• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!(4)

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
1705933908631.jpeg




அத்தியாயம் – 4



மேடையில் கம்பீரமும் புன்னகையுமாக விருதை கையில் வைத்து கொண்டு நின்று இருக்கும் காட்சியை பார்த்த சபரியின் கண்கள் சற்று கலங்கிதான் போயின . பின்னர் இந்த இடத்தை அடைய அவள் இழந்தது அளவிடமுடியாதது இல்லையா ...அதை உடன் இருந்து பார்த்தவன் ஆதலால் அவளின் வளர்ச்சியில் அவன் மனம் நிறைந்து இருந்தது.



அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிவிப்பாளர் ஒரு அந்த செயலை செய்தார்.



மற்றும் ஒரு சிறப்பும் இந்த வெற்றியாளருக்கு உண்டு என்றவர் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த துறையில் ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்து குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சிய பெற்று இருக்கும் மிஸ் சகானா நிறுவனம் மட்டும் முதலிடம் பெறவில்லை....இந்த ஆண்டின் நமது நிறுவனங்களுள் மிக சிறந்த தொழிலதிபராகவும் மிஸ் சகானா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அவர் சொல்லி முடிக்கவும் பலரின் கண்கள் வியப்பில் உயர்ந்தன.



ஆம் நண்பர்களே .....நமது வாடிக்கையாளர்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் தொழிலில் நேர்மை , குறித்த நேரத்தில் கார் டெலிவரி, மற்றும் வாடிக்கையாளரிடம் கனிவான அணுகுமுறை என்பதில் சகானா சர்வீஸ் ஸ்டேஷன் தான் முதலிடத்தில் இருந்தது. மேலும் நமது தொழிலில் முதல் பெண் தொழிலதிபரும் இவர்தான். அதனால் இந்த விருதுக்கு தகுதியானவரும் இவர்தான் என சொல்ல கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.



சபரீயோ சந்தோஷத்தில் கண்களில் நீருடன் பார்த்திருக்க சகானாவும் அந்த நேரத்தில் சபரிய பார்க்க அதில் நீயின்றி இந்த அடையாளம் இல்லை என்பது போல் இருந்தது.



அந்த நேரத்தில் அறிவிப்பாளர் “மேலும் இந்த விருதை பெறுபவருக்கு உள்ள தகுதியை போல் அந்த விருதை கொடுப்பவருக்கும் அந்த தகுதி இருக்க வேண்டும் அல்லவா?.



அந்த தகுதி இந்த அரங்கத்தில் சிறு வயதிலே தொழில் துறையில் நுழைந்து , நாட்டின் பல இடங்களில் தங்களது கிளைகளை பரப்பி, அனைத்தையும் நல்ல முறையில் நிர்வாகம் செய்து இதற்கு முன்னர் மூன்று முறை சிறந்த தொழிலதிபருக்கான விருதை பெற்ற SK மோட்டார்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் மிஸ்டர் சாண்டில்யன் அவர்களுக்கே உண்டு. அவரே இந்த விருதினை வழங்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்” என்றதும் அடுத்த கைதட்டல் அரங்கத்தை அதிர செய்ய அதை கேட்டு கொண்டிருந்தவளின் மனமோ அதிர்ச்சியில் சுக்கு நூறாக சிதறி கொண்டு இருந்தது.



அதைவிட அதிர்ச்சி கீழே அமர்ந்தவனிடம் இருந்து வெளிப்பட்டது. அவன் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அதற்குள் மேடையில் இருந்தவர் சாண்டில்யனை மேடைக்கு அழைக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தவன் மெதுவாக எழ





அதற்குள் பின் வரிசையில் இருந்து “ எப்போதும் எல்லா இடத்திலும் நாம் தான் முதலிடம்னு நினைக்க கூடாது..... மோட்டார் மார்கெட்டிங் முழுதும் இவன் கண்ட்ரோல் வச்சிருந்தான்....... ஆனா இப்போ என்ன நடந்தது?....ஒரு பொண்ணு முன்னாடி தோற்று நிக்கிறாங்க” என அவனை கேலி பேசுவது போல் ஒரு குரல் கேட்க



தொழிலில் வளர்நிலையில் உள்ளவர்களுக்கு இது போன்ற கேலி கிண்டல்கள் வருவது சகஜம் தான் என்றாலும் இப்போது அவனிருக்கும் மனநிலையில் அது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது. அவன் வேகமாக எழுந்து மேலே வர



இங்கு மேடையில் SK மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெயரை கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்தவள் யாரால் இந்த நிலைக்கு தள்ளபட்டாளோ அவர்களின் கையால் தனது வெற்றி கோப்பையை பெறுவதா என கோபமும், ஆத்திரமும் வர அதற்குள் அதற்கு காரணமானவன் மேடைக்கு வரவும் அவனை பார்த்ததும் சில நொடிகள் மனம் தடுமாறி பின் சுதாரித்தவள் அவனை முறைக்க அவனும் சளைக்காமல் அதை எதிர்கொள்ள இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தான் சபரி. அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் வந்து செல்ல கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைபடுத்தி கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்கள் பளிச்சிட உடனே மேடை மீது இருக்கும் மைக் நோக்கி நகரவும்



அங்கு ஏன் போகிறாள் என யோசித்தவன் அவள் அடுத்து செய்யபோகும் செயலின் வீரியத்தை உணர்ந்த சபரி வேகமாக எழுந்து அவளை நோக்கி ஓடி வந்தான்.



அவள் மைக் பிடித்து பேச ஆரம்பிக்கும் முன் மேடை ஏறி அவள் அருகில் சென்றவன் “சகானா என்ன காரியம் செய்ய போற நீ....பேசாமா அமைதியா இரு” என அவள் காதில் மெதுவாக சொல்ல



அதற்குள் “இந்த விருதினை பெற்று கொண்டு நீங்கள் சொல்ல விரும்புவதை சொல்லலாம் மிஸ் சகானா எங்கள் விருந்தனர் உங்களுக்காக காத்திருக்கிறார்” என அறிவிப்பாளர் சொல்லவும்



அப்போது “எனக்கு இந்த விருதை இவரிடம் இருந்து பெறுவதற்கு சற்றும் விருப்பம் இல்லை...... அதனால் எனக்கு இந்த விருது வேண்டாம்”.... என சொல்லவும் அங்கு இருந்தவர்கள் மட்டும் அல்ல சபரீயும் அதிர்ந்து நின்றான். அவள் ஏதாவது பேசுவாள் பிரச்சனை வரும் என்று தான் அவன் தடுக்க நினைத்தான். ஆனால் இப்படி பட்டென்று எல்லார் முன்பும் அவனை அவமானபடுத்துவாள் என்று அவன் சற்றும் நினைத்து பார்க்கவில்லை.



உடனே மேடையில் நின்று கொண்டிருந்த சாண்டியை அவன் பார்க்க அவனும் முதலில் அதிர்ந்து பின்னர் கூட்டத்தை பார்த்ததும் தனது முகமாற்றத்தை வெளியில் காட்டாமல் மறைத்து கொண்டு அமைதியாக நின்று இருக்க அந்த அமைதியின் பின் இருக்கும் ஆக்ரோஷத்தை சபரி உணர்ந்ததால் பணிவாக அவனருகில் சென்றவன் “மன்னித்து கொள்ளுங்கள் சார். அவள் சிறு பெண் ...ஏதோ அறியாமல் பேசிவிட்டாள் ...நீங்க தவறா எடுத்துக்காதீங்க..... அவளுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றவன் கோபமாக சாகானாவிடம் சென்று சில வார்த்தைகள் பேச அதை கேட்டதும் அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக...... கடைசியில் நீயும் என்னை புரிந்து கொள்ளவில்லையே என்பதை போல் அவள் பார்க்க



அவனோ அவள் முகத்தை பார்க்காமல் “இப்போ நீ அந்த விருதை அவர்கிட்ட இருந்து வாங்கிற” என அடிக்குரலில் சொன்னவன் அவளை கைபிடித்து அழைத்து வந்து இல்லை இழுத்து வந்து அந்த விருதினை பெற வைத்தான் .

அவனிடம் இருந்து விருதை பெற்ற அந்த நொடி அப்படியே பூமிக்குள் புதைந்து போய்விடமாட்டோமா என அவள் மனம் துடிக்க



அதை கொடுத்தவனோ இந்த நிமிடங்கள் எனது வாழ்வின் மிக மோசமான நிமிடங்கள் என நினைத்தவன் விருதினை வழங்கிவிட்டு வாழ்த்து கூட சொல்லாமல் வேகமாக மேடையை விட்டு இறங்க அதற்குள் அவனை சுற்றி துக்கம் விசாரிப்பது போல் ஒரு கும்பல் கூட அது மேலும் அவனுக்கு அவமானமாக போயிற்று.



அவன் வேகமாக அரங்கை விட்டு வெளியில் செல்லவும் அதற்குள் மேலும் அவளை காட்சி பொருளாக்காமல் அழைத்து கொண்டு சபரீயும் கிளம்பிவிட்டான்..



தங்கும் அறைக்கு சென்றபின்னும் அவளின் ஆத்திரம் அடங்கவில்லை. யாரால் அவள் தனது சுயத்தை இழந்து நின்றாளோ அவர்களின் கைகளால் அவளின் அடையாளம் நிருபிக்க பட்டது அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் எல்லாவற்றையும் இழந்து எப்படி நின்றாளோ அதே போன்று இப்போதும் அவள் உணர்ந்தாள்.



மனம் ஆற்றாமையில் துடிக்க அப்போது “சகானா பசிக்குது சாப்பிட போகலாமா” என்றபடி சபரி அவள் அறைக்குள் நுழைந்தான்.



அவனை பார்த்ததும் ஆத்திரத்தில் “போடா டேயீஈஈஈஈஈ” என்றபடி கையில் இருக்கும் அலைபேசியை அவன் மேல் எரிய அதை எதிர்பார்த்தவன் போல் கேட்ச் பிடித்தான் அவன். அதில் மேலும் ஆத்திரம் அடைந்தவள் கண்டபடி திட்டி கொண்டே அவன் மேல் அடுத்து தலையணை மற்றும் சில பொருட்கள் பறக்க அவனும் பறந்து பறந்து கேட்ச் பிடிக்க சில நிமிடங்கள் அங்கு ஒரு விளையாட்டு போட்டி நடந்து முடிந்தது.

பேசி அவள் களைப்படைய அவனோ ஓடி களைத்து போக இருவரும் அமைதியாக அறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்தனர். அவளின் கோபம் எல்லாம் கொஞ்சம் குறையட்டும் என்றுதான் சபரீயும் அவளின் கவனத்தை திசை திருப்ப இது போல் செய்தான். அவன் நினைத்தது போல் அவளும் கொஞ்சம் அமைதியானாள் .. சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய “சகானா சாப்பிட போகலாமா” என மெதுவாக ஆரம்பித்தான்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க



இங்க பாரு சகானா உன்னோட கோபம் எனக்கு புரியுது ...அந்த இடத்தில் உன்னோட மனநிலை எப்படி இருந்திருக்கும்னு எனக்கும் தெரியும். ஆனா அதை எல்லாம் வெளிபடுத்தும் இடம் அதுவல்ல சகானா. இந்த விழா உனக்கான விழா.. இந்த அடையாளம் உனக்கு கிடைக்க நீ எவ்ளோ கஷ்டபட்டிருப்பா....எத்தனையோ இழந்திருக்க ......எவ்ளோ அவமானத்தை கடந்து வந்திருக்க என அவன் சொல்லி முடிக்கும் முன்

“அதான் நானும் சொல்றேன்.....அதற்கு காரணமானவங்ககிட்ட நான் எப்படி...” என அவள் சொல்லும்போதே குரல் தழுதழுக்க, கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட



அவளின் அருகில் வந்து அமர்ந்து அவள் கைகளை பிடித்து தனது கைகளுக்குள் வைத்து கொண்டவன் “இங்க பாரு சகானா உன்னோட பீலிங்க்ஸ் எனக்கும் தெரியுது. ஆனா அத்தனை பேர் இருக்கிற சபையில நீ அப்படி நடந்துகிட்டது சரியா சொல்லு? மேலும் உன்னை பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க சொல்லு? என அவன் கேட்கவும்



உடனே அவள் கோபமாக “அன்னைக்கு மட்டும் அத்தனை பேர் இருக்கும்போது உங்களை மாதிரி ஏமாத்தற ஆளுங்களுக்கு எல்லாம் இது இடம் இல்லை....தகுதி பார்த்து நீங்க சம்பந்தம் வச்சிருக்கணும்....இப்போ வந்து புலம்புனா நான் என்ன பண்ண முடியும் அப்படி இப்படின்னு கேவலமா பேசினாங்களே ...அப்போ நீயும் தான கூட இருந்த ...அப்போ எங்க போச்சு இந்த மரியாதை எல்லாம்....பணம் இருக்கிறவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாமா?” என ஆத்திரத்தில் அவள் வெடிக்க



அவனோ பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தான்.



மறக்க கூடிய நிகழ்வா அது.....அந்த இடத்தில் அவள் பட்ட அவமானத்திற்கு அவன் தானே சாட்சி. வேறு பெண்ணாக இருந்திருந்தாள் அவர்கள் பேசியதற்கு அங்கு நடந்திருக்கும் நிகழ்வே வேறாக இருந்திருக்கும். ஆனால் சகானாவோ அவர்கள் அவளவ்வு பேசிய பின்பும் அமைதியாக “தன்னிடம் உள்ள ஆதாரங்களை அவர்களின் கையில் திணித்து இதை நான் உங்களுக்கு சன்மானமாக கொடுக்கிறேன் பிழைத்து கொள்ளுங்கள்” என்றல்லாவா சொன்னாள் . இதனை எதிர்பார்க்காத அவர்கள் விகிர்த்து போய் நிற்க இவளோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கம்பீரமாக அல்லவா நடந்து வந்தாள்.



அப்போது அவளிடம் தெரிந்த அந்த தைரியம் , துணிச்சலில் சபரீயே அசந்து போனான். பூ போல் மென்மையானவளின் பின் இப்படி ஒரு புயலின் வேகம் இருக்கும் என்பதை அவன் உணர்ந்த தருணம் அல்லவா அது. அதன் பின் தான் அவளின் எல்லா செயல்களுக்கும் அவன் துணை நின்றான். 2



பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே போன்ற முகபாவத்தை அவள் மேடையில் நிற்கும்போது பார்த்தவன் ஏதோ நடக்க போகிறது என உள்ளுணர்வு சொல்ல வேகமாக வந்து அதை தடுக்க முயற்சிக்க ஆனால் அவளோ தான் நினைத்ததை பேசி விட்டாள்.



இவ்வாறு அவன் மனம் யோசித்து கொண்டிருக்க



“சொல்லு சபரி ......ஏன் அமைதியா இருக்க....அந்த பரிசை அவன் கையில் இருந்து வாங்கும்போது எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்தது தெரியுமா? அவனுக்கு அந்த தகுதி இல்லை” .... என அவள் சொல்லி கொண்டு இருக்கும்போது



சபரியின் அலைபேசி ஒலிக்க எடுத்தவன் “அப்படிங்களா சார்...” என்றவன் சகானவை திரும்பி பார்க்க

அவளோ கோபத்தில் எதோ வாயில் முனுமுனுத்து கொண்டிருக்க ஒரு நிமிடம் யோசித்தவன் “சரிங்க சார்...நாங்க வந்திடறோம்” என சொல்லி அலைபேசியை வைத்தான்.



அவன் பேசி முடித்ததும் மீண்டும் அவனிடம் அவள் சண்டை ஆரம்பிக்க



“இங்க பாரு சகானா இப்போ இதற்கான நேரமில்லை... இரவு வந்து பேசிக்கலாம்... நம்ம வெளியே கிளம்பனும்...சீக்கிரம் ரெடி ஆகு” என்றவன் உடனே அவள் வேகமாக ஏதோ சொல்ல வர



அவனோ அவளை பேசவிடாமல் தடுத்தவன் “ சகானா என் மேல் நம்பிக்கை இருக்கு அல்லவா...நான் எது செய்தாலும் உன் நல்லதுக்கு தானே செய்வேன் உனக்கும் தெரியும் தானே” என கேட்க



அவனின் முகபாவமே அவளுக்கு ஏதோ உணர்த்த உடனே பதில் ஏதும் சொல்லாமல் அவன் கைகளில் இருந்து தனது கைகளை வெடுகென்று எடுத்து கொண்டவள் எழுந்து செல்ல



“நான் கேட்கிறேன்...நீ பதில் சொல்லாம போற” என அவன் முடிக்கும் முன்



“ம்ம் நீதான கிளம்ப சொன்ன...நான் டிரஸ் மாற்ற வேண்டாமா? .....அதான் போறேன்....”என வேகமாக சொல்லவும்



அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்பு வர சற்று இளகி பேசினால் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவாள் என நினைத்தவன் சரி சரி என்றபடி அறையை விட்டு வெளியே வந்தான்.



சிறிது நேரத்தில் அவன் சொன்னது போல் கிளம்பி வந்தாள். அவனும் வர இருவரும் கிளம்பினர். இவளும் எங்கு என்று கேட்க வில்லை.அவனும் சொல்லவில்லை.



இது தான் சகானா....அவள் எளிதில் யாரையும் நம்ப மாட்டாள். அப்படி நம்பியவர்களின் பேச்சிற்கு மறுபேச்சு பேசமாட்டாள். அதுவும் சபரியின் பேச்சிற்கு எப்போதும் சகானா கட்டுபடுவாள்.



அவர்களின் கார் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன் நிற்க அதில் இருந்து இறங்கியவள் “இங்க எதுக்கு வந்தோம் சபரி ...நம்ம தங்கி இருக்க ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கலாம்” என சொல்ல



அதற்குள் காலையில் நடந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் வேகமாக வெளியில் வந்து “வாங்க வாங்க மேடம்...வாங்க சார்...”.என வரவேற்க



அவளோ திகைத்து அவனை பார்க்க



அவனோ மிக சாதரணமாக “ஆமா இது உனக்கான பார்ட்டி தான்....நான் தான் முன்பே சொல்லி இருந்தேனே” என அவன் சொல்ல



“நீ என்ன லூசா என்பது போல் அவனை பார்த்தவள் ..... பின்னர் நான் வரலை ...நீ வேணா கலந்துகிட்டு வா “ என சொல்லி முடிக்கும் முன்



ஒரு பெரிய பூங்கொத்து அவளின் முன் நீட்ட அப்போது வீடியோ கேமேரா அனைத்தும் அவளை சுற்றி பளிச்சிட அவளோ சில நொடிகள் திகைத்து பின்னர் திரும்பி சபரிய பார்க்க அவனோ அந்த கும்பலில் பின்னோக்கி தள்ளப்ட்டிருந்தான்.



அவள் என்ன செய்வது என தடுமாறி கொண்டிருக்க



அப்போது முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிதாக இருந்த அந்த பூங்கொத்தின் பின்புறத்தில் இருந்து “ உங்களின் வெற்றிகளுக்கு எங்களது வாழ்த்துகள். இது போன்ற வெற்றிகளை நீங்கள் மேலும் மேலும் பெற மனதார வாழ்த்துகிறோம்” என்ற குரல் வர



வாழ்த்து செய்தியில் அவளின் முகம் மலர்ந்து சிரித்தகொண்டே “மிக்க நன்றி” என சொல்லியபடி அந்த மலர்கொத்தை அவள் பெறுவதற்கு கை நீட்ட



“இந்த விருந்திற்கு SK மோட்டார்ஸ் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்றபடி அந்த பூங்கொத்தின் மறைவில் இருந்து வெளியில் வந்தான் சாண்டி.



முகம் முழுவதும் புன்னகையும், கண்களில் குறும்புடன் அவன் நின்று இருக்க



இதை சற்றும் எதிர்பார்க்காதவல் திகைப்பில் விழிகள் தானாக விரிய



அதற்குள் ஹலோ சாண்டி சார் மேடம் பக்கத்தில நில்லுங்க...உங்களையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கிறோம் என கேமிரா மேன் சொல்லவும்



அவனோ அவளின் அருகில் வந்து நிற்க



பளிச் பளிச்சென கேமராக்கள் ஒளிர்ந்திட இதெல்லாம் சில நொடிக்குள் நடந்து முடிக்க அவளோ அதை எல்லாம் உணரும் நிலையிலே இல்லை.



உறங்கி கொண்டிருந்த நினைவுகள் எல்லாம்

உன் ஓர் பார்வையில் உயிர் பெற

அகம் கொள்ளா வெறுப்புடன்

அரித்திடும் நினைவளைகளால்

தணலாய் தகித்து நிற்கிறேன் !



நிலவு தொடரும்......