• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 37

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
பிலவேந்திரன் சொன்னதை கேட்டு அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்றனர்.. ஆனால் ஜானகிக்கும் தர்மாவிற்கும் முன்பே தெரியுமாதலால் அந்தளவு அவர்களுக்கு அதிர்ச்சி தாக்கவில்லை.. ஆனாலும் அவன் மேல் கொலைவெறி வந்தது.

ஒரு மனிதன் தன் சுயலாபத்துக்காக மற்றவரை தன் கை அசைவில் ஆட்டி வைப்பது என்றாள் அவன் எந்தளவுக்கு குறுக்கு புத்தி உள்ளவனாய் இருப்பான்.

பிலவேந்திரன் சொல்ல சொல்ல கோபத்தின் உச்சிக்கே சென்ற துருவன்,

"ஏய் ஆமாமடா நான் மாந்திரீகன் தான்.. எல்லோரையும் வசியப்படுத்தி தான் என் அடிமையாக்கினேன்.. இருவரைத் தவிர.. இதோ இந்த ஜானகியையும் இந்த சந்திராவையும் என் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இயலவில்லை.. அதனால் இந்த நிமிடம் தோற்றுப் போய் நிற்கிறேன். இவர்கள் இருவரின் ஜோதிட அம்சம் தெய்வ சங்கல்பம் வாய்ந்தது.. அதனால் தான் இவளை அடிமையாக்கினேன்.. இவளையும் மனைவி என்ற பெயரில் தான் அடிமையாக்க நினைத்தேன்.. ஆனால் நீ என்னிடமிருந்து இவளை காப்பாற்றி உன் மனைவியாக்கி கொண்டாய்.. இவர்கள் இருவரையும் கொல்லும் அளவு கொலைவெறி உண்டு.

அதற்கு தக்க சமயமாய் பார்த்து தான் உன் குடும்பத்துடன் இங்கே வந்துள்ளாய்.. இவர்கள் இருவர் மட்டுமல்ல இதோ உன் குடும்பத்தை வேருடன் அழிக்கும் வல்லமை படைத்தவன் நான்.." தான் பார்க்கும் சகுனி வேலையையும் கம்பீரமாய் சொன்னான்.

அவன் பேச பேச சந்திராவின் வதனமோ பல விதமான உணர்ச்சிகளை காட்டியது.

அவளை பெற்றவர்கள் எதுவும் புரியாமல் அவனின் சொல்லுக்கு தான் செவி சாய்த்தனர்.

அதை கவனித்த ஜானகி தேவி தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த துர்க்கை தேவியின் குங்குமத்தை எடுத்து அவர்கள் மேலே யாருமறியாமல் ஊதிவிட்டாள்.

அவள் முகத்தை துடைப்பதற்காக முந்தானையை எடுத்ததால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அதை அவளவன் அறிந்து கொண்டு விட்டான்.

அந்த குங்குமத்தின் சாயல் காற்றில் கலந்து அவர்களின் நாசிக்குள் நுழைந்து அவர்கள் உடலில் இருந்த தீய சக்தி காற்றாய் வெளியேறியது.

ஏதோ பிரம்மையிலிருந்து வெளி வந்தவர்கள் போல தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்தனர்.. அப்பொழுது தான் துருவன் தன்னை பற்றி கூறியதில் அதிர்ந்து அப்படியே சிலையாகி நின்றுவிட்டனர்.

இத்தனை நாளாக சுயநினைவு இல்லாமலா நாட்களை கடத்தினோம்.. ஆனால் இவன் எங்களின் மகன் தானே என்ற நினைவில் முதலில் சுயநினைவு பெற்ற சந்திராவின் தாய்,

"துருவா என்ன பிதற்றுகிறாய்.. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் மகனே.. அவள் உன் தமக்கை தானே.." என்றார் அவனின் துரோகத்தை தாளமாட்டமால்.

"எது இவள் என் தமக்கையா..? நான் தங்களின் மகனா..? ஆஆஆஆ ஆஆஆஆஆ" என்று அந்த இடமே அதிரும் படி சிரித்தான்.

அவனின் சிரிப்பை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.


சந்திராவின் பெற்றோருக்கும் அவனின் பேச்சு சுத்தமாய் புரியவில்லை.

அவர்களின் குழப்பமடைந்த முகத்தை கண்டவன், "என்ன இருவருக்கும் குழப்பமா.. தங்களின் குழப்பத்தை நான் தீர்த்து வைக்கவா அன்னை தந்தையே.." என்றான் எள்ளலுடன்.

நான் தங்களின் புதல்வன் அல்ல.. நான் தங்களின் விசுவாசமான வேலைக்காரன் காளையனின் புதல்வன்.. என் தந்தை என்ன தான் உங்களுக்கு விசுவாசமானவராய் இருந்தாலும் அவரும் சாதாரண பணியாள் தானே.. அந்த பதினைந்தாம் அகவையிலேயே எனக்கும் உங்கள் மகனுக்கும் நிறைய வேற்றுமை.. படைபலம் பணபலம் நினைக்கும் நேரத்தில் பணியாற்ற ஆட்கள்.. இத்தனையும் என் கண்முன்னே தங்களின் மகன் அனுபவித்த பதவி தங்கள் மகன் பதவி அது எனக்கு வேணும்.. அதை நானே கைப்பற்ற நினைத்தேன்.

அதே போல் குளிக்க நானும் தங்கள் மகனும் என் தந்தையுடன் நீரோடைக்கு சென்ற சமயம் அவனை மேலிருந்து விழும் அருவியில் தள்ளி விட்டேன்.. இதை கண்ட என் தந்தையார் அவனை காப்பாற்றி என் கோபத்திற்கு ஆளானார்.


ஆனால் நான் விடவில்லையே.. எந்த அருவியிலிருந்து அவனை காப்பாற்றினாரோ அதே அருவியில் இருவரையும் தள்ளி விட்டேன்.. இருவரும் அருவியின் பேரிச்சைலுக்கு தாக்கு பிடிக்காமல் நீரோடு சென்று விட்டனர்.

அதைக் கண்டு என் மனம் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.. ஆனால் அப்படியே விட்டு விட்டால் நானல்லவா மாட்ட நேரும்.. அது தான் எங்களின் பாதுகாப்பிற்காக வந்த ஆட்களை சத்தமிட்டு அழைத்தேன்..

ஓடி வந்தவர்களிடம் என் தந்தையும் நானும் அருவி பாறையில் வழுக்கி கீழே விழுந்து விட்டதாகவும் காப்பாற்ற சென்ற என் தந்தையும் நீரின் ஆழத்தில் அடித்து சென்று விட்டதாக கதை கட்டி விட்டேன்..

எல்லோரும் அதை நம்பினீர்கள்.. ஏனென்றால் எனக்கும் தங்கள் மகனுக்கும் பெரிதாய் எந்த வேறுபாடும் இல்லை.. உடல் அமைப்பிலிருந்து முக அமைப்பு வரை சிறிது தான் வேறுபாடு இருந்தது.. அதையும் என் வதனத்தில் களி மண்ணை பூசி என்னை மாற்றினேன்.. அதற்கு தோதாகவே எல்லாம் நடந்தது.

அந்த அகவையிலேயே என்னால் பிறரை வசியப்படுத்த முடியும்.. என் உடன் வந்த பணியாட்களை என் விசியத்தில் மூலம் நம்ப வைத்து உங்களிடம் அழைத்து வந்தேன்.. முதலில் என்னை சந்தேக கண் கொண்டு பார்த்த உங்களையும் என் பார்வைக்கு வசியப்படுத்தினேன்.. அன்றிலிருந்து இன்று வரை என் கட்டுபாட்டில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

நான் நினைத்தபடி நீங்கள் என் கட்டுப்பாட்டில் தான் இருந்தீர்கள்.. என்னை உங்களின் பிள்ளையாக வளர்த்தீர்கள்.. என் ஆசை அனைத்தும் நிறைவேறியது.. மரியாதை பணபலம் படைபலம் என அனைத்தும் எனக்கு கிடைத்தது.. இதோ இவள் பிறக்கும் வரை நீங்கள் என்னை மட்டுமே சாரந்திருந்தீர்கள்.. ஆனால் இவள் என்று வந்தாளோ அன்றே என் நிம்மதி போய்விட்டது.

ஆம் இவள் பிறந்த நொடியிலிருந்து நீங்கள் என்னை மறந்தீர்கள்.. இவளுடன் மட்டுமே இருந்தீர்கள்.. அப்பொழுது தான் நான் முழுதும் மந்திரத்தை கற்று பொக்கீஷ வாளை தேடிய நேரம் இவள் வந்ததும் எல்லாம் மாறியது..

அது தான் உங்களை மீண்டும் என் வலைக்குள் கொண்டு வர தான் இவள் மேல் பாசம் உள்ளது போல் நடித்து இவளை அப்போதை உங்களை விட்டு பிரித்து இவள் அழுகையில் என் நிம்மதி கொண்டேன்.

இன்று வரை இவளை அடிமையாகத்தான் நடத்துகிறேன்.. இவளின் தலையெழுத்து என் கையில் சிக்க வேண்டும் என்பது.." தான் செய்த ஊழ்வினை அனைத்தும் அனைவரிடமும் ஒப்பித்தான்.


அனைவரும் அவனின் வார்த்தையில் அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.. அந்த சிறிய அகவையிலேயே அவனுக்கு இத்தனை வன்மமா..? என்று அனைவரின் மனநிலையும் வலி கண்டது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. கதையை பத்தின உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க பா..