• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி - 24

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
ஆளரவமில்லா அந்த காட்டு பங்களாவில் யாரையும் எதிர்பார்க்காமல் கூப்பிடாமல் வந்த கனகத்தின் பின் தலையில் யாரோ கட்டையால் அடித்தனர்.

அது யாரென்று பார்க்கும் முன்னரே கண் சொருக மயங்கி விழுந்தாள்.. பின் மண்டையிலும் அடி பலமாய் விழுந்ததால் தலையிலிருந்து ரத்தம் வடிந்தது.

யாரோ அலரும் சத்தம் கேட்டு வெளியே வந்தான் அந்த வீட்டின் உரிமையாளன்.

அவளை ரத்த வெள்ளத்தில் பார்த்ததும், "ஏய் நீ யாரு.. பரமா எங்கே.. பரமா ஏய் பரமா.." என்று காட்டு கத்தலாய் கத்தினான்.

அவனின் குரல் கேட்டு அந்த பரமன் என்பவன் ஆஜானுபாகுவான தோற்றுவித்துடன் ஓடி வந்தான்.

"அய்யா என்னங்க யா.. ஏன் இப்படி சத்தம் போடுறீங்க.." என்று கேள்வியுடன் வந்தான்.


"ஏய் பரமா யாருடா இவன்.. யார அடிச்சிருக்கான்னு பாரு டா.. போட முதல்ல போய் டாக்டரை வர சொல்லு.. இந்த இடியட் முதல்ல வேலையை விட்டு அனுப்பு டா.." என்று கட்டளையிட்டவன் கனகத்தை இன்னொருவனின் துணையுடன் தூக்கி வந்து உள்ளே இருந்த கட்டிலில் போட்டான்.

அங்கே வேலைக்கு இருந்த ஒரு பெண்ணை வரவைத்து கனகத்தின் பின் தலையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து வைத்தான்.

அதற்குள்ளாகவே இங்கே பரமன் என்பவன் டாக்டரிடம் தகவல் சொல்லிவிட்டு கனகத்தை அடித்தவனை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் சென்று மறைந்தான்.

"டேய் கஜா ஏன்டா இப்படி பண்ண.. அது யாருன்னு உனக்கு தெரியும் இல்லை.. அப்புறம் ஏன்டா அடிச்சே.. இப்போ அந்த ஆளு உன்னை வேலையை விட்டு தூக்க சொல்றான் பாத்தியா.." என்று அவனின் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டான்.

"அது எனக்கு தெரியும் பரமா.. ஆனா இந்த பொம்பளைய இப்படியே விட எனக்கு மனசு இல்லை.. இப்போ என்ன அவனை சமாளிக்கனும் அவ்வளவு தானே.. நீ போ நா அவனை சமாளிச்சிக்குறேன்.." என்று அவனை அனுப்ப முனைந்தான்.

"அது இல்லை கஜா நீ இங்கே வந்த நோக்கமே வேற.. ஆனா இப்போ இது மாதிரி நடந்து அவனுக்கு சந்தேகம் வந்துச்சின்னா அப்புறம் நீ எதுக்காக இங்கே வந்தியோ அது நடக்காமையே போயிடுமேன்னு ஒரு பயம் தான் கஜா.." என்றான் உண்மையான வருத்தத்துடன்.

"பயப்படாத பரமா நான் இங்கே வந்த நோக்கம் கண்டிப்பா நிறைவேறும்.. அப்படி நட்கலைன்னா என் உயிர் இந்த மண்ணுலேயே போகுமே ஓழிய என் நோக்கம் நிறைவேறாம நான் இங்கிருந்து போக மாட்டேன்.. இப்போ நீ போ.. நாம ரொம்ப நேரம் இங்கிருக்க கூடாது.. கோ பாஸ்ட்.." என்று அவனை முன்னே அனுப்பியவன் சிறிது நேரம் கழித்து பின்னே சென்றான்.

இங்கே கனகத்திற்கு முழிப்பு வருவதற்குள்ளாகவே டாக்டர் வந்து அவளுக்கு செக் செய்து பின் மண்டையில் வழிந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு கட்டினார்.. பின்பு ஒரு ஊசி போட்டு விட்டு தான் செய்த வேலைக்கு கூலி வாங்கி கொண்டு சென்று விட்டார்.

கனகத்தை அடித்தவன் அந்த உரிமையாளன் முன்பு வந்து நின்றான்.. அவனை பார்த்ததும் கொதித்து போனவன்,

" டேய் நீ இன்னும் போகலையா.. ஏன்டா இன்னுமும் நிக்கற.. ஏய் பரமா இவனை அனுப்ப சொன்னேனா இல்லையா.." என்று காட்டு கத்தலாய் கத்தினான்.

அவன் முன்னே வந்த பரமன்,

"அண்ணே அவ உங்களை ஒரு தடவை பாத்துட்டு போறேன்னு சொன்னான் அண்ணே.. அது தான்.." என்று அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் பாதியிலேயே முடித்தான்.

"சொல்லுடா அப்படி என்ன சொல்ல வந்தே.." என்றான் கட்டளையாய்.

"அண்ணே நான் இந்த வேலைக்கு புதுசு அண்ணே.. எனக்கு இவங்க யாருன்னு தெரியலை.. அதான் புதுசா வரவும் அடிச்சிப்புட்டேன் அண்ணே.. என்ன மன்னிச்சிருங்க அண்ணே.. எனக்கு இந்த வேலையும் போச்சுதுன்னா எம் பொஞ்சாதி புள்ளைகள தெருவுல தான் அண்ணே விடனும்.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க அண்ணே.. என் வீட்டுல அடுப்பு எரிய உதவி பண்ணுங்க அண்ணே.." என்று காலில் விழாத குறையாய் கெஞ்சினான்.

அவனின் கெஞ்சலில் பரமனே ஒரு நிமிடம் அதிசயித்து தான் போனான்.. என்னடா இவன் ஜகஜால கில்லாடியா இருப்பான் போலேயே.. உடம்பை இப்படி திம்சு கட்டை மாறி வச்சிகிட்டு எப்படி காரியம் ஆகணும்னு கெஞ்சறான்.. அடேய் கஜா சீக்கிரமே நீ வந்த வேலை முடிஞ்சிரும் டா.. என்று மனதினுள் எண்ணிக் கொண்டான்.

அவன் கெஞ்சவும் அந்த உரிமையாளனுக்கும் மனம் இறங்கியதோ என்னவோ,

"சரி என்னவோ பொஞ்சாதி பிள்ளைன்னு கெஞ்சற அதனால உன்னை சும்மா உடறேன்.. போ போய் பரமன் என்ன வேலை சொல்றானோ அதை செய்.. டேய் பரமா நீ இவனை கூட்டிட்டு போ.. நான் இந்தம்மாவ பாத்துகிடறேன்.. ம்ம் போங்க.." என்று பெரிய மனது பண்ணி அவனை மன்னித்தது போல அவர்கள் இருவரையும் அனுப்பியவன் கனகத்தின் அருகில் சென்று அமர்ந்தான்.


சிறிது நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்து கண் விழித்த கனகம் எதிரே இருந்தவனை பார்த்து,

"என்னைய அடிச்சது யாரு.. ஏன் என்னை அவனுங்களுக்கு தெரியாதா.. ஏன் டா மருது என்னை பத்தி நீ எதுவும் அவன்கிட்ட சொல்லலையா.." என்றாள் பல நாள் தெரிந்த உறவு போல.

அய்யோ சின்னாத்தா ஏன் இப்படி பொங்கற.. ஆமா நீ ஏன் இந்த நேரத்துக்கு வந்த.. நான் உன்கிட்ட என்ன சொல்லிருக்கேன்.. அந்த ஆதவன் வந்ததுக்கு அப்புறம் நீ என்னை பாக்க வரக்கூடாதுன்னு சொல்லிவிட்டேன் இல்லை.. இப்போ ஏன் வந்தே.." என்றான் கனகத்தால் மருது என்று அழைக்கப்பட்ட மருததுரை.

"அது இல்லைடா மருது அந்த ஆதவன் பையன் இன்னைக்கு என்னை எப்படியெல்லாம் அவமானபடுத்திட்டான் தெரியுமா.. அவனுக்கு இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தாம இருக்கான் டா.. அவனை இன்னும் கதற வைக்கனும் அதே மாதிரி அந்த வெண்மதியும் துடிக்கனும் டா மருது.." என இன்று நடந்த அத்தனையும் கூறியவளின் கண்களில் அத்தனை வஞ்சம் மின்னியது.


"கண்டிப்பா சின்னாத்தா கவலையே படாத அந்த வெண்மதிக்கும் ஆதவனுக்கும் என் கையால தான் கருமாதி.. அவன் குடும்பத்தையே அழிச்ச என்னை இன்னமும் அவனால கண்டுபிடிக்க முடியல.. ஏதோ இப்போ என்னை கண்டுபிடிக்க போறாத சொல்லிட்டு திரியறானா.. அவனால எப்பவும் என்னை கண்டுபிடிக்க முடியாது.. அடேய் ஆதவா உன் உசுரையும் பறிக்க கூடிய எமன் நான் தாண்டா.. உன் உசுரையும் பறிப்பேன் நீங்க கட்டி காப்பாத்துற பொக்கீஷத்தையும் பறிக்கிறவன் நான் தாண்டா.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ" என கொக்கரித்தான்.

ஆனால் அவன் அறியவில்லை.. இந்த குள்ளநரியை சாய்க்க சிங்கம் ஆரம்பித்துவிட்டது என்று.

அவன் கூறியதை எல்லாம் வெளியே ஜன்னலுக்கு அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான் பரமனால் கஜா என்றழைக்கப்பட்டவன்.

மருத துரை சொன்னதை கேட்டதும் கஜாவின் இதழ்களில் ஒரு மர்ம சிரிப்பு இருந்தது.



இங்கே குகையில் பூஜையில் இருந்த மருதநாயகத்தின் முன் இருந்த விளக்கு தானாகவே அணைந்து போனது.. அதை நினைத்து மனம் வேதனையடைந்த மருத நாயகம் நாகராஜனை அழைத்தார்.

ஆனால் அவரை காண அவசரமாய் வந்த நாகராஜனின் முகம் பதட்டத்தை பூசியிருந்தது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த பாகத்துக்கு கமெண்ட் பண்ணிட்டு போங்க பட்டூஸ்