அந்தி மயங்கிய மாலை பொழுதில் பூஜை செய்து கொண்டிருந்தார் மருதநாயகம்.. அந்த சிவனுக்கு முன்னே இருந்த விளக்கு நன்றாக எரிந்து கொண்டிருந்த தீபம் திடிரென காற்றில் அசைந்து அணைந்தது.. அதை கண்ட மருதநாயகத்தின் மனம் படபடத்தது.
பரமேஸ்வரா என்ன இது எதுக்கான செய்தி.. நன்றாக எரிந்த தீபம் அணைந்தது எதுக்காக.. வேணாம் பரமேஸ்வரா இன்னும் எதையும் தாங்கும் சக்தி இந்த கிழவனுக்கு இல்லை யா.. என் பேரனுக்கு இன்னும் என்ன சோதனையை வைத்திருக்கிறாய்.. இதில் என் பேத்தியும் அல்லவா திண்டாடுகிறாள்.. அவர்களுக்கு துணை செய் பரமேஸ்வரா.." என்று கடவுளிடம் வேண்டியவர் தன் மகனான நாகராஜனை தேடினார்.
அவரின் தேடலுக்கு உரியவரோ அங்கே பதட்டத்துடன் தந்தையின் முன்னே வந்தார்.
அவரின் பதட்டத்தை கண்டவரின் கண்கள் யோசனையை தத்தெடுத்தது.
"என்னாச்சி நாகா ஏன் இவ்ளோ பதட்டம்.." என்றார் கேள்வியுடன்.
"அய்யா அவன் வந்துட்டான் யா.. நம்ம பேரன் பேத்தி மருத்துவமனைக்கு போகும் போது அவனை நான் பார்த்தேன் யா.. நானும் நம்ம சித்தர்கிட்ட சொல்லி விபூதி குங்குமம் கொடுக்க சொல்லிட்டேன் யா.. ஆனா அவனடோ முகத்துல அதே பழைய வஞ்சம் இருக்குதய்யா.. இன்னைக்கு அந்த சித்தன் துணை இருந்ததால நம்ம பசங்களை காப்பாத்தியாச்சு.. ஆனா அவனை நினைச்சா இன்னமும் உடம்பெல்லாம் நடுங்குதய்யா..
நாம நம்ம குடும்பத்தை இழந்துட்டோம் யா.. அதுக்கு அவனே காரணமாகி போனான்.. நாம இருக்கறது அவனுக்கு தெரியாது அய்யா.. அந்த தகடை அவன் படிக்குற அன்னைக்கு நாம குடும்பம் பாதுக்காத்த பொக்கீஷமும் அதோட தெய்வ சங்கல்பமும் போயிடுமே அய்யா.. இது நாள் வரைக்கும் அவனை அதை படிக்க விடாம பண்ணியாச்சு.. ஆனா இப்போ அவனால நம்ம பசங்களுக்கு எதுவும் நடக்க கூடாது அய்யா.. எம் மனசு பதறது அய்யா.." என்றார் கண் கலங்கியபடி.
"நாகா என்ன இது சின்ன பிள்ளை மாறி.. அந்த பரமேஸ்வரனோட துணை நமக்கிருக்குய்யா.. கவலைபடாத ராசா.. வா வந்து அந்த பித்தனை கும்பிடு.. மனம் உருகி கும்பிடு ஐயா.. எல்லாம் நல்லதா நடக்கும்.." என்று தன் மகனை அழைத்துக் கொண்டு பரமேஸ்வரனின் முன் நின்றார்.
இருவரும் கை கூப்பி மனதோரம் அந்த கடவுளை நினைத்து வணங்கினர். தன் மகனை கண்ட மருதநாயகத்தின் கண்கள் கண்ணீர் பொழிந்தது.
மீண்டும் அந்த கடவுளை தொழுதவர்,
'அய்யா சித்து செய்யும் பித்தா என்னய்யா இது விளக்கு அணைஞ்சதேன்னு மகனை அழைச்சேன்.. ஆனா அவனும் இப்படி கலங்கி போய் வந்திருக்கானே.. நான் என்னய்யா செய்ய போறேன்.. எனக்கு பலத்தை கொடு அய்யா.. என் வம்சத்தை காக்கும் குலசாமியா உன்னை தான் ஐயா நினைக்குறேன்.. இப்போ என் வம்சத்தை காக்கும் பொறுப்பும் உனக்கு தான் ஐயா.. இன்னுமும் உன்னை உண்மையா நம்புறேன் ஐயா..' என்று மனதோரம் வேண்டி கொண்டார்.
இருவரும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கும் இதே சமயம் இங்கே ஆதவன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.
எப்படி யோசித்தும் அவனுக்கு எதுவும் இன்னும் சரியாய் புலப்படவில்லை.. அவனும் நடந்ததை ஓரளவு அறிவான்..
வெண்மதியை ஹாஸ்பிடலுக்கு எடுத்து சென்ற போது அவளுக்காக காத்திருந்த அந்த நொடிகளில் உணர்ந்தான் தங்களை யாரோ உற்றுப் பார்ப்பதை போல்.
அங்கே சுற்றும் முற்றும் பார்த்தான்.. ஆனால் அவர்களுக்கு தெரிந்தவர் யாரும் அங்கே வந்திருக்கவில்லை.
ஆனால் யாரோ தன்னை விழிகளால் தழுவலை உணர்ந்திருந்தான்.. ஆனால் யார் அது என்று தான் அவனுக்கு சரியாக புரியவில்லை.
அங்கே அவர்களை யாரோ உற்று கவனித்தை அங்கே வந்த சித்தர் உணர்த்தி விட்டார்.. ஆனால் அது யார்..? என்ற கேள்வி தான் அவனின் கண் முன்னே பெரிதாய் எழுந்தது.
'முதல்ல அது யாருன்னு தெரிஞ்சிக்கனும்.. அதுக்கு தாத்தா சித்தப்பாவை பார்த்தே ஆகனும்.. பட்டு மா என்ன பன்றான்னு பாத்துட்டு நாம அவங்களை பாக்க போக வேண்டியது தான்..' என்று சிந்தித்தவன் வேகமாய் வெண்மதியின் அறைக்குள்ளே வந்தான்.
அங்கே கண்களில் கண்ணீர் தடம் காய்ந்திருக்க முகத்தில் ஏதோ சிந்தனையுடன் தூங்கியிருந்தாள்.
அவளின் காய்ந்த கண்ணீர் தடத்தினை கண்டவன் மனம் வலித்தது.
"நீ கலங்கி இப்படி உன்னை நிக்க வைக்க கூடிய சூழ்நிலை வரும்னு கொஞ்சமும் நாங்க யோசிக்கலை டா.. ஆனா உன்னை இப்படியே விடப் போறதும் இல்லை.. உன்னோட கண்ணீருக்கும் கவலைக்கும் நிச்சயம் நான் மாற்றுவேன் டா பட்டூ மா.." என்று அவளின் தலையை மென்மையாய் வருடிவிட்டு வேகமாக தான் வந்த சுவடும் தெரியாமல் வெளியேறினான்.
இவன் வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் வளவன் தன் அறையிலிருந்து வெளி வந்தான். தன் தமையன் வெளியேறுவதை கண்டவன் வேகமாக அவனருகில் வந்தவன்,
"அண்ணே என்னாச்சி எங்கே இன்னேரத்துக்கு போறீங்க.." என்றான் பதட்டத்துடன்.
"வளவா எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு.. நான் போயிட்டு வர்றேன்..நீ பட்டு வ கொஞ்சம் பாத்துக்கோ.." என்று அவனிடம் சொல்லிவிட்டு போனவன் மனம் ஏதோ உந்தி தள்ள மீண்டும் வளவனின் அருகில் வந்து,
"வளவா மதி பத்திரம்.. இந்தா இதை உன் கையில வச்சிக்கோ.." என்று ஒரு விபூதி பொட்டலத்தை கொடுத்தவன்
"உனக்கு இக்கட்டான நேரம் வரும் போது இது உனக்கு உதவியா இருக்கும் வளவா.." என்று அவனின் மற்றொரு கையில் ஒரு கூர்மையான கத்தியை தந்துவிட்டு சென்றான்.
போகும் தன் தமையனை தடுக்கும் வழி அறியாது அவன் கொடுத்து சென்ற வேலை அவனை தடுத்தி நிறுத்தியது.
ஆனால் போகும் ஆதவன் அறியவில்லை அவன் மீண்டும் வரும் சமயம் அவனின் பட்டூ மா அங்கிருக்க போவதில்லை என்று.
இங்கே தன் தாத்தா சித்தப்பாவை தேடி காட்டை தாண்டி மலையை அடைந்தவன் அங்கிருந்த குகைக்குள் சென்றான்.. அவன் செல்லும் பொழுது அந்த குகையில் வாயில் தடங்கள் தானாய் அவனுக்கு வழிகாட்டியது.. குகைக்கு அருகில் சென்றவன் உள்ளே இருந்து வந்த பேச்சுக் குரல் செவிகளில் விழுந்த வார்த்தைகளில் சிலையாய் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டான் ஆதவன்.
தன் காதுகளில் விழுந்த அத்தனையும் உண்மையா என்ற எதையும் தீர ஆலோசிக்க முடியாமல் அப்படியே எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ அவனின் சித்தப்பாவின்,
"ஏனய்யா ஆதவா இங்கேயே நின்னுட்ட.." குரலில் நினைவு வந்தான்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இந்த கதை பிடித்திருந்தால் உங்கள் பொன்னான கருத்துக்களை பதிவிடவும் பட்டூஸ்..