• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 38

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
துருவனை பற்றிய விடயங்கள் அனைத்தும் சந்திரமதிக்கு புதியது.. அவள் பிறந்ததிலிருந்தே தமையன் என்ற இடத்தில் அவனை மட்டுமே எண்ணினாள்.. ஆனால் தமையன் என்று நினைத்த ஒருவன் மந்திரவாதி என்பதை அவளால் தாங்கவே இயலவில்லை.

அச்சிறு வயதிலேயே இவனுக்கு இத்தனை வன்மமா.. ? அதுவும் அந்த வயதிலேயே பெற்ற தந்தையை கொல்லும் அளவு அரக்கனா..? அங்கிருந்த யாரும் அதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் உடமைப்பட்டவனே கூறும் பொழுது என்ன செய்வது என்று யோசித்தனர்.

அவர்கள் அத்தனை பேரும் அசந்த நேரமதை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டவன் தர்மாவின் கரங்களில் இருந்த சந்திராவை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தான்.

யாரும் அதை எதிர்பார்க்கவுமில்லை.. அவளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுமில்லாமல் அவளின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான் துருவன்.


தர்மாவிற்கு தன்னவளின் கழுத்தில் கத்தியை வைத்தவன் மேல் கொலை வெறி ஏற்பட்டது.. ஆனால் தன்னவளை அவன் கரங்களுக்குள் இருக்கும் பொழுது அவசரம் அறிவீனமாகிவிடும்.

"துருவா அவளை விட்டு விடு.. அவளுக்கு ஏதேனும் நேர்ந்தால் உன் உயிர் உன் உடலில் இருக்காது.. இது இந்த தர்மேந்திரனின் கட்டளை.." விழிகளில் ரௌத்திரம் பொங்க துருவனை பார்த்து கூறினான்.

" அவ்வளவு சீக்கிரம் என்னிடம் நெருங்க முடியாது துருவா.. என்னருகில் நீ நெருங்கினாள் இதோ இவளின் செங்குறுதியில் இந்த பூமி நனைவது உறுதி.." கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியவாறு கூறினான்.

அவனின் அழுத்தத்தில் அவளின் கழுத்தில் உதிரம் சிறிதாய் கசிய ஆரம்பித்தது.

அதை கண்டவர்களின் உள்ளம் மேலும் பதறியது.

பெற்றவர்களும் அவளின் உதிரத்தை கண்டு கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்ததே தவிர துருவனின் அருகில் அவர்களால் நெருங்க முடியவில்லை.

அவன் விழிகளில் அத்தனை கோபம் வன்மம் சூழ்ச்சி கோபம் என அனைத்தும் ஒருங்கே அவனின் கண்களில்.


அதை கண்டவர்கள் அனைவரும் பின் தங்க வேண்டியிருந்தது.


"டேய் பிலவா செல் சென்று இன்றே உனக்கு விவாக பரிசாய் கிடைத்த அந்த உறைவாளை விரைவாக கொண்டு வா.. இல்லையென்றால் இதோ உன் தமக்கையும் என் கையில் தான் உள்ளாள்.. அது மட்டுமன்றி உன் தமையன் உயிராய் நேசிக்கும் இவளையும் உயிருடன் பார்க்க முடியாது..." என்றான் கோழையவன்.



இரு இளம் பெண்கள் அவன் கைகளில் உள்ள போது அங்கே வேகத்தை விட விவேகமே சிறந்தது என்று யோசித்த பிலவேந்திரன்,

"துருவா வேணாம் இரு பெண்களையும் ஒன்றும் செய்து விடாதே.. உனக்கு தேவை உறைவாள் தானே.. அதை நான் இன்னும் சற்று நாழிகையில் கொண்டு வருகிறேன்.. அதற்குள்ளாக இருவருக்கும் எதுவும் நடந்தேறக் கூடாது.. அப்படி ஏதாவது நடந்தால் இந்த பிலவேந்தனை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும்.. உன் அழிவு நிச்சயம் என் கைகளில் தான்.." என்று கட்டளையிட்டவன் உறைவாளை எடுக்க திரும்பும் பொழுது,

"அத்தான் என்ன இது.." என்று அவனை தடுத்தாள் ஜானகி தேவி.

அவளுக்கு தெரியும் இரு பெண்களின் உயிரை விட உறைவாள் முக்கியம் இல்லை தான்.. ஆனால் அது இவன் கைகளில் கிடைத்தாள் அதர்மம் அல்லவா தலைவிரித்தாடும்.. பல கோடிக்கண்கான வைரங்களை தன்னகத்தே கொண்டுள்ள அந்த உறைவாள் பல விசேஷ சக்திகளை கொண்டுள்ளது.

அந்த சக்தி நியாயத்திற்கு கிடைத்தால் மக்கள் செழிப்புற்று வாழ்வார்கள்.. அதே தீயவர்களின் கையில் கிடைத்தால் அது உலகமெங்கும் தீயவையினை அல்லவா பரப்பும்.. அதுவும் கொடுங்கோலன் இவன் கைகளில் கிடைத்தால் பாரத தேசமெங்கும் அல்லவா கொடுங்கோல் தலைவிரித்தாடும்.. இதை நினைவு வைத்து தான் தன்னவளை தடுக்க முயற்சித்தாள் பெண்ணவள்.


"இல்லை தேவி உறைவாளை விட இரு பெண்களும் நமக்கு முக்கியம்.. அதை நினைவில் கொள் தேவி.." என்று தன்னவளை சமாதானம் செய்தான் பிலவேந்திரன்.

ஆனால் அந்த உறைவாளின் விசேஷ சக்தியை தன்னவனிடம் சொல்லி எப்படி தடுப்பது என்று யோசித்தாள் பெண்ணவள்.

பிலவேந்திரனுக்கு அதன் சக்தி தெரியாது.. அதன் வைரத்தின் மதிப்பு மட்டுமே தெரியும்.. அதன் விசேஷ சக்தி தெரியாது.. பாண்டியர்களின் வம்சத்தில் வந்த பெண்களுக்கு மட்டுமே அதன் சக்திகள் அனைத்தும் தெரியும்.

அதன் சக்தி அறியாமல் பெண்களை காப்பதற்கு உறைவாளை விட்டுக் கொடுக்க தயாராயிருக்கும் தன்னவனை எப்படி தடுப்பது என்று புரியாமல் பெண்ணவள் கலங்கி தான் போனாள்.

தன் அண்ணியாரின் வதனம் கண்டு எதுவோ சரியில்லை என்று உணர்ந்த தர்மன் தன் அண்ணனின் பின்னே சென்றான் உறைவாளை எடுத்து வர.

அவர்கள் அங்கே காத்திருக்கு மணி நாழிகையில் அங்கே உறை வாளுடன் வந்தனர் அண்ணன் தம்பி இருவரும்.

அதைக் கண்டு பெண்ணவளின் வதனமோ அதிர்ச்சியில் திளைத்தது.

அந்த உறைவாளை கண்ட துருவனின் விழிகளில் பேராசை மின்னியது.. வேகமாக தன் கைகளில் இருந்த சந்திரமதியை விடுத்து உறைவாளை வாங்க சென்ற சில நாழிகையில் பிலவன் அதை துருவனின் கரமதில் சேர்ப்பிக்கும் நேரம் அதை தன் கரங்களில் பறித்துக் கொண்டாள் சந்திரமதி.

அவள் விழிகளில் ஆக்ரோஷம் மின்ன கோபத்தில் வதனமோ செந்நீரில் குளித்தது போல் இருந்தது.

அதை கண்ட துருவன் ஒரு நொடி பயந்து பின்வாங்கினான்.. அது அனைத்தும் ஒரு நொடி தான் அடுத்த நொடி அவளின் அருகே செல்ல முயன்றவனை தீக்கோடு அவளின் அருகில் செல்ல விடாமல் தடுத்தது.

அங்கிருந்த மற்ற அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.. இத்தனை நேரம் அவன் பிடியில் அழுது கொண்டிருந்தவளா இது என்னும் அளவிற்கு அவளின் வதனமோ கோபத்தில் காளியாய் துர்க்கையாய் ஜொலித்தது.

அதை கண்டு தன் பயத்தை தூர தள்ளியவன், "ஏய் சந்திரா அந்த உறைவாளை என்னிடம் ஒப்படைத்து விடு.. இல்லை இதோ பிலவனின் தமக்கையான கோதையை கொன்று விடுவேன்.." என்றான் அவளிடம் இருந்து வாளை பெறுவதற்காக.


அதைக் கேட்டு ஆக்ரோஷமாய் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ என்று சிரித்தவள், "எங்கே அவளின் அருகில் செல் பார்க்கலாம்.. என்னை மீறி உன்னால் அவளருகில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது துருவா.." என்றாள் கட்டளையாய்.

"ஏய் யாரைப் பார்த்து பெயர் சொல்லி அழைக்கிறாய்.. உனக்கு அவ்வளவு துணிவா.. இரு உன்னை அழ வைக்கிறேன்.. அவளருகிலா என்னால் செல்ல முடியாது.. அவளின் கழுத்தை நெரித்து உன் முன்னால் அவனின் உதிரம் சிதைக்கிறேன்.." என்று கோதையின் அருகில் செல்ல முயன்றவன் அடுத்த நொடி தூக்கி எறியப்பட்டான்.

அதை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.


இங்கே ஒரு மூலையில் ஜானகி செங்குறுதியில் நனைந்து கிடந்தாள்.



அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்