• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -20

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தன் யோசனையில் உழன்றவளின் பின் மண்டை பலமாக வலிக்க தன் கையை கொண்டு அழுத்தி பிடித்தவள் மேலும் பயங்கரமாக வலிக்க அப்படியே படுக்கையில் சாய்ந்து விட்டாள் தலை பாரம் தாளாமல்.. அவளின் நினைவில் ஏதோதோ நினைவு தோன்றி அவளை அலைகழித்தது.. அந்த நினைவுகளின் தாக்கத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள்.. இங்கே இவள் இப்படி இருக்கிறாள் எனத் தெரியாமலே ஆதவனும் வளவனும் வெளியே சென்று விட்டனர்.

இங்கே தன் அறையில் யாருமில்லாத அனாதையாய் மயங்கியிருந்தவளை சுற்றி காற்று மெல்லியதாக அசைந்தது. அந்த நண்பகல் வேலையிலே அவளருகில் ஒரு வெண்மை நிற உருவம் அவளின் தலைமாட்டில் அமர்ந்து அவளின் தலையை தடவி கொடுத்தது.

அந்த மென்மையான வருடலில் என்ன உணர்ந்தாலோ பெண்ணவள் சுகமாய் உறங்கி போனாள்.

அவளருகில் அமர்ந்திருந்த உருவத்தின் கண்ணில் கண்ணீர் வழிந்தது..

உனக்கு ஏன்டா இந்த நிலமை.. எவ்வளவோ முயற்சி பண்ணியும் உன்ன காப்பாத்த முடியாத பாவியா ஆயிட்டோமே டா.. இத்தனை நாளா நடந்தது எல்லாமே போகட்டும்.. ஆனா இனி நீ நல்லாருப்பே டா.. நாங்க துணையா இருப்போம்.. ஆதவனுக்கும் உனக்கும் எப்பவும் நாங்க துணையா இருப்போம் டா.. இத்தனை நாளா இந்த வீட்ல எங்களால நுழையாத படிக்கு அந்த கனகம் செஞ்சிட்டா.. ஆனா எப்போ ஆதவன் வந்து பூஜையறை திறந்துச்சோ அப்பவே எங்களுக்குண்டான தடைகளும் போயிடுச்சி டா.. பட்டு மா உன்னை இப்படி பட்ட மரமா பாக்கவா நாங்க தவம் இருந்தோம்..

இல்லை டா.. உனக்கு நடந்த கொடுமை விதியா இருந்தா ஏத்துக்கலாம்.. ஆனா சதியா இருந்தா அதை முறியடிக்க தான் பாக்கனும் டா.. உனக்கு நடந்த சதி இனி வெட்ட வெளிச்சமாகும்.. நம்ம ஊர் எல்லையம்மன் உனக்கு துணையா இருப்பா டா.. இனி எங்களோட ஆசிர்வாதமும் துணையும் உனக்கு இருக்கும் டா.. இனி அந்த கனகத்துக்கு எங்களால முடிஞ்ச தண்டனை கொடுப்போம் டா.. தூங்கு தாயி நிம்மதியா தூங்கு.." என்று மென்மையாய் அவளின் தலையை வருடி விட்டு பேசியது அந்த உருவம்.

வெளி வேலையாக சென்ற ஆதவனும் வளவனும் மதிய உணவுக்கு வீட்டிற்கு வர அங்கே கனகமும் சாதனந்தமும் யாரையும் எதிர்பார்க்காமல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களை கண்டும் காணாமல் தன் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் சாப்பிட கீழே வரும் சமயம் அங்கே வளவன் மட்டும் அமர்ந்திருந்தான்.

அவனருகில் வந்து அமர்ந்ததும், "என்னடா உங்க அப்பா அம்மா போயிட்டாங்களா.." என்றான் பார்வையால் வீட்டை அலசியபடி.

"ம்ம் போயிட்டாங்க அண்ணா.. அது தான் நீங்க வந்துட்டீங்களே.. இதுக்கு மேல அவங்க இருப்பாங்களா என்ன.." என்று அவனை கவனித்தவன் அவன் பார்வை போகும் திசையை கண்டவன் அங்கிருந்த படியே,

"வள்ளி அக்கா அண்ணிய கூட்டிட்டு வாங்க சாப்பாடு பரிமாற.." என்றான் சிரித்தபடி.

"இல்லைங்க தம்பி பாப்பா அப்போ ரூம்க்கு போனது தான் இன்னும் வெளியே வரலை தம்பி.. நானும் போய் பார்த்தேன் நல்லா தூங்குது தம்பி.. நீங்க சாப்பிடுங்க நான் பரிமாறுறேன்.." என்று விட்டு இருவருக்கும் பரிமாறினாள்.

வேறு எதுவும் சொல்லாமல் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.. சாப்பாட்டின் முதல் வாயை வாயின் அருகே கொண்டு வந்த ஆதவனின் மனம் ஏனோ இப்பொழுதே வெண்மதியை காண வேண்டும் என அடம்பிடித்தது. ஏனோ அவனுக்கு சாப்பிட தோன்றவில்லை.. பக்கத்தில் அவள் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

வள்ளியை பார்த்தவன், "வள்ளி போய் அவளை எழுப்பி கூட்டிட்டு வா.. சாப்பிட்டு போய் தூங்கட்டும்.." என்றான் கட்டளையாய்.

அவனின குரலில் இருந்த கட்டளையை மீற முடியாமல் அவள் வெண்மதியின் அறைக்கு சென்றாள். அங்கே போன சிறிது நேரத்திலேயே வள்ளியின் ஐயா என்ற சத்தம் இருவரையும் வெண்மதியின் அறை நோக்கி ஓட வைத்தது.

அங்கே படுக்கையில் படுத்திருந்தாள் வெண்மதி.. அவளின் அருகே கையை பிசைந்தபடி வள்ளி பதட்டத்துடன் வாயிலையே பார்த்திருந்தாள்.. இவர்கள் வரவும்,

"அய்யா நானும் எவ்வளவோ தூரம் எழுப்புறேன்.. ஆனா பாப்பா கண் முழிக்கமாட்டேங்குது அய்யா.." என்றாள் பதட்டத்துடன்.

இருவரும் பதட்டத்துடன் அவளருகில் சென்றனர்.. வளவன் அவளருகில் சென்று அண்ணி அண்ணி என்று அழைத்தான்.. ஆனால் இமை திறக்க வேண்டியவளோ சிறிதும் தன் இமையை அசைத்தபாடு தான் இல்லை.. அதற்கு மேலும் தாங்காத ஆதவன், "வள்ளி நீ போய் தண்ணி கொண்டு வா.. " என்று அவளை அனுப்பி விட்டு அவள் கீழே சென்றதும் ,

"வளவா இந்த கதவை சாத்திட்டு வா.." கட்டளையிட்டான்.


அவனும் தமையன் சொல் மாறாத தம்பியாக வேகமாக கதவை சாத்திட்டான். வெண்மதியின் அருகில் அமர்ந்த ஆதவன் அவளை தூக்கி தன் மடியில் போட்டு,

"பட்டூ மா இங்கே பாரு டா.. கண்ணை திறடா.. பட்டூ மா இங்கே பாரு.." அவனின் குரலுக்கும் செவி சாய்க்காமல் இருந்தவளை கண்டவனின் மனம் எங்கும் பதட்டம் சூழ,

"வளவா சீக்கிரம் ஹாஸ்பிடல் போகனும்.. போய் கார் எடு.. நான் இவளை தூக்கிட்டு வரேன்.." என்று அவனை அனுப்பி விட்டு அவளை தன் கைகளில் அள்ளி எடுத்துக் கொண்டான்.

வண்டியில் ஏறியதில் இருந்து ஆதவனின் மனம் ஏனோ தவித்து துடித்தது.. இவளை இந்நிலையில் கானவா என்னை இன்னும் உயிருடன் வைத்திருக்கிறாய் இறைவா என்று இறைவனை மனதால் நிந்தித்தான்.. இன்னும் எத்தனை இன்னல்களை தாங்க வேண்டுமோ.. கடவுளே எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனோதிடத்தை தந்து விடு போதும்.. இவளின் புன்னகையில் தான் என் உயிர் உள்ளது.. அதை பறித்து விடாதே பரமேஸ்வரா என்று தன் நெஞ்சத்தவனை வேண்டினான் யாசகமாக..

வேகமாக ஹாஸ்பிடல் சென்றவர்களை இரு விழிகளும் ஒரு காரும் தொடர்ந்ததை இருந்த பதட்டத்தில் இருவரும் அறியவில்லை.

அதனால் வரும் பின்விளைவுகளையும் அறியவில்லை.. அதனால் அவர்களுக்கு ஏற்பட போவது நன்மையா..? இல்லை தீமையா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே.


இங்கே அதற்குள்ளாகவே ஊரையே தன் வீட்டில் அழைத்திருந்தாள் தன் விஷ வார்த்தைகள் தாங்கிய குரலால்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.