• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 7)

Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
அத்தியாயம் 7💖


கோவிலில் சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு மூன்று முறை சுற்றச் சென்றாள்… கோவிலுக்குள் அர்ச்சனை தட்டோடு அவனும் சம்பத் இருவரும் ஐயரிடம் அர்ச்சனா என்ற பெயருக்கு அர்ச்சனை செய்தனர்…


சாந்தினிகா வலம் வந்து மாரியம்மனை தரிசித்து எதிர்க்கே பார்த்தாள்.. பவித்திரன் கண்களை மூடி வேண்டினான்… சாந்தினிகா பார்ப்பதைக் கவனித்த சம்பத் அவளேயே நோக்க, கண்களை திறந்து கற்பூரத்தை தொட்டு கண்ணில் ஒத்திக் கொள்ள, அவனிடம் நீட்டிய போது வேறோரு திசையில் பார்த்துட்டு இருந்தான்…உடனே கண்ணில் ஒத்திக் கொண்டான்… .


சம்பத் இங்க கவனி… ஐயர் வந்து நிக்காரு… நீ எங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்க என்றான்…


டேய்… மச்சான்… உன்னை இவ்வளவு நேரமாக ஒரு பெண் வச்சக் கண்ணு வாங்காம்மா பார்த்துட்டு இருந்தா, நீ கண்களைத் திறந்ததும் அவங்க அம்மாவுக்கு கால் வலிக்குதுனு சொன்னாங்க, அதான் அந்த பொண்ணு போய்ட்டா… டா…

என்னை.. யாரு.. டா.. பாக்கப்போறா.. என்ற குழப்பத்தில் பவித்திரன்…


கோவிலைச் சுற்றி வந்தவன்… சாந்தினிகா தூணுக்கிட்ட அமர்ந்திருந்ததைக் கவனித்தான்…


டேய்… என்னை ஒரு பொண்ணு பார்த்தான் ..சொன்னியே… அவ தான்டா… சாந்தினிகாவே தான் உட்கார்ந்து இருக்கா..


வா.. டா.. உனக்கு அவள அறிமுகப்படுத்தி வைக்கேன் என வேகமாக சென்றான்… அவளும் அவங்க அம்மாவை எழுந்திரும்மா… … .சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில்.. வந்து நின்றான்… .


ஏங்க ..என்னங்க என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க… எம் மேல எதுவும் கோபமா,


அச்சச்சோ… நீங்க. வேற.. அதெல்லாம் ஒன்னுமில்ல ...அம்மாவை இதுவரைக்கும் வெளியே கூட்டிட்டு வந்தது கிடையாது அதான்…


உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சினை… அவங்க ஒரு மாதிரியாக நடந்துக்கிறாங்க,.. அவங்க கைகளை ஏன் பிடிச்சுட்டு இருக்கீங்க,..


"ஆமாம்… அம்மாவுக்கு சுய நினைவு இல்ல… .எங்க அண்ணன்… வீட்டை விட்டு போனதில் இருந்தே அம்மாவுக்கு இப்படி ஆச்சு….அதனால அவங்கள வெளியிலே கூட்டிட்டு வந்தால் கொஞ்சம் ரெகவர் ஆவாங்கன்னு டாக்டர் சொல்லியிருந்தார்கள்… .'


சாந்தினிகா நீங்க மனசுல இப்படி ஒரு பாரத்தை வச்சு சுமக்கிறீங்க.. பரவாயில்ல…


சரிங்க..எனக்கு லேட் ஆச்சு ...வீட்டுக்குக் கிளம்புறேன்… ஏங்க… உங்களுக்கு என்னோட நண்பனை அறிமுகப்படுத்துறேன்… இவன் பெயர் சம்பத்…இவனோட ரூமில் தான் தங்கியிருக்கேன்…


ஓ…அப்படியா… சரிங்க ...போய்ட்டு வாரேன்…


டேய்… மச்சான்… என்னடா…


அவ அப்படியானு கேட்டுட்டு போறா…


அவ யாரிடமும் அதிகமாக பேசமாட்டாள்… சரி… வா.. நம்ம வேலையைப் பார்ப்போம்…

கோவிலில் இருந்து வீட்டுக்கு சென்றதும் அம்மாவை அமர வைத்து விட்டு டீ போட சென்றாள்… .


"அதற்குள்ளும் அனுகரன் உள்ளே நுழைய, அதே நேரத்தில் இன்ஜினியரிங் வந்தார்… சாந்தினிகா அவரிடம் வாங்க சார் உட்காருங்க திடீர் வந்திருக்கீங்க, காலையில் போன் செய்யும் போது மாலையில் வருகிறேன் என்று சொல்ல வில்லையே அதான் கேட்டேன்… '


"இல்லம்மா,.பக்கத்து ஊரில் தான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்… .அதான் என்னைக்கு நாள் செய்யலாம் என்ற தகவலைச் சொல்லிவிட்டுப் போவோம் என்றார்… '


"வருகின்ற வியாழக்கிழமை நாள் செய்ய உகந்த நாள் என்று கூறினார்… அதனால் அன்னைக்கு அட்வான்ஸ் கொடுத்திடுங்க என சொல்லிட்டுக் கிளம்பினார்… '


சாந்தினிகாவும், அவங்க அப்பாவிடம் யாருக்காவது சொல்லனும்மா.. எனக் கேட்டாள்…


"வேண்டாம்மா ..நம்ம வீட்டைக் கட்டி முடிச்சுட்டு அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்.. பாய்.. பாவை மட்டும் கூப்பிடு… அது போதும்..


சரிங்கப்பா...எனச் சொல்லிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சாந்தினிகா…


"சாந்தினிகா.. மனசுக்குள்ளேயே பல யோசனையோடு இருந்தாள் ..நம்ம வேற எதாவது வேலைச் செய்யனும் அதுவும் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய்க்கு மேல சம்பாத்தியம் இருந்தால் மட்டுமே நம்ம அடகு வைச்ச பத்திரத்தை மீட்டெடுக்க முடியும்…'


நம்ம பாய்.. பா.. விடம் வேற எதாவது வேலை ஏற்பாடு பண்ணிக் கொடுங்க என்று கேட்போம்… பாய்… பா .வுக்கு போன் செய்து சொன்னாள்… .அவரும் நானும் விசாரித்துட்டு சொல்றேன்… .


பாய்… பா… எந்த வேலையாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க..எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறேன் …


சரிம்மா… கட்டாயம் சொல்கிறேன்… .


பவித்திரன் எப்போதும் போல அவனுடைய சேவையைச் செய்யக் கிளம்பினான் ..அதனைப் பாரத்த சம்பத் எங்கடா..இப்போது வேகமாக கிளம்புற…


டேய்… அனாதை ஆசிரமத்துக்குக் கிளம்புகிறேன்..


அப்போதே கேட்கனும் நினைச்சேன்…நாளைக்குத் தானே உன் தங்கையின் பிறந்தநாள் இன்னிக்கே கோவிலுக்குச் சென்றாய்…


"அவ நட்சத்திரம் இன்று மாலையில் ஆரம்பிக்குது… அதான் இப்போது போய் அரச்சனை செய்தேன்… இன்னிக்கே ஆசிரமத்துக்குப் போய் எல்லாமே வாங்கிக் கொடுத்துட்டு வந்தால் நாளைக்கு அங்க உள்ள குழந்தைகளுக்கு சமைச்சுக் கொடுப்பதற்குச் சரியாக இருக்கும் என்றான் பவித்திரன்…. '


"உன்னுடைய யோசனை பலமாக தான் இருக்கிறது… வாடா… நானும் சும்மா தானே இருக்கேன்… போவோம்… '


அனாதை ஆசிரமத்துக்குச் சென்று சமையல் தேவைக்கான பொருளை வாங்கிக் கொடுத்துட்டு வந்தார்கள்…


வருகிற வழியிலேயே இருவரும் சாப்பிட்டு விட்டு ஊனமுற்ற தாத்தாவுக்கு இட்லி வாங்கினான்… யாருக்குடா.. இட்லி…


அதான் அந்த பெரியவருக்கு… என்றான்… எதுவும் சொல்லாமல் இருந்தான் சம்பத்…போகிற வழியிலேயே தாத்தாவைப் பார்த்து விட்டு சென்றார்கள்…


அந்த பெரியவரும் வருத்தப்பட்டு பவித்திரனைப் பார்த்து கண்ணீர் வடித்தார்… என்னால் இந்த நிலைமையில் வேலை செய்ய முடியாது என அறிந்து எனக்கு உதவி செய்கிறாய்.. உமக்கு எந்தவொரு பிரச்சினையும் வராமல் அந்த கடவுள் உன்னுடனேயே இருப்பார் என்றார்…


உங்களால் தான் வந்தததே பிரச்சினை.. இதுல மற்றவர்களால் எங்க வரப்போகுது என்ற மெளமாக பேசினான் சம்பத்… இதனைக் கவனித்த பெரியவர் என்னப்பா.. சொல்ற எனக் கேட்ட போது சொல்ல விடாமல் தடுத்தான் பவித்திரன்…


அதெல்லாம். ஒன்னுமில்ல தாத்தா… நீங்க சாப்பிட்டு நிம்மதியாக தூங்குங்க என்ற மெல்லிய குரலில் ,


ஏன்டா… அவருகிட்ட சொல்லவே விட மாட்டிக்க,.. கோபத்துடன்பேசிய சம்பத்திடம்.. எதுவும் பேசாமல் வா என்றான்… அமைதியாக பைக்கில் ஏறினான் சம்பத்…


மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அமர்ந்திருந்தாள் சாந்தினிகா… .


என்னம்மா, இன்னிக்கு சீக்கிரமாக வேலையை முடிச்சுட்டியா…


ஆமாம்… பா ...சும்மா தான்.. உட்கார்ந்து இருக்கேன்…காலையிலேயே மதியம் சாப்பாட்டையும் ரெடி பண்ணி வச்சுட்டேன்…


அப்பா… நேற்று பாய்.. பா... விடம் பேசியிருந்தேன்… ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கன்னு…


அதான் எட்டு மணிக்கு போன் பண்றேனு சொல்லியிருக்காரு… அந்த சிந்தனையில் அமர்ந்து இருக்கேன்…


"உங்களுக்கு எப்போதும் மதியம் வேலை தானே… .நான் அதுக்குள்ள காலையில் ஏதாவது வேலை இருந்தால் முடிச்சுட்டு வந்துடுறேன் அதுவரைக்கும் அம்மாவை பார்த்துக்கோங்க,..நீங்க அதுக்கப்புறம் உங்களோட பணியைச் செய்ய கிளம்புங்க..பா..என்றாள்… இருவரும் மாறி மாறி பேசிய தருணத்தில் கங்கா தேவி கீழே விழுந்த சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்தார்கள்… .'


அம்மா… அம்மா… என சத்தமிட கங்காதேவி கண் விழிக்காமல் படுத்திருந்தாள்…


அனுகரன் தண்ணீர் தெளித்து எழுப்பி விட கண்களைத் திறந்து பார்த்து, ஏங்க என பேச ஆரம்பித்தாள்…


எனக்கு என்னாச்சு… என கேட்டதும்… அனுகரனுக்கும் சாந்தினிகாவிற்கும் சந்தோஷ மழையில் நனைந்தார்கள்…


கங்கா தேவி உனக்கு சுய நினைவு திரும்பிடுச்சு…


என்னங்க சொல்றீங்க, இத்தனை வருடங்களாக சுய நினைவு இல்லாமல் இருந்தேனா, என்னால் அத நினைச்சுக் கூட பார்க்க முடியலேயே… நம்ம பொண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு வரும் போது தான் கார்த்திகேயனை எதிரே உள்ள பேருந்தில் கவனித்தேன்…


அந்த பேருந்தின் பின்னால் ஓடினேன்.. அது கிளம்பி போய்ட்டே இருந்துச்சு.. அப்புறம் என்னங்க நடந்துச்சு…


லாரி வந்து மோதியதில் நீ மயக்கமடைந்து விட்டாய்… அப்புறமாக நீ சுய நினைவுக்கே வரல.. நம்ம பொண்ணு தான் உன்னை நல்லா கவனிச்சு பார்த்துக்கிட்டா,.. இதோ உன் அருகிலேயே இருக்கிறாளே,.. சாந்தினிகா நம்மபொண்ணு…


"கங்கா தேவி கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் வர அதை துடைத்து ஏம்மா .அழறீங்க… நீங்க தான் சுய நினைவுக்கு வந்துட்டீங்களே இனிமேல் எல்லாமே நல்லதாக தான் நடக்கும்… '


"இப்படிப்பட்ட நிலைமையில் இருந்திருக்கிறேன்… ஆனால் நீ என்னை ஹாஸ்பிட்டலில் எதுவும் சேர்க்காமல் உன் கண்ணுக்குள்ளே வச்சுப் பார்த்துருக்க… என்னை எந்த அளவுக்கு கவனிச்சிருப்ப,.. பொண்ணுங்க இந்த மாதிரி வயசுல தான் ஜாலியாக இருக்கனும் நினைப்பாங்க!.. ஆனா… நீ உன்னோட சந்தோஷங்களை அம்மாவுக்காக வேண்டாம் என ஒதுக்கி வச்சிட்டியே.. உண்மையாக உன்னை என் மகள் சொல்றதுக்கு பெருமையாக இருக்குது என்று சொல்லி தன்னோட மகளை கட்டித் தழுவிக் கொண்டாள்… .'


இருவரும் மாறி மாறி அழாதீங்க, என்றார் அனுகரன்.. இன்னிக்கு மிகவும் சந்தோஷமான நாள்.. அப்பா போய் கடையில் ஸ்சுவீட்ஸ் எல்லாமே வாங்கிட்டு வருகிறேன் என்று சொல்ல அதற்கு கங்காதேவி….


இல்லங்க… அதெல்லாம்.. வேண்டாம்… நானே ஏதாவது பண்றேன் என எழுந்தாள்… அம்மா உட்காருங்க,.. இதோ பாத்தீங்களா அதுக்குள்ளேயும் வேலைப் பார்க்கப் போறேனு எந்திரிக்கீங்க,.. முதலில் டாக்டரிடம் போய் செக் கப் பண்ணிட்டு வேலைகளைப் பார்க்கலாம் என்றாள்…


மறுபடியும் ஹாஸ்பிட்டலா வேண்டாமே என அடம் பிடித்தாள்… அதனை ரசித்த அனுகரன்.. இங்க பாரு சாந்தினிகா உங்க அம்மா செல்லமாக பேசுறத பார்த்து எவ்வளவு நாள்கள் ஆச்சு…


அப்பா… போதும் ..போதும்.. உங்களோட மனைவியை அப்புறமாக ரசித்து பார்த்துக்கோங்க!.. இப்போது ஹாஸ்பிட்டலுக்குப் போய்ட்டு வந்துடுவோம்…


சாந்தினிகாவின் போன் அடித்தது.. அப்பா.. பாய்.. பா… தான் போன் பண்றாங்க… போனை அழுத்தி பேசும்மா…


சொல்லுங்க… பாய்… பா… நீ கேட்டது போலவே உமக்கு நல்ல ஒரு வேலை ஏற்பாடு செய்து விட்டேன்… ஆனால் நீ இரவு ஏழு மணி வரைக்கும் இருக்கிற சூழ்நிலை வருமே!.. அதான் யோசித்து சொல்றேனு வந்துட்டேன் …


சரிங்க.. பாய்…அந்த வேலையைப் பார்த்திரலாம்… உங்களுக்கு ஒரு குட்நியூஸ்.. அம்மா.. சுய நினைவுக்கு வந்துட்டாங்க… நினைவு எல்லாம் திரும்பிடுச்சு… .பாய்.. பா…


ஓ… அல்லாஹ்.. அல்லாஹ்.. ரொம்ப நன்றி எனச் சொன்னார்.. பாய்… பா..


உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லாதான் நடக்கும்… பாய்.. பா… நான் ஹாஸ்பிட்டலுக்குப் போய்ட்டு வந்து போன் பண்றேன்…


ம்ம்ம்.. சரிம்மா… என்றார்…


வெளியே அவங்க அம்மாவை அழைத்துட்டு ஆட்டோவில் ஏறும் போது பக்கத்து வீட்டு அக்கா மிர்துளா கவனித்து என்னம்மா.. ஆஸ்பத்திரிக்கா…


"ஆமாம்...அக்கா… வந்து சொல்றேன்… பரபரப்பாக ஆட்டோவை கிளம்பச் சொன்னாள்… .'


ஹாஸ்பிட்டலில் வந்து இறங்கி நர்ஸிடம் போய் டாக்டர் அமர்நாத் சார் இருக்காங்களா!..


இருக்காங்க.. நீங்க ..


என்னோட பெயர் சாந்தினிகா.. டாக்டர் எப்போதும் வேணும்னாலும் என்னை உடனே சந்திக்கலாம் என்று இந்த கார்டைக் கொடுத்தார்…


நர்ஸ்… டாக்டர் அறைக்குள் நுழைந்து கார்டை பத்தி சொன்னதும் அவரே வரும் படி கூறினார்…


சாந்தினிகா நீங்க உள்ளே போகலாம்… அனுகரன் தன்னோட கங்காதேவியை அழைச்சுட்டு உள்ளே போய் அமர்ந்தார்…


என்னாச்சு.. இவங்களுக்கு ஏன் நெற்றியில் வீக்கம் உள்ளது ..உங்க அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கோங்கன்னு தான் சொன்னேன்… அப்புறம் வீங்குற அளவுக்கு வச்சிருக்கீங்க,


"உடனே கங்காதேவி, டாக்டரிடம் அவளைத் திட்டாதீங்க.. கட்டிலில் இருந்து எழும் போது தடுமாறி விழுந்துட்டேன்… அதுக்கப்புறம் தான் எனக்கு சுய நினைவு வந்தது…


சாந்தினிகா,உங்க அம்மாவுக்கு சுய நினைவு திரும்பிடுச்சு..இனி எந்த ஒரு பிரச்சினையும் இல்ல, எனச் சொல்லிக் கொண்டே கங்கா தேவி செக் கப் செய்து பார்த்தார்…


சார்… இனிமேல் அவங்க மாத்திரைகளை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும் அதுவும் உடம்பு திடமாக இருப்பதற்கு எனக் கூறி சத்து மாத்திரைகளை எழுதினார்…


இனிமேல் கொஞ்சம் எப்போதுமே கவனமாக இருங்கள் என்று அறிவுரை சொன்னார்...'


வீட்டுக்குப் போகும் போது கடையில் இனிப்பு பலகாரம் வாங்கிட்டு சென்றார்கள் …


சாந்தினிகா வேகமாக சென்று மிர்துளா அக்காவிற்கு இனிப்பை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்…


என்னடி.. சாந்தினிகா இவ்வளவு சந்தோஷம் உம் முகத்தில் ஏதாவது விசேஷமா…


ஆமாம்.. அக்கா.. எங்க அம்மாவுக்கு நினைவு வந்துடுச்சு…


அப்படியா.. ரொம்ப சந்தோஷம்… நானே வந்து பார்க்கிறேன்…


அருகே உள்ள அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தாள்.. வெளியே பார்த்துக் கொண்டிருந்த அனுகரன் கங்கா தேவியிடம் இப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்ததே இல்ல…


சரிங்க… ஏதோ இடத்தைப் பத்தி பேசுனீங்க.. என்ன விஷயம்…


"உம் மகள் அந்த இடத்துல வீடு கட்டனும் என்ற முடிவை எடுத்து விட்டாள்… அதற்காக பணத்தையும் ரெடி பண்ணிட்டா.. இன்னும் இரண்டு நாள்களில் நாள் செய்து வீட்டைக் கட்ட ஆரம்பிச்சுடுவாங்க. என்றார் அனுகரன்"


மீண்டும் வருவாள் சாந்தினிகா… '..



..




.

...






…'






'