• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பேச்சுலர்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
நடிகர்கள்:ஜிவி பிரகாஷ் குமார்,திவ்யபாரதி
இயக்கம்: சதீஷ் செல்வகுமார்
சினிமா வகை:Drama, Romance
கால அளவு:2 Hrs 45 Min

1638607075507.png


பேச்சுலர் படத்தின் ஹீரோவான டார்லிங்(ஜி.வி. பிரகாஷ் குமார்) தன்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலைப்படாத நபர். கோவையை சேர்ந்த அவர், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். தன் நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். ஜாலியான ஆளான டார்லிங் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் சுப்புவை(திவ்யபாரதி) சந்திக்கிறார். சிங்கிளான சுப்பு மீது டார்லிங்கிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போன்று லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். விளைவு, சுப்பு கர்ப்பமாகிறார். கருவை கலைக்கச் சொல்கிறார் டார்லிங், அதில் சுப்புவுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து என்ன நடக்கும்?


டார்லிங் கதாபாத்திரம் நம் திரையுலகிற்கு புதிது. அனைவரும் கொண்டாடும் கதாபாத்திரம் இல்லை டார்லிங். அதே சமயம் அவரை கொண்டாட வைக்க இயக்குநர் முயற்சி செய்யவில்லை.

சுப்பு ஒரு நார்மலான பெண். இப்படி மாறுபட்ட குணம் கொண்ட டார்லிங் மற்றும் சுப்பு இடையே நடக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. நாமே அந்த கதாபாத்திரங்கள் மத்தியில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

படத்தில் சில மைனஸ் பாயிண்டுகளும் உண்டு. இரண்டாம் பாதியில் சுப்பு ஓரங்கட்டப்படுகிறார். சுப்புவுக்கும், டார்லிங்கிற்கும் இடையேயான பிரச்சனை, பிரிவு அவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை விட அவர்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதத்தை தான் பார்க்க முடிகிறது. இதனாலேயே கிளைமாக்ஸ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.