"யாரை பார்த்து கோழை என்கிறாய் துருவா.. நானா இல்லை நீயா கோழை செயல் செய்தது.. கோழை போல் நான் இல்லாத நேரம் பார்த்து என் குடும்பத்தை நீ சிறைபிடித்தது சரியான செயலா.. இது ஒரு மாவீரனுக்கு அழகா சொல் பார்க்கலாம்.." என்றபடி கம்பீரமாய் மீசையை முறுக்கியபடி அங்கே வந்தான் பிலவேந்திரன்.
" ஏய் பிலவேந்தா உன்னை அடியோடு அழிப்பதே என் நோக்கம்.. எனக்கு எப்பொழுதும் எதிராய் வந்தவன் நீ.. என் ஜென்ம எதிரி நீ தான்.. உன்னை அழிக்காமல் என் உயிர் அணையாது.." கோபத்தில் பிலவேந்திரனை கொல்லும் வெறி இருந்தது.
"முடிந்தால் அதை செய் துருவா.. அதை விடுத்து என் குடும்பத்தை நெருங்கும் வேலையை செய்யாதே.. மீறினால் உன்னை அழிக்கவும் என்னால் முடியும் என்பதை மறவாதே.. " என்றான் கர்ஜனையுடன்.
" நீ என்னை அழிப்பாயா.. உன்னால் அதை செய்ய இயலுமா.. இதோ உன் குடும்பம் என் கட்டுப்பாட்டில் உள்ளது.. உன் அருமை தமையன்.. உன் மகளாய் வளரும் உன் தமக்கை.. நீ ஆசையாய் நேசித்து கரம்பிடித்த உன் ஆசை மனையாள்.. அதுமட்டுமல்லாமல் இன்னும் உலகையே பார்க்காத உன் மனைவியின் வயிற்றில் ஜனித்திருக்கும் உன் வாரிசு என இத்தனை பேரும் என் கட்டுபாட்டில் இருக்கும் போது என்னை கொல்லும் துணிவு உன்னிடம் இருக்கிறதா பிலவா.." குடும்பத்தை காட்டி மிரட்டினான் கோழையவன்.
அதை கண்டும் பதட்டம் இல்லாமல், "என்ன துருவா என் குடும்பத்தை வைத்து மிரட்டி என்னை சாய்க்கும் திட்டமா.. என்னை இவ்வளவு தான் நீ அறிந்ததா.. ஆனால் உன்னை பற்றி அனைத்தும் அறிந்தவன் நான் என்பதை மறவாதே.. " என்ற அந்த அனைத்தும் என்ற வார்த்தையில் இருந்த அழுத்தம் துருவனை அசைத்து பார்த்தது.
ஆம் ஒரு காலத்தில் ஒட்டிப் பிறந்தவர்களாய் சுற்றித் திரிந்த நாட்களில் தன் ரகசியத்தின் காவலன் தானே இந்த பிலவேந்திரன் என்பதை சற்று மறந்திருந்தான் துருவன்.. இல்லை ஆத்திரம் அவனை மறக்கடித்தது.
" என்ன துருவா அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டாய்.. என்ன காலம் கடந்து விட்டது மறந்திருப்பான் என நினைத்தாயா துருவா.. ஆனால் நான் உன்னைப் போல் முதுகில் குத்தும் கோழை இல்லை.. உன் உண்மை வதனத்தை எல்லோரிடமும் வெளிச்சம் இட்டு காட்டவா.. ஆனால் நான் அப்படி செய்தால் உனக்கும் எனக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்பதை போல ஆகிவிடும் என்பதை நான் அறிவேன்.. முதலில் எனது மகள் மனைவியை விடு.. உனக்கும் எனக்கும் தான் பகை.. இதில் என் குடும்பத்தை எப்பொழுதும் இணை சேர்க்காதே.." என்றான் கட்டளையாய்.
" எப்படி எப்படி உனக்கும் எனக்கும் தான் பகையா.. ஆனால் அந்த பகை வந்ததற்கான மூலக்காரணம் இதோ இவள் தானே.. இவளால் தானே நண்பர்களான நாம் இப்படி விரோதிகளாய் பகைத்து நிற்கின்றோம்.." எதிரிலிருந்த ஜானகி தேவியை காட்டி கூறினான்.
" துருவா தேவையில்லாமல் என்னவளை இதில் இழுக்காதே.. நீ செய்த ஈன செயலுக்கு அவள் என்ன செய்தாள்.. அவள் பாண்டியர் குலத் தோன்றலில் வந்தவள்.. அவளுக்கு அநியாயம் தெரியாது.. அன்று அவள் செய்தது சரிதான்.. ஆனால் நீ என்ன செய்தாய் நினைவிருக்கிறதா.. நன்றாக சிந்தித்து பார்.. பாண்டியர்களின் வம்ச வாளை கைப்பற்றத் தானே ஜானகிதேவியை விவாகம் செய்ய முற்பட்டாய்.. ஆனால் நீ ஒரு விடயத்தை மறந்து விட்டாய்.. ஒரு இளவரசிக்கு தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.. ஆனால் நீயோ என்ன செய்தாய்..
அவளை வசியப்படுத்தி அவளின் பெண்மையை சிதைத்து அல்லவா அவளை மணம் புரிய ஏற்பாடு செய்தாய்.. அது தான் அவர்கள் உன்னை மறுக்க காரணம் என்பதை மறந்தாயா துருவா.. " என்றான் நிதர்சனத்தை உணர்ந்தவன்.
ஆனால் பிலவனுக்கு புரிந்த நிதர்சனம் எதிரிலிருந்தவனுக்கு புரிய வேண்டுமே.. தன்னை வேண்டாமென சொன்ன ஒருத்தி தன் நண்பனை மணந்து மகிழ்வாய் இருக்கிறாள் என்பதையே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதன் கோபம் தான் பிலவனின் குடும்பத்தையே அழிக்க துணிந்தது.
" நியாயம் பேசுகிறாயா பிலவா.. நீ எனக்கு செய்ததை இன்று நான் உன் தமையனுக்கு செய்யப் போகிறேன்.. என்ன பார்க்கிறாய் உன் தமையன் நேசிக்கும் பெண்ணை வேறொரு ஆடவனை மணம் புரிய போகிறாள்.. நீ என் வாழ்வை அழித்தாய்.. உன் தமையனோ என் அதிகாரத்தை அழிக்க துணிந்து விட்டான்.. கேள் உன் தமையனிடம் அவன் நேசிக்கும் பெண்ணாண சந்திரமதி என் தமக்கை.. இதோ இன்னும் சற்று நாழிகையில் அவள் மணமாலை ஏந்த போகிறாள்.." என்று இருவரையும் பார்த்து சத்தமாய் சிரித்தபடி பேசினான்.
அதைக் கேட்ட தர்மாவும் பிலவேந்திரனும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்..
" இல்லை அவள் என்னைத் தவிர இன்னொருவனின் அருகில் கூட சென்று அமரமாட்டாள்.. அவளும் என்னை நேசிக்கிறாள் என்பதை தான் உண்மை.. " மனதில் உறுதியோடு கூறினான்.
"" ஓஓஓ இன்னும் காதலை சொல்லாதவளின் மேல் அவ்வளவு நம்பிக்கையா தர்மா.." என்றான் எள்ளலாய்.
"இல்லை என் காதலின் மேல் உள்ள நம்பிக்கை.. என் விழிகள் கண்டு காதல் கொண்டது அவளைத் தான்.. என் மனதால் மணமாலை சூட்டியவளும் அவள் மட்டும் தான்.. அவளின் கண்களில் எனக்கான நேசத்தை கண்டேன்.. அது எனக்கு மட்டுமே சொந்தமானது.." என்றான் சற்றும் குறையாத நம்பிக்கையுடன்.
" ஓஓஓ அவ்வளவு பெரிய நம்பிக்கையா.. ஆனால் அவளோ விவாகத்திற்கு ஒத்துக் கொண்டு இதோ மணமேடை ஏறப்போகிறாளே இதற்கு என்ன சொல்லப் போகிறாய் தர்மா.." உன் காதலை பிரிந்துவிட்டேன் என்ற திமிருடன்.
அதுவரை அங்கே நடப்பதை பொறுமையாய் கவனித்திருந்த ஜானகி , "அடேய் மாபாதகா நீ செய்யும் ஈன செயலுக்கு ஏன் ஒன்றுமறியாத அந்த மங்கைக்கு பாவத்தை ஏற்படுத்துகிறாய்.. நீ ஒரு சூன்யக்காரன்.. ஜமீனின் வம்சத்திற்கே இழுக்கானவன்.. என் வீட்டிற்கு மருமகளாய் வரும் பெண் உன் தமக்கை தான்.. நான் எடுத்த முடிவை தடுக்கும் அளவுக்கு வீரனல்ல நீ.. ஒரு கோழை.. சகுனி வேலை செய்யும் நீயா ஜமீன்.. இல்லை நீ ஒரு அகோரன்.. மனித குலத்திற்கே தீங்கானவன் நீ.. பினந்தின்னி கழுகு கூட தன் இனத்தை அழிக்காது.. ஆனால் நீ உன் குலத்தையே அழிக்கத் துணிந்தவன்.. அன்றே உன்னை கருவருத்திருந்தாள் இன்று எத்தனையோ உயிர்களை மனதாலும் உடலாலும் காப்பாற்றியிருப்பேன்.. அத்தான் இது அத்தனையும் தங்களின் தவறு தான்.. தீங்கு செய்வது நண்பனே ஆனாலும் திருத்த வேண்டும் இல்லையேல் அழித்தாலும் தவறில்லை தான்.. இன்று பாருங்கள் நம் பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக் குறி ஆக்கியுள்ளான்.. இவனுக்கா பரிதாபம் பார்த்தீர்கள்.." கண்கள் நிறைய வெறுப்புடன் ஒரு ராணிக்கே உண்டான கர்வத்துடன் சொன்னாள் ஜானகி.
அவர்கள் இருந்த இடத்தில் பொதுமக்கள் யாருமில்லாதததால் அவள் பேசியது அங்கிருந்தவர்களை தாண்டி வெளியே செல்லவில்லை.
அவள் பேசப் பேச அங்கிருந்த அத்தனை பேரும் அமைதியாகத் தான் இருந்தனர்.. அதை கேட்க கேட்க துருவனுக்கு கோபம் கண் மறைக்க தன் கையில் இருந்த உறைவாளை எடுத்து அவளின் தலையை நோக்கி கொண்டு சென்றான்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..