பிலவேந்திரன் தன் குடும்பத்தினருடன் மீனாட்சி அம்மனின் ஆலயத்திற்குள் நுழைந்தான்.. உள்ளே நுழைந்ததிலிருந்து தர்மாவின் விழிகள் நாலாபுறமும் எதையோ தேடி தவித்தது.. ஏனோ அவனின் மனம் நிலையில்லாது தவித்தது போல் துடித்தது.
தன்னுடைய சேர்ந்தவருக்கு யாருக்கோ ஆபத்து என்பதை உணர்ந்தவன் போல் தேடினான்.. ஆனால் கண் முன்னே அவனின் குடும்பம் நன்றாக இருப்பதை உறுதி செய்தவன் வேறு யார் தன் மனதிற்கு நெருக்கமானவர் என்ற யோசனையில் நொடியில் உதித்தது அவனவளின் பூ முகம்.
' மதி மா தங்களுக்கு என்னவாயிற்று.. ஏன் என் இதயம் இப்படி துடிக்கிறது.. தங்களுக்கு ஏதோ தவறு ஏற்படுவது போல்.. ஏன் என் மனம் பிசைந்து தவிக்கிறது..' என்று தன் இதயத்தை ஒரு கையால் நீவிக் கொண்டவனின் விழிகள் நாலாபுறமும் அவனவளை தான் தேடியது.
அவனின் தேடலுக்கு உரியவளோ அதே கோயிலின் ஒரு பகுதியில் மணப்பெண் கோலத்தில் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.
அவளின் அருகே அவளின் சொந்த பந்தத்தை சேர்ந்த நான்கு பெண்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களின் காவலுக்கு என ஆட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த கோயிலின் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாய் நடந்து கொண்டிருந்தது.
இவர்களும் அதை கண்டபடியே யாருக்கோ திருமணம் என்ற ரீதியில் அதை பார்த்துக் கொண்டு சென்றனர்.
தர்மாவின் விழிகள் தேடிய தேடலை கண்ட பிலவேந்திரன் தன் மனைவியிடம் கண் ஜாடை காட்டினான்.
ஜானகியும் அதை கண்டு மௌனமாய் சிரித்த படி அவருடனே சென்றாள்.
கோதை மட்டும் கோயிலின் மண்டபத்தில் இருந்த தூண்களில் உள்ள சிற்பங்களை கண்டு மகிழ்ச்சியுடன் அதை தன் விழிகளில் ஆராய்ந்தபடி சென்றாள்.
நால்வரும் சென்று அபிஷேகம் முடிந்து அம்மனை தரிசித்துவிட்டு பிலவேந்திரன் மட்டும் கோயில் பூசாரியுடன் பேசிக் கொண்டிருக்க மற்ற மூவரும் மண்டப தூணில் வந்து அமர்ந்தனர்.
"என்னவாயிற்று தர்மா விழிகள் இரண்டும் நான்கு புறமும் தேடிக் கொண்டிருக்கிறதே.. இந்த தேடல் யாரைத் தேடிய தேடல் என்று விளக்க முடியுமா மகனே.." என்று கிண்டலடித்தாள்.
" அண்ணி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. என் விழிகள் ஒரு பௌர்னமி ஒலியை தேடிக் கொண்டிருக்கிறது.. என் மனமோ என்னை சார்ந்த உயிருக்கு ஆபத்து என்று உரைக்கிறது.. நான் என்ன செய்வேன் என்றே புரியவில்லை தாயோ.." என்றான் கலங்கிய குரலில்.
அவனின் குரலில் இருந்த கலக்கமும் வாடியிருந்த வதனமும் அவன் ஏதோ மன வருத்தத்தில் உள்ளார் என்பது தெளிவாக தாயானவளுக்கு விளங்கியது.
அவனருகில் சென்று, "தர்மா ஏன் குரலில் இத்தனை கலக்கம்.. எத்துனை துணிவுடன் விளங்கிய வீரன்.. இப்படி கலக்கம் மூலையை மலங்கச் செய்யும் என்று வீரன் தாங்கள் அறியாததா.. முதலில் என்ன நடந்தது என்று கூறுங்கள்.. அதற்கான தீர்வை நாம் தேடுவோம்.." என்றுஆறுதலித்தாள்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கோ இருந்த வந்த கோதையின் குரலில் இருவரும் தங்களின் அருகில் அவளை தேடினார்கள். அப்பொழுது தான் உணர்ந்தனர் தங்கள் அருகில் கோதை இல்லை என்பதை.
"தமையனே.. அண்ணி என்னை காப்பாற்றுங்கள்.." என்ற கோதையின் குரல் ஒலித்த திசை நோக்கி சென்றனர்.. அது கோயிலின் பின்பகுதி.. அங்கே பெரும்பாலும் அதிகம் யாரும் வரமாட்டார்கள்.
அங்கே இரு ஆடவர்களின் கைகளில் கோதை மென் பிஞ்சு கரங்கள் சிக்கியிருந்தது.
அவளை அப்படி கண்ட ஜானகியின் மனம் பதட்டம் அடைந்தது சில நொடிகள் தான்.. அடுத்த நொடி தன்னை நிதானித்து கொண்டு,
" அய்யோ கோதை உனக்கு என்னவாயிற்று.. யார் நீங்கள் இவள் யாரென்று தெரியுமா.. இவள் இடையக் கோட்டை ஜமீனின் இளவரசி.. அவளை தொடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்.." என்று கர்ஜித்தபடியே அவளருகில் சென்றாள்.
ஜானகி தங்களை நெருங்குவதை கண்ட கள்வர்கள் இருவரும் சட்டென தங்களின் கைகளில் இருந்த கத்தியை கோதையின் கழுத்தில் வைத்து விட்டனர்.
"ராணி தாங்கள் எங்கள் அருகில் வராதீர்கள்.. வந்தால் நிச்சயமாக இளவரசியின் உயிர் அவர் உடலில் இருக்காது.. இவரை கடத்தல் சொன்னது எங்களின் எஜமான்.. கிட்டே நெருங்க முயற்சி செய்யாதீர்கள் ராணி.." என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்.
இதையெல்லாம் கண்ட தர்மாவின் விழிகள் சிவப்பேறி,
"இந்த இடையக்கோட்டை ஜமீனின் வாரிசு மேல் கை வைக்க துணிந்திருக்கும் தங்களின் விசுவாசத்திற்குரிய எஜமானன் யார் என்று நாங்கள் அறியலாமா கோழைகளே..." என்று சிங்கம் ஒன்று கர்ஜிப்பது போல் இருந்தது.
" அது யாம் தான் இடையக்கோட்டை இளைய வேந்தே.." என்று சிரித்தபடி அங்கே வந்தான் துருவேந்தன்.
அவனைக் கண்டதும் யார் என்று தர்மாவிற்கு தெரிந்து போயிற்று.
தன்னவளின் தமையன்.. அவளின் அடிமை வாழ்விற்கு காரணமானவன் அவனை தெரிந்ததிலிருந்து அவனை நேரில் பார்க்கும் நேரம் அவனின் கடைசி நாளாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் உருவேற்றிக் கொண்டிருந்தவன் முன்னே வந்தான் குள்ளநரி.
என்ன இளைய வேந்தே என்னை யாரென்று தங்களுக்கு தெரியும் போல அதை தங்களின் விழிகளே சொல்கிறதே.. என்னை கொல்லும் அளவு கொலைவெறி தோன்றுகிறது அல்லவா..
தோனத்தான் வேண்டுமே.." என்று அவனின் அருகில் வந்து அவனையே முறைத்தவன்,
"உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் ஜோதிடம் நேரம் இதை வைத்து நான் அவளை அடிமைபடுத்தினால் நீ அவளை கவர்ந்து சென்று எனக்கு எதிரான ஆயுதமாய் பயன்படுத்த திட்டம் இடுகிறாயமே.. இதற்காகவே உன்னை கொல்லும் அளவுக்கு கோவம் வருகிறது.. ஆனால் அவ்வளவு எளிதில் உன்னை கொல்ல மாட்டேன்..
முதலில் உன் அண்ணன் என் வாழ்வின் குறுக்கே வந்தான் இப்பொழுது நீ வந்துள்ளாய்.. உன் குடும்பமே என் எதிரியாய் அமைந்தது உங்களின் துரதிஷ்டமோ.." என்று சிங்கத்திடமே சிறு நரி அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்தது.
"என்ன உளறுகிறாய் உன் தங்கையை நேசத்தது நான்.. இதில் என் குடும்பத்தை சம்பந்தபடுத்தாதே.. உனக்குத் தேவை நான் தானே.. என்னை எதுவும் செய்து கொள்.. என் தாய் தந்தையாய் விளங்கும் என் அண்ணனையும் அண்ணியையும் தமக்கையையும் இங்கிருந்து அனுப்பு.." என்று கர்ஜனை செய்தான்.
" நான் செய்த அனைத்தும் உனக்காக செய்தேன் என்று நினைத்தாயா இளையவேந்தே.. இல்லை இதோ இவளுக்காகவும் இவளுக்கு தாலி கட்டி கணவனாய் வாழும் உன் அண்ணனுக்காவும் தான் உங்களை இங்கே சிறைபிடிக்க திட்டமிட்டேன் வேந்தா.. ஓஓஓ உனக்கு உண்மை தெரியாது அல்லவா.. இதோ நான் வந்ததிலிருந்து என்னை தீயிலிட்டு பொசுக்குவது போல் பார்வையால் பச்சை மரமும் தீப்பற்றிக் கொள்வது போல் எனை பார்க்கும் இந்த ஜானகியை கேட்டு பார் தர்மா.." என்று ஜானகியின் மீது பார்வையை பதித்தான்.
அப்பொழுது தான் ஒன்று உணர்ந்தான் அங்கே பிலவேந்திரன் இல்லை என்பதை.
தன் ஆட்களிடம் திரும்பியவன்,
"எங்கே இடையக் கோட்டை ஜமீனின் மூத்த வாரிசு.. தன் மனைவி தமையன் தமக்கை இவர்களை காக்காமல் எங்கே ஓடி சென்று ஒளிந்து கொண்டான் அந்த கோழை.." கிட்டதட்ட கர்ஜனை செய்தான்.
" யாரை பார்த்து கோழை என்கிறாய் துருவேந்தா.. நானா கோழை.. முதுகில் குத்தியது நானா இல்லை நீயா.. என்னை என்னவென்று நினைத்தாய் துருவேந்தா.. என் மனைவி பிள்ளைகளை ஆபத்தில் விட்டு சென்று தப்பித்து ஓடும் கோழை என்றா... நான் பிலவேந்திரன் இடையக்கோட்டை ஜமீன்.. பயந்தவன் எப்படி தனியாய் ஒரு சமஸ்தானத்தை ஆள முடியும் துருவா.." என்று கேட்டபடி அங்கே வந்தான் பிலவேந்திரன்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்