பசுமை நிறைந்த வளம் கொழித்து செல்வம் செழித்து மக்களிடம் ஒற்றுமையும் சகோதர நட்பும் ஓங்கி வளர்ந்தது இடையக்கோட்டை சமஸ்தானம்.
அதன் அருகே இருந்த நாட்டின் மன்னன் தான் துருவேந்தன். என்ன தான் அவனின் சமஸ்தானமும் செழிப்புடனும் வளமுடனும் இருந்தாலும் பொறாமை அதிகம் கொண்ட துருவேந்தனுக்கு அண்டை சமஸ்தானமும் தனக்கு கீழே வர வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
அதற்கு முக்கிய காரணமாக விளங்கியது இடையக்கோட்டை சமஸ்தானத்தின் கோயிலில் உள்ள பொக்கீஷ பேழை. அந்த காலத்திலேயே பாரத தேசத்தை தவிர்த்து பிர தேசங்களில் இருந்து அரிய வகை வைரங்கள் முத்து பவளங்கள் என ஆங்கிலேயர்கள் அதிகமான முறையில் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்தனர். அதில் கோவில்களுக்கு நன்கொடையாகவும் சில வைர முத்து பவள ஆபரணங்களை கொடுத்தனர்.
அதை பாதுக்காக்கும் பொறுப்பு பிலவேந்திரனிடம் வந்தது.
அதுமட்டுமன்றி அப்போதைய பாண்டிய மன்னன் ஜானகி தேவியை மணம் முடித்து கொடுக்கும் போது அவர்களின் பரம்பரை வீரவாளை பிலவேந்திரனின் வீரத்தை மெச்சி பரிசாக கொடுத்தார் ஜானகியின் தந்தை.
அந்த பரம்பரை வீர வாளின் கைப்பிடியில் விலைமதிப்பில்லாத வைரங்கள் பொறுத்துப்பட்டு அது பார்ப்பவரின் கண்களுக்கு சாதாரண கல்லைப் போல தெரிந்தது.. அதிலிருந்த அந்த வைரங்களை அறிந்தவர்கள் என்றால் ஜானகியின் தந்தையும் அவரின் அமைச்சரும் மட்டுமே அறிவர். ஏன் இதை பிலவேந்திரனிடமும் கூட அவர்கள் சொல்லவில்லை. ஆனால் அதை அவர் அறியும் நேரம் அவருக்கும் அவரின் துணைவியும் உயிர் பிரியும் என்பதை அறிந்திருந்தால் பரிசாக கொடுத்திருக்க மாட்டாரோ ஜானகியின் தந்தை.
ஆனால் நடப்பதை முன்கூட்டியே தெரிந்து விட்டால் சாதாரண மனிதன் கடவுளாகி விடமாட்டார்களா என்ன.. எத்தனை பணம் படைத்தவர் என்றாலும் சின்ன ஆசைகள் கொண்ட மானிட பிறவி தானே..
அடுத்து நடப்பதை தெரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை நரகமாகிவிடுமல்லவா..? தன் மாமனார் கொடுத்த பரிசுகளை பெற்றுக் கொண்ட பிலவேந்திரன் தன் சமஸ்தானத்தையும் அதில் வாழும் மக்களையும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்.
அன்று குடும்பத்துடன் சிவன் ஆலயத்திற்கு சென்ற பிலவேந்திரனை துருவேந்தன் சந்திக்க நேர்ந்தது.. அந்த ஒரு சம்பவம் தான் துருவேந்தன் பிலவேந்திரனை சாய்க்க காரணமாகியது.
"அத்தான் இன்னும் என்ன பன்றீங்க.. குழந்தைங்க கிளம்பிட்டாங்க.. ஆனா நீங்க இந்த சமஸ்தானத்தோட ராஜா இவ்ளோ மெதுவாக கிளம்புவது நியாயமா மன்னா.." என்றார் புன்னைகை சிந்தியபடி ஜானகி தேவி.
தன் மனைவியின் வதனத்தை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பிலவேந்திரனின் பார்வையில் நாணம் கொண்ட பெண்மை இமைகுடையை தாழ்த்தியது.
பிலவேந்திரனுக்கு எப்பொழுதும் ஒரு பெருமை உண்டு தனக்கு வாய்த்த தன் மனைவியை பற்றி.. ஜானகி தேவி மாநிற தேகம் கொண்டு நீள கூந்தலில் மலர் சூடி வட்ட முகத்தில் பிறைநிழவாய் பொட்டிட்டு நெற்றியில் செஞ்சாந்து திலகமிட்டு கருவறையில் இருக்கும் அம்பாளாய் காட்சியளிக்கும் பெண்ணவளை காதல் கொண்டு பார்த்தார் பிலவேந்திரன்.
"அத்தான் என்ன பார்வை இது.. வெளியே நமக்காக குழந்தைகள் காத்திருக்கிறார்கள் நாம் செல்ல வேண்டும் மன்னா.." என்றார் நாணம் கொண்டு.
"போகலாம் தேவியாரே.. தங்களின் கண்களில் இருந்த புன்னகை வதனத்தில் வந்து அழகை கூட்டுகிறதே அது எப்படி தேவி.." என்றார் இப்பொழுதே தன் மனைவியின் அழகின் காரணம் தெரிந்து கொள்ள.
போதும் அத்தான் தங்களின் புகழாரம்.. இதை பற்றிய ஆராய்ச்சியை நாம் அரண்மனைக்கு திரும்ப வந்து செய்துக் கொள்வோம்.. இப்பொழுது நாமெல்லாம் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.. தங்களுக்கு தெரியுமல்லவா ஐயர் வரும் வரை அம்மாவாசை காத்திருக்காது என்பது..
"இப்பொழுது நாம் கடவுளை காக்க வைக்கிறோம் அத்தான்.. விரைவாக வாருங்கள்.." என்று அங்கிருந்து வேகமாய் நகர்ந்தவரை பிலவேந்திரன் மீண்டும் அவரின் கையை பிடித்துக் கொண்டவர்,
"தேவியாரே தாங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்.. ஆனால் தாங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள் போல.. தங்களின் கருவறைக்குள் என் மகன் உள்ளான் என்பதை.. ஆதலால் தாங்கள் சற்று மெல்லமாகவே செல்லுங்கள்.." என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே கூடத்திற்கு சென்றார்.
அங்கே தாவணி அணிந்த பெண்ணொருத்தி,
"அண்ணியாரே தாங்கள் இன்னும் மருந்து உட்கொள்ளவில்லை.. என் மருமகனை காக்கும் பொறுப்பு எனக்கு தான் உள்ளது.. முதலில் இதை தாங்கள் அருந்துங்கள்.." என்று ஒரு குவளையில் ஜானகி தினமும் உட்கொள்ளும் அருந்தும் மூலிகை மருந்து இருந்தது.
புன்னகையுடன் அதை வாங்கி அருந்தியவர், "கோதை எங்கே தர்மாவை காணவில்லை.. ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று அவனிடம் கூறினாயல்லவா மகளே.." என்றார் விழிகளால் நாலாபுறமும் தேடியபடி.
ஆம் அண்ணி தமையனிடம் சூர்ய உதயத்தின் போதே கூறிவிட்டேன்.. சற்று முன்பு வரை இங்கே தான் இருந்தார்.. தாங்கள் இங்கே அமருங்கள் நான் அவரை அழைத்து வருகிறேன்.." அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு தன் இளைய தமையனை தேடி சென்றாள் கோதை.
சிறிது நேரத்தில் அங்கே வந்த தர்மேந்திரன்,
"அண்ணியாரே தாங்களுக்கு தாமரை பிடிக்கும் அல்லவா.. நான் அதை தங்களுக்காக தாமரை குளத்திலிருந்து பறித்து வந்துள்ளேன்.." முகமெல்லாம் புன்னகை சிந்தியபடி அங்கே தாமரை மலருடன் வந்தார் தர்மா.
அவனின் தோற்றத்தை கண்ட ஜானகி, "அச்சோ தர்மா என்னவாயிற்று.. ஏன் இப்படி நடந்து போய் வந்துள்ளாய்.. கோதை வேகமாக அந்த மேனி துடைக்கும் துணியை எடுத்து வா.." என்று பரபரப்பாக கூப்பிட்டார்.
" அண்ணி தாங்கள் பதட்டம் கொள்ள தேவையில்லை நான் போய் வேறு உடை அணிந்து வருகிறேன்.." என்று வேகமாய் தன் அறைக்கு சென்று விட்டான்.
அவன் போகவும் இவர்கள் இருவரையும் கவனித்தபடி வந்த பிலவேந்திரன்,
"ஏன் தேவியாரே இன்னேரம் கல்யாணம் செய்திருந்தாள் அவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகயிருப்பான்.. ஆனால் தாங்களோ அவனை குழந்தையாய் பாவிக்கிறீர்கள்.." என்றார் சிரித்தபடி.
"அப்படி செல்லாதீர்கள் அத்தான்.. ஒரு தாய்க்கு தன் மகன் எத்தனை வளர்ந்தாலும் அவளுக்கு அவன் குழந்தை தான்.. அது போல இவர்கள் இருவரும் தான் எனக்கு மூத்த மகவுகள்.. அதன் பின்பு தான் என் வயிற்றில் இருக்கும் என் மகன்.." என்று கர்வமாய் சொன்ன தன் மனைவியை பெருமை பொங்க காதலுடன் பார்த்தார்.
இங்கு தன் அரண்மனையில் வெளியே கிளம்பும் நேரம் துருவேந்தன் எதிரே அவனின் தங்கை வந்தாள்.
அவளை கண்டதும் அவனின் முகத்தில் ஒரு அருவருப்பு வந்து ஒட்டிக் கொண்டது.. அவளை அப்படி பார்த்தவன் மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.
அதன் காரணம் தெரிந்தவர்கள் அவனின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தனர்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..