மொழி 3 (1)
காற்று சாமரம் வீசுவது போல வீசிக் கொண்டிருந்தது. காற்றின் திசைக்குத் தோதாக மரங்களும் ஆடி அசைந்து கொண்டிருந்தன.
அதே நேரத்தில் சீதாவின் வீட்டு முகப்பில் தொங்க விடப் பட்டிருந்த கிளிக் கூண்டில் இருந்த ஜோடிக் கிளிகள், ஒன்றுடன் ஒன்று செல்லச் சண்டை போட்டுச் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன.
அந்தச் சண்டையை இரசித்தபடியே கூண்டைத் திறந்து கிளிகளுக்குப் பழங்களை வைத்தார் அமுதவாணி. புதிதாக வந்திருந்தவரைப் பார்த்ததுமே கலவரமான கிளிகள் கீச்சிட்டுத் தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்த முயன்ற வேளை, அவர் கொடுத்த பழங்கள் அவற்றின் எதிர்ப்பைக் கட்டிப் போட்டன.
வைக்கப் பட்ட பழத்தை கொத்திக் கொத்தி உண்டபடியே அமுதவாணியைப் பார்த்த கிளிகளை அவர் இரசித்தபடியே தன் போக்கில் பாடலொன்றை முணுமுணுத்தபடி பம்பரம் போலச் சுழன்று வந்தார்.
அவரது உற்சாகம் வீட்டில் இருந்த அத்தனை பேரையும் தொத்திக் கொண்டது.
"என்ன வாணி.. ஒரே குஷியா இருக்கிற மாதிரிக் கிடக்கு.. ஆனா அந்தப் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு வாறன் எண்டு சொல்லிப் போட்டு.. கூட்டிக் கொண்டே வராமல் வந்திட்டியே.."
என்று லேசாகக் குறைப்பட்டபடி தன் மனைவியின் அருகில் வந்தார் கவிவாணன்.
"ஏதவோ நிறைய வெளி வேலையள் இருக்குதாம் அத்தான்.. அது தான் அதை எல்லாத்தையும் முடிச்சிட்டுப் பின்னேரம் போல வாறம் எண்டு தேனு சொல்லிச்சுது.."
எனத் தன் கணவனுக்குப் பதில் சொன்ன அமுதவாணி தன் கணவனையே யோசனையுடன் பார்த்திருந்தார்.
மனைவியின் பார்வையில் யோசனையானவரோ லேசாகத் துணுக்குற்றார். தனக்கு இதய நோய் என்று உறுதியான நாளில் இருந்து, தன்னிடம் ரொம்ப ரொம்ப முக்கியமான, கவலை தரும் செய்திகளைத் தெரிவிப்பது என்றாலே தன் அமுதா தன்னை இப்படி ஒரு யோசனைப் பார்வை பார்த்து வைப்பாளென்பதை அவர் இத்தனை ஆண்டுகளில் புரிந்து வைத்திருந்தார்.
"இப்ப அப்புடி எந்த விதமான கவலை தரக் கூடிய செய்தியைச் சொல்லப் போறாளா இருக்கும்.. நந்தனின்ரை வீட்டுல இருந்து வந்த நேரம் தொட்டு இந்தா இப்ப வரைக்கும் பாதி நேரம் சந்தோஷமா இருக்கிறாள் என்டால் மீதி நேரம் எதையோ பறி குடுத்தது மாதிரி எல்லோ இருக்கிறாள்.. அப்புடி என்டால் அங்க தான் ஏதவோ விஷயம் கிடக்குது.. என்னை வேறை அங்க இருந்து உடனயே அனுப்பீட்டாளே.. அதுக்கு ஏதவோ காரணம் இருக்கு என்டு நினைக்கிறன்.. அதை முதல்ல கண்டு பிடிக்கோணும்.."
எனத் தன்னுள் யோசனை செய்தவரோ மனைவியின் கரத்தைப் பிடித்தவாறு அருகே கிடந்த நீளமான நாற்காலியில் அமர்ந்து கொண்டு மனைவியையே பார்த்திருந்தார்.
பலத்த யோசனையில் இருந்த அமுதவாணியோ கணவன் தன்னையே பார்த்திருந்ததை அறியவில்லை.
"அமுதா.."
என இரண்டு தடவைக்கு மேலாக அவர் அழைத்த பின்னரே திடுக்கிட்டுப் போய்க் கணவனை நிமிர்ந்து பார்த்தார் அமுதவாணி.
சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு
"என்னத்தான்.. என்னத்துக்குக் கூப்பிட்டனியள்.. என்ன விஷயம்.. என்னத்துக்காக என்னை அப்புடிப் பாக்குறியள்.."
எனக் கேட்ட மனைவியின் நெற்றியில் விழுந்து கிடந்த, லேசாக நரைத்திருந்த கற்றை முடியை ஒதுக்கி விட்டபடி
"என்னட்டை ஏதாச்சும் சொல்ல வேணுமோ அமுதா.."
என்று கனிவாகக் கேட்டார் கவிவாணன்.
தன் முடியை ஒதுக்கி விட்ட கணவனின் கரத்தை இறுகப் பற்றிய படி அவரை நிமிர்ந்து பார்த்த அமுதவாணியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது.
மனைவியின் கரத்தைத் தட்டிக் கொடுத்தபடி
"என்ன விஷயமா இருந்தாலும் தயங்காமல் பயப்பிடாமல் சொல்லும்மா.. உன்ரை அத்தான்ரை இதயம் இப்பல்லாம் ரொம்ப இறுகிப் போயிட்டுது.. அதோட எதையும் தாங்கும் இதயமாகிட்டுது.. எத்தினை ஆட்கள் மூலமா நந்தனின்ரை குடும்பம் பத்தி விசாரிச்சிருப்பம்.. அப்பல்லாம் ஒரு தகவல் கூடக் கிடைக்கலையே.. "
என நம்பிக்கை கொடுப்பது போலப் பேசினார்.
அவரது பேச்சையே கேட்டிருந்த அமுதவாணி
"அத்தான்.. இனிமேல் அந்த மூண்டு பிள்ளையளுக்கும் நாங்கள் மட்டும் தான் உறவு துணை எல்லாமே.."
எனச் சொல்லியபடி மீண்டும் கணவனது முகத்தை ஆராய்வது போலப் பார்த்தார்.
"திரும்பத் திரும்ப இப்புடியே பாத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் அமுதா.. நீ ஏதாச்சும் சொன்னால் தான எனக்கும் விஷயம் தெரிய வரும்.. நீ யோசனை செய்றதைப் பாத்தால் ஏதவோ பெரிய விஷயம் என்டு தோணுது அமுதா.."
என்றபடி மனைவியிடம் சொன்ன கவிவாணன் அதற்கும் தன் மனைவி அமைதியாகவே இருப்பதைப் பார்த்ததும் லேசாகத் துணுக்குற்றார்.
"நான் அங்க வரேக்குள்ள அந்த மூண்டு பிள்ளையளையும் தவிர வேறை ஆரையும் பாக்கேல்லை.. அதோட நந்தனின்ரை பேச்சை நான் எடுத்ததுமே அதைத் தடுத்த அமுதா ஏதேதோ காரணம் சொல்லி என்னை வீட்டை அனுப்பும் போதே எனக்கு லேசா ஒரு சந்தேகம் வந்திட்டுது.. இப்பவும் அமுதா தயங்குறதைப் பாத்தால் நந்தனுக்கு ஏதவோ ஆகிட்டுது எண்டு தெளிவாத் தெரியுது.. அதைச் சொல்லுறதுக்குத் தான் இத்தினை தயக்கமோ.."
என்று தன் மனதினுள் எண்ணிக் கொண்ட கவிவாணன் அருகே கிடந்த செம்புத் தண்ணீரை எடுத்து ஒரு மிடறு குடித்து விட்டு
"ஏன் அமுதா.. நந்தன் இப்ப இல்லையோ.."
எனக் கனத்த மனதோடும் இறுகிப் போன குரலோடும் கேட்டார்.
அவர் அவ்விதம் கேட்டதும் இவருக்கு விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயத்துடன் பார்த்தார் அமுதா. அவர் எவ்வளவு தான் கட்டுப் படுத்த முயன்ற போதும் அவரது விழிகள் அவருக்கு இருந்த பயத்தை அப்படியே படமெடுத்துக் காட்டியது.
மனைவியின் பயந்த விழிகள் அவரது கேள்விக்கான பதிலைச் சொல்லாமல் சொல்லி விட்டதை உணர்ந்தவர் தன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி
"அவன் இப்ப இல்லவே இல்லை என்டுறதை என்னால தாங்கிக் கொள்ள முடியேல்லை என்டாம் கூட.. அந்தப் பிள்ளையளுக்காக என்டாலும் நான் இந்த இழப்பைச் சகிச்சுக் கொள்ளத் தான் வேணும்.. என்ரை நந்தன் எங்க இருந்தாலும் என்னைப் பாத்துக் கொண்டு தானே இருப்பான்.. எனக்கு இப்ப அஞ்சு பிள்ளைகளின்ரை பொறுப்பு வந்திட்டுது அமுதா.. ஒரு நல்ல அப்பனா நான் தானே அவையளைப் பொறுப்பாப் பாத்துக் கொள்ளோணும்.. என்ரை இந்தப் பலவீனமான இதயத்துக்குள்ள இருந்து கொண்டு என்ரை நந்தன் தான் என்னை இப்ப தைரியசாலி ஆக்கி விட்டிருக்கிறான்.. அதனால தான் நான் அவன்ரை இழப்பை அறிஞ்ச பிறகும் கூடத் திடமாக் கதைச்சுக் கொண்டு இருக்கிறன் அமுதா.."
என்ற கணவனின் கனத்த குரலில், கவிவாணனை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார் அவரது உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளும் அவரது மனைவி அமுதவாணி.
தன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்ட மனைவியின் தலையில் ஆதரவாகக் கை வைத்தபடி
"உனக்கும் கூடத் தான் ஒரு அம்மாவாப் பொறுப்புகள் கூடீட்டுது அமுதா.. நந்தனின்ரை நினைவுகளை என்னால மறக்க ஏலாது என்டாலும்.. அந்தப் பிள்ளையளின்ரை முகங்களைப் பாக்கும் போது எந்தக் கஷ்டமும் பறந்து போயிடும் போல இருக்குது தெரியுமோ அமுதா.."
என்ற கவிவாணனின் முகத்தை ஆராய்வது போலப் பார்த்த அமுதவாணிக்குத் தன் கணவன் தனக்குள் இருக்கும் கவலையை மறைப்பதற்குப் பெரும்பாடு படுகிறார் என்பது நன்றாகவே புரிந்தது.
இருவருமே தாங்கள் அதீதமாகப் பாசம் வைத்திருந்த நந்தனின் இழப்புத் துயரத்தை மனதினுள் யாருக்கும் தெரியாமல் புதைத்து வைத்து விட்டு, தாங்கள் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பார்த்த நந்தனின் பிள்ளைகளைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
சில நொடிகள் அமைதியாக இருந்த அமுதவாணி ஏதோ நினைவு வந்தவராக கணவனை நிமிர்ந்து பார்த்து
"அத்தான்.. இன்னுமொரு விஷயம் சொல்லோணும்.. எங்கடை மதியால பேச ஏலாதாம்.. அவளுக்கு யுத்தத்தில குண்டு பட்டுப் பேச்சுப் போயிட்டுது அத்தான்.. இந்த விஷயமும் உங்களுக்கு அதிர்ச்சியாவும் கவலையாவும் இருக்கும் அத்தான்.. ஆனா மதி வந்ததும் நீங்கள் சந்தோஷ மிகுதியில அவளோட கதைக்கத் தொடங்கீடுவியள்.. அந்த நேரத்தில அவளால கதைக்கவே முடியாது என்டதை அறிஞ்சால் உங்கள்ரை உணர்ச்சி வெளிப்பாடு எப்புடி இருக்கும் என்டது எனக்கு நல்லாவே தெரியும் அத்தான்.. அது தான் மதியால கதைக்க ஏலாது என்டதை இப்பவே போட்டு உடைச்சிட்டன்.. அதோட நந்தனண்ணாந்தை இழப்போட ஒப்பிட்டுப் பாத்தால் இது கொஞ்சம் குறைவு தானே அத்தான்.."
என்று தன் மனதிற்குத் தோன்றியதைச் சொன்னார்.
தன் மனைவி பேசி முடிக்கும் வரையிலும் பிரமை பிடித்தவர் போல இருந்த கவிவாணன் மெல்லத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ஒரு பெருமூச்சை விட்ட படி
"நீ சொல்லுறதும் சரி தான் அமுதா.. நந்தனின்ரை இழப்போட பாக்குற நேரம் இது கொஞ்சம் குறைவு தான்.. அதோட அந்தப் பிள்ளையளையாச்சும் பாத்திட்டமே என்டுற ஒரு திருப்தியும் பெருத்த நிம்மதியும் காணும் .."
என்று சொல்லியபடி மெல்ல எழுந்து கொண்டு வீட்டினுள் செல்வதற்குத் திரும்பினார்.
அதே நேரத்தில் அவர்களது வீட்டு வெளி வாசலில் அபிராமும், தேன்மதியும் ஏதோ கதையளந்து சிரித்தபடி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களின் முகத்தில் அப்பிக் கிடந்த சந்தோஷப் பூச்சினைப் பார்த்த கவிவாணனுக்கு, அதற்கான காரணம் தன்னையும் தன் குடும்பத்தினரையும் அவர்கள் பார்த்து விட்டனர் என்பதே எனச் சட்டென்று புரிந்து விட்டது.
அவர்களது முகத்தைப் பார்க்கப் பார்க்க அங்கே குடி கொண்டிருந்த ஆனந்தம் மெல்ல மெல்லத் தன்னை நோக்கி ஈர்க்கப் படுவதை உணர்ந்த கவிவாணன், அதீத மகிழ்ச்சியில் முகம் பிரகாசிக்க அவர்களை நோக்கி விரைந்தார்.
வீட்டினுள் செல்வதற்கு எழுந்த கணவன் முகம் பிரகாசிக்க எதற்கு வாசற் பக்கம் போகிறார் என்ற யோசனையில் திரும்பிய அமுதவாணி தானும் மகிழ்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டார்.
வேகமாக வந்த கவிவாணன் அபிராமைக் கட்டியணைக்க, அவர் பின்னால் வந்த அமுதவாணி தேன்மதியைக் கட்டிக் கொண்டார்.
"என்னடா இங்க வர்ரதுக்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டியளோ.. உங்கள்ரை மாமி நீங்கள் இங்க வரப் போறியள் என்டு சொன்ன நேரத்தில இருந்து உங்களைத் தான் பாத்துக் கொண்டிருக்கிறன் தெரியுமோ.."
என்ற கவிவாணன் மீண்டும் வாசலை நோக்கினார்.
அவரது பார்வையில்
"என்ன மாமா பாக்கிறியள்.."
என்றபடி தானும் வாசலைப் பார்த்தான் அபிராம்.
"மதியை எங்க காணல்லை என்டு பாக்கிறார் ராம்.."
என்று பதில் சொன்ன அமுதவாணி, தேன்மதியைக் கேள்வியாக நோக்கினார்.
அவர் என்ன கேட்க விளைகிறார் என்பதைப் புரிந்து கொண்ட தேன்மதி
"அடுத்த தெருவில இருக்கிற தாத்தா பாட்டி வீட்டை தான் அக்கா போயிட்டா.. அங்க அந்தப் பாட்டிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை மாமி அது தான்.."
என்று தங்களோடு தமக்கை வராததன் காரணத்தைச் சொன்னாள்.
இருவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்ற பெரியவர்கள் இருவரும் தங்களுக்கு இருந்த சந்தோஷத்தில் தேன்மதி நடந்து வருவதற்குச் சுணங்கியதைக் கவனிக்கவில்லை.
அவளது வலது காலிலும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது குண்டடி பட்டதையோ, அதனால் அவள் நடப்பதற்குச் சிரமப் படுவாள் என்றோ சில சமயங்களில் அவளது வலது பக்கக் காலில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படும் என்பதையோ அவள் யாரிடமும் சொன்னதே இல்லை.
உள்ளே சென்றவர்களை அம்பிகையும் உண்மையான மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தேனுவுக்கும் ராமுக்கும் தூதுவளைச் சாறு கலந்த தேநீரைக் கொடுத்துச் சீதா உபசரித்தார்.
சிறிது நேரத்திலேயே சுற்று முற்றும் பார்த்த அபிராம்
"மாமி.. தமிழத்தானும்.. இசையத்தானும் வீட்டில இல்லையோ.."
என்று அமுதவாணியைப் பார்த்துக் கேட்டான்.
"ஓம் கண்ணா.. இங்க பக்கத்தில இருக்குற கடக்கரைக்குத் தான் ரெண்டு பேரும் போயிட்டினம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவினம்.. நான் உங்களைப் பத்தின விஷயத்தை இன்னும் ஃபோன் எடுத்துக் கூடச் சொல்லேல்லை.. ரெண்டு பேரும் நேரில வந்தே உங்களைப் பாத்திட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்கட்டும்.."
என உற்சாகத்துடன் சொன்னார் அமுதவாணி.