அத்தியாயம் -5
நடந்தவை யாவையும் தனது அறைக்கு வந்து பல மணி நேரங்கள் ஆனபின்பும் அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.சில மணிநேரங்களுக்குள் அவள் வாழ்வில் நினைத்து பார்த்திடாத பல காரியங்களை செய்து முடித்து விட்டான் அவன்.. அதை நினைக்கும்போதே அவளின் கோபம் அதிகமாக அதே நேரத்தில் அவன் செய்தது எல்லாமே இயல்பாக இருந்தது போலவே சூழ்நிலைகளும் அமைந்துவிட்டது.
ஆம் அவனது வரவேற்பில் முதலில் தடுமாறி போனவள் பின்னேர் சுதாரித்து அவனை தவிர்க்க முயல அதற்குள் கேமரா, வீடியோ என அவன் சுற்றி வளைத்து கொண்டான. மேடையில் முதன் முதலில் அவனை பார்த்த ஆத்திரத்தில் அவள் படபடவென பேசி இருந்தாலும் அதற்கு பின்னர் சபரீஷின் அறிவுரைகளும், தான் இப்போது அனைவரின் பார்வையில் வளரும் ஒரு தொழிலதிபர் என்ற எண்ணமும் அவளுக்குள் கொஞ்சம் பக்குவத்தையும் பொறுமையும் ஏற்படுத்தி இருந்தது.
அவனோ பூச்செண்டு கொடுத்து வரவேற்ப்பில் அவளுடன் இணைந்தவன் அதற்கு பின்னர் அவளைவிட்டு சிறிதும் நகரவில்லை.
அதற்குள் கூட்டத்தில் அனைவரையும் விலக்கி விட்டு சகானாவின் அருகில் சபரீஷ் வந்து நிற்கவும்
அப்போது ‘ஹெலோ சபரீஷ்.. சார் ஒரு பெரிய கார் நிறுவனத்தின் பெயர் சொல்லி அதன் சவுத் ஜோர்னல் ஹெட்நான் சுந்தர் என்றவன் .. உங்களை எங்க எம் டி பார்க்கணும்னு சொன்னாங்க” என்றான்.
முதலில் திகைத்தவன் பின்னர் “ஓ அப்படியா இருங்க சகானவிடம்.....” என சொல்லும் முன்
“சார் அவங்க பிசியா இருக்காங்க ...தொந்தரவு பண்ண வேண்டாம். ....எங்க சார் சகானா மேடம் கிட்ட தான் பேசணும்னு சொன்னார்....நான் தான் அவங்களுக்கு எல்லாமே நீங்கதான் உங்ககிட்ட பேசினா போதும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.......பதினைந்து நிமிடம் தான் உங்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கார் ... .....அதனால சீக்கிரம் வாங்க என அவன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல் இழுத்து கொண்டு சென்றார்.
இங்கு சகானாவை சுற்றி பலர் சூழ்ந்து நிற்க
அப்போது அங்கு இருக்கும் பெரிய தொழிலதிபர்களை ஒவ்வொருவராக பொறுமையாக சகானாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான் சாண்டில்யன். .
அவளோ அதை தவிர்க்கும் வழி தெரியாமல் அவனை விட்டு நகரவும் முடியாமல் தடுமாறியபடி அனைவர்க்கும் வணக்கம் தெரிவித்தாள்.
சிலரிடம் சகானாவை வைத்துகொண்டே அவளை பற்றி உயர்வாக பேசி அவளை நெளிய வைத்தான்.
அதே நேரத்தில் சிலரிடத்தில் அவள் கைகுலுக்க முற்படும்போது வேண்டாம் என அவள் கைகளை பின்னே இழுத்துவிட்டு வெறும் பெயர் அறிமுகத்தோடு முடித்தான்.
பின்னர் “வா சாப்பிடலாம் ...உனக்கு என்ன பிடிக்கும்” என கேட்டுகொண்டே அவளை சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்று அனைத்தும் எடுத்தும் கொடுத்தான்.
அப்போது அங்கு வந்த ஒருவர் “என்ன மிஸ்டர் சாண்டி நாங்களும் சிறப்பு விருந்தினர் தான். இந்த இளம் தொழிலதிபரிடம் நாங்களும் கொஞ்சம் பேசலாமா? என சிரித்து கொண்டே கேட்க
அவனோ சிரித்து கொண்டே “வித் ப்ளஷர்” என்றவன் சகானவிடம் “பயப்படாதே நான் இருக்கிறேன்” என மெதுவாக சொன்னான்.
அப்போது ஒருவர் “மிஸ் சகானா இவ்ளோ சின்ன வயசில இந்த அளவு தொழில்ல முன்னேறி இருக்கிறது பாராட்டப்படவேண்டிய விஷயம் தான் .ஆனா ஒரு பெண்ணா இருந்திட்டு நீங்க இந்த தொழில தேர்ந்தெடுக்க என்ன காரணம்? என கேட்டார்.
சாண்டியின் அருகாமையும், சுற்றி நிற்கும் மனிதர்களின் சலசலப்பில் சற்று முகம் சுளித்து நின்றவள் இந்த கேள்வி வந்ததும் சட்டேன நிமிர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்க்க ஏனோ அருகில் இருந்த அனைவரும் ஒரு அடி தானாக தள்ளி நின்றனர்.
அந்த பார்வை வீச்சில் சாண்டியுமே சற்று அதிர்ந்து போனான்.
“இது எனது தந்தையின் தொழில். அதனால் இதை தேர்ந்தெடுத்தேன்”.என அவள் மிடுக்காக பதில் கூற .
“மேடம் இது ரொம்ப கடினமான வேலை ....நீங்க எப்படி இதை சமாளிச்சிங்க” என மற்றொரு கேள்வி வர
“செய்யற வேலையை விரும்பி செஞ்சா எதுவுமே பெருசா தெரியாது” என்றாள்.
“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?” என இன்னொரு கேள்வி வர
“பிஎ ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்” என்றாள் சகானா.
ஆச்சரியத்தில் பலரின் கண்கள் விரிய சாண்டியோ இமைக்க மறந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
அதுவரை அவளின் பெருமைகளை பேசிக்கொண்டு இருந்தவர்கள் திடீரென அதில் ஒருவர் “உங்கள் நிறுவனத்தின் சிறப்பே எப்போது எந்த நேரத்தில் அழைத்தாலும் வந்து சர்வீஸ் செய்து தருவீங்கன்னு சொன்னாங்க.....அது எந்த மாதிரி சர்வீஸ்னு தெரிஞ்சுக்கலாமா?” என குதர்க்கமாக கேள்வி கேட்கவும்
கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் அருகில் இருந்த ஒரு சிலர் முகம் சுளிக்க
ஆனால் பலரும் இதற்கு அவளின் பதில் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பது போல் அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருக்க
ஒரு சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.
அத்தனை ஆண்களின் மத்தியில் நின்று இருந்தவள் சிறிதும் பதட்டம் இல்லாமல் மிகவும் சாதரணமாக முகத்தை வைத்துக் கொண்டு “அதை உங்கள் மோட்டார் வாகனத்தில் பழுது ஏற்படும்பொழுது நீங்கள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.அப்போது நாங்கள் எந்த விதமான சர்வீஸ் செய்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என பதிலளித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர .
பார்த்து கொண்டிருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை. அவர்கள் ஏதோ அவள் கோபமாக ,புரட்சிகரமாக பேசபோகிறாள் என எதிர்பார்த்து இருக்க அவளின் இந்த எதார்த்தமான பதிலில் சற்று ஆடித்தான் போனார்கள்.
ஆனால் அதற்கு பின் அவள் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்க வில்லை. வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள் சபரீஷை அலைபேசியில் அழைக்க அவனின் அலைபேசி அணைக்க பட்டிருந்தது. ஷிட் என்றபடி அதுவரை மனதில் அடக்கி இருந்த கோபத்தை அந்த அலைபேசியில் காட்டியபோது அது அவளை விட்டு தொலைவில் சென்று விழுந்தது.
அதற்குள் அவளின் அருகில் ஒரு கார் வந்து நின்று “மேடம் கிளம்பலாமா..” என கேட்க
அவளோ அப்போது இருக்கும் மனநிலையில் எதையும் கூறாமல் வேகமாக காரில் ஏறி அமர்ந்தவள். எதில் இருந்தோ ஒளிந்து கொள்பவள் போல் கண்களை இறுக மூடிகொண்டாள். அதில் நடந்தவை எல்லாம் படமாக ஓட சாண்டியின் அந்த சிரித்த முகம் அவள் கண்முன் வரவும் மனதில் ஒரு படபடப்பு வர சட்டென கண்களை திறந்தவள் அதற்கு பின் கண்களை மூடவில்லை.
அறைக்குள் வந்து படுத்தவளால் அங்கு நடந்தவை எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்பது போல் இருந்ததது.
அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என அவனுக்குள் கேட்டு கொண்டவன் மீண்டும் தன் கைகளை கில்லி பார்த்து ஆ வென கத்தி ஆமாம் இது உண்மைதான் என தனக்கு தானே சொல்லிக்கொண்டு அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருக்க
இரவு பன்னிரண்டு மணிக்கு பெங்களூரின் நடுங்கும் குளிரில் சால்வை போர்த்தி கொண்டு குறுகியபடி அவனை மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்தான் சுதர்சன்.
“அடகடவுளே மதியம் வரைக்கும் நல்லாதானே இருந்தான். இப்போ என்ன ஆச்சுன்னு தெரியலியே ..இப்படி நடுராத்திரி வரைக்கும் கோட்டான் மாதிரி முழிச்சுட்டு தனக்கு தானே பேசிட்டு இருக்கானே ...இவனை என்ன பண்றது” என புலம்பி கொண்டே உலாத்தி கொண்டிருந்த நண்பனை கை பிடித்து நிறுத்தியவன்
“டேய் டேய் இங்க பாரு ...என்னடா ஆச்சு உனக்கு ...பார்ட்டி முடிஞ்சு வந்து நல்லா தூங்கிட்டு இருக்க என்ன எழுப்பி இப்படி லான்ல கொண்டுவந்து உட்காரவச்சுட்டு நீ பாட்டுக்கு நடந்துகிட்டு இருக்க ....
டேய் சாண்டி நான் உங்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்” என தன் மீது அப்போதும் கவனம் இல்லாமல் இருப்பதை பார்த்து சுதர்சன் எரிச்சல் ஆக..
சாண்டிஈஈஈஈஈஈஈஈஈஈ என அவன் உச்ச ஸ்துதியில் கத்தவும்
அவனோ தனது நடையை நிறுத்தி மெதுவாக திரும்பி பார்த்தான்.
அவன் கண்களில் தெரிந்த கனலில் அதிர்ந்து போனான் சுதர்சன் .
“டேய் என்னனடா” என வேகமாக எழுந்து அவன் அருகில் வந்தான் சுதர்சன்.
சான்டியோ “என்னால இப்பவும் ஏத்துக்க முடியல மச்சி. முதன் முறையா ஒரு பெண் முன்னாடி நான் தோற்று நிற்க்கிறேன்” என அவன் சொல்லும்போதே அவன் உடல் விறைக்க ,கைகள் முறுக்கேற
“சாண்டி நீ என்ன பேசற ஒன்னும் புரியலை டா” என்றான்.
அவனோ “விருது வழங்கும் நிகழ்ச்சிய தாண்டா சொல்றேன். ஒரு சின்ன பொண்ணு எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வந்து இருக்காங்க .அவங்க முன்னாடி என்னை அவமான படுத்திட்டா” என சொல்லும் போதே கோபத்தில் அவன் முகம் ஜொலிக்க
“மறுபடியும் குழப்பிறானே” என்றவன் அவன் முகத்தை பார்க்க
“அதாண்டா அந்த திருப்பூர்காரி” என சொல்லும்போதே பற்களை நறநறவென கடித்தவன் “அவளை ...அவள ஏதாவது பண்ணனும்டா ..என்னை அவமான படுத்தினதுக்கு அவ கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும்” என்றான்.
“ஓ அந்த பொண்ணு சொல்றியா ..பாவண்டா ..சின்ன பொண்ணு.... எதோ தெரியாம பேசிடுச்சு ...அது பேசினத யாருமே கவனிக்கவும் இல்லை. அதுக்குள்ள அந்த பையன் வந்து சரி பண்ணிட்டான்ல.. விடுடா ...”என்றான்.
சான்டியோ அவனை முறைக்க
சுதர்சனோ அவன் அருகில் வந்து முகத்தை பார்த்தவன் “ நீ என்ன தண்ணி அடிச்சி இருக்கியா ?” என்றான்.
“டேய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன கேட்கிற ?என கோபத்தில் அவன் கழுதை பிடித்து நெரிக்க
“விட்றா ..விட்ரா என என அவன் கையை கழுத்தில் இருந்து விலக்கியவன் “பின்ன என்னடா ...இன்னைக்கு பார்ட்டில அந்த பொண்ணு கூடவே சுத்திகிட்டு இருந்த...நானே கேட்கணும்ன்னு நினச்சேன். இது என்ன புது அவதாரம் போலன்னு” என்றவன்
“ஆனாலும் மச்சான் உனக்குள்ள இப்படி ஒரு அம்பி இருப்பான்னு எனக்கே இப்பதான் தெரியும்” என சொல்லி சிரிக்க
சாண்டியோ கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன்
“எதிரிய பலம் கொண்டு மோதறத விட பணிவு கொண்டு ஜெயிக்கிறது தான் புத்திசாலித்தனம் . அத தான் அங்க செஞ்சேன்” என்றான்.
சுதர்சனோ அவன் சொல்வது புரியாமல் முழிக்க
சாண்டியோ அவன் தோள்களில் கை போட்டு தன் அருகில் அமர்த்தியவன்
“உனக்கு தெரியும் தானே...நான் எப்படி இருந்தேன்னு? என் வாழ்கையில என்ன நடந்ததுன்னு ...எந்த சூழ்நிலையில இந்த கம்பெனி என் கைக்கு வந்ததுன்னு..இந்த நிறுவனத்தோட சேர்ந்தது தான் என்னோட வளர்ச்சியும்.என்னோட கம்பெனி ஒரு இடத்தில கீழ இறங்கினாலும் நான் இறங்கின மாதிரிதான். நான் வேற என் நிறுவனம் வேற இல்லை.இப்போ வரை அது தான் இருந்தது..ஆனா...” என நிறுத்தியவன்
“சாண்டி என்னடா இப்படி பேசற” .. என சுதர்சன் ஆறுதலாக அவன் கைப்பற்ற
“நீ கேட்ட தான ...பார்ட்டில ஏன் அவ கூடவே இருந்தேன்னு....எல்லாம் காரணமாக தான்.அவ என்னை அவமான படுத்தினத அவளுக்கே திருப்பி கொடுக்க தான்” என்றான்.
“புரியலடா... என்றான்.
“நான் இருக்கிற தொழில்ல நான் மட்டும் தான் எல்லாமும்மாக இருக்கணும். வேற யார் இருந்தாலும் அவங்க அடையாளமாக நான் தான் இருக்கணும் என்றவன் இன்னும் புரியலையா ...லேசாக சிரித்து கொண்டே இப்போ போய் எல்லார்கிட்டயும் கேளு... காலையில இந்த பொண்ணு அப்படி சொல்லுச்சு. இப்போ இவர் கூட தான் இருக்குது. அவர் சொல்றத எல்லாம் கேட்குது. அப்போ எது உண்மை? ஒன்னுமே
புரியலைன்னு சொல்வாங்க என்றவன் அதான் எனக்கு வேணும்.அதற்காக தான் பார்ட்டில அப்படி நடந்துகிட்டேன்” என்றான்.
சுதர்சனோ “இதனால் நமக்கு என்னடா லாபம்?
“தொழில்ல லாபம்கிறது பணம் மட்டும் இல்லை. மரியாதை ,புகழ் இரண்டும் சேர்த்து தான். அத எப்பவும் நான் தவற விடமாட்டேன். நீ என்ன பண்ற நாள மதியத்துக்குள்ள சகானா சர்விஸ் சென்டர் பற்றின முழு விபரமும் எனக்கு வேணும்..தயார் பண்ணு .
சரிடா ...ஏற்பாடு பண்றேன் என்றான்..
“சரி சரி நேரமாச்சு..எனக்கு தூக்கம் வருது. நான் படுக்க போறேன்” என சொல்லி விட்டு அவன் செல்ல
அச்சோ என்னை விட்டுட்டு போகதடா ..பேய் வர நேரத்தில விட்டு போறியே ..நானும் வறேன்டா..” என கத்தியபடியே பின்னே ஓடினான் சுதர்சன்.
.
ஹோட்டலில் அனைவரிடமும் பேசிவிட்டு சபரீஷ் வர வெகுநேரமாகி விட்டது.
சகானா கண்டிப்பாக கோபத்தில் இருப்பாள் என நினைத்து கொண்டே
சகானாவின் அறை கதவை தட்டியவன்
வேகமாக கதவ திறக்கும்போதே சரி இன்னைக்கு சேதாராம் நிச்சயம் என்ற முடிவுடன் அவன் நிற்க
ஆனால் அவன் பார்த்ததோ அழுது முகம் சிவந்து கண்கள் வீங்கி நின்ற சகானாவை தான்.
அவனை பார்த்ததும் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட
சபரீஷ் இதை எதிர்பார்க்கவில்லை.
“அய்யோ சகானா.....” என வேகமாக அவளை இழுத்து கொண்டு அறைக்குள் சென்றவன்
“ஹே என்னாச்சு ....சொல்லுமா ..,, பிஸினெஸ் விஷியமா பேச கூபிட்ட்டாங்க. அதான் போய்ட்டேன்..
உனக்கு என்னாச்சு யாராவது ஏதாவது சொன்னாங்களா... சொல்லுமா..” என பதறி கேட்கவும்
அவளோ மீண்டும் தேம்பி அழ
சபரிஷ் பயந்து விட்டான்.
“ சகானா என்னாச்சு ? இப்போ சொல்றியா இல்லையா...” என அவன் கத்தவும்
அவளோ அதற்கு மேல் சத்தமாக அழுதவள் மனபாரம் தாங்காமல் அவன் தோல் சாய
சபரிஷ் உடல் நடுங்கியது . இது இரண்டாவது முறை இவள் அவன் தோள் சாய்வது.
அவன் மனமோ பதற “சகானா இங்க பாருமா ...இங்க என்னை பாரு” என அவன் குரலும் கமரியாது.
அவளோ அவன் கைகளை பசு தேடும் கன்றாய் இருக்க பற்றி இருக்க
சிறிது நேரம் அங்கு ஒரு அமைதி.
சபரிஷும் தன்னை கொஞ்சம் நிலை படுத்தி கொண்டு அவளை பார்த்தவன்
“சகானா இங்க என்னை பாரு...என்னை பாரும்மா ...என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குள்ள .... நான் செய்யறது எல்லாம் உன் நன்மைக்காக தான் உனக்கு தெரியுது தான ...அப்புறம் என்னாடா “ என பொறுமையாக கேட்கவும்
அவளோ “என்னால முடியல சபரி.... என்னால் முடியல” என மீண்டும் கதறி அழுதவள்
“நானும் மனுஷி தான ...எல்லாமே முடிஞ்சிடுச்சு . மறந்திட்டேன்...அழிஞ்சிடுச்சு அப்டின்னு தான் இவளோ நாள் நினைச்சிருந்தேன்.
ஆனா இப்போ இப்போ...” வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கி நிற்க
நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள்
அதில் தெரிந்த வலியில் சபரீஷ் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது.
அங்கு இருந்த சில வினாடி மௌனம் இருவருக்குமே கொடுமையானது. அந்த நிகழ்வு நடக்கும்போது அவனும் உடன் இருந்தான் தானே.
மண்ணாக இருந்தவளை இறுகிய சிலையாக மாற்றியது அந்த நிகழ்வு தானே.
எப்படி மறப்பார்கள். கலை வண்ணம் தீட்டிய கைகள் இன்றி கம்பியும் ,ஸ்பேனர் பிடிப்பதும்,
கனவுகள் நிறைந்த கண்கள் இன்று கனலை மட்டும் கக்குவதும்,
எல்லாம் யாரால் ? விடை தெரிந்த இருவரும் அதன் வலி தாளாமல் அமர்ந்திருக்க
முதலில் சுதாரித்தது என்னவோ சகானா தான்.
அன்றும் சரி இன்றும் சரி துன்பம் வரும்போது துவண்டு போவது சில நிமிடங்கள் மட்டுமே ..மீண்டும் துள்ளி எழுந்து விருட்சமாய் நிற்பதும் அவள் தான்.
நெருப்பில் எரியும் நீராக அவள்.
அணைக்கும் காற்றாக அவன்.
தூர் கொண்ட துரும்பு என
அவன் நினைத்திருக்க
சீர்கொண்டு நின்றாள் அவள்!!!!.
நிலவு தொடரும்..........