• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 32

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
ஒரு ஜோதிடமா தன் வாழ்வை நிர்னயித்திருக்கிறது.. அதனால் தன்னை தன் பெற்றவர்களும் தன் தமையனும் தன்னை வெறுக்கின்றனர்.. அவர்கள் உதிரத்தில் வந்தவள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா..? அவர்களின் வளர்ப்பா தவறாய் போகும்..? என்ன நினைத்தும் தன் தமையன் கூறிய செய்தியை பெண்ணவளால் நம்ப முடியவில்லை.

இத்தனை நாட்களில் ஏதோ ஒரு விடயத்தில் நாம் என்ன செய்த தவறுக்காகத் தான் தன் தமையன் தன் மேல் கோபம் கொண்டுள்ளனர் என்று எண்ணியவளின் நம்பிக்கையில் நீ பிறந்ததே பெரும் இழுக்கு என்று கூறும் இவர்களிடம் வேறு எதுவும் பேசாமல் மேலும் தனக்குள் தனிமையை ஏற்படுத்திக் கொண்டு தன்னைத் தானே சிறையில் வைத்து அதில் ஆயுள் கைதியாய் நினைத்துக் கொண்டாள்.

முன்பாவது வேலைக்காரர்களிடம் தன்மையாக பேசுபவள் இப்பொழுதெல்லாம் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவள் முன்பு போல் தன் எதிரில் வராமலிருப்பதே போதும் என்ற எண்ணத்தில் துருவேந்தனும் அவளை பற்றி பெரிதாய் கண்டு கொள்ளவில்லை.. அவனுக்கு அவளை முடக்கி விட்ட மகிழ்ச்சி மனம் நிறைந்து இருந்தது.

அவளின் பெற்றவர்களும் இதை கண்டும் காணாமல் மகனிடமே சமஸ்தானத்தின் அனைத்து பொறுப்புக்களையும் கொடுத்து விட்டு ஒதுங்கி கொண்டனர்.

அதன் பின்பு அவள் தனிமையிலே தன் வாழ்வை நடத்தினாள் பெண்ணவள்.. அங்கே வேலை செய்பவர்கள் கூட அவளின் மேல் பரிதாபம் கொண்டனர்.

அன்று சந்திரமதியை கண்டு வந்தவன் தான் அதன் பின்பு அவனின் ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுடன் தான் கழித்தான்.

அவளை பார்த்த அன்று இரவு பௌர்னமி நிலவின் மென்மையில் பெண்ணவளின் மென்மையும் சேர்ந்து கொள்ள ஆடவனின் மனமோ அந்த பஞ்சு பொதிகை தேகத்தை மீண்டு உரிமையுடன் தீண்டும் நாள் வாராதா என்று ஏக்கம் கொண்டான் ஆடவன்.

யாரவள்..? எங்கிருந்து வந்தாள்..? அவளின் கண்ணக்குழி அழகில் எனை கொய்து சென்று விட்டாளே.. வஞ்சியவளின் அழகிற்கும் வஞ்சனை இல்லாமல் கோவிலின் சிற்பமாய் செதுக்கி விட்டானே எமை படைத்த பிரம்மன்..

ஆனால் அத்தனை அழகையும் பூ முகத்தில் தெரிந்த கலக்கம் மறைத்து விட்டனவே..

பெண்ணே யாரடி நீ.. ஏன் உன் பூ முகத்தில் இத்தனை வருத்தம்.. உன்னை மீண்டும் காண்பேனோ..? உன் அழகு வதனத்தின் துயர் துடைப்பேனோ..? காலத்தின் கையில் உள்ளதடி நம் நேசத்தின் பிறப்பிடம்..

அவன் நினைவுகளில் மங்கையவளின் அழகு வதனமும் அவள் ஒளியில் தாங்கிய வேதனையும் அவனை கொள்ளாமல் கொன்றது.

அவளை மீண்டும் அம்மன் ஆலயத்தில் வந்து தன் விழிகளால் தேடினான்.. காணும் இடம் எங்கும் அவளின் பொன்னிற மேனியும் உயிர்ப்பில்லாத விதிகளையும் தேடி தேடி களைத்து தான் போனான்.

சில நாட்களாகவே தன் கொழுந்தனின் நடவடிக்கை மாறியிருப்பதை கண்டு கொண்டாள் ஜானகி.. அதை தன் மனாளனிடமும் பகிர்ந்து கொண்டார்.. அதற்கு பிலவேந்திரனோ,

"தேவியாரே அவனை இன்னும் சின்னப்பிள்ளை என்று நினைத்தீர்களோ.. அவனுக்கும் வாலிப வயது வந்துவிட்டது ராணியாரே.. அதுமட்டுமன்றி அவன் மனதிலும் கள்ளம் புகுந்து விட்டது தேவியாரே... அதை கண்டு தாங்கள் வெஞ்சினம் கொள்ளக் கூடாது.. கூடுதலான மகிழ்ச்சியை தான் வெளிப்படுத்த வேண்டும்.." என்றார் ஏளனத்துடன்.

"ஐயனே என்ன இது எதற்காக தாங்கள் அவனை சாடுகிறீர்கள்.." என்றாள் பதட்டத்துடன்.

"இல்லை தேவி அவன் ஏதோ மயக்கத்தில் தான் சுற்றுகிறான்.. என்னைக் கேட்டால் தங்களின் கொழுந்தனுக்கு திருமண ஆசை வந்து விட்டது போலும்.." என்றார் சிரித்தபடி.

"அத்தான் தாங்கள் சொல்வது உண்மையா.." சந்தோஷத்தில் விழிவிரித்தபடி நின்றாள்.

"ஆமாம் தேவியாரே.. நம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யாரையோ தேடி கொண்டிருக்கிறாரம் நம் வீட்டு இளவரசர்.. இது காது வழியாக எம்மை வந்து சேர்ந்த சேதி.. வேணும் என்றால் தாங்கள் தான் அவனிடம் கேட்டு பாருங்களேன்.. தங்களின் மூத்த உத்தம புத்திரன் அல்லவா அவர்.." என்றார் சிரித்தபடி.


" போதும் அரசே தங்களின் கேலி.. எம் மகன் எது செய்தாலும் அதில் ஒரு தெளிவு இருக்கும்.. ஏன் அவன் ஒரு பெண்ணை நேசிக்க கூடாதா.. அதற்குண்டான தகுதி தான் அவனிடம் இல்லையா.. அந்த பெண் யாரென்று கேட்டு நானே பெண் கேட்டு செல்வேன் மன்னா.." என்றான் தன் மகவை விட்டுக் கொடுக்க முடியாமல்.

" இது தான் தேவி தங்களின் அன்றாட தான் தமையன் தங்கை இருவரையும் கட்டி வைத்துள்ளது.. இதே அன்பில் தான் தாங்கள் என்னையும் கட்டி வைத்துள்ளீர்கள்.." என்றார் காதலுடன்.

தன்னவனின் நேசத்தில் பெண்ணவளின் விழிகள் நாணத்துடன் தரையை நோக்கியது.. அதைக் கண்டு சிரித்த பிலவேந்திரன்,

"காலங்கள் எத்தனை கடந்தாலும் உந்தன் நாணச் சிவப்பு மாறாது கண்மணியே.. காலன் என்னை கூட்டிச் சென்றாலும் நிழலாய் உன் பின் தொடர்வேனே எந்தன் ஜீவதிதத்தின் நாடியானவளே.." தன் பிம்பத்தைப் என்றும் தன்னவளின் நிழலாய் பாதுகாவலனாய் என்றும் தொடர்வேன் என்ற வாக்குறுதியை தன்னவளுக்கு வழங்கினான் பிலவேந்திரன்.

அன்றும் தன்னவளை தேடி அம்மனின் ஆலயத்திற்கு வந்தான் தர்மேந்திரன்.. ஏனோ இன்று தன்னவளை எப்படியும் கண்டு விடுவோம் என்று மனதில் உறுதி எடுத்தான்.

ஆனால் ஆணவனோ அறியாதது அவன் தேடும் வாசமலர் தன் வாசத்தை வெளியில் விடாமல் தனக்குள்ளே தன்னை சிறை வைத்த கொடுமையை.. அதை அறிந்தால் ஆணவனின் நிலையை சொல்லவும் வேண்டுமா..? இல்லை பெண்ணவளின் அகதியான நிலை ஆடவனின் மனதினை உடைத்து போடுமா.. காலத்தின் கட்டாயத்தில் காத்திருக்கும் இரு நேச மலர்களின் நிலையை யாரறிவாரோ..?

ஆலயத்தின் ஒவ்வொரு இடமாக சென்று தன் மனதில் வரித்தவளை தேடி நின்றான் தர்மன்.. ஆனால் எங்கும் அவளின் பிம்பம் மட்டும் தென்படவில்லை.. தேடி தேடி சலித்த விழிகளுக்கு வலி கண்டு கலங்கியது தன் நேசத்தை நினைத்து.


இங்கே பெண்ணவளோ தன்னறையிலே முடங்கி விட்டாள்.. யாரின் முகத்தையும் காண பிடிக்காமல் யாரையும் தன்னருகில் நெருங்காமல் தனித் தீவாய் வாழ்ந்தாள்.

சிறு பிராயத்திலிருந்தே அன்பை பாசத்தை தேடி தேடி அவளின் விழிகள் கூட சோர்ந்து தான் போனது.. என்றாவது தன் குடும்பத்தின் பாசமும் அன்பும் கிடைக்கும் என்று தான் எண்ணியிருந்தாள்.. ஆனால் இன்றோ அது என்றும் கிடைக்காத காணல் நீர் என்று தெரிந்ததும் காயம்பட்ட உள்ளத்தை மேலும் கீறி புண்ணாக்கியது.

அதற்கான மருந்தை அவள் தேடவில்லை.. அதிலேயே வலி கண்டு அமைதியாய் இருந்தாள்.

ஏனோ இத்தனை நாட்கள் அறைக்குள்ளேயே சிறையாய் இருந்தவளுக்கு மனம் ஆலயத்திற்கு செல்லச் சொன்னது.

ஏதோ சொல்வார்களே காயம் பட்ட இதயத்திற்கு ஆறுதலாய் அமைதியான ஆலயம் இருந்தால் போதுமென்று அந்த நிலையில் இருந்த பெண்ணவள் ஆலயத்திற்கு கிளம்பினாள்.. ஆனால் முன்பு போல் யாரும் அவளை தடுக்கவுமில்லை.. எங்கே போகிறாய் என்று கேட்கவுமில்லை எப்படியோ போ ஆனால் இந்த வம்சத்தின் கௌரவம் முக்கியம் என்பது போல் அமைதியடைந்து விட்டனர்.

அவளை யாரும் எதுவும் கேட்காதது அவளுக்கு மேலும் வருத்தத்தை கொடுத்தது.

ஆனால் அவள் அறியவில்லை அவள் இப்பொழுது தேடி ஓடும் இடம் அவள் அமைதிக்கான இடமல்ல.. அவள் மலரும் வாழ்வின் மணாளனை சந்திக்க போகிறாள் என்பதை அறியாது சென்றாள் பேதை பெண்ணவள்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..