சந்திராவும் ஒரு ஆடவனும் நெருங்கி இருந்ததை துருவேந்தனின் ஆட்களில் ஒருவன் பார்த்து அவனிடம் கூறிவிட்டான்.
பார்த்ததை பார்த்தது போல் கூறினாள் கூட எதுவும் நடந்தேறாது போல.. ஆனால் நம் மக்களிடம் ஒரு பழக்கம் உள்ளது.. எந்த ஒரு விடயத்தையும் நடந்ததை போல் அப்படியே கூற மாட்டார்கள்.. அதற்கு கண் காது மூக்கு ஒட்ட வைத்து சொன்னால் தான் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும் போல்.
அப்படித்தான் எதேர்ச்சியாக நடந்த ஒரு விடயத்தை திட்டமிட்டு நடந்தது போல் பார்த்தவன் கூறி விட்டான்.. அதன் விளைவு அன்று சந்திராவிற்கு உண்ண உணவு கொடுக்கப்படவில்லை.. அவள் உண்ண அமரும் நேரம் அங்கே வந்த துருவேந்தன்,
"சந்திரா இன்னைக்கு எங்கே போன.." என்று கோபத்தை கண்களில் தேக்கி வைத்துக் கேட்டான்.
அவனின் முகத்தை பார்த்தவள் நடுங்கிய உடலுடன்,
"தமையனே நான் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு தான் போனேன்.. வேற எங்கேயும் போகவில்லை.." என்றாள் நடுங்கிய குரலில்.
அவள் நடுங்கிய குரல் ஆணவனுக்கு திமிரை கொடுத்தது.
நியாயமான எந்த ஒரு ஆடவனுக்கும் இந்த இடத்தில் மனம் வலித்திருக்கும்.. தன் தங்கை தன்னை கண்டு பயம் கொள்கிறாள் என்றாள் அவளை அப்படி நடத்தியதற்காக அந்த ஆடவன் தான் அசிங்க பட வேண்டும்.
ஆனால் இங்கே அவனோ அதை தன் வெற்றியாக நினைத்தான்.
அவள் கூறியதை கேட்டவன், "சரி கோவில்ல யாரை பார்க்க போன.." என்றான் மீண்டும்.
அவன் கேட்கும் கேள்வி அவளுக்கு சுத்தமாய் புரியவில்லை.. ஏதோ மொழி தெரியாத இடத்தில் இருப்பது போல் முழித்தாள்.
" இல்லை தமையனே யாரையும் பாக்கலை.. ஆலயத்திற்கு அம்மனை தரிசிக்க தான் சென்றேன்.." என்றாள் மீண்டும் நடுங்கிய குரலில்.
" அம்மனை தரிசிக்க சென்றாயா..? இல்லை ஆடவனை சந்திக்க சென்றாயா..?" என்றான் கோபமாக.
தன் தமையனின் கோபத்தை கண்டு பெண்ணவளின் கால்கள் தள்ளாடியது.. இது என்ன தமையன் இப்படி சொல்கிறாரே என்று எண்ணியவள் பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ அவளை மட்டம் தட்டுவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் இது தான் சரியான நேரம் என்பதை போல அத்தனை வேலையாட்கள் முன்னிலையிலும் அரண்மனையின் ஆட்கள் முன்னிலையிலும் அவளை நிற்க வைத்து கேள்வி கேட்டான்.
"அய்யோ தமையனே என்ன வார்த்தை இது நான் தங்களின் தமக்கையானவள்.. நம் வம்ச பெருமையை குலைக்கும் செயலை நான் என்றும் செய்ய மாட்டேன் என்று தாங்கள் அறியாதததா..?" என்று கண்ணீருடன் தன்னை நிருபிக்க முயன்றாள் பெண்ணவள்.
ஆனால் அவளை அவன் நம்ப வேண்டுமே.. பெண்ணவளின் மேல் தீராத வஞ்சத்தை கொண்டிருப்பவன்
எப்படி அவள் கூறும் உண்மையை நம்புவான்.
"உன்னை அறிந்ததால் தான் அமைதியாக பேசி கொண்டிருக்கிறேன் சந்திரமதி.. இல்லை என் விசாரனையே வேறு மாதிரி இருக்கும் என்பதை நீ மறந்து விடக் கூடாது.. ஆகட்டும் இனி ஒரு முறை இது போல் ஒரு நிகழ்வு நடக்கக் கூடாது.. அதை உன் கவனத்தில் கொள்.. இன்று நடந்த சம்பவத்திற்கும் அதை என்னிடம் மறைக்க முயன்றதற்கும் இன்று இரவு உன் உணவை நீ துறக்க வேண்டும்.. தாயே இவள் இன்று இரவு உணவை உண்ணக் கூடாது.. இது தங்களின் கடமை.." தாயையும் தன் திட்டத்திற்கு துணை வைத்தான்.
அவன் கூறிவிட்டு சென்ற வார்த்தை பெண்ணவளை மனதால் வதைத்தது.
அவளுக்கு உணவு இல்லையென்ற வருத்தம் கூட இல்லை.. ஆனால் எத்தனை கூறியும் தன் தமையன் தன்னை நம்பவில்லையே.. இத்தனை பேரின் முன்னும் தன்னை நிறுத்தி கேள்வி கேட்டு விட்டாரே என்று அவள் மனதில் ஆறா ரணமாய் நிலைத்து விட்டது.
அதையெல்லாம் விட அவர் அத்தனை கூறும் பொழுதும் தன் தாய் தந்தை எதுவும் மறுத்து கூறவில்லையே என்று மாறா வேதனை கொண்டவள் மனதில் வலி வேதனை கொண்டவள் அவர்களின் முன்னே சென்று நின்றாள்.
ஆனால் பெண்ணவள் அறியாதது அங்கு இன்னும் மனதால் அடிவாங்கி வருவாள் என்று.
"அன்னையே தந்தையே வணங்குகிறேன்.." என்று அவர்கள் இருவரின் பாதத்தையும் பணிந்தாள்.
ஆனால் பெற்றவர்கள் இருவரும் அவளின் முகத்தை தான் பார்த்தனர் ஏன் இங்கு வந்தாய் என்று கேள்வி தாங்கியதாய் இருந்தது.
அதைக் கண்ட பெண் மனம் மேலும் அடிவாங்கியது.
"தந்தையே இது என்ன யாரோ போல் என்னை பார்க்கீறிர்கள் இருவரும்.. நான் தங்களின் புதல்வி.. என்னை பெற்றவர்கள் தாங்கள்.. ஆனால் என்னை வெளியாள் போல் பார்ப்பது அபத்தமாக உள்ளது.. என்னை வளர்த்தது நீங்கள் தானே.. என்னை இப்படி சந்தேகிக்க காரணம் என்ன அன்னையே.
ஏன் அன்னையே தமையன் கூறும் போதும் எனக்காக ஆதரவாக இருவருமே பேசாமல் நின்றீர்கள்.. நான் என்ன தவறிழைத்தேன் என்று இப்படி என்னை தண்டிக்கீறிர்கள்.. இந்த அரண்மனையில் பிறந்தது என் குற்றமா..
ஏன் ஒரு குடிலில் பிறந்த சாதாரண பெண் வாழும் வாழ்வை கூட இளவரசியாய் பிறந்து நான் வாழவில்லையே.. என்னை நீங்கள் வெறுக்க காரணம் என்ன.. ஏன் என் தமையன் என்னை இப்படி சந்தேகிக்கிறார்.. சொல்லுங்கள் தந்தையே நான் என்ன தவறிழைத்தேன்.. சொல்லுங்கள் அன்னையே.." என்று இருவரின் கால்களையும் கட்டி பிடித்து கதறினாள் பெண்ணவள்.
அவளின் அந்த அழுகை கண்டு கல் கூட கறையும் போல.. ஆனால் மானிடர்களோ அவள் கேட்ட அனைத்திற்கும் ஒரு வார்த்தையும் பதில் கூறாது மௌனியாய் நின்றனர்.
"அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள்.. ஏன் என்றால் அவர்களுக்கு உன்னை பிடிக்காது.." என்று அவளிடம் சொல்லி கொண்டு வந்தது வேறு யாருமல்ல. அவளின் அருமை தமையனே தான்.
அவனின் குரல் கேட்டு பதறி எழுந்தவள், "தமையனே.." என்று ஏதோ சொல்ல வந்தவளை நிறுத்துமாறு கைகட்டி கூறியவன்,
"இங்கே ஏன் வந்தாய் மீண்டும் இவர்களின் உயிரை குடிக்க வந்தாயா.. ஏன் இப்படி ராட்சசியாய் இந்த வம்சத்தில் வந்து பிறந்தாய்.. நீ பெண் தானா..? இல்லை உனக்குள் பேய் உள்ளதா..? இல்லை சித்தம் கலங்கி உள்ளதா.." என்று அவளை யோசிக்க கூட விடாமல் கேள்வியால் அவளை துளைத்தான்.
அவன் கூறிய மற்ற எதுவும் பெண்ணவளுக்கு புரியவில்லை.. ஆனால் பெற்றவர்களின் உயிரை குடிக்கும் அளவிற்கா நான் அவர்களிடம் இருந்துள்ளேன் என்பதை தான் அவளால் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளின் அமைதியை பார்த்த துருவேந்தன் , " என்ன அப்படி சிந்தையில் உள்ளாய் சந்திரா.. நீ அப்படி என்ன செய்தாய் என்றா.. அதை நான் கூறவா..? உன்னை பெண் பிள்ளை என்று வீட்டில் உள்ளவர்கள் அத்தனை செல்லமாய் உன்னை வளர்த்தார்கள்.. ஆனால் நீயோ பிறவியிலேயே இந்த சமஸ்தானத்தின் புகழை குழி தோண்டி புதைக்க பிறந்தவள் என்பதை நாங்கள் அறியவில்லை.. ஆம் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் உன் ஜோதிடத்தை நம் அரண்மனை ஜோசியர் பார்த்தார்.. அதில் தான் தெரிந்தது நீ வளர்ந்து மணம் புரிந்து செல்லும் போது இந்த சமஸ்தானத்திற்கு களங்கத்தை சுமத்தி செல்வாய் என்று.. அது மட்டுமல்லாமல் நம் தாய் தந்தையின் உயிரையும் எடுத்துச் செல்வாய் என்று கூறினார்.. அன்றே இவர்கள் உன்னை வெறுத்தவர்கள் தான்.. நான் தான் இவர்களை சமாதானம் செய்து உன்னை இங்கே தங்க வைத்துள்ளேன். நீ மணம் புரிந்து செல்லும் வரை இங்கே நான் சொல்கின்றபடி இரு.. அது தான் உனக்கும் இந்த சமஸ்தானத்திற்கும் நல்லது.." என்று கிட்டத்தட்ட அவளை மிரட்டி விட்டு தான் சென்றான்.
அவன் கூறியதை எல்லாம் கேட்டவள் அப்படியே சிலையாய் சமைந்து விட்டாள் பெண்ணவள்.
அவளுக்கு பெரிய வலி மனதை கீறியது.. ஒரு ஜாதகத்திற்காக பத்து மாதம் சுமந்து பெற்ற பெண்ணை வெறுப்பார்களா..? இவர்களின் வளர்ப்பில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா..? அதிர்ச்சி குறையாத முகத்துடன் இருவரையும் திரும்பி பார்த்தாள்.
அவள் தங்களை கண்டதும் இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.
உயிரற்ற உடலாய் தன்னறைக்குள் சென்று தன்னை மேலும் சிறைப்படுத்திக் கொண்டாள் பெண்ணவள்.
ஆனால் அவள் அறியாதது இதற்கெல்லாம் காரணம் ஒரு குள்ளநரி என்று.. அதை அறிந்து கொள்ளும் நேரம் அனைத்தும் இழந்து நிற்கதியாய் நிற்கும் நிலைக்கு ஆளாகப் போகிறாள் என்பது.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.
இந்த கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.. கமெண்ட் பண்ணுங்க.. காயின்ஸ் கொடுங்க பட்டூஸ்.