• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 39

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
249
230
43
Salem
சந்திரமதியின் கட்டளையை மீறி கோதையின் அருகே நெருங்கும் சமயம் அவளின் அருகே நெருப்பு வளையம் அவள் முன் தோன்றியது.. அதை தாண்டி போக முற்படும் போது நெருப்பு வளையம் அவனை தாண்ட விடாமல் அவனை தடுத்தது.. ஆனால் இதில் கோதைக்கு ஒரு வலியும் இல்லாமல் அமைதியாகத்தான் நின்றாள்.. அவளை பிடித்திருந்தவன் தான் சுவற்றில் அடிபட்டு கீழே கிடந்தான்.. அதை பார்த்த துருவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை..

ஏன் இவ்வளவு அமைதியாக இருந்த சந்திராவை அங்கிருந்த யாரும் அவ்வளவு ஆக்ரோஷமான ஒருத்தியாய் எதிர்பார்க்கவில்லை.

எல்லோருமே அவளை ஆச்சர்யரமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் ஆட்களை அழைத்த துருவன், "எல்லாரையும் இந்த தூண்ல ஒன்னா கட்டி போட்டு நெருப்பு வைங்கடா..." என்று சந்திரமதியை துவேஷமாய் பார்த்து கட்டளையிட்டான்.

அவனின் பார்வையை எதிர் கொண்டவள் விஷமம் கலந்த புன்னகையுடன் தன் பார்வையால் அத்தனை பேரையும் பார்த்தது ஒரு நாழிகை என்றால் அத்தனை பேரும் தானாகவே தூணில் அருகில் செல்ல அங்கிருந்த கயிறு தானாகவே அவர்களை கட்டியது.

அங்கு நடப்பதை ஒன்றும் புரியாமல் அதிசயமாக பார்த்தனர்.. அப்பொழுது தான் கண்டான் அங்கே தன்னவள் இல்லாததை.. உடனே தர்மனிடம் திரும்பி,

"தர்மா ஜானகி எங்கே காணவில்லை.." என்றான் சுற்றிலும் பார்த்தபடி.

"தெரியவில்லை தமையனே.. நானும் தங்களுடனே வந்துவிட்டேனே.." அவனும் அவளை தேடியபடி.

அப்பொழுது தான் கோதை, "தமையனே அண்ணியார் அந்த தூணுக்கு பின்னே சென்றவர் இன்னும் வரவில்லை.." என்றாள் பதட்டத்துடன்.

துருவனையும் அவன் ஆட்களையும் இருக்கும் இடத்தை விட்டு அசைய முடியாமல் அங்கேயே நிறுத்தி வைத்தாள் சந்திரமதி.

தர்மனும் பிலவேந்திரனும் தூணுக்கு பின்னே சென்று பார்த்த போது அங்கே செந்நீரின் நடுவே மயக்கமுற்றிருந்தாள் ஜானகி தேவி.

"தேவி என்னவாயிற்று தங்களுக்கு.." மனம் நடுங்க தன்னவளை ஓடி வந்து தூக்கி கொண்டான் பிலவன்.

ஆனால் அவளோ சுயநினைவே இல்லாமல் முற்றிலும் மயக்கத்தின் பிடியில் இருந்தாள். எத்தனை முறை அவள் வதனத்தை தட்டியும் அவள் விழிகளில் சிறிதும் அசைவில்லை..

அவளைத் தூக்கி கொண்டு விழிகளில் கண்ணீர் வழிய வெளியே தூக்கி வந்தான்.

அப்பொழுது தான் அங்கே இருந்தவர்களுக்கு அவளின் நிலை உரைத்தது.

" அண்ணா என்னவாயிற்று அண்ணியாருக்கு.." வேகமாய் அவளருகில் வந்து விட்டாள் கோதையும் தர்மனும்.


தன்னவளை தன் மடியில் கிடத்தி அவளின் வதனத்தில் நீர் தெளித்து எழுப்ப முயன்றான்.. ஆனால் பெண்ணவளோ எழவே இல்லை.

மனதின் ஓரம் தன்னவளுக்கு என்னவாயிற்றோ என்று கிலி பிடித்து ஆட்டி படைத்தது பிலவனுக்கு.

அதே நேரம் எதுவும் பேசாமல் சந்திரா ஜானகியின் வதனத்தையே கண்டாள்.. அவளின் விழிகளிலும் கண்ணீர் கரை கட்டியது.

அவளின் கவனம் சிதறிய சில மணித்துளிகளை பயன்படுத்தி துருவன் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை உச்சரித்தான்.

அடுத்த நொடி அங்கிருந்த அனைவரையும் சுற்றி ஏதேதோ வளையம் போல் சுற்றி அனைவரையும் சிறைபிடித்தது.

எல்லோரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தனர்.

ஜானகிக்கோ நேரமாக ஆக உதிரம் அதிகமாய் அவள் உடலிலிருந்து பெருகி வழிந்தது.


அதை தடுத்து நிறுத்தும் வழி அறியாமல் அவளை அங்கிருந்து மீட்டாள் மட்டுமே அவளை வைத்தியரிடம் அழைத்து செல்ல முடியும் என்ற நிலை அனைவரையும் அறிவையும் மழுங்கி செய்தது போல் வெற்றிடமாய் இருந்தது.

அவர்களின் பதட்டத்தை கண்டு, "ஆஆஆ அடேய் பிலவா என் எதிரிகள் அனைவரும் ஒரே நேரத்தில் அழிய போகிறீர்கள்.. நான் வெற்றி பெற்று விட்டேன்.. வெற்றி பெற்று விட்டேன்.." என்று தனக்குத் தானே வெற்றி மகுடத்தை சூட்டிக் கொண்டான் துருவன்.

அவனை எல்லோரும் ஏதோ பைத்தியமாய் பார்த்தனர்.

ஆனால் அவர்களை அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை..

அவர்களின் மேலே ஏதோ திரவத்தை ஊற்றி ஏதேதோ மந்திரத்தை ஜெபித்தான் துருவன்.

சிறிது நேரத்தில் அந்த இடமே கொஞ்ச கொஞ்சமாய் பரவிய தீ தீக்காடாய் கொழுந்து விட்டு எறிந்தது.

அந்த தீயின் சூட்டில் ஜானகி தேவி கண் விழித்து எழுந்தாள்.. அங்கே நடந்த விபரீதத்தை உணர்ந்தவள் வேகமாய் தர்மனையும் சந்திராவையும் தன் அருகில் அழைத்தவள்,

"தர்மா இதை மதியின் கழுத்தில் கட்டு.. ம் சீக்கிரம்.. நமக்கு நிறைய நேரமில்லை..அவனை இன்றே அழிக்க வேண்டும்.. இல்லையேல் அது என்றும் முடியாதது.. இந்த நாழிகையில் அவனின் உயிர்வதை வதம் நடந்தாக வேண்டும்.." அவனின் கையில் ஒரு கருகுமணி சங்கிலியை தினித்தாள்.

மற்ற யாருக்கும் அங்கே நடக்கும் எதுவும் புரியவில்லை.. ஆனாலும் எல்லோரின் அமைதியாய் இருந்தனர்.

பிலவனுக்கு மட்டும் தன்னவள் செயலில் நிச்சயம் ஏதோ உண்டு என உணர்த்தியது... ஆனால் அது என்னவென்று உணரத்தான் முடியவில்லை.

தன்னவனுக்கு விழிகளால் சமாதானம் செய்தவள் அந்த சங்கிலியை தர்மனின் கைகளில் திணித்தாள்.

தாய் சொல்லை மிஞ்சாத தனையனாக தன் அண்ணியாரின் கடடளைக்கு இணங்க அந்த சங்கிலியை வாங்கி சந்திராவின் கழுத்தில் கட்டப் போகும் சமயம் அவளின் விழிகளை பார்த்து சம்மதமா எனக் கேட்டான்.

நடக்கும் நிகழ்வில் ஏதோ உண்டு என்பதை முன்பே தன் செயலில் உணர்ந்த பெண்ணவளும் அமைதியாய் அதை தன் கழுத்தை தாங்கி வாங்கி கொண்டாள்.

அவள் கழுத்தில் மங்கள்சூத்ராவை சூட்டிய அடுத்த கணம் இருவரின் கைகளிலும் உறைவாளையும் ஒப்படைத்தாள் ஜானகி.

அதை கைகளில் வாங்கியது மட்டும் தான் அவர்களின் நினைவுகளில் தங்கியது.

அடுத்த நொடி இருவரின் விழுந்தகளும் அந்த தீக்கங்குக்கு இணையாக கோபத்தின் ஜீவாலையாய் வானத்தை பார்த்து எறிந்தது.

அடுத்த நொடி கருமேகங்கள் கூட எங்கிருந்து நொடி மழை தூவியதோ அடுத்த நொடி அந்த மண்டபம் முழுவதும் நீரால் சூழ்ந்தது.

கோதை பிலவன் ஜானகி சந்திராவின் பெற்றோர் என அனைவரையும் பாதுகாப்பாய் ஒரு தூணின் மேடையில் அடைக்கலமானார்கள்.

அங்கே நீர் சூழ சூழ எறிந்து கொண்டிருந்த ஆக்ரோஷ தீ அனைந்தது.


அதை கண்ட துருவனின் மனம் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்தது.. எப்படி இது நடந்தது.. ஆனால் இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே..? என்றவனின் கண்களில் பளிச்சென்று எதுவோ தோன்றி மறைந்தது.

அடுத்த நொடி "ஆஆஆஆஆஆஆ ஆஆஆ அடியே ஜானகி என்ன வேலை செய்து விட்டாய் நீ.." என்று ஆவேசம் பொங்க கத்தினான்.


அவனின் ஆவேசத்தை கண்டவள் ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. விண்ணெங்கும் தன் குரல் கர்ஜிக்க சிரித்தாள் பெண்ணவள்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..

கதையை படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்