• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!(6)

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
chinnanjirunilave3-1682347808 1.jpg

அத்தியாயம் 6
திருப்பூர் நகரம் எப்போதும் போல்சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க அதற்கு ஈடு கொடுப்பது போல் சகானா சர்வீஸ் ஸ்டேஷன்ல வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது.அதை மேற்பார்வை பார்த்தபடி வந்த சகானா அங்கு பணியாளரிடம் வேலை வாங்கி கொண்டிருந்த ஒருவரை பார்த்து“மணி நான் சொன்ன வேலை எல்லாம் முடிச்சாச்சா ?வாடிக்கையாளர்கிட்ட இருந்து எந்த கம்ப்ளெயின்ட் வரகூடாது. அப்புறம் நம்ம புதுசா ஆரம்பிச்ச உன்னால் முடியும் பெண்ணே பயிற்சி பட்டறை எப்படி போய்கிட்டு இருக்கு ?எத்தனை பேர் பயிற்சிக்கு சேர்ந்து இருக்காங்க ? என கேட்டு கொண்டு இருக்கும்போதே

“மேடம் வேலை எல்லாம் சரியா தான் போய்கிட்டு இருக்கு. மத்தது சபரீஷ் சார்க்குதான் தெரியும்” என்றார்.

“சபரீஷ் எங்க?” என கேட்க

“இன்னும் வரலை மேடம்” என்றார்.

“அவர் வரலைனா நீங்க பார்க்க கூடாதா ? என்ன பொறுப்பில்லாம பதில் சொல்றிங்க” என கோபமாக கேட்க

“பார்த்து பார்த்து கொஞ்சம் மூச்சு விட்டு பேசு. இப்படி வரிசையா கேள்வி கேட்டா அவர் எப்படி பதில் சொல்வார்” என்றபடி அங்கு வந்தான் சபரீஷ்.

“வா சபரீஷ் .இதெல்லாம் நீ கேட்டு இருக்கணும் .நான் கேட்டுகிட்டு இருக்கேன்” என அவன் மேல் பாய

“எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன் .வேலை எல்லாம் சரியாதான் போய்கிட்டு இருக்கு. நான் நம்ம மாஸ் கார் டீலர் கிட்ட பேச போயிருந்தேன் .அதான் வர கொஞ்சம் தாமதம்” என விளக்கம் சொன்னான்.

“ஓ ஆமாம் போன வாரம் பேசிகிட்டு இருந்தோம் இல்லை. நீ பேசிட்டியா ..அவங்க என்ன சொன்னாங்க? ..ஓகே சொல்லிட்டாங்களா....”

“எல்லாம் ஓகே தான் என்றவன் ஆனா பேமென்ட் விஷயம் தான்” என இழுத்தவன்

“சரி மணி நீங்க போய் உங்க வேலை பாருங்க என்றவள் வா உள்ள போய் பேசலாம்” என தனது அலுவலக அறைக்கு சென்றாள்.

“ம்ம் இப்போ சொல்லு என்ன சொன்னாங்க”....

“அவங்க நாற்பது பெர்சென்ட் கேட்கிறாங்க” என்றான்.

“என்னது நாற்பதா”... என்றவள் “அதெல்லாம் முடியாது. இருபது பேசி முடிங்க” என்றாள். “எனது இலாபத்தில் இருந்து ஒரு பைசா கூட விட்டு கொடுக்க மாட்டேன்” என சொல்ல

“கொஞ்சோம் யோசிச்சு பதில் சொல்லாலாம் சகானா” என்றான்.

“இதில் யோசிக்க என்ன இருக்கு.எனக்கு பயன் இல்லாத எந்த விஷியமும் தேவையில்லை” என முடிவாக சொல்ல

பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன்

அவள் என்ன...? என கேட்க

“சரி உன் முடிவு தான்” என்றான்.

“அப்புறம் அந்த பயிற்சி பட்டறை இப்போ அவசியம் தானா?” என்றபடி அவள் முகம் பார்க்க

அவளோ “இதற்கு பதில் நான் உனக்கு முன்பே சொல்லிட்டேன்” என கூற

“அதான் நானும் கேட்கிறேன்.மாஸ் டீலர் எவ்ளோ பெரிய கம்பெனி தெரியுமா? அவங்க கிட்ட நம்ம பிசினஸ் டீல் வச்சுகிறதே பெருமை. அதற்கு அவ்ளோ கணக்கு பார்க்கிற.ஆனா இப்போ இந்த சோசியல் சர்வீஸ் வேலை எல்லாம் தேவையா ? இன்னும் நம்ம தொழில மற்ற நகரங்களுக்கு விரிவு படுத்தனும்.. கொஞ்சம் மெஷின்ஸ் எல்லாம் வாங்கணும். அதற்க்கு பணம் முக்கியம் சகானா” என்றான்.

“ம்ம் எனக்கும் புரியுது சபரி. சீக்கிரம் முன்னேறனும்தான் .உங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டவங்க முன்னாடி தலை நிமிர்ந்து என்ன இல்லைன்னு நான் கேட்கணும்” என்றவள் முகத்தில் கண்களில் தெரிந்த அந்த வெறி அன்று போல் இன்றும் அவனை அதிரவைத்தது.

அதற்குள் அவள் அலைபேசி அழைக்க எடுத்தவள் “என்ன வண்டி சார்?எந்த இடம் ? கண்டிப்பா ஆள் அனுப்பி வைக்கிறேன் சார். இன்னும் இருபது நிமிடத்தில் அங்க இருப்பாங்க” என்றவள்

சபரி இதை பற்றி அப்புறம் பேசிக்கலாம். நம்ம சம்பத் நகர் பக்கத்தில் ஒரு கார் நின்றிடுச்சு .வெளியூர் ஆட்கள் . நீ உடனே ஆள் அனுப்பி வண்டிய சரிபார்க்க சொல்லு” என சொல்லவும்

“ம்ம் சரி சரி நான் பார்த்துகிறேன். அம்மா போன் பண்ணாங்க. உன்னை சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க” என்றான்.

“அப்படியா காலையில ஏதும் சொல்லலையே” என்றவள் எதற்கு என கேட்கும்போதே

அவன் முகத்தில் தெரிந்த சிறுநகை அவளை கோபம் கொள்ள செய்ய

“டேய் உண்மைய சொல்லு . உனக்கு தெரியாம எதுவும் எங்க வீட்ல நடக்காது. அதுக்குதானா...” என அவள் முறைக்க

அவனோ வேகமாக “எனக்கு எதுவும் தெரியாது. நீ அந்த கஸ்டமர் பார்க்க சொன்னில .இதோ நானே போறேன்” என வேகமாக அந்த இடத்தி விட்டு நகர்ந்தான்.இங்கு வீட்டில் “அம்மா நான் பல முறை உங்ககிட்ட சொல்லிட்டேன்.என்னை கேட்காம இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணாதீங்கன்னு .உங்களுக்கு புரியுதா இல்லையா? நீங்களும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா ? என இரவு நேரத்தில் அந்த அமைதியில் அவள் குரல் உயர்ந்து ஒலிக்க

அவள் அன்னையோ தலைகுனிந்து நிற்க

அவளது சித்தப்பாவோ “நல்ல குடும்பம்.நல்ல பையன் .நம்ம தொழில்ல இருக்கான், அவங்களா கேட்டு வந்தாங்க அதான்மா நாங்க சரின்னு சொன்னோம்” என்றார்.

ஆம் சகானாவிற்கு பெண் பார்க்கும் படலம் தான் அப்போது முடிந்திருந்தது.

“உங்களுக்குமா சித்தப்பா என்னோட நிலைமை புரியலை. நான் தான் எனக்கு திருமணமே வேண்டாம்னு சொல்லி இருக்கேன் தான அப்புறம் எதற்கு இந்த வீண் முயற்சி” என்றாள்..

கல்யாணம் பண்ணாம இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்க போற .உன் வயசு பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு. ஆனா நீ இன்னும் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்க..எங்களுக்கு ஆசை இருக்காதா ? சின்னவளும் படிச்சு முடிக்க போறா..அவளும் வேலைக்கு போக போறா”..... என சகுந்தலா சொல்லவும்

“அம்மா இப்போ நான் இப்படி இருக்கிறதால உங்களுக்கு என்ன பிரச்சனை?” என அவள் கோபமாக கேட்க

சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.

“எங்கனால்தான உனக்கு இப்படி ஒரு நிலைமை சகானா...” என சொல்லும்போதே அவள் சித்தியின் குரல் கமற

“எதற்கும் தகுத்தி இல்லாதவனா நான் போயிட்டேன்” என அவள் சித்தப்பாவும் சொல்ல

“எங்களால் தான உன்னோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. அந்த மனுஷன் மட்டும் நல்லா இருந்தார்ன்னா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை வந்து இருக்குமா? எப்படி எல்லாம் உன்னை வளர்த்தி கடைசியில இப்படி ஒரு நிலமைக்கு நம்மலை கொண்டு வந்து விட்டுட்டாறே இந்த மனுஷன். எங்க நான் சொன்னத கேட்டார். என் மகள் என் மகள்ன்னு ஆகயத்தில கோட்டை கட்டினார். இப்போ என்ன ஆச்சு ? இப்போ அவரும் படுத்த படுக்கையில் கஷ்டப்பட்டு , உன்னையும் கஷ்டபடுத்திகிட்டு இருக்கோம்” என சகுந்தலா சொல்லி அழவும்

“அம்மா என்னம்மா நீ ? என்ன அண்ணி நீங்க .” என வீட்டில் உள்ள அனைவரும் அவரை சூழ்ந்து கொள்ள

அவருக்கோ துக்கம் தாங்காமல் அழுகை வந்து கொண்டே இருக்க

சகானாவிற்க்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள்

அவள் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர் கையை பிடித்தவள் “அம்மா இப்போ எதற்கு இவ்ளோ வருத்தம். என்னையும் நீங்க புரிஞ்சிக்கணும் .சரி இப்போ என்ன கல்யாணத்திற்கு நான் சம்மதிக்கணும் அவ்ளோதான என்றவள் நீங்க என்ன செய்யதாலும் எனக்கு சம்மதம் தான்” என்றாள்.

உடனே நிமிர்ந்து மகளின் முகத்தை அவர் பார்க்க

அவளோ தன் மன உணர்வுகளை மறைத்து கொண்டு “என் கல்யாணம் தான் இந்த குடும்பத்திற்கு சந்தோசம் கொடுக்கும்னு நீங்க சொன்னா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன். நீங்க அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்றவள் வேகமாக அந்த இடத்தி விட்டு நகர்ந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.“என்னக்கா இப்படி சொல்லிட்டு போறா...” என கவலையுடன் அவள் சித்தி கேட்க“அவ சின்ன பொண்ணு...அவளுக்கு என்ன தெரியும். ரொம்ப கஷ்டப்பட்டுட்டா அதனால பயப்பட்றா. கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரி ஆகிடும் என்றவர் வாங்க நம்ம மாப்பிள்ளை வீட்டுக்கு தகவல் சொல்லிடலாம்” என்றார்,

அறைக்குள் சென்றவளோ கடந்து போனவைகளை நினைத்து அழுது கரைந்து கொண்டு இருந்தாள். எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்?என்று புலம்பியவளின் மனதில் பழைய நினைவுகள் பொங்கி எழும்ப எப்போதும் போல் அணைபோடாமல் நினைவுகளுள் கரைய தொடங்கினாள்.விழிநீரில் நினைவுகளை

கரைந்திருக்கும்மென நினைத்திருக்க

நான் அறியா என் உணர்வில்

நீ நிறைந்து நிற்க

சிந்தை கலங்கி மதி பிறழ்ந்து

நின்றேனடா !!!!!!!!!


நிலவு தொடரும் .......

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கும்


உங்கள் லஷ்மிரவி
 
Top