• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 36

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
ஜானகியின் பேச்சை கேட்க துருவன் கோபத்தில் நொடியும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த உறைவாளை எடுத்து அவளின் கழுத்தை நோக்கி வீசினான்..

தன்னை நோக்கி வரும் உறைவாளை கண்டு பயப்படாமல் நேர்கொண்ட பார்வையால் அதை எதிர் கொண்டாள் ஜானகி.

மற்றவர்களுக்கு தான் பயம் பதட்டத்துடன் அதை தடுக்க முனைந்தனர்.. ஆனால் கண நேரத்தில் அதை தன் கையால் பிடித்தாள் ஜானகி தேவி.. கையில் உதிரம் கொட்ட தான் பிடித்திருந்த உறைவாளை விடாது அவனை பார்வையால் பொசுக்கினாள் பெண்ணவள்.

துருவா உன் ஆணவம் தான் உன் அழிவுக்கு அடிகோலியது.. நான் ஒரு இளவரசி.. எனது மணாளனை தேர்வு செய்ய உரிமை பட்டவள்.. ஆனால் நீயோ கள்வனாய் என் பெண்மையை களவாடிய பின்பு என் கழுத்தில் மாங்கல்யம் சூட்ட திட்டம் தீட்டிய சதிகாரன்.. அன்றே உன் உயிரை கொய்திருந்தால் கூட அது தர்மம் தான்.. ஆனால் உன்னை பெற்றவர்களுக்காகத் தான் அன்றே உன்னை எச்சரித்து விட்டேன்..

ஆனால் நீயோ என் குடும்பத்தை அழிக்க சதி வலை பின்னி எங்களை பிடித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா.. அது ஒருக்காலும் நடக்காது.." அவனிடம் சூளுரைத்தவள் தர்மாவின் பின்பு திரும்பி,

"தர்மா நீ நேசித்தவளின் மேல் ஒரு துரும்பும் படாமல் காக்க வேண்டியது உன் கடமை.. நம் ஜமீனின் அடுத்த இளையராணி அவள் தான்.. செல் மகனே சென்று அவளை அந்தக் கள்வர் கூட்டத்திடம் இருந்து காத்து அழைத்து வா.. இது உன்னை அன்னையாக வளர்த்தவளின் மீது சத்தியம்..

கோதை நீ ஒன்றும் கோழை கிடையாது.. ஜமீனின் இளவரசி இக்கட்டான சூழலில் உன்னை தற்காத்துக் கொள்ளத்தான் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுத்தேன்.. ஆனால் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகளே.. ஒரு அற்பனின் வார்த்தைக்கு மண்டியிட்டு உன்னை நீயே தாழ்த்திக் கொண்டிருக்கிறாயே இது தான் உன் வீரமா.." என்று கம்பீரத்துடன் கட்டளையுடன் தன் மகவு இருவரிடமும் பேசினாள்.

அதற்குள்ளாகவே அங்கே மூச்சிரைக்க ஓடி வந்தாள் சந்திரா.. வந்தவள் அங்கிருந்த யாரையும் கவனிக்காமல் நேரே தன் தமையனிடம் சென்றவள்,

"தமையனே எனக்கு இந்த விவாகம் வேண்டாம்.. அவனின் பார்வையே சரியில்லை தமையனே.. நான் தனிமையில் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி என் அறைக்கு வந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறான்.. வேண்டாம் தமையனே நான் தங்களுக்கு அடிமையாக கடைசி வரை தனிமையிலே காலம் கழித்து கொள்கிறேன்.. இது போன்ற ஒரு விவாகம் வேண்டாம் தமையனே.." தன் கண்ணீரால் அவனின் பாதத்தை கழுவினாள் பெண்ணவள்.

அதே நேரம் அங்கே அவளின் தாய் தந்தை அங்கே வந்தனர்.

தன் தாய் தந்தை வந்ததை கவனித்தவள்,

"அன்னையே தந்தையே இப்படி ஒரு விவாகம் எனக்கு செய்வதற்கு தங்களின் கரங்களால் என்னை சிரசேதம் கூட செய்து விடுங்கள்.. வேண்டாம் தந்தையே.. நானும் உங்களின் பெண் தானே.. உங்களின் கருவியில் உதித்த மகவு தானே.. ஏன் எனக்கு இத்தகைய தண்டனையை தருகிறீர்கள்.. உங்களின் பாதங்களில் வணங்குகிறேன்.. வேண்டாம் இப்படி ஒரு விவாகம் எனக்கு வேண்டாம் தந்தையே.. தாயே நீங்களும் என்னைப் போன்ற ஒரு தாய்தானே..

ஒவ்வொரு பெண்ணும் தன் மணாளனை எவ்வாறெல்லாம் கற்பனை செய்து பார்ப்பாள்.. ஒரு ஜமீனின் வாரிசாய் பிறந்ததை தவிர நான் வேறு என்ன பாவம் செய்தேன்.. ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை.." என்று மூவரிடமும் கதறியவள் மனவேதனை தாளாது கண் சொருகி மயங்கி விழுந்தாள்.

அவள் கீழே விழும் நொடியில் இரு வலிய கரங்கள் அவளை பூவாய் தாங்கியது..

அவளின் வேதனை தாங்கிய வதனம் மனதை கொல்லாமல் கொன்றது.. தன்னவளையே சிறிது நேரம் விழியகலாது பார்த்திருந்தவன் அவளை தன் கரங்களில் ஏந்தி தன் அண்ணன் அண்ணியிடம் வந்து சேர்ந்தான்.

அதைப் பார்த்த துருவன், "ஏய் தர்மா அவளை இங்கே அனுப்பு.. இன்னும் சற்று நாழிகையில் அவளுக்கு விவாகம்.. உன் தமையன் வெற்றி பெற்றதை போல் நீ வெற்றி பெற முடியாது.. நீ உன் காதலில் தோல்வியடைந்து துடிக்க வேண்டும்.. அதை உன் தமையனும் அவனின் மனையாளும் நாளும் கண்டு கலங்கி நிற்க வேண்டும்..

அவளை என்னிடம் அனுப்பு.. இதோ உன் தமக்கை இங்கே தான் உள்ளாள்.. சந்திராவை நீ அனுப்பவில்லை எனில் உன் தமக்கை கோதையின் உயிர் என் வாளால் பறிக்கப்படும்.." மதம் கொண்ட யானையாய் சிலிர்த்தான்.

" துருவா வேண்டாம் என் தமக்கை அருகில் செல்லாதே.. அவள் இந்த வேங்கையின் வீர மங்கை என்பதை மறவாதே.." எச்சரித்தான் பிலவேந்திரன்.

"அடேய் பிலவா ஒரு பெண்ணால் என்னை என்ன செய்து விட முடியும்.. என் வீரத்திற்கு முன் இவள் சிறுமுயல்.. இவளை வதம் செய்வதா கடினம்.." தான் ஆண் என்ற அகம்பாவத்தில் கோதையின் அருகே சென்றான் துருவன்.

அதுவரை பயந்து அழுது கொண்டிருந்தவள் தன் அண்ணியாரின் வார்த்தையும் பெண்களை அவன் நடத்தும் விதமும் கண்டு பொங்கியெழுந்தாள் பெண்ணவள்.

தன்னை பிடித்துக் கொண்டிருந்தவர்களை தாக்க அவர்களின் கையை தூக்கி விசிறி அடித்தவள் தன் காலில் மிதிபட்டு இருந்த குச்சியை தன் காலால் மிதித்து தூக்கி பிடித்தாள்.. அது சரியாக அவளின் கையில் கிடைத்தது.

அதை வைத்து தன் அருகில் அகங்காரத்துடன் வந்தவனின் வயிற்றை பார்த்து அடித்தாள் வேகமாய். சற்று நேரத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தவனை தன் ஆத்திரம் தீர மட்டும் அடித்து துவைத்தாள்.

அவள் அடிக்கும் போது துருவனின் பெற்றோர்கள் வந்து தடுக்க முனைந்தனர்.. அவர்களை தன் பார்வையால் எட்டி நிறுத்தியவள்,

"இவன் அடி வாங்குவதை தங்களால் தாங்க முடியவில்லையோ.. அது போலத்தானே இதோ உங்களின் வயிற்றில் பிறந்த மகளும்.. பெண்களை இவன் ஏளனமாய் பேசும் போதும் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தானே இருந்தீர்கள்..

ஏன் இவனை உங்களால் தடுக்க முடகயவில்லையோ..அல்லது இந்த கேவலமான ஆண்மகன் தான் உங்களை காப்பானா.." என்று வார்த்தையால் அவர்களை சாகடித்தாள்.

அவளின் வார்த்தையை கண்டு அவர்களும் கூனிக் குறுகி நின்றனர்.

இல்லை கோதை.. இவர்கள் அமைதியாயிருக்கும் காரணம் இவன் தான்.. இவர்களை இவன் வசியப்படுத்தி வைத்துள்ளான் இவன் சொல்வதை மட்டும் கேட்பது போல்.. அதுமட்டுமன்றி இவன் இவர்களின் புதல்வனும் அல்ல..

இவன் ஒரு அகோரன்.. நரமாமீசத்தை உண்ணும் கொடியவன்.. மந்திர தந்திர வித்தைகளை கற்று எல்லோரையும் நொடியில் வசப்படுத்தி தான் இவனின் வாழ்வு அமைந்தது.. அது தான் இவர்களின் அமைதிக்கு காரணம்.. நடப்பதை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு சுய புத்தியில் இல்லை அவர்கள்.. இத்தனை நாளாக இவன் உயிருடன் இருப்பதன் முதன் காரணம் இவர்கள் தான்.. இவர்களை கையகப்படுத்தி தான் என்னை வெளியேற்றினான்.. அடுத்து இவனின் எந்த ஒரு விடயத்திலும் நான் தலையிடாமல் என்னை கைச்சிறையாக்கினான் என்னை அறியாமலே.. ஏன் இத்துனை ஆண்டுகளாய் இப்படி ஒருவன் இருப்பதையே நான் மறந்தும் விட்டேன்.. ஆனால் இன்று இவனை பற்றி அறிந்து கொண்டது இதோ நம் தர்மாவால் தான்.." என்று பிலவேந்திரன் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்று விட்டனர் மூவரை தவிர.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..