• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 6)

Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
அத்தியாயம் 6


அப்பா என்ன செய்றீங்க,...


சமைச்சுட்டு இருக்கிறேன் என்றார்… பார்த்தாலே தெரியுதே,


நான் வந்து சமைப்பேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்…


ஏம்மா நீ போய்ட்டு சீக்கிரமாக வந்துருவேனு நினைச்சேன்… நீ வர தாமதம் ஆனதால் நானே ஏதோ குழம்பு வச்சுட்டேன்…


சரிங்கப்பா,.. வாங்க மற்ற வேலைகளை நானே பார்த்துக்கிறேன்.


நீ போன விஷயம் என்னாச்சும்மா!..


அப்பா, நாளைக்கு பாய்… பா.. வீட்டுக்கே வந்து பணத்தைக் கொடுக்கிறேன் என சொல்லிட்டார்… .


எவ்வளவு… பேசிருக்கம்மா!.


ஷேட்… இரண்டு இலட்சம் தான் தருகிறேன்… சொல்லிட்டார்… .அதுக்கு மேல அவரிடம் பேசல ….


சரிம்மா… நானும் எனக்கு தெரிந்த நண்பர் இருக்கிறார்…அவங்ககிட்ட இன்னிக்கு பேசுறேன்…


இல்லப்பா… நம்ம வீடு கட்டும் போது இன்னும் பணம் தேவையென்றால் பாய்.. பா.. கொடுக்கிறேன் என்று சொல்லிட்டார்… .


நீங்க இன்னும் யாரிடமும் கேட்க வேண்டாம் என கூறினாள் சாந்தினிகா…


அம்மா என்னப்பா பண்றாங்க!..


அவ டி. வி பார்த்துட்டு இருக்கா,..


மதியம் நேரமாயிடுச்சு,.. நீங்க சாப்பிடுங்க அம்மாவுக்கு நானே ஊட்டி விடுகிறேன்…


"பவித்திரன் வேறோரு கற்பனையில் தன்னையே மறந்து அடடா!.. என்னம்மா அழகு, இதழே இதழு,.. பேசும் அழகே, தனி அழகு தான் முதலில் பார்த்த போது அவளின் அழகை அறியாமல் போய் விட்டேனே!.. 'தனந்தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள்… .


பவித்திரனைக் கவனித்த சம்பத், இவனுக்கு என்னாச்சு… ஏன்?..தனியாக பேசிட்டு இருக்கிறான்…


டேய், பவித்திரன்… இங்க பாருடா…


வெடுக்கென எப்படா வந்த, இவ்வளவு நேரம் ஆயிடுச்சு மச்சான் என்றான் பவித்திரன்…


நான் அப்பவே வந்துட்டேன்,.. நீ தான் வந்ததில் இருந்து பைத்தியம் போல தனியாக புலம்பிட்டு இருக்கிறாய்…


.".அது ஒன்னும் இல்லடா.. மச்சான்.. என நைசாக நழுவினான்… '


மச்சான்.. ஏதோ இருக்கு.. நீ இன்னிக்கு எப்போதும் போல இல்ல, ஏதோ ஒரு விஷயம் இருக்கு. சொல்லுடா…


சம்பத், இன்னிக்கு ஒரு பொண்ண பார்த்தேன்.. டா…


இங்க.. பாரேன்.. உன்கிட்ட பொண்ணுங்க பேசுவாங்களா!.. டா…


ஏன்டா.. இப்படி கேட்க.. என்றான் பவித்திரன்…


நீ தான் பாதி நாளில் நொண்டியாகவே இருக்கிறீயே,.. அதான்டா.. கேட்டேன்… தப்பா நினைச்சுடாத,..


இல்லடா… மச்சான்… அவள முதலில் சந்திக்கும் போது நான் இப்படி இருந்ததில்லை… ஆனால் இன்னிக்கு அவளை நெருங்கிய போது தான் இரு விழிகளின் பார்வை என்னை அப்படியே இழுத்து விட்டது என்றே கூறலாம்…


அவளை நீ எப்போது சந்தித்தாய் என்று கேட்டான் சம்பத்…


பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவளும் என் எதிரே வந்தாள்.. அவ நீங்க வேலை பார்க்க வேண்டியது தானே !.எதற்காக பிச்சை எடுக்குறீங்க என அவள் கேட்க நானும் எனக்கு வேலை எதுவும் கிடைக்கல ஊனத்தை பார்த்து யாரும் கொடுக்கல அப்படினு தான் சொன்னேன்…


அவ மறுதரம் என்னைப் பார்த்து அந்த வேலை வாங்கி தருகிறேன் என சொன்னாள்…


அட.. அப்படியா… அப்படி ஒரு நல்ல பொண்ணு… இருக்காளா!.. .


அடுத்து என்ன நடந்ததுனு தெரியுமா!..


"நடந்த அனைத்து விஷயங்களையும் சம்பத்திடம் கூறினான்… '


அவளோட பெயர் சாந்தினிகா…


"என்னை கடைசியாக பார்த்துட்டு சிரிச்சுட்டு போனாள்… .'


அவளது மனசில் என்ன இருக்குதோ!.. அந்த கடவுளுக்குத் தான் தெரியும் என சம்பத்திடம் சொல்லி கொண்டிருந்தான்… .


நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தால் அவளும் உன்னையே தான் நினைத்துக் கொண்டிருப்பாள் என்றான் சம்பத்…


அப்படியா… டா.. அவளுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்குமோ!... என ஆசையில் பல கற்பனைகளை வளர்த்தான் பவித்திரன்… .


கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தங்கை அரச்சனா தன் அண்ணனுக்கு போன் செய்தாள்… பவித்திரனும் அவளிடம் அன்பாகவும் ஆதரவாகவும் விசாரித்தான்…


அர்ச்சனா வருத்தத்துடன் பேசினாள்.. நான் உன்னை எப்போது சந்திப்பேன்.. உன்னைக் காண ஆவலாக உள்ளேன்… நீ தான் என்னோட கல்லூரிக்கு வரவே மாட்டேன்கிறாய்…


ஏம்மா!.. அண்ணனுக்கு இங்க வேலை அதிகமாக கொடுக்கிறாங்க,.. அந்த வேலைகளை முடிப்பதற்குள்ள போதும் போதும் என்கிறது நம்ம நிலைமை… .


அண்ணா ,வேலை ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா!..


இல்ல.. அர்ச்சனா… ஒரே நாளில் பார்க்கனும்னு சொல்வாங்க, மற்றபடி அவ்வளவா கஷ்டமில்லை… நீ நல்லா படி… First Class ல தான் நீ பாஸ் பண்ணனும் …


கண்டிப்பாக.. அண்ணா…


அத்தைக்கு நீ போன் பண்ணியா…


இல்லம்மா… இனிமேல் தான் பண்ணனும்.


"சரி…அண்ணா… எனக்கு night study ஆரம்பிக்க போறாங்க நாளைக்கு பண்றேன் என்று சொல்லிட்டு போனை வைத்து விட்டாள்…'


போனை தூக்கி கட்டிலில் போட்டான்… அதனைக் கண்ட சம்பத்.. ஏன்டா.. தங்கச்சியிடம் பொய்யாக பேசுவது கஷ்டமாக இருக்கிறதா?..


இதுக்கு தான்டா… ஆரம்பத்தில் இருந்தே சொன்ன,.. நீ கேட்டாதான… போடா.. போய் ..படு ..தூக்கம் நல்லா வரும்…


"சாந்தினிகா இரவு வேலையை முடித்து விட்டு அம்மாவுடன் டி. வி பாரத்துட்டு இருக்க, அவங்க அப்பா.. நீ அந்த இளைஞனை பார்த்தியா,.. என கேட்க தான் செய்தார்… '


ஆமாம்...பா… இன்னிக்கு அவனை மறுபடியும் பஸ் ஸ்டாண்டில் சந்தித்தேன்… அவனோட வாழ்க்கை மிகவும் சோகம்… அத நினைக்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கிறது .. மறுபக்கம் அத நினைச்சு கவலையாக உள்ளது…


என்னம்மா… அவனோட வாழ்க்கையில் நடந்துச்சு…பவித்திரனைப் பத்தி முழு விபரத்தையும் அனுகரனிடம் சொன்னாள் ..


"சாந்தினிகா சொல்வதைக் கேட்டு இந்த காலத்துல இப்படி ஒரு இளைஞனா.. ஆச்சரியமாக உள்ளது… உண்மையாகவே அவன் போலீஸில் சிக்கினாள் திருட்டு கேஸ் என்று உள்ளே போட்டு விடுவாங்க… அவனோட வாழ்க்கையே ஜெயிலில் தான் போகும் என அவங்க அப்பா சொன்னது சாந்தினிகாவிற்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது… '


பவித்திரனுக்கு அப்படி ஒரு நிலைமை வந்திடக் கூடாது என்று மனசில் படபட அடிச்சது… ஏன்?.. எதற்கு அவனது மேல் எனக்கு இப்படி ஒரு அன்பு …


"இப்போதைக்கு நம்ம காதல் அப்படி என்ற வார்த்தையைப் பத்தி பேசவே கூடாது… நம்ம ஒரு வீடு கட்டனும் அப்புறம் தான் மத்த விஷயங்கள் என்று மனசுக்குள்நினைத்துக்

கொண்டாள்…


"ச்சே.. என்ன அடுப்பு… வீட்டுல ஒரு கேஸ் ஸ்டவ் இருக்குதா!.. ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன்…எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்… எங்க அப்பன் கேட்டாரா!.. இப்படி கஷ்டப்பட வச்சுட்டு அவரு மேலோகம் போய்ட்டாரு என புலம்பியபடி இருந்தாள் கல்யாணி… '


கல்யாணி…கல்யாணி…


"இவரு ஏன் இப்படி கத்துறாரு… உள்ள. வரவேண்டியது தானே என்றாள் எரிச்சலுடன்.. '


"என்னய்யா!.. எதுக்கு எம் பேர ஏலம் விடுற… '


கல்யாணி… ஒரு சந்தோஷமான விஷயம் …


"உனக்கு வேலைக் கிடைச்சிருச்சா,.. 'ஆவலாக கேட்ட கல்யாணி…


அது.. இல்ல… நம்ம சென்னை போகிறதுக்கு டிக்கெட் கிடைச்சிருச்சு…


அட.. போயா… டிக்கெட் தானா… வேலை இல்லையா…


கல்யாணி… இவ்வளவு நாளா… எங்க அப்பா, அம்மாவைப் பார்க்கனும் என்ற ஆசையில் இருந்தேன்…


ஆனா… .அந்த சந்தோஷம் உம் முகத்தில் இல்லையே!..


"எப்படி… யா… இருக்கும்..நமக்கு கல்யாணம் முடிஞ்சு மூன்று மாசம் தான் ஆகுது… நீ ஒரு நல்ல வேலையில் சேர்ந்து நம்ம குடும்பத்தை ஒரு லெவலுக்குக் கொண்டு வருவேனு நினைச்சேன்.. ஆனால் நீ உங்க அப்பா, அம்மாவைப் பார்த்துட்டு வருகிறேன் என சொல்கிறாய்… '


இங்க பாருயா… நீ நல்லா படிச்சுருக்க, அதுவும் எங்க அப்பா கூட வேலைப் பார்த்ததால் உன்னையே எங்க அப்பாவுக்கு பிடிச்சு விட்டது.. கொஞ்ச நாள் அப்பா கூட இருந்ததால நம்ம கையில் பணம் இருந்துட்டே இருந்துச்சு ..எப்போ அந்த மனுஷன் நம்மள விட்டுப் போனாரோ!.. அதிலேருந்து செலவு தான் அதிகமாக இருக்குது…


நீயும் வேலை பார்த்து வந்த காச கையில் தான் கொடுக்கிற.. ஆனா மறுநிமிசத்துக்குள்ள தண்ணீர் போல செலவாகுது… .


"கொஞ்சம் பணம் கம்பேனியில் ஏத்திக்கொடுப்பாங்கன்னு சொன்ன,.. அதுவும் நீங்க எல்லாரும் சேர்ந்து ஸ்டைக் பண்ணி வருகிற பணத்தையும் வரவிடாமல், பண்ணிட்ட,.. அந்த வேலையும் வேணாம்னு வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்கிற, இப்போது நான் உமக்கு பதிலாக வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்… .'


கல்யாணி… கோபப்படாத.. இந்த டிக்கெட் கிடைக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?.


"ஆமா… டிக்கெட் எப்படி எடுத்த… அதுக்கு துட்டு யாரு கொடுத்தா… மறுபடியும் கடன் வாங்குனியா… யா.. என வெறுப்புடன் கார்த்திகேயனை நோக்கினாள்… '



என்னோட நண்பனிடம் கேட்டேன்… அவனே டிக்கெட் எடுத்துக் கொடுத்தான்…


சும்மாவா… கொடுப்பான்…


உன் வாயிலே ஒன்னு குடுப்பேன்யா… உண்மையைச் சொல்லு…


கல்யாணி.. கடனுக்குத் தான் நண்பனிடம் கேட்டிருந்தேன்… ஊருக்குப் போய்ட்டு வந்ததும் வேலைப் பார்த்துக் கொடுத்துருவேன்… …


எந்த வேலைக்கு நீ போவ… .


ஏன்டி… கல்யாணி… உனக்கு தேவை பணம் தானே… அந்த பணத்தை எப்படியாவது கொடுத்துருவேன்… சென்னைக்கு போகிறதுக்கு அனுமதி கொடும்மா…


இருக்கிற வேலையை விட்டுட்ட, அப்புறம் எப்புடி பணத்தை உன் நண்பனிடம் கொடுப்ப,


அது வந்து… அது வந்து…


ச்சே… நானே உனக்கு வேலை நிரந்தரமாக இல்லையே என்ற கவலையில் இருக்கேன்… நீ வேற ஏன்யா இப்படி சங்கடப்படுத்துற… .


உன்னைக் கட்டிக்கிட்டு..நான் தான் இப்படி சீரழியுறேன்… .


கல்யாணி… எங்க அப்பா, அம்மாவிடம் நம்ம பேசுனா… எனக்கு அவங்களே வியாபாரம் பண்றதுக்கு பணத்தை ரெடி பண்ணிக் கொடுத்திடுவாங்க!...


உண்மையாவே.. உங்க அம்மா, அப்பா..குடுப்பாங்களா!..


நானே கோபத்துல வீட்டை விட்டு வந்துட்டேன்… பத்து வருடம் கழிச்சு போறேன்.. எங்க அப்பாவும் அம்மாவும் எனக்கு என்ன வேணும்னாலும் செய்வாங்க!..


"எம் மேல எங்க அம்மா அம்புட்டு பாசம் வச்சிருக்காங்க!... '


யோ… நீ சொல்ற பார்த்தா உனக்கு சொத்தையேக் கொடுத்தாலும் கொடுப்பாங்க… அப்படி தானேய்யா,..


ஐய்யயோ… இவள சமாளிக்க வேற வழியில்லையே… இப்போதைக்கு நம்ம ஊருக்கு போகனும்னா… ஆமாம்னு தான் சொல்லனும்… .


ஏய்யா… என்ன யோசித்துட்டு இருக்க ...நான் சொன்னதுக்கு பதிலே சொல்ல வில்லை… .


"ஆமாம்… கல்யாணி… எங்க அம்மாவும் அப்பாவும் அப்படி பாசமானவங்க…'


"சரி… .நானும் உன் கூட சென்னைக்கு வாரேன் என்றதும் கார்த்திகேயனுக்கு அதிர்ச்சியானது… .'


நீ எதுக்கு கல்யாணி… இந்த வீட்டை நல்லபடியாக பார்த்துக்கனும்.. நீயும் அங்க வந்துட்டா… யாரும் நம்ம வீட்டை நல்லபடியாக வச்சிருப்பா… அத பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்… எங்க அப்பா வாழ்ந்த வீட்டை எனக்கு எப்படி வச்சுக்கனும் என்பது எனக்கு நல்லாவே தெரியும் ..


உங்க கூட நான் வருகிறது உங்களுக்கு எதுவும் பிரச்சினையா!...


"அப்படியெல்லாம் இல்லவே இல்ல கல்யாணி… நீ என் கூட வர்றது எனக்கு ஒரே ஜாலியாக இருக்குது…. '


இங்க பாருயா!.. அங்க உங்க அம்மாவிடம் போய் நம்ம குழந்தைக்குத் தள்ளி போட்ட விஷயத்தைச் சொன்ன, அப்புறம் உனக்கு அவ்வளவு தான் சொல்லிட்டேன்…


அடடடா… இது வேறயா என்ற பயத்தில் கிளம்ப சென்றான்… .


கல்யாணி கிளம்பி கொண்டிருந்தாள்… அப்போது கார்த்திகேயன் வந்து கட்டிலில் அமர்ந்தான் …


என்னய்யா,.. ஒரு மாதிரியாக வந்து உட்காருற…


டிக்கெட் எடுக்கும் போது ஒன்னு மட்டும் தான் எடுத்தானா!.. இன்னொரு டிக்கெட் எடுக்கல.. நானும் இப்போது தான் பார்த்தேன்.


என்னய்யா.. நீ… இப்படி முட்டாளாக இருக்க.. உனக்கு மட்டும் தான் எடுத்துருக்கேன்.. என்னை நீ மறந்துட்ட அப்படிதானே…


"இல்ல, நான் மட்டும் போய் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சு தான் டிக்கெட் எடுக்க சொன்னேன்… நீ வருவேனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… '


உன்னிடம் ஒரு டிக்கெட் தான் இருந்துருக்கு… அது தெரிஞ்சே நீ அமைதியாக இருந்துருக்க, என்னிடம் சொல்ல வேண்டியது தானே… .


சரி… நீ மட்டும் போய்ட்டு வா.. என சொல்லிட்டு உள்ளே அவளது பணியைத் தொடர போய் விட்டாள்…


சாந்தினிகாவிற்கு பாய்… பா… போன் செய்து உன்னுடைய வீட்டுக்குத் தான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார்…


"அவளும் வாங்க… பாய்… பா… .. அப்பாவும் வீட்டில் தான் இருக்கிறார்… '


பாய்… பா.. வந்துட்டு இருக்காங்களாம்,.. ஷேட்டு.. அநேகமாக பணத்தைக் கொடுத்துருப்பாங்கன்னு நினைக்கேன்…


உங்க அம்மாவுக்கு மாத்திரை கொடுத்துட்டு வாம்மா,..


சாந்தினிகாவும் மாத்திரையைக் குடுத்துட்டு அம்மாவை படுக்க வைத்துட்டு வந்தாள்…. அதற்குள்ளும்.. பாய்… பா.. வெளியே நின்னு கதவைத் தட்டினார்… .


வாங்க ..பாய்… என முக மலர்ச்சியோடு வரவேற்றார் அனுகரன்… சாந்தினிகாவும் நாற்காலியில் அமருங்க என்றாள்…

சாந்தினிகா, நம்ம ஷேட்டுக்கிட்ட பேசியபடியே பணத்தை குடுத்து விட்டார்…


பாய்… பா… உங்க கையாலேயே அப்பாவிடம் கொடுத்துடுங்க,.. அவரும் அனுகரன் கையில் கொடுத்து நல்லபடியாக வீட்டை கட்டி முடிச்சுட்டு மேன்மேலும் வளரனும் மனமார வாழ்த்துக்கள் சொன்னார்… .


பாய்… பா… இந்தாங்க… காபி…


வரும்போது தான் குடிச்சுட்டு வந்தேன்..


அதனால என்ன.. பாய்… பா… கொஞ்சமாக குடியுங்கள்…


அவளும் கடுங்காபியை நீட்டினாள்… பாய்.. முகமது. குடித்து விட்டு எந்தவொரு உதவி எனறாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்க என்றார்…


சாந்தினிகாவும் ...பாய்… பா… நாங்க வீடு கட்டுவதற்கு நாள் செய்யும் போது நீங்க கட்டாயம் வரனும் என்றாள்…கண்டிப்பாக வருகிறேன் என்றார்… .


" பாய்…பா… சென்ற பிறகு.. அனுகரனும் வேலைக்குக் கிளம்பி போகும் போது நீ பார்த்து கவனமாக இருந்துக்கோ ...அம்மாவை பார்த்துக்கோ… அந்த இன்ஜினியருக்குப் போன் பண்ணி பேசு.. அவர நாளைக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக்கோங்க என பேசி நாள் என்னைக்குச் செய்யலாம் என்பதை பேசிட்டு உன்னோட முடிவை சொல்லும்மா என்றார்…


அப்பா வேலையை முடிச்சுட்டு தான் வருவேன்… வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம் சொல்லிட்டு அவரும் கிளம்பினார்…


சாந்தினிகா இன்ஜினியருக்கு போன் செய்து அவரிடம் தகவலை சொன்னாள்..அந்த இன்ஜினியர் நாளைக்கே எல்லாம் details கொண்டு வருகிறேன்…


கார்த்திகேயன் திண்ணையில் சென்னைக்குக் கிளம்பாமல் உட்கார்ந்து இருந்தான்… அதனை பார்த்த கல்யாணி, ஏங்க நீங்க போகலயா..


இல்லம்மா… .போகல… எம் மனசு சரியில்லை …


என்னய்யா!.. பேசுன எதையும் மனசுல வச்சுக்காத,.. உம் மனசு கஷ்டப்பட்டால் எனக்கு கஷ்டமாக இருக்கும்….


அப்படியெல்லாம் ஒன்னுமில்ல…


"நம்ம சென்னைக்குப் போகும் போது உன்னையும் கூட்டிட்டு தான் போகனும்னு முடிவு பண்ணிட்டேன்… .'.


ஏங்க… என்னாச்சு… இப்போ கிளம்பலயா… .டிக்கெட் வாங்கிட்டு வந்தீங்களே… அது வேஸ்ட்டாக போகுமே,..


"பரவாயில்ல கல்யாணி.. இந்த டிக்கெட் வேற யாருக்காவது மாத்திவிடனும்னா..மாத்திவிட்டுடலாம்...அதனால என்னோட நண்பனை சந்தித்து விட்டு ஒரு மாசம் இல்லைனா இரண்டு மாசம் ஆனா கூட போதும்… கொஞ்சம் கையில் பணம் சேர்த்துட்டு நம்ம இரண்டு பேரும் ஒன்னாவே வேலைக்குப் போவோம்… .'


நேற்றே ஒருத்தர்கிட்ட சொல்லி வச்சியிருந்தேன்… .அவரு தான் இன்னிக்கு வர சொன்னாரு. இப்ப தான் ஞாபகம் வருது… .


"வீட்டை பூட்டிக்கோ.. நான் போய்ட்டு வந்துடுறேன்… என்றான் கார்த்திகேயன்… .'


சாந்தினிகா தன் அம்மாவை அழைச்சுட்டு எப்போதும் போல கோவிலுக்குச் சென்றாள்… அங்கே முத்துமாரியம்மனுக்கு விளக்கு போட்டு மனதார வேண்டினாள்… .பவித்திரனும் கோவிலுக்குள் நுழைகிறான்…


சாந்தினிகாவைச் சந்திப்பானா,.. பவித்திரன்…


மீண்டும் வருவாள் சாந்தினிகா...





..













..



'