மொழி 5 (1)
வானத்தில் அது வரை தகித்துக் கொண்டிருந்த சூரியனை மெல்ல மெல்லக் கருமேகங்கள் கவ்விக் கொண்டதால் எங்கும் ஒரே மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த தேனுவுக்கு அப்போது தான் பாடசாலைப் பிள்ளைகளின் பாடப்புத்தகங்களைத் திருத்த வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது.
அதோடு அவளது வலது பக்கக் காலில் குண்டடி பட்ட இடம்வேறு அவள் தன்னை அறியாமல் துள்ளிக் குதித்ததால் விண்விண்ணென வலிக்கத் தொடங்கவே, அவளது முகம் லேசாகக் கலங்கத் தொடங்கியது.
அதை மற்றவர்கள் யாரும் பார்க்கக் கூடாது என நினைத்தவளோ மெல்ல எழுந்தபடி
"மாமா.. எனக்குப் பள்ளிக்கூடத்து வேலையள் கொஞ்சம் இருக்குது.. அதையெல்லாம் முடிச்சிட்டு செக்கல் நேரம் அப்புடி வரட்டுக்குமோ.."
என மெல்லக் கேட்க, தானும் எழுந்து அவளோடு வாசல்வரை நடந்தபடி
"சரி தேனுக்குட்டி.. வேலையளை முடிச்சுக் கொண்டு வெள்ளன வந்து சேர்.. நான் உன்னை எதிர்பாத்துக் காத்திருப்பன்.."
என்று சொன்னார் அமுதவாணன்.
அமுதவாணனிடம் தலையாட்டிக் கையசைத்து விட்டு வேகமாக வீடு நோக்கி விரைந்தாள் தேனு. அவளது காலின் வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கவே, வலிநிவாரணி மாத்திரையைப் போட்டுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு அவள் தள்ளப் பட்டாள்.
அதனால் சற்றே வேகமாக நடையை எட்டிப் போட்டவள் எதிரே வந்தவன் மீது மோதிக் கீழே விழவே அவளது வலது கால் தரையில் மோதி மேலும் வலியைக் கொடுத்து.
"பாத்து வரத் தெரியாதோ.. இப்புடியோ மேல வந்து மோதுறது.."
என்று சற்றே அழுத்தமான குரல் தேனுவைத் தீண்டவே, அவளுக்கு கால் வலியோடு அந்தக் குரலும் எரிச்சலைக் கொடுத்தது.
தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டு முன்னால் நின்றவனைப் பார்த்து
"பாத்து வந்தால் உங்களோட வந்து மோத எனக்கு என்ன வேண்டுதலோ... நீங்களும் பாத்து வர வேண்டியது தானே.. கண்ணை என்ன பிடரியிலயோ வைச்சு இருக்கிறியள்.. எருமை மாடு மாதிரி மேல வந்து மோதிக் கீழ விழுத்தீட்டுப் பேச்சைப் பாரன்.. ஆளும் மண்டையும்.."
என்று கை நீட்டிப் பேசிக் கொண்டு போனவளை அதற்கு மேல் பேச இடங் கொடாமல் கால்வலி தாக்கவே, வேகமாகத் திரும்பி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அண்ணனை முன்னால் போக விட்டுப் பின்னால் வந்து கொண்டிருந்த இசைவேந்தன் தனக்குத் தெரிந்தவரோடு ரொம்ப நேரமாகப் பேசி விட்டு, அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி அப்போது தான் வீடு நோக்கி வந்து, எதிரே வந்த தேனுவோடு மோதிக் கொண்டு அவளிடம் திட்டு வாங்கிக் கொண்டு நடுத் தெருவில் நின்றிருந்தான்.
தேனு தன் வீட்டினுள் நுழையத் தான் அவள் தன்னைத் திட்டி விட்டு அல்லவா போகிறாள் என்று நிமிர்ந்த இசை, தன்னை அறியாமல் தன் பின் மண்டையைத் தடவிப் பார்த்தபடி
"என்ரை மண்டைக்கு என்ன குறைச்சல்.. அது நல்லாத் தானே இருக்குது.. உனக்குத் தான்டியம்மா மண்டையில ஏதவோ பிசகிப் போயிட்டுது எண்டு நினைக்கிறன்.."
என்று சற்றே சத்தமாகச் சொல்ல அது தேனுவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.
நடந்து கொண்டே திரும்பிப் பார்த்தவள்
"போடா.."
என்று சொல்ல,
வாயில் கைவைத்தபடி அவளையே பார்த்திருந்தான் இசை, அதற்குள் தேனு தன் வீட்டினுள் புகுந்து மறைந்து விட்டாள்.
"இந்த ஊர்ப் பிள்ளையள் சரியான வாயாடியளா இருக்குங்களோ.."
எனத் தனக்குள் முனகியபடி தன் வீடு நோக்கி நடந்தான் இசை.
அவனை வாசலிலேயே உற்சாகமாக எதிர் கொண்டான் தமிழ்பரிதி.
"அண்ணா என்ன நீங்கள்.. என்னைய நடுத் தெருவில தனிய விட்டுட்டு வந்திட்டு இப்ப வாசலில நின்டு வரவேற்கிறீங்களோ.. பேசாமல் ஓடிப் போயிடுங்கோ.. சரியான கடுப்பில இருக்கிறன்.."
என்றபடி தமையனைத் தாண்டி இசை போக, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு தன்பக்கமாக இழுத்துக் கொண்டான் தமிழ்.
தமையனின் கைகளை விலக்கியபடி
"விடு அண்ணா.."
என்று சற்றே கடுகடுத்த தம்பியின் தாடையை இறுகப் பற்றி அவனது கன்னத்தில் முத்தம் வைத்தான் தமிழ்.
இசையோ சில நொடிகள் அப்படியே தமையனை மேலும் கீழுமாகப் பார்த்து வைக்க, அவனைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டே
"இசை.. இன்டைக்கு நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறன் தெரியுமோ.. ஏனென்டு கேளன் பாப்பம்.."
என்று தமிழ்பரிதி கேட்டான்.
அண்ணன் பிடித்திருந்த கழுத்துப் பகுதியை லேசாக நீவி விட்டுக் கொண்டே
"கேளாமல் இருந்தால் மட்டும் விடவோ போறீங்கள்.. சொல்லித் தொலையுங்கோ நான் கேட்டுத் தொலையிறன்.."
என்று வேண்டுமென்றே சொல்ல, அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலமையில் தான் நம் தமிழ் இல்லையே, அவன் தான் தன் பப்பியையும், தேனுவையும் மற்றும் அபியையும் கண்ட சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறானே.
"இசை.. நான் ஏன் சந்தோஷமா இருக்கிறன் என்டு சொல்றதை விட உனக்கு நேரில காட்டுறன் வா.."
என்று சொல்லிக் கொண்டே இசையைக் கிட்டத் தட்ட இழுத்தபடி வீட்டினுள் ஓடிய தமையனை விசித்திரமாகப் பார்த்தபடி அவன் இழுத்த இழுப்புக்குப் பின்னால் போனான் இசை.
அண்ணா ஏன் இத்தனை ஆனந்தமாக இருக்கிறான் என்பதனை அறிய அவனுக்கும் ஆவலாகத் தான் இருந்தது.
அங்கே உள்ளே தான் அடையாளம் காட்டப் போகும் நபரைப் பார்த்து விட்டு இசை எப்படிக் குதிக்கப் போகிறான் என்பதைப் பார்க்கத் தமிழுக்குப் பேராவலாக இருந்தது.
"எந்த அதிசயத்தைக் காட்டுறதுக்கு இப்புடி என்னை இழுத்துக் கொண்டு போறீங்கள் அண்ணா.."
என்று இசை கேட்டு முடிப்பதற்கும் தமிழ் அவனை அபிராம் முன் கொண்டு சென்று நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது.
"இது ஆரென்டு சொல்லு பாக்கலாம்.."
என்றபடி அபிராமை இழுத்து இசை முன்னால் தமிழ் நிறுத்த, இசை அபியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"அண்ணா இது.."
என ஏதோ யோசனையோடு சொல்ல வந்தவன் உடனேயே முன்னால் நிற்பவனை அடையாளம் கண்டு கொண்டு
"அபிக்குட்டீ.. என்னடா இப்புடி வளந்துட்டாய்.."
என்றபடி அவனைத் தூக்கிச் சுற்றத் தொடங்கவே அபிராம் கிளுக்கிச் சிரித்தபடி
"ஐயோ.. இறக்கி விடுங்கோ இசையத்தான்.."
என நெளியத் தொடங்கினான்.
ஒரு வழியாக அபிராமைக் கீழே இறக்கி விட்ட இசை அவனை இறுகக் கட்டிக் கொண்டு யாரும் அறியா வண்ணம் தன் விழிநீரைச் சுண்டி விட்டான்.
ஆனால் தமிழின் பார்வைக்கு மட்டும் இசையின் கண்ணீர் தப்பவில்லை. மெல்லத் தன் தம்பியின் முதுகைத் தட்டிக் கொடுத்தவன் அவன் காதுகளில்
"இப்போவே கண்ணீர் முழுக்கலையும் வீணாக்கி விடாதே இசை.. இன்னும் பாக்க வேண்டிய நபர்கள் இருக்கிறார்கள் அதோட அறிய வேண்டிய விடயங்களும் இருக்குது.."
எனச் சொன்னபடி அபிராமைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
அந் நேரம் அங்கே வந்த கவிவாணன்
"தமிழ்.. இசையைக் கூட்டிக் கொண்டு போய் அவையளைக் காட்டீட்டு வா.."
என்று சொல்லியபடி அபிராமின் தோள் மீது கை போட்டு அவனை சமையலறைப் பக்கமாக அழைத்துச் செல்ல, உணர்ச்சிகளின் மொத்தக் குவியலாக நின்ற தன் தம்பி இசையை அழைத்துக் கொண்டு வான்மதியின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் தமிழ்.
"எங்க அண்ணா போறம்.."
என்று சுற்றுமுற்றும் பார்த்தபடியே நடந்தான் இசை.
"நீ வந்து பாத்துத் தெரிஞ்சு கொள்ளு.."
என்று நடந்தபடியே சொன்ன தமிழ் அதன் பிறகு வாயே திறக்கவில்லை.
இருவரும் வான்மதியின் வீட்டு வாசலினுள் காலடி எடுத்து வைத்ததுமே, வீட்டின் படியில் படுத்திருந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீரன் வேகமாக ஓடி வந்தது.
நாயைப் பார்த்த இசை பழக்க தோஷத்தில் தமையனின் இடுப்பில் ஏறிக் குந்திக் கொண்டான்.
அவன் ஏறிய வேகத்தில் இருவரும் கீழே விழாமல் இருக்க, பக்கத்து மதில் சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தமிழ்
"அடேய் எருமை.. பெரிய வீர வசனம் எல்லாம் பேசுவியே நீ.. ஒரு குட்டி நாயைப் பாத்ததும் குரங்குக் குட்டி மாதிரித் தாவிப் பிடிக்கிறாய்.. கீழே விழுந்து கிழுந்து வைச்சால் ரெண்டு பேரும் சேந்து உருள வேண்டியது தான்.."
எனத் தன் தம்பியைச் செல்லமாகக் கடிந்து கொண்டு பெரிய வீரனைப் போல நின்றிருந்த குட்டி வீரனைக் குனிந்து பார்த்தான்.
வீரனும் தன் சின்னஞ்சிறிய தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியபடி தமிழைப் பார்த்து விட்டுத் தன் நாவால் அவனது பாதங்களை நக்கியது. அதுவரை தமையனது இடுப்பில் வீற்றிருந்த இசை மெல்லக் கீழே இறங்கி வீரனின் தலையைத் தைரியமாகத் தடவிக் கொடுக்க, அதுவோ இசையை விட்டுத் துரத்தத் தொடங்கியது.
"ஐயோ.. என்னையக் காப்பாத்து அண்ணா.."
என்றபடி வீட்டைச் சுற்றி ஓடிய இசை முடிவில் மாமரத்தில் ஏறிக் குந்திக் கொண்டான்.
இசையின் செய்கையைப் பார்த்ததும் தமிழுக்குத் தன்னையும் மீறிச் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது.
இதற்குள் வெளியே நடந்த அலப்பறையின் சத்தம் வான்மதியின் காதுகளில் விழவே இந்த வீரன் யாரை வம்பிழுத்துக் கொண்டு இருக்கிறானோ எனப் பதறியபடி அவள் வெளியே ஓடி வந்தாள்.
அதுவரை தம்பியின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் வாசலில் நிழலாட அங்கே பார்த்தான். அங்கே வான்மதி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
வாசலோடு கிடந்த பெரிய குடத்தோடு அவள் மோதி விடுவாளோ எனப் பதறியபடி அவளை நோக்கி தமிழ் வேகமாகப் போவதற்கு முன்பாக வான்மதி அந்தக் குடத்தைத் தாண்டிக் குதித்து ஓடி வந்து வீரனைத் தூக்கிக் கொண்டாள்.
தமிழ் தான் அவள் குடத்தைத் தாண்டிக் குதித்த வேகத்தைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு நின்றிருந்தான்.
வீரனோடு திரும்பிய வான்மதியின் பார்வையில் அப்போது தான் மரத்தில் இருந்த இசையும் வாசலோடு நின்ற தமிழும் விழுந்தார்கள்.
அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த தமிழ்
"முதல்ல அந்த நாய்க்குட்டியைக் கட்டி வை பப்பி.. அதைப் பாத்துப் பயந்து போய் என்ரை தம்பி எங்கயெல்லாம் ஏறிக் குரங்குக் குட்டி போலத் தொங்கிக் கொண்டிருக்கிறான் பார்.."
என்று சொல்லிக் கொண்டே இசை மாமரத்தில் இருந்து இறங்க உதவி செய்தான்.
அவன் இறங்குவதையே வேடிக்கை பார்த்தவள் மீண்டும் திரும்பித் தமிழைப் பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட தமிழ்
"இசை.. இது ஆரென்டு தெரியுதோ பார்.."
என்று சொல்லிக் கொண்டே நாய்க்குட்டி யையும் வான்மதியையும் கண்களால் ஜாடை காட்டினான்.
வான்மதியையே வெகு யோசனையோடு ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த இசை, தமிழின் செய்கையில் கண்களை விரித்துக் கொண்டு
"உண்மையாகவா அண்ணா...
இது பப்பி தானா.."
என்று சொல்லியபடி நாடியில் கைவைத்தவாறு அவளைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்.
தமிழோடு வந்த புதியவனது பேச்சிலும் சாயலிலும் அவன் யாரெனப் புரிந்ததும் வான்மதியின் முகம் மீண்டும் பூவாய் மலரவே அவள் இசையைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
வான்மதியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு
"மதீ.. இது உண்மையில நீதானா.. நான் காண்பது ஒன்றும் கனவு இல்லையே.. உன்னைக் காட்டத் தான் அண்ணா அப்புடி என்னை இழுத்துக் கொண்டு ஓடி வந்தாரோ.. அங்க அபியைப் பாத்ததுமே எனக்கு எப்புடி இருந்தது தெரியுமோ.. உங்களை எல்லாம் பாத்துப் பேசி எத்தினை வருஷங்கள் ஆகீட்டுது.. இங்க உங்களைத் தேடாத இடமில்லை தெரியுமோ.."
என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போனான்.
அவனது கைகளுக்குள் தன் கைகளைக் கொடுத்து விட்டு நின்றவளோ புன்னகைத்தபடியே நின்றிருந்தாள்.
இசை மட்டும் பேசிக் கொண்டேயிருந்தான். அவன் அத்தனை சந்தோஷத்தில் இருக்கிறான் என்பதை அவனது முகம் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் அப்படியே பேசிக் கொண்டிருந்தவனோ வான்மதியின் முகத்தின் முன்னால் சொடக்குப் போட்டு
"என்ன அப்படியே நிக்கிறாய்.. ஏதாவது வாயைத் திறந்து பேசு.."
என்று சொல்ல, வான்மதி இசையின் பின்னால் நின்ற தமிழை மெல்ல எட்டிப் பார்த்தாள்.
"என்ன மதி.. அண்ணாவையே பாத்துக் கொண்டிருக்கிறாய்.. வாயைத் திறந்து கதை.. உன்ரை பாட்டு எல்லாம் கேட்டு எவ்வளவு காலம் ஆகீட்டுது தெரியுமோ.."
என்ற இசையின் தோளில் கைவைத்த தமிழ் அவன் காதுகளில் வான்மதியின் நிலையைச் சொல்ல, இசை அசைய மறுத்துச் சிலையாகி நின்றான்.
"உனைப் பார்த்த சந்தோஷ நொடிகள்
பூவாய் மலரும் முன் அதில்
தீ பட்டுக் கருகிப் போனதாய் உணர்கிறேன்
என் தோழி..
ஆயினும் உனைப் பார்த்த நொடிகளை
நெஞ்சில் கல்வெட்டென பொறிக்கிறேன்.."