


மீண்டும் வருவாள் சாந்தினிகா!...



வார்த்தைகளின் எண்ணிக்கை 1133
 
Top