• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 33

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
ஆலயத்தில் காலடி எடுத்து வைத்ததும் பெண்ணவளுக்கு மனதில் தானாக ஏதோ ஒரு நிம்மதி வந்து ஒட்டிக் கொண்டது.. ஏதோ தன் கூட்டில் வந்து இணைந்தது போல் மனதில் மகிழ்ச்சி கூடியது.

மனம் நிறைந்த புன்னகையுடன் அந்த அலங்கார சொருபினியை வணங்கினாள்.

அம்மனை வணங்கி விட்டு எப்பொழுதும் அமரும் குளத்தங்கரைக்கு அவளறியாமல் அவளின் கால்கள் சென்றது.. அங்கே செல்லக்கூடாது என்று மனம் நினைத்தாலும் கால்கள் அவளை கேட்காமலே குளக்கரை படிகட்டிற்கு சென்றது.

குளக்கரை படிகட்டிலேயே அமர்ந்தவள் சலசலத்து செல்லும் நீரின் அலையை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.. அவளின் ரசனையை கலைக்காமல் அவளையே ரசித்தது இரு விழிகள்.

அரக்கு நிற பட்டு பாவாடை தாவணியும் அதிகம் நகை இல்லாமல் கழுத்தை ஒட்டியபடி ஒரு மெல்லிய தங்கத்தில் வைரம் பதித்த ஆரமும் என பெண்ணவளின் அழகில் சொக்கித் தான் போயின அந்த விழிகள்.

பொன்னிற மேனியில் தந்த சிற்பமென ஜொலித்தவளை கண்டு விழிகள் மயங்கி நின்றான் ஆடவன்.

தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல் தோன்ற சுற்றியும் தன் விழிகளை திருப்பி பார்த்தாள் பெண்ணவள்.. ஆனால் யாரும் அந்த இடத்தில் இருப்பதறக்கான அறிகுறி சுத்தமாய் இல்லை.

மீண்டும் தன் பார்வையை குளத்தில் துள்ளி விளையாடும் மீனில் திருப்பினாள்.

சிறிது நேரத்தில் தன் அருகில் யாரோ நிற்பது போல நிழல் தெரியவும் யாரென பார்த்தாள் பெண்ணவள்.

அங்கே ஆஜானுபாகுவாய் கம்பீரமான தோற்றத்தில் கருப்பு நிற பேரழகனாய் ஒருவன் நிற்கவும் தன்னை மறந்து அவனையே கண்டிருந்தாள் பாவையவள்.

கொஞ்சும் வண்ண மாயப் புன்னகை சுமந்தபடி நின்றிருந்தவனின் கண்களில் தன்னை ரசிக்கும் ரசனை தெரியவும் அதில் கர்வம் கொண்டு மென்மையாய் சிரித்தவன்,

"வணங்குகிறேன் தேவி.. எம்மை தர்மேந்திரன் என அழைப்பார்கள்.. இடையக்கோட்டை ஜமீனின் இளைய வாரிசு.. தாய் தந்தை இல்லாமல் தமையனின் வளர்ப்பில் வளர்ந்தவன்.. எமக்கு ஒரு தங்கை உண்டு.. கோதை என்பது அவளின் திருநாமம் ஆகும்.. எம் தமையன் இடையக்கோட்டை ஜமீன் பிலவேந்திரன்.. எம் அண்ணியாய் வந்து தாயுமானவர் ஜானகிதேவியின் அருந்தவ வளர்ப்பு பிள்ளை யாம்.." என்று தன்னையும் தம் சமஸ்தானத்தின் பெருமையும் பொங்க அவளிடம் தன்னை அறிமுகப்படுத்தி தம் குடும்பத்தையும் பெருமை படுத்தி விட்டான்.

அவனின் கர்வமான குரலும் அது தந்த நிம்மதியும் பெண்ணவளின் வாழ்வில் இதுவரை அனுபவித்திராத ஒன்று.

அவளறியாமல் அவள் கண்களில் காதல் கரை புரண்டோடியது.

பார்த்த முதல் பார்வையில் காதல் ஆணவனுக்கு சாத்தியம் என்றால் பெண்ணவளுக்கே அரிதான ஒன்றல்லவா..? அவளின் தமையனின் பெயர் கேட்டாலே யாரும் அவள் முன் நிற்க மாட்டார்களே.

இதோ வீரம் பொருந்திய வேங்கையின் மைந்தன் பார்த்த முதல் பார்வையிலே அவளின் மேல் அலாதி நேசம் கொண்டுள்ளானே.. இதற்கே தன் ஆயுளை இவனின் காலடியில் சமர்பிக்கலாமே.

எத்தனையோ சிந்தனையை கடந்தும் ஆணவனின் விழிகளில் கட்டுண்டு கடந்தது எவ்வளவு நேரமோ எங்கே இருந்த கோயிலின் மணியோசை பெண்ணவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

தன் நினைவு வந்ததும் தான் உணர்ந்தாள் இத்தனை நேரம் தான் ஒரு ஆடவனின் பார்வையில் லயித்திருந்ததை.. அதிர்ச்சியில் அவனை விட்டு விலகி நின்றாள்.

தானா ஒரு ஆணின் பார்வையில் இப்படி கட்டுண்டு கிடந்தது.. இதனால் தான் தன் தமையனும் பெற்றவர்களும் தன்னை வெறுத்தார்களா.. நான் இளவரசிக்கான தகுதிகள் இல்லாதவளா..? என பல யோசனைகளுடன் இருந்தவளை அடுத்த அவன் கேட்ட வார்த்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

" தேவி என்னை மணந்து கொள்ள சம்மதமா.." என்று பார்வையில் கரை காணா காதலில் பெண்ணவள் அறியாமல் சம்மதம் என தலை அசைத்தாள்.

அடுத்த நொடி ஆணவனோ வானத்தையே வசப்படுத்திய உணர்வு தான்.. அடுத்த கணம் ஆணவனின் இறுகிய அணைப்பில் இருந்தால் பெண்ணவள்.

ஆனால் அடுத்த நொடி தன் நிலை பாட்டில் அடித்தால் போல மண்டையில் சுருக்கென தைத்தது.

வேகமாய் அவனை விட்டு விலகியவள் யாரும் பார்க்கும் முன்னே அங்கிருந்து அவனின் முகத்தை பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆனால் இது ஒரு கழுகு கண்ணில் சிக்கியது பெண்ணவளுக்கும் தெரியவில்லை.. பெண்ணவளின் காதலில் கட்டுண்ட ஆணவனுக்கும் தெரியவில்லை.

அவள் விலகி சென்றதுமே அவளைப் பற்றி யாருமறியாமல் தனக்கு விசுவாசமான ஒருவனை வைத்து விசாரித்தான்.

ஆனால் அவனுக்கு கிடைத்த தகவல்களில் ஆணவன் மனம் கலங்கி போனான் தன்னவளின் வலிகளை கண்டு.

இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த கழுகு கண்கள் வேறு யாருமல்ல துருவேந்தனே தான்.

அதை கண்டவனின் விழிகளில் ரௌத்திரம் பொங்கி வழிந்தது.. தனது எதிரி குடும்பத்துடனே தன் தங்கை உறவு கொண்டுள்ளாளா என்ற கோபம் கண் மறைக்க அங்கிருந்து வேகமாய் சென்று விட்டான்.

அன்றிலிருந்தே பிலவேந்திரன் வம்சத்தை மேலும் எதிரியாகத் தான் பார்த்தான்.

ஆனால் இது எதுவும் அறியாமலே தன்னவளை மீட்கும் வழியினை எத்தனை முயன்றும் தர்மேந்திரனால் அவளை தன் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடியவில்லை.

ஆனால் இதை அறிந்தும் அறியாமல் அமைதியாய் இருந்தார் பிலவேந்திரன். தன் தமையன் ஒரு பெண்ணை நேசிக்கிறான்.. அவளுக்கு ஏதோ ஆபத்து அவளை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளான் என்பதை அறிந்தவர் அந்த பெண் யார் என்று தெரிந்து கொள்ளவில்லை.. தர்மாவே சொல்லட்டும் என்று அமைதி காத்தார்.

ஆனால் இன்று தாங்கள் செல்லும் ஆலயத்தில் மீண்டும் தன்னவளை காணப் போகிறோம் என்றோ இல்லை அவளை நினைத்து தானும் மேலும் கலங்கி போகிறோம் என்றோ அறியாமல் தன் குடும்பத்துடன் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சொன்றான்.

மீனாட்சி அம்மன் ஆலயத்தின் முக்கிய பொருப்பில் உள்ளவர்களில் முதன்மையானவர் பிலவேந்திரன்.

பிலவேந்திரனின் நிர்வாக திறமை அவன் ஜமீனின் வளமை அவனுக்கு மக்களிடையே இருக்கும் மதிப்பு மரியாதை என அனைத்தும் துருவேந்தனுக்கு அவனின் மேல் பொறாமை வளர காரணமாகியது.. அதற்கு மேலும் வலு சேர்த்தாற் போல அமைந்தது தர்மேந்திரனின் நேசம் தன் தங்கையின் பக்கம் திரும்பியதும் இடையக்கோட்டை ஜமீனுக்கு பாண்டியர்கள் மூலம் கிடைத்த பொக்கீஷ பேழை என பிலவேந்திரனின் வம்சத்தையே கருவறுக்கும் வேலையை ஆரம்பித்தான் துருவேந்தன்.. ஆனால் நேரடியாக பிலவேந்திரனிடம் மோதும் அளவுக்கு அவன் ஒரு மாவீரன் அல்லவே.. அவன் ஒரு சகுனி தானே.. அது தான் நேரம் பார்த்து திட்டத்தை செயல்படுத்த காத்திருந்தான்.


அதற்கான நேரமும் அமைந்தது.. ஜானகி தேவி கரு தரித்தற்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக இன்று கோவிலுக்கு வருவதாக அவனின் ஒற்றன் மூலம் தெரிய வந்த சேதியாகும்.. ஆனால் அவனறியாதது இன்று தான் அவனின் கடைசி நாளாகவும் இத்தனை நாள் அவன் எல்லோரிடமும் மறைத்த ரகசியம் வெளிவரப் போகின்றது என்பதையும் தெரியாமல் போனது கண்டிப்பாக விதியின் சதி தானோ..?

தன் திட்டத்தின் ஒரு பகுதி தான் இன்று அம்மன் ஆலயத்தில் தன் தமக்கைக்கு திருமண நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தான் வேறொரு ஆடவனுடன்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்