• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -11

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
178
201
43
Salem
மற்றவர்கள் சொல்வதை செய்யும் பொம்மையாய் இரவுகளில் கணவனின் கைகளில் உயிரில்லாத உடலாய் அவனின் கைப்பாவையாய் இருந்தவளை காளியாய் உருமாற்றிய பெருமை குமரேசனையே சாரும்.

வீட்டு வேலைகள் அத்தனையும் அவளின் தலைமேல் சுமத்தினாள் கனகம்.. அத்தனை வேலையாட்கள் இருந்தாலும் அவர்களை வேறு வேலை பார்க்கச் செல்பவள் வீட்டு வேலைகள் அத்தனையும் வெண்மதியிடம் ஒப்படைத்து விட்டாள்.. ஏன் அவளின் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் கூட ஒரு வேலை மாத்திரை மட்டும் போட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.

வீட்டு வேலை கூட அவள் மனதையும் உடலையும் அத்தனை பாதிக்கவில்லை.. பெண்ணாய் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் வீட்டு வேலை கடினம் இல்லை தான்.. ஆனால் முழு மனதுடன் செய்வதற்கும் கட்டாயத்தின் பேரில் செய்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா.. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கட்டாயமும் கடமையாகவிடும்.. அது தான் வெண்மதியும் அந்த வேலைகளை கடமையாக ஏற்றக் கொண்டு விட்டாள்.. ஆனால் ஒன்றைத் தவிர


ஆம் அவளின் கணவனான குமரேசன் அவளிடம் நாளும் நடக்கும் முறை தான்.. அவளை உயிர் உணர்வுள்ள பெண்ணாய் காணாமல் அவனின் விருப்பத்திற்கு ஆட்டிப் படைக்கும் பொம்மையாய் ஆக்கினான்.

கண்ட கண்ட புத்தகத்தை படித்து விட்டு அதே போல அவளை செய்ய வேண்டும் என வற்புறுத்தினான்.. அவளிடமும் அதையெல்லாம் செய்ய செய்ய அவள் வலியில் துடித்தாள்.. அவள் துடிப்பதை கண்டு ரசித்தான்.. அவன் அரக்கனா ராட்சசனா என ஒவ்வொரு நாள் இரவும் அவள் பயத்தில் துடித்தாள் தவித்தாள்.. இந்த நரகத்திலிருந்து அவளால் வெளி வர முடியவில்லை.. அதை விட அவன் சைக்கோ போல் அவளிடம் இப்படி இரு அப்படி செய் என தாம்பத்யத்தின் மேலே வெறுப்பை உண்டாக்கினான்.. அதையெல்லாம் விட அவளின் பெண்மையினை அவன் நினைத்த நேரம் எல்லாம் அவனின் விருப்பத்திற்கு கட்டுப்படுத்தினான்.. அதை நினைத்தாலே அவளுக்கு குமட்டும்.. ஆனால் அவனுக்கு அதையெல்லாம் சுத்தமாய் கவலையில்லை.

அவளை வெறும் சுகம் கொடுக்கும் உடலாய் மட்டும் தான் பார்த்தான்.. ஒவ்வொரு நாளும் அவனின் கைப்பாவையாய் பொம்மையாய் இருந்தவள் காளியாய் மாறும் நாளும் வந்தது.. அதுவே குமரேசனின் உயிருக்கும் உலை வைத்த நாளாய் அமைந்தது.

கண்ட கண்ட சினிமாக்களையும் புத்தகத்தையும் படித்து பார்த்து தை போல மனைவியிடம் செய்து பார்த்தவனுக்கு விபரீதமாய் ஒரு ஆசையும் வந்தது. அந்த ஆசை தான் அவனின் உயிரை குடித்தது.

வீட்டில் வேலைக்காரியாய் இருக்கும் மனைவியை அன்று தான் பார்த்தவன் போல வீட்டிற்கு வந்தவன்,

" ஏய் வெண்மதி நாம ரெண்டு நாளைக்கு வெளியே போறோம்.. போய் அதுக்கு தேவையான துணிமணியெல்லாம் எடுத்து வை போ.." கட்டளையிட்டு அவளை அனுப்பி வைத்தவன் தனது தாயை பார்க்க சென்றான்.

" அவளை எங்கடா வெளியே கூட்டிட்டு போற.. அப்புறம் யாரு இந்த வீட்டு வேலையெல்லாம் செய்வா.. " என்றாள் கவலையுடன்.

அவள் கவலை அவளுக்கு.. பின்னே சம்பளமில்லாத வேலைக்காரியை யாரால் அவ்வளவு சுலபமாய் விட முடியும்.

"ப்ச்சு யம்மோய் ஒரு ரெண்டு நாளைக்கு பாத்துக்க மாட்டியா நீ.. வேற யாரையாவது வச்சி செஞ்சிக்க.. அவ ரெண்டு நாளையில வந்துருவா.. இந்த முறை அவளை வச்சி புதுசா ஒன்னு டிரை பன்னனும் மா.. அது தான் அவளை கூட்டிட்டு போறேன்.." கோனலான இழிப்புடன் சொன்னான்.


"அப்படியா யா ஏதோ நீ சந்தோஷமா இருந்தா போதும் யா.. கூட்டிட்டு போ அந்த கழுதையை.. இங்கே நான் பாத்துக்கிறேன் யா.." ஒரு பெண்ணாய் இருந்தும் மகனின் இழிகுணத்துக்கு ஒத்து ஊதினாள் கனகம்.

வெட்கமே இல்லாமல் லஜ்ஜையில்லாமல் மகனிடம் ஒரு தாய் சொல்லக் கூடாததையும் கேட்க கூடாததையும் இங்கே ஒரு தாயும் மகனும் சுலபமாய் பேசுகிறார்கள்.. மகனின் தவறான போக்குக்கு ஒரு தாயும் துணை புரிகிறாள் இங்கே.

ஆனால் கனகம் அவனுக்கு சம்மதித்தது அவனின் உயிரை எடுக்கத்தான் என்பதை அவள் அறியவில்லை.

இங்கே தனது அறையில் உடல் நடுங்க துணிகளை பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள் வெண்மதி.. அவளுக்கு ஏனோ அவனுடன் தனியாக செல்வதில் சுத்தமாய் விருப்பமில்லை. அவளின் மனதிற்கு ஏதோ தவறாய் நடப்பதாகவே பட்டது.. ஆனால் அவள் சொல்லி அதை கேட்கும் ஆளில்லையே அவன்.. அதனால் நடப்பதை தடுக்க முடியாமல் மனம் ஊஞ்சலாட அவளின் மனமோ எங்கோ இருந்தது.. அவளின் இடையில் ஊர்ந்த கரங்களில் தன் நினைவு வந்தவளுக்கு அந்த கரங்களை தடுக்க முடியாமல் அருவருப்பில் கூனி குறுகி அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.

"என்ன யோசனை வெண்மதி.. எங்கடா போறோம்னா.. நாம் போற இடம் அப்படி அருமையா இருக்கும்.. அதுமட்டுமில்லாம இந்த தடவை ஒரு புதுவிதமா டிரை பண்ணலாம்னு இருக்கேன்.. அதுக்கு கண்டிப்பா வீடு சரிவராது.. அது தான் வெளியே பிளான் பண்ணிருக்கேன்.. சீக்கிரம் கிளம்பு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு.." என்று வஞசத்துடன் சொன்னவன் வார்த்தைகள் பெணாணவளுக்கு புரியவில்லை.. ஆனால் இந்த முறையும் அவன் தன் உடலை பிய்த்து தான் திங்க போகிறான் என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் அவனின் எண்ணம் மட்டும் அறிந்தாள் அவளின் உயிர் அதே இடத்தில் மடிந்து விடும் போல.

அவன் சொன்னதிற்கு இணங்க எல்லாம் எடுத்து வைத்து விட்டு கிளம்பியவள் கீழே வந்தாள்.. அவளை கண்ட கனகத்திற்கு வயிறு எரிந்தது.. அவளை வேலையில் போட்டு வறுத்து எடுத்தாலும் அவளின் அழகு சுத்தமாய் குறையவில்லை.

பெரிதாய் அவள் அலங்காரம் செய்யவில்லை.. ஆனால் இயற்கை அழகு கடவுள் அவளுக்கு அதிகமாய் கொடுத்து விட்டான் போலும்.

தலைக்கு தண்ணீர் ஊற்றியவள் முடியை காயவைத்து இருபக்கமும் முடியை எடுத்து நடுவே ஒரு கேட்ச் கிளிப்பை போட்டு தனது நீண்ட கூந்தலை தளர்வாக பிண்ணி அதில் அழகாய் இரண்டு பக்கமும் தொங்கவிட்டபடி பூச்சரத்தை வைத்திருந்தாள்.. முகத்திற்கு பவுடர் கூட பூசாமல் நெற்றியில் ஒரு பொட்டும் உச்சியில் குங்குமம் வைத்து கோவில் வீற்றிருக்கும் கற்பகிரக சிலையாய் இருந்தாள்.

அதை பார்த்து தான் கனகத்திற்கு வயிறு காந்தியது.. எந்த விதமான அலங்கார சாதனமும் இல்லாமல் எப்படி இவள் இவ்வளவு அழகாய் இருக்கிறாள் என்ற பொறாமை.. அது எல்லா பெண்களுக்கும் இருக்கும் இயல்பான பொறாமை தான்.. எனினும் இவள் பெண்ணில்லையே.. மனித உருவில் அடங்கியிருக்கும் ராட்சசியல்லவா.. இந்த கோவில் சிலையைத் தான் அவளின் அன்பு மகன் அழிக்க காத்திருக்கிறான்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த குமரேசன் வெண்மதியின் அழகில் அவளையே வைத்துக் கண் வாங்காமல் காம கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லோரிடமும் விடைபெற்று இருவரும் கிளம்பினார்கள்.. மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த கனகத்திற்கு தெரியவில்லை தன் மகனை இனி கண்ணால் கூட பார்க்கப் போவதில்லை என்று.. ஏன் தன் மனைவியுடன் சநாதோஷமாக செல்லும் குமரேசனும் அறியவில்லை இத்துடன் தன் வாழ்வு முடிய போகிறதென்று.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கருத்துக்கள் ஸ்டார்ஸ் வழங்கிய பட்டூஸ்க்கு நன்றி